Friday, October 8, 2010

உம்மாச்சி படம்

எங்க ஊர்ல உலகத்தரத்துடன் கூடிய 1 டெண்டு கொட்டாய் உண்டு. லைட்டிங் எபக்டுக்காக சாயங்காலம் மட்டும் தான் படம் போடுவா(ஆமா, மூனு பக்கமும் சுவர் இல்லைனா சாயங்காலம்தானே படம் போட முடியும்). முதலாளியோட வேட்டியைதான் திரையா கட்டி இருப்பாங்க. பூர்ணம் விஸ்வனாதன் பேசினார்னா பிரகாஷ்ராஜ் குரல் கேட்கர அளவுக்கு ஒரு DTS சிஸ்டம்னா பாதுக்கோங்கோ! இது தவிர மூனு பக்கம் சுவரோட ஒரு தியேட்டரும் உண்டு. ஆனா அது ரொம்ப தூரம் தள்ளி இருக்கும், அதனால டெண்ட் கொட்டாய்ல தான் அதிகமான படங்கள் பாத்தது. டெண்ட் கொட்டாய்லயும் மூனு விதமான சிட்டிங் உண்டு. பொம்ணாட்டிகள் & கொழந்தேள் மட்டும் உக்காசுக்கர மாதிரி தரை டிக்கெட்( நல்ல ஆத்தங்கரை மண்), அடுத்து பெஞ்சு டிக்கெட்டு ஆம்பளேள் மட்டும், அதுக்கு அடுத்து ஸ்டீல் சேர் அதுதான் உள்ளதுலேயே ஒசத்தி. எல்லாத்துக்கும் நடுல 1 ரூபாய் வித்தியாசம் இருக்கும்.


எனக்கு எங்க அண்ணனுக்கு எல்லாம் எப்போதுமே தரை டிக்கெட்டுதான்(இப்பவும் நாங்க தரைடிக்கெட்டுதான்). பெஞ்சுக்கும் தரைக்கும் நடுல ஒரு 4 ஆடி குறுக்குச் சுவர்தான் இருக்கும். படம் ஆரம்பிச்ச உடனே ட்யூப் லைட் எல்லாத்தையும் அணைச்சுடுவா, நானும் எங்க அண்ணனும் மெதுவா நகர்ந்து வந்து சுவரை தாண்டி குதிச்சு பெஞ்சுக்கு போய் எங்க அப்பா கூட உக்காசுண்டுருவோம். நான் சில சமயம் அம்மா மடில தலையை வெச்சுண்டு, பக்கத்தாத்து பொண்ணோட மடில ஹாயா காலை நீட்டிண்டு படுத்துண்டே படம் பாக்கலாம்னு ஆசை பட்டுண்டு எங்க அம்மா கூடயே இருந்துடுவேன், ஆனா அப்பெல்லாம் எங்க அண்ணாவுக்கு பொம்ணாட்டிகளை கண்டாலே பிடிக்காது (திரட்டிப்பால் மேல சத்தியம்! நம்புங்கப்பா). அதுக்கு அவன் சொன்ன காரணம் அதை விட சூப்பரா இருக்கும் (சபைல வேண்டாம், தனியா கடுதாசி போட்டு ஜாரிச்சுக்கோங்கோ ப்ளீஸ்!). அதனால லைட்டை அணைச்ச உடனே அவன் தாவிக் குதிச்சுடுவான்.


தக்குடு மொத்தமே 3 அடி உசரம்தான் அப்போ இருப்பான், ஒரு தடவை தடுப்புச் சுவரை தாண்டர்துக்கு எக்கி ஏறும் போது டவுசர் 'டர்ர்ர்ர்ர்'னு முழு தையலும் கிழிஞ்சுடுத்து. அது கொஞ்ஜம் டைட்டான டவுசர். முழுசா கிழிஞ்சதுல நான் போட்டுண்டு இருந்த டவுசர் சானியா மிர்ஸாவின் குட்டைபாவாடை மாதிரி ஆயிடுத்து. ஆனா நல்ல காத்தோட்டமா இருந்தது. குட்டைப் பாவாடை எல்லாம் சானியாவுக்குத்தான் நன்னா இருக்கும், தக்குடு போட்டா எல்லாரும் சிரிக்கனா செய்வா! அதுலேந்து சுவர் ஏறி குதிக்கும் போது ரொம்ப ஜாக்ரதையா இருப்பேன்.

எங்க ஊர்ல போஸ்டர் ஒட்டர்தே ஒரு கலை. நம்ப ஆத்துலேந்து தியேட்டர் வரைக்கும் இருக்கும் போஸ்டரை வெச்சே கதையை வியூகம் பண்ணிடலாம். எத்தனை நாளைக்குத் தான் டெண்ட் கொட்டாய்ல படம் பாக்கர்து? எங்க ஊரோட அடுத்த கோடில இருக்கும் தியேட்டர்ல போய் படம் பாக்கனும்னு மனப்பால்/மிளகுப்பால் எல்லாம் குடிச்சுண்டு இருந்தோம்.


எங்க ஊர்லையும் சரி அம்பைலயும் சரி எல்லா தியேட்டருக்கும் கல்யாணி, அபிராமி!னு மங்களகரமான பேராதான் இருக்கும் ஆனா எப்போ எந்த படம் போடுவான்னு யாருக்கும் தெரியாது. திடீர்னு நம்ப பாஸ்டன் நாட்டாமைக்கு புடிச்ச மலையாள குடும்பச் சித்திரத்தை போட்ருவான். எங்க ஊர் மாமாக்களுக்கு மலையாள ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி, அதனால ராத்திரி 10 மணி ஆட்டத்துக்கு தலைல துண்டை போட்டுண்டு போய் பாத்துட்டு வந்து அடுத்த நாள் வாய்க்கால் மண்டபத்துல, ‘சிலுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் படத்துல ஒரு கிலுகிலுப்பே வந்தது ஓய்!!’ சிலுக்குனு பேர் வச்சதுக்கு பதிலா அவளுக்கு ‘கிலுக்கு’னு பேர் வச்சுருக்கலாம் ஓய்!னு திரை விமர்சனம் எல்லாம் பண்ணுவா. ஒரு தடவை மாமாவோட திரைவிமர்சனம் பொம்ணாட்டிகள் கரைல குளிச்சுண்டு இருந்த அவாத்து மாமி காதுல விழுந்ததுல, அந்த மாமாவை ஆத்துல போய் உலுக்கு எடுத்துட்டா. சில்க் ஸ்மிதா தற்கொலை பண்ணின்டு ப்ராணனை விட்டுட்டா!னு கேள்விப் பட்ட உடனே, ‘சிலுக்கு போய்ட்டாளா?’னு மேல் துண்டால வாயை பொத்திண்டு, துக்கம் தாங்காம வாய்க்கால்லையும், ஆத்தங்கரைலையும் போய் குளிச்சுட்டு வந்த அம்பை & கல்லிடை மாமாக்கள் ஏராளம்.


அம்பை/கல்லிடை ரெண்டு ஊர்லையுமே தியேட்டர்ல எல்லாரும் சுவாரசியமா படத்தை பாத்துண்டு இருக்கும் போது சத்தம் காட்டாம பேனை(fan) அணைப்பதில் வல்லவர்கள். சூப்பர் ஸ்டார் படமா இருந்தா அம்பைக்காரர்கள் இன்ட்ரவலுக்கே பேனை அணைச்சுட்டு நம்ப வேட்டியையும் உருவிண்டு போய் விடுவார்கள்.

ஒரு சமயம் பானுப்ப்ரியா நடிச்ச எதோ ஒரு அம்மன் படம் எங்க ஊர் தியேட்டர்ல போட்டுருந்தான். தக்குடுவையும் சேர்த்து மொத்தம் 10 வானரங்களை படத்துக்கு கூட்டிண்டு போய்ட்டு பத்ரமா கூட்டிண்டு வரேன்!னு ஒரு மாமி பொறுப்பேத்துண்டா. அந்த தியேட்டர்ல தரைலேந்து பெஞ்சு 12 அடி உசரம், தாவி எல்லாம் குதிச்சா கபாலமோக்ஷம்தான் கிட்டும், அதனால எல்லாரும் பெஞ்சு டிக்கெட்டுக்கு தேவையான ரூபாயை எடுத்துண்டு 3 மாமிகள் சகிதமா கிளம்பிட்டோம் (அம்பி அந்த படத்துக்கு வரலை).

‘கோகுல் சாண்டல்’ பவுடர் போட்ட மூனு மாமிகள் முன் செல்ல, போஸ்டர் எல்லாத்தையும் ஆவலா பாத்துண்டே நாங்க பின் தொடர்ந்தோம். குரங்கு கார் ஓட்டரமாதிரி, பாம்பு மணி அடிக்கர மாதிரி, யானை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் பண்ணுவது மாதிரி விதவிதமான போஸ்டர் எல்லாத்தையும் பாத்துண்டே மெல்ல மெல்ல தியேட்டர் பக்கம் வந்தாச்சு, தியேட்டர் வாசல்ல ஒரு நோட்டீஸ் போர்டு இருக்கும், ‘நடுவர் தீர்ப்பே இறுதியானது!’னு சொல்லற மாதிரி, அந்த போர்டுல என்ன போஸ்டர் இருக்கோ அதுதான் திரையிடப்படும். அதுல யாரோ ஒரு பொம்ணாட்டி எங்க ஊர் பெருமாள் கோவில் நாதஸ்வர வித்வான் கணேசன் அங்கவஸ்த்ரத்தை நெஞ்சு வரைக்கும் கட்டிண்டு நாதஸ்வரம் வாசிக்கர மாதிரி, ஒரு வெள்ளைக் கலர் டர்க்கி டவலை நெஞ்சு வரைக்கும் டைட்ட்ட்டா கட்டிண்டு ஹான்!னு நெளிச்சுண்டு நின்னுண்டு இருந்தா. படம் பேர் எல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை(ஆயில்யனுக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பு இருக்கு). ' ஓஓஓஓ! நாசமாபோற கடங்காரன் படத்தை மாத்திக் கொண்டாடிட்டான் போலருக்கேடி!'னு மாமிகள் அவாளுக்குள்ள சொல்லிண்டா.


தியேட்டருக்கு தொட்டு அடுத்த சுவர்ல கூட பெரிய சூலத்தை வெச்சுண்டு பானுப்ரியா ஆடரமாதிரி போஸ்டர்தான் இருந்தது. ‘குரங்கு கார் ஓட்டர்தை பாக்க முடியாதா?’னு ஒரு வால் இல்லாத குரங்கு பரிதாபமா கேட்டது. செட்டுல கொஞ்சம் பெரிய குரங்கு(5 ஆம் க்ளாஸ் படிக்கர்து) மெதுவா சின்ன குரல்ல, "மாமி! இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வந்துட்டு சும்மா திரும்பி போகவேண்டாம்!னு பிட்டு படத்துக்கு பிட்டு போட்டான். ‘இன்சார்ஜ்’ மாமி கொஞ்சம் கூட அசரவும் இல்லை பதறவும் இல்லை, பக்கத்து டீ கடைல போய், ‘இங்க ஒரு பழைய முருகன் கோவில் உண்டே அது எங்க?’னு வழிகேட்டா பாக்கனும்.


அந்த தியேட்டர்லேந்து 30 அடி தூரத்துல ஒரு அழகான பழைய முருகன் கோவில் உண்டு. நிலைமையை அழகா சமாளிச்ச அந்த மாமியோட சாமர்த்தியம் இப்ப நினைச்சாலும் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். அப்பரம் எல்லாரும் முருகன் கோவிலுக்கு போய் 6 ப்ரதக்ஷிணம் வெச்சுட்டு நெற்றி நிறைய விவிடி, குங்குமம் எல்லாம் இட்டுண்டு தைபூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரை போனவா மாதிரி பக்திப் பரவசத்தோட ஆத்துக்கு வந்து சேர்ந்தோம். டப்பால பஞ்சாமிர்தம் மட்டும் தான் வாங்கிண்டு வரலை.


இந்த நிகழ்ச்சிக்கு அப்பரம், ‘சின்னத்தம்பி’ படத்துல குஷ்பு வரர்துக்கு முன்னாடி 2 பேர் சைக்கிள்ல குடை பிடிச்சுண்டு போகர மாதிரி, எந்த படம் போகர்தா இருந்தாலும் ஒரு வானரம் தியேட்டர் வரைக்கும் சைக்கிள்ல முன்னாடி போய் விவரமா விசாரிச்சுண்டு வந்ததுக்கு அப்புறம் தான் கிளம்பர்துன்னு முடிவு பண்ணினா. ‘பிட்டு படத்தை பாத்துட்டு போகலாம்!’னு சொன்ன குரங்குக்கு வீட்ல போய் ‘சாண்டல் பவுடர்’ மாமி பத்த வெச்சதுல அவனோட அம்மா கையால நாயடி! பேயடி! விழுந்தது தனிக்கதை....:)

37 comments:

Jeyashris Kitchen said...

titlekkum postkkum smbandamae illa. idhula label vera too mucha irruku.
Onnu sarilla thakkudu.

Jeyashris Kitchen said...

old tamil moviesla cinema title kadisila oru dialougela eppadium varun , adhumadiri,neeyum kadisila ummachiya pathi sollita!!

mightymaverick said...

அதென்னடா... டிவிடி மாதிரி விவிடி... நல்லா அழகா விபூதின்னு சொல்லுறதை விட்டுட்டு...



அப்புறம் உங்கண்ணனுக்கு பொண்ணுங்கன்னா ஆகாதுன்னு சொன்னா உங்க வீட்டுக்கு பின்னாடி தாமிரபரணி ஓடலைன்னு சொல்லுறது மாதிரி... அதனால நாங்க இதை எல்லாம் நம்ப தயாரா இல்ல... அப்புறம் உன் முதுகுல இருக்க பெரிய தழும்புக்கு காரணம் இந்த தர்ம அடி தானா?

ஆயில்யன் said...

//பிட்டு படத்தை பாத்துட்டு போகலாம்!’னு சொன்ன குரங்குக்கு வீட்ல போய் ‘சாண்டல் பவுடர்’ மாமி பத்த வெச்சதுல அவனோட அம்மா கையால நாயடி! பேயடி! விழுந்தது தனிக்கதை....:) //

அந்த கதை நடந்ததாலதானே சாட்சியா இருந்து காட்சியை கண்ட அம்பியை நாலு பாரா முந்தியே கழட்டி விட்டீரு! #கண்டுபுடிச்சுட்டோம்ல்

எஸ்.கே said...

நல்ல காமெடி!:-)

Jeyashris Kitchen said...

adapaavi , changed the LABEL????

வல்லிசிம்ஹன் said...

ADA RAAMAA!! Ithuthaan ummaacchi padamaa:)

sriram said...

தக்குடு.
பிட்டு படம் பாத்து வீட்ல அடி வாங்கி விழுப்புண்களோட இருக்குறது நீயி.. இதுல என்னையும் ஆயில்ஸையும் ஏன் வம்புக்கு இழுக்கறே??

காலேஜ் கட் அடிச்சிட்டு ஆலந்தூர் ஜோதியில பிட்டு படம் பாத்த எவிடன்ஸ் (டிக்கட்) கொடுக்கலேன்னா கிராஜுவேஷன் சர்ட்டிபிகேட் கொடுக்க மாட்டாங்கன்னு சொன்னதால், பட்டதாரி ஆகும் கனவுல நான் போயிருக்கேனே தவிர ஒன்ன மாதிரி ஜொள்ளு விட்டுகிட்டு போகல..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Shobha said...

//பிட்டு படத்தை பாத்துட்டு போகலாம்!’னு சொன்ன குரங்கு//

இது யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே!

//சிலுக்கு போய்ட்டாளா?’னு மேல் துண்டால வாயை பொத்திண்டு, துக்கம் தாங்காம வாய்க்கால்லையும், ஆத்தங்கரைலையும் போய் குளிச்சுட்டு வந்த அம்பை & கல்லிடை மாமாக்கள் ஏராளம்.//
ஏன் அவாளெல்லாம் சிலுக்குக்குத் தாயாதியா?
போஸ்ட் சூப்பர் .
ஷோபா

Subhashini said...

kalakkal thakkudu

Subha

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பூர்ணம் விஸ்வனாதன் பேசினார்னா பிரகாஷ்ராஜ் குரல் கேட்கர அளவுக்கு//
ச்சே இப்படி ஒரு கம்பேரிசன்... வேற யாருக்கும் தோணாது...சான்சே இல்ல... ஹா ஹா ஹா

//அடுத்து பெஞ்சு டிக்கெட்டு ஆம்பளேள் மட்டும்//
அடப்பாவமே இது ரெம்ப அநியாயம்...அது என்ன உங்களுக்கு மட்டும் பெஞ்ச்... லேடீஸ் மட்டும் தரையா... இந்த அநியாயத்த கேக்க யாருமில்லையா உங்க ஊர்ல

//சபைல வேண்டாம், தனியா கடுதாசி போட்டு ஜாரிச்சுக்கோங்கோ ப்ளீஸ்//
"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்"னு இதை தான் சொல்றாங்களோ... ஹா ஹா அஹ... அம்பி சார் உங்களுக்கு வேற யாரும் வேண்டாம்... என்னமோ சொல்லுவாங்களே "எதையோ மடில கட்டிட்டு...."னு... அது போல தான்... ஹா ஹா அஹ (ஜஸ்ட் கிட்டிங்... ஆட்டோ எல்லாம் அனுப்ப வேண்டாம்)

//‘கோகுல் சாண்டல்’ பவுடர் போட்ட மூனு மாமிகள் முன் செல்//
அடப்பாவமே... இவ்ளோ detail எல்லாம் அநியாயம் சார்...

//எந்த படம் போகர்தா இருந்தாலும் ஒரு வானரம் தியேட்டர் வரைக்கும் சைக்கிள்ல முன்னாடி போய் விவரமா விசாரிச்சுண்டு வந்ததுக்கு அப்புறம் தான் கிளம்பர்துன்னு முடிவு பண்ணினா.//
ஹா ஹா ஹா...சூப்பர் முடிவு... நல்ல ஊர் நல்ல டெண்டு கொட்டாய்...நல்ல காமெடி.. ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

@ பாஸ்டன் ஸ்ரீராம் - ha ha ... no one can beat you in this samaalification matter I guess.. ha ha

Jeyashris Kitchen said...

shoba madam, super

Anonymous said...

I was laughing by reading your blog thakkudu..:) i have some questions, ples answer me,

1) unga annavuku yen pomanatikala pidikathu?
2) thakkudu 3 adi osaram taan appo irupaan solirukeyea.........ipo matum yenaa romba orsaramooo????????
3)so nee saniya mirsa vooda tennis aatha paakala avaloda kutta paavaadai aatatha thaan pathuruka.......
4)antha Gokul sandal powder maami thappu panitaaa........yaravathu kuranku, yaanai padatha paaka kuranga (you) kutindu poovaalaa?????
5) Appa matum taan padam paaakum pothu pakuthula irukira ponnu madila kaala poduviya illa ithu ipavum nadakutha???????
6) white colour turkey towel katindu ( nenju vari) iruntha poster nu matum thaan neyaabagam iruku nu solriyea athu poi.......yena nee padathu peru padikaama verum antha poster matumea paathundu neenureka...
7) apparam unga ambai/kalidai kurichi maamaakal yellam silk ku thevasam sari varusa varsam panraala?
8) ipo silk pathil yaaroda paadam paakara???????//

olungaa yellathukkum answer pannanum sariyaa!!..:P

'Techops' Mami

Vijay said...

தக்குடு, நான் தனியே ஒண்ணும் ஓட்டவே வேணாம்போல இருக்கே. ஆளாளுக்கு அதத் தான பண்றா? என்னவோ போ.. பத்திரமா பிளாக் கரை சேர வாழ்த்துக்கள். :))

Vijay said...

//முதலாளியோட வேட்டியைதான் திரையா கட்டி இருப்பாங்க.//

சரி...அவ்ளோதான். நான் வேற ஓண்ணும் கேக்கலை. :))

Vijay said...

//டப்பால பஞ்சாமிர்தம் மட்டும் தான் வாங்கிண்டு வரலை.//

என்னா வருத்தம்டா சாமி. இருக்கட்டும், இருக்கட்டும்... :))

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீ அக்கா - நான் போஸ்ட் போட்டு பப்ளிஷ் பண்ணிட்டு வந்து பாக்கர்த்துக்குள்ள கமண்டிய உங்கள் அசுர வேகத்தை கண்டு அசந்து போனேன்..:)

தலைப்புக்கு சம்பந்தம் இருக்கு நன்னா வாசிச்சு பாருங்கோ!..:)லேபில் மாத்தியாச்சு, வரலாறு முக்கியம் பின்னாடி சேதாரம் பலமா இருக்க வாய்ப்பு இருக்கும்!னு நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் யோசிச்சேன்..:)

@ பாஸ்டன் நாட்டாமை - ஹலோ போஸ்டை நல்லா படிங்க, இந்த சம்பவம் நடந்த போது தக்குடு வெறும் ஒன்னாம் கிளாஸ், அடி வாங்கின வானரம் 5 ஆம் கிளாஸ்...:) அப்போ(இப்பவும்) தக்குடு கள்ளம் இல்லா பச்சிளம் பாலகன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

தக்குடு இந்த தடவை இந்தியா வந்துட்டு போனதுக்கு அப்பரம் நல்ல மாற்றம் தெரியுது. கல்லிடைலே இருக்கிறாவலுக்கு கேக்கனும்'
அம்பி சார் உங்களுக்கு வேற யாரும் வேண்டாம்... என்னமோ சொல்லுவாங்களே "எதையோ மடில கட்டிட்டு...."னு... அது போல தான்... ஹா ஹா அஹ (ஜஸ்ட் கிட்டிங்... ஆட்டோ எல்லாம் அனுப்ப வேண்டாம்)
@அப்பாவி9?)விருதுபட்டி சனியனை விலைக்கு வாங்கினா மாதிரின்னு சொல்லுவாங்களே அதுதானே

Shobha said...

//இந்த சம்பவம் நடந்த போது தக்குடு வெறும் ஒன்னாம் கிளாஸ், அடி வாங்கின வானரம் 5 ஆம் கிளாஸ்...:) அப்போ(இப்பவும்) தக்குடு கள்ளம் இல்லா பச்சிளம் பாலகன்.//

இதை சொல்லுவதும் தக்குடுவே ! இந்த பாயிண்டை எல்லோரும் நோட் செய்யவும்.

ஷோபா

Anonymous said...

Dear Thakkudu, yethoo nejamaana ummachi post polarukkunu nenachundu yenga amma rooomba seriousaa read panna aarambichuttu non-stopaa siruchundu irukkaa..:) pakkathaathu ponnoda madilathaan kaalai vechupeelaa..:P sandal powder mami,VVD,silk-kilukku terms usage hilarious..:) kalla bhadavaaa!nu ippo yenga ammavey chellamaa ungalai thittaraana paathukongolen..:) sirichu sirichu kannula jalamey vanthuruththu thakkudu! suuuuuuuper post!..:)

Ranjani Iyer

Matangi Mawley said...

sania mirza kutta paavaada- semmmmmma comedy!!! :)

silk smitha oda mention- enga college professor sonnathu ngyabagam vanthathu... silk smitha pona sep 23rd annikku- collge-la ellar mobile-kum avaala 2 min ninachchindu mouna anjali seluththungonnu oru msg pochchu.. athu- thappi thavari enga professor-kum poiduththu.. class la vanthu- unga yaarukkaavathu bhagath singh eppa ponaar-nu theriyumaa-nnu oru kelvi kettaar! enga ellaarkkum appa enna pesarathunney theriyala! ithu serious vishayam thaan.. ivalo comedy-aa irukkara oru pathivukku nadula itha sollanumaa-nnu paaththen.. aanaa- silk smitha paththi yaaru sonnaalum- koodavey bhagath singh ngyaabagamum varaapla pannittaar enga professor!

kushboo koda pudikkara comparison- suuuper!! ellaarum vizhundu porandu sirichchom!! :D :D

Techops mami said...

Hey!!!!!!!! yenaku Comment potti work aaguthu.

தக்குடு said...

@ வி கடவுள் - மதுரைக்கு வந்து ஒரு உருப்படாத கோஷ்டில சேர்ந்ததுக்கு அப்புறம் தான் எங்க அண்ணா இப்படி ஆய்ட்டான்...:))

@ ஆயில்யன் - ம்ம்ம், படம் பேரு என்னனு நீங்க சொல்லவே இல்லையே இன்னும்?..:P

@SK - :) நன்னிஹை!

@ வல்லி அம்மா - நன்னா ஏமாந்தேளா??..:)

@ ஷோபா அக்கா - தாயதி எல்லாம் இல்லை, ஒரு கலை ஆர்வம் அவ்ளோதன்..:)

@ சுபாஷினி - நன்னிஹை!...:)

@ இட்லி மாமி - பெஞ்சுல இருக்கரவா பீடி எல்லாம் குடிப்பாங்க, அந்த கருமத்தை எல்லாம் பொம்ணாட்டிகளும்,குழந்தைகளும் இழுக்க வேண்டாங்கர நல்ல எண்ணத்துல தான் அந்த ஏற்பாடு, பெண்ணியம்! வெங்காயம்!னு கொடி பிடிக்கர்தே இந்த இட்லி மாமிக்கு வேலையா போச்சு...:)

டீடெயில் குடுத்தா தானே ஒரு கலகலப்பா இருக்கும்..:) நன்னிஹை அக்கா!..:)

ஆமாம், நம்ப நாட்டாமை அதுல சூரர்...:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - ஷோபா அக்காவுக்கு சவுண்ட் குடுத்துண்டு இருக்கேளா??..:P

தக்குடு said...

@ 'Techops'மாமி - உங்க முதல் கேள்விக்கு பதில் மெயில் அனுப்பி இருக்கேன்.

2, ஹலோ, இப்போ தக்குடு 5 அடி 8 அங்குலம் தெரியுமா??..:P

3, சானியா மிர்சாவோட டென்னிஸ் ஆட்டத்தை யாரும் பாக்கர்து கிடையாது, வேணுன்னா உங்காத்து மாமாட்ட ஒரு வார்த்தை கேட்டுப் பாருங்கோ!..:)

4, இதை நான் ஒத்துக்கரேன்

5, வில்லங்கமான கேள்வியானா இருக்கு....:)

6, நெஜமாவே படம் பேர் தெரியாது அக்கா, நம்புங்கோ!!

7, திவசமா, மாசா மாசம் தர்பணமே நடந்துண்டு இருக்கு...:)

8, சிலுக்கு எடத்தை யாருக்கும் தரமுடியாது!னு சொல்லிட்டு பழைய சிலுக்கு படத்தை தான் பாத்துண்டு இருக்கா எல்லாரும்.

ஸ்ஸ்ஸ்ஸப்பா, எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியாச்சு...:) உங்களுக்கு HR மாமினு பெயர் வச்சுருக்காலாம், எத்தனை கேள்வி கேக்கரேள்பா..:)

@ விஜய் அண்ணா - ஆமாம், மொத்தமும் டேமேஜ் ஆயாச்சு..:)

@ TRC மாமா - :)) உங்களுக்கு பதில் கமண்ட் போட்டு நான் மாட்டிக்க மாட்டேன்...:)

@ ஷோபா அக்கா - டெண்ட் அடிச்சு இங்கையே தங்கியாச்சு போலருக்கு??..:)

@ ரஞ்ஜனி - உங்க அம்மா தாராளமா என்னை படவா!னு திட்டலாம், எவ்வளவோ வாங்கியாச்சு, இதை வாங்க மாட்டோமா...:)

@ மாதங்கி - நல்ல வாத்தியார் தான்.

@ 'Techops' மாமி - சுத்தம், நான் தொலஞ்சேன் அப்போ!!..:)

Swathi said...

Post is hilarious as usual. I love reading every post .

vgr said...

yov tkp, ida mari A rated post ellam potta thakkudu mari kozhendel lam ennaya pannuva?

தக்குடு said...

@ ஸ்வாதி மேடம் - அப்பிடியா?? நன்னிஹை மேடம்!..:)

@ VGR - நன்னா பாருங்கோ , பதிவுல எந்த ஆபாசமும் இருக்காது. தக்குடு மாதிரி குட்டி குழந்தை சபாலக்ஷண விதியை ஒரு நாளும் மீறாது...:) ( நீங்க முழு பதிவையும் நன்னா படிச்சுட்டு சிரிச்சதும் தக்குடுவுக்கு தெரியும்)..:P

Raks said...

Title, label unga oorla padatha mathra madhri neeyum maathidra polarku :P I was laughing at your A/C drayer ;)

Chitra said...

குட்டைப் பாவாடை எல்லாம் சானியாவுக்குத்தான் நன்னா இருக்கும், தக்குடு போட்டா எல்லாரும் சிரிக்கனா செய்வா! அதுலேந்து சுவர் ஏறி குதிக்கும் போது ரொம்ப ஜாக்ரதையா இருப்பேன்.


...... சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்.... யம்மா .... சான்சே இல்லை.... செம காமெடி எழுத்து நடை... அடிக்கடி எழுதுங்க, தக்குடு!

தக்குடு said...

@ ராஜி மேடம் - போதும் போதும் ரொம்ப சிரிக்காதீங்கோ!..:) லேபில் மாத்த சொல்லி சிங்கபூர்லேந்து அவசர தந்தி வந்தது அதான் மாத்தியாச்சு..:)

@ சித்ரா அக்கா - நன்னிஹை! எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்...:)

Shobha said...

டென்ட் அடிச்சி தங்கறேன்நெல்லாம் கற்பனை பண்ண வேண்டாம். ஏதோ அப்பப்ப எட்டி பாத்து கமெண்ட் போடவேண்டியதுதான் .
ஷோபா

Meena Sankaran said...

நீ எந்த ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிக்கரன்னு நானும் நேத்து ராத்திரி முழுக்க எங்காத்து ஸ்டோர் ரூம்ல போய் மோவாய் கட்டையை தட்டிண்டே மோட்ட பாத்துண்டு வைரமுத்து கணக்குல யோசிச்சு பாத்தேன் தக்குடு. As usual கரும்புள்ளி செம்புள்ளி கணக்குல கொசுக்கடி கிடைச்சுதே தவிர பதில் எதுவும் கிடைக்கல. ரொம்ப நாளாவே எங்காத்து மாடி பல்பு ப்யூசாவே இருக்கு, என்ன செய்ய?

உங்க ஊர் 'இன்சார்ஜ்' மாமியை நினைச்சு பெருமை படர அதே நேரத்துல விடலை பசங்களான உங்களோட தீர்த்தயாத்திரையை நினைச்சா கொஞ்சம் பரிதாபமா தான் இருக்கு. முக்கியமா பிட்டு படம் கனவு இப்படி அல்பாயுசுல போயிடுத்தேப்பா.....

போனாப்போறது போ. முதுகு தழும்பை நினைச்சு வருத்தப்படாதே தக்குடு. அந்த உம்மாச்சி ஒன்னை நிச்சயம் காப்பாத்துவார் கண்ணா. :-)

தக்குடு said...

@ ஷோபா அக்கா - ஒரு லுலுலாயிக்குதான் சொன்னேன் கோச்சுக்காதீங்கோ!!..:) (மூளை கெட்ட தக்குடு! உனக்கு வர 4 கமண்டுக்கும் நீயே வேட்டு வச்சுக்காதே!)

@ மிக்சர் மீனா அக்கா - என்னோட ப்ரண்டோட முதுகு தழும்புக்கு நான் ஏன் வருத்தப்படனும்!!..:PP

ரிஷபன் said...

சூப்பர்! சிரிச்சு மாளல..

RVS said...

//‘கிலுக்கு’னு பேர் வச்சுருக்கலாம் ஓய்!// அப்படியே சிலுக்கு மேடம் ஆப்பிள் கடிச்சு துப்பினப்போ, மாமா யாராவது ஏலத்துக்கு போயிருந்தாளான்னு ஒரு பதிவா எழுதிடுங்கோன்னா..
பேஷ்.பேஷ். சிலுக்குக்கும் அம்பை/கல்லிடை மாமாக்களுக்கும் ஸ்நானப்ப்ராப்தி இருக்கு போலிருக்கே! காமடியில் பின்ரீர். ரசிச்சு எழுதினதை அனுபவிச்சு படிச்சேன். நன்றி.

தக்குடு said...

@ rishaban sir - tan Q!..:)

@ RVS - romba santhosham anna!..:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)