Friday, October 1, 2010

கலக்கல் கல்லிடை

போன பதிவுல சொன்னது போக கொஞ்சம் பாக்கி இருக்கர்தை இந்த பதிவுல சொல்லலாம்னு இருக்கேன். ஊருக்கு தக்குடு போயிருந்த சமயம் வயல்வெளி எல்லாம் பச்சைக்கலர் பட்டுப்புடவை கட்டிண்டு அழகா இருந்தது.எதோ காய்ச்சல் வந்து போனதுல ஊர்ல பல முக்கிய விக்கட்டுகள் போட்டோ ப்ரேமுக்குள்ள போய்ட்டா, 'செக்கு மாதிரி இருந்தா! எப்பிடித்தான் போனாளோ!'னு ஆச்சர்யம் மாறாம சொல்லிண்டா எல்லாரும். இனிமே ஊருக்கு போகர்தா இருந்தா, ‘ஊர்ல காய்ச்சல் எல்லாம் இல்லைல்யோ?’னு தெளிவா ஜாரிச்சுண்டுதான் போகனும்.

ஊர்ல தியேட்டர்ல போய் ஒரு படம் கூட பாக்க முடியலை. பக்கத்து கிராமமான அம்பைலதான் 3 தியேட்டர் உண்டு. பாட்டு &பைட்டுக்கு நடுல திரையை சுத்தி 'ஜிகு ஜிகு'னு கலர் லைட் போடும் பாணியை உலகத்துக்கே முதல் முதலா காட்டிக் குடுத்த பயபுள்ளைங்க இவங்க தான்..:) சின்ன வயசுல ஒரு தடவை சினிமா பாக்க போனது சம்பந்தமா ஒரு சுவாரசியமான கதை உண்டு, அதை தனி பதிவா போடலாம்னு இருக்கேன்.



(கல்லிடை கனவான்களை வரவேற்கும் அம்பை அலங்காரவளைவு)

கல்லிடை மாநகர்ல கிடைக்காத சாமானே கிடையாது. முருக்கு, தட்டை, சீடை, நார்த்தங்காய் ஊறுகாய், மாவடு, அப்பளாம்,வடாம்,பருப்பு பொடி, மூக்குப் பொடி, புண்ணாக்கு பொடி போன்ற வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான சாமான் எல்லாம் பக்கத்து குக்கிராமமான அம்பைல இருக்கரவா கூட இங்க வந்து தான் வாங்கிண்டு போவா. டிவி, ப்ரிட்ஜ்,மீஜிக் சிஸ்டம்,பேன்(fan) மாதிரியான சின்ன சின்ன சாமான் எல்லாம் நாங்க அம்பைலேந்து வாங்கிண்டு வருவோம்.



(எல்லா சினிமாவிலும் தலைகாட்டும் மருதமரங்கள்)

கால் முட்டியை ரத்தம் வர அளவுக்கு பேத்துக்கனும்னா அம்பை ஆத்தங்கரைல போய் குளிச்சா போதும். ஒரே பாறையா இருக்கும், ஆழமும் கிடையாது. கல்லிடைல நீச்சல் தெரியாதவன் எவனாவது இருந்தா, ‘அம்பைல போய் குளில!’னு எங்க ஊர்ல நக்கல் விடுவது வாடிக்கை. அம்பை வெறும் கூத்தாடிப்பய ஊரு! வருஷம் முழுசும் எதாவது சினிமா/சீரியல் சூட்டிங் நடந்துண்டே இருக்கும். நான் போயிருந்த சமயம் கூட குதிரை மாதிரி நாலு பொம்ணாட்டிகள் விஜய் டிவியோட ஒரு சீரியலுக்கான டைட்டில் பாட்டுக்காக ‘இட்லி’ பாறை பக்கத்துல ஆடிண்டு இருந்தா. எங்க ஊர் கரைலேந்து சுமார் 200 மீட்டர் தூரம் அதனால அவா தலைல வச்சுண்டு இருந்த பிச்சிப் பூ மட்டும் தான் தெரிஞ்சது, அந்த கரைல போய் அவா கட்டிண்டு இருந்த புடவை சில்க் காட்டனா அல்லது கோரா காட்டனா அப்படிங்கர சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்கர்துக்காக தான் நான் பாக்க போனேன்னு சொன்னா நீங்க நம்பவா போறேள்...:)

ஊர்ல தக்குடு போயிருந்த சமயம் தான் பதிவுலக 'சிரிப்பு வித்துவான்' டுபுக்கு அண்ணாச்சி அவரோட முழூ பரிவாரத்தோட லண்டன்லேந்து வந்து கல்லிடைல முகாமிட்டிருந்தார். எப்படியாவது ஒரு 5 நிமிஷம் அந்த மனுஷர் கூட பேசிடனும்னு நானும் தம்கட்டி முயற்சி பண்ணி பாத்தேன். ம்ம்ம்ம்ம்! கடைசி வரைக்கும் நடக்கவே இல்லை, ஏதோ ‘பெப்ஸி’ உமாவுக்கு போன் பண்ணி பேசர மாதிரி, ' நன்னா இருக்கேளா? சாப்டாச்சா? கக்கா போயாச்சா?'னு போன்லதான் 3 தடவை பேச முடிஞ்சது. நம்ப நாட்டாமையோட சங்கத்து ஆள்னு தெரிஞ்சும் என்னை பாக்கர்த்துக்கு டுபுக்கு அண்ணாச்சி நேரம் ஒதுக்கவே இல்லை. இதை கண்டித்து ‘பாஸ்டன்’ நாட்டாமை பாஸ்டன்ல ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்னு நான் நம்பறேன்.

ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவரோட தங்கமணியையும்(அதாவது நம்ப அக்கா) 2 குழந்தைகளையும் பாத்து ரொம்ப நேரம் பேச முடிஞ்சது. அவர் இன்னிக்கி இவ்ளோ பெரிய வித்துவானா இருக்கர்த்துக்கு அவரோட தங்கமணியும் அவங்க விலக்கமாத்து அடியும் ஒரு காரணம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அதனால ஒரு பெரிய ஆளை சந்திச்ச திருப்தி..:)



(மாமனும் மருமகள்களும்)

ஊருக்கு போனதுலேந்தே புதுசா ஒரு தேவதையை எங்க தெருல பாத்தேன். ரொம்ப தெரிஞ்ச மாதிரியும் இருந்தது, அதே சமயம் தெரியாத மாதிரியும் இருந்தது. நான் தான் பாத்தேனே தவிர அது ஒரு கேவலமான லுக்கு கூட விடவே இல்லை .2 நாள் இப்பிடியே போயிடுத்து. மூனாவது நாள் காத்தால அவாத்து பக்கமா போகும் போது லேசா என்னை பாத்து சிரிச்ச மாதிரி இருந்தது. அவளோட அப்பா பக்கத்துல இருந்தார், அதனால ஒன்னும் நான் பயப்படலை, அந்த பொண்ணே இவ்ளோ தைரியமா சிரிக்கும் போது நம்ப பேசமா இருக்க முடியுமா? நானும் பதிலுக்கு ஈஈஈஈ!னு பல்லை காட்டினேன். மெதுவா பேச்சும் குடுத்தேன். அவ்ளோதான்! என்னோட கேர்ள் ப்ரண்ட்ஸ் லிஸ்டுல ஒரு புது பேர் சேர்ந்துருத்து. அடுத்த நாள் காலைல பாத்தா மாம்பழ கலர்ல மருதாணிக் கலர் பார்டர் போட்ட புது பட்டுப்பாவாடை எல்லாம் போட்டுண்டு நின்னது நம்ப ஆளு, அவளோட பொறந்த நாளாம்! நம்ப தான் பாரி வள்ளலோட பத்தாவது தலைமுறை ஆச்சே! உடனே என்னோட கழுத்துல இருந்த நீளமான ஒரு செயினை கழட்டி அவளோட கழுத்துல போட்டு விட்டுட்டேன். அந்த சமயம் பாத்து அவளோட அம்மா & அப்பா ரெண்டு பேரும் வந்துட்டா, ஆனா ஒன்னும் சொல்லலை. அவளை விட்டு பிரிஞ்சு வர மனசே இல்லை. புது ட்ரெஸ்ல என்னோட பப்பு! எப்புடி இருக்கா பாத்தேளா??..:)



(தக்குடுவின் கனவு தேவதை 'பப்பு')

34 comments:

ஆயில்யன் said...

பாஸ் தப்பா நினைக்கப்பிடாது - நினைச்சா மன்னிச்சுடுங்க ஒ.கேவா

உங்க கேர்ள் ப்ரெண்ட் செம அழகா க்யூட்டா இருக்காங்க எனக்கும் புடிச்சிருக்கு :))

அனேகமா உங்களை பார்த்து ஒரு பயம் அல்லது பீதி அவுங்க கண்ணுல தெரியது என்னிய பார்த்தாங்கன்னா ஸ்மைலுவாங்கன்னு நான் நம்புறேன்! :)

Anonymous said...

antha ponnu veetla solli suthi poda sollanum. ellar kannum padarathu. kurippa thakkudu kannu patra porathu. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

தக்குடு உன்னோட போட்டோவயும் சேர்த்தே போட்டு இருக்கலாம். குழந்தைக்கு திருஷ்டி வாரம இருக்கலாம் இல்லையா?

தி. ரா. ச.(T.R.C.) said...

புண்ணாக்க ு பொடி போன்ற வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான சாமான்
அதுவும் உனக்கு ரொம்பவே ஏன்னா உனக்கு காத்தாலே டிபனே அதானே

Vijay said...

"பச்சைக்கலர் பட்டுப்புடவை" ஓகே... பாய்ண்ட் நோட்டட்.

Vijay said...

//எதோ காய்ச்சல் வந்து போனதுல ஊர்ல பல முக்கிய விக்கட்டுகள் போட்டோ ப்ரேமுக்குள்ள போய்ட்டா, 'செக்கு மாதிரி இருந்தா! எப்பிடித்தான் போனாளோ!'னு ஆச்சர்யம் மாறாம சொல்லிண்டா எல்லாரும். இனிமே ஊருக்கு போகர்தா இருந்தா, ‘ஊர்ல காய்ச்சல் எல்லாம் இல்லைல்யோ?’னு தெளிவா ஜாரிச்சுண்டுதான் போகனும்.//

காய்ச்சலுக்கே இந்த கதின்னா, தக்குடு வந்துட்டு போய் இருக்காப்லியே...இன்னும் என்ன என்ன நடக்க போவுதோ.. எதுக்கும் போன் போட்டு கன்பார்ம் பண்ணிக்கோ தக்குடு...:))

Vijay said...

//ஊர்ல தியேட்டர்ல போய் ஒரு படம் கூட பாக்க முடியலை.//

என்னா ஊருல தியேட்டரே இல்ல....

Vijay said...

//சின்ன வயசுல ஒரு தடவை சினிமா பாக்க போனது சம்பந்தமா ஒரு சுவாரசியமான கதை உண்டு//,

எது....நடிக்கிறவாள் ஏல்லாம் திரைக்கி பின்ன தான் இருக்காங்கன்னு ஸ்கிரீன் பின்ன போய் செக் பண்ண கதைதானே?

Vijay said...

//(கல்லிடை கனவான்களை வரவேற்கும் அம்பை அலங்காரவளைவு)//

வளவுல விக்டரி மெமோரியல் (கல்லிடை அம்பை சண்டைல ஜெய்ச்ச அம்பை நினைவு வளைவு???)ன்னா போட்டுருக்கு...

Vijay said...

//குதிரை மாதிரி நாலு பொம்ணாட்டிகள் விஜய் டிவியோட ஒரு சீரியலுக்கான டைட்டில் பாட்டுக்காக ‘இட்லி’ பாறை பக்கத்துல ஆடிண்டு இருந்தா. எங்க ஊர் கரைலேந்து சுமார் 200 மீட்டர் தூரம் அதனால அவா தலைல வச்சுண்டு இருந்த பிச்சிப் பூ மட்டும் தான் தெரிஞ்சது, அந்த கரைல போய் அவா கட்டிண்டு இருந்த புடவை சில்க் காட்டனா அல்லது கோரா காட்டனா அப்படிங்கர சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்கர்துக்காக தான் நான் பாக்க போனேன்னு சொன்னா நீங்க நம்பவா போறேள்...:)//

சே...சே...நாங்க எப்புடி நம்புவோம். நீங்க 4 நாள் அங்கியே தங்கி (டான்ஸ் பொண்ணூங்க ஊருக்கு போற வரைக்கும்) இருந்து கோரா காட்டன்..சில்க் காட்டன் ஆராய்ச்சி எல்லாம் பண்ணி தர்ம அடி வாங்கின விசயம் தான் எங்களுக்கே தெரியுமே...:))

Vijay said...

//எப்படியாவது ஒரு 5 நிமிஷம் அந்த மனுஷர் கூட பேசிடனும்னு நானும் தம்கட்டி முயற்சி பண்ணி பாத்தேன்.//

சரி சரி தண்ணில இருந்தா தம் கட்டி தானே ஆகணும்...:))

Vijay said...

//அவர் இன்னிக்கி இவ்ளோ பெரிய வித்துவானா இருக்கர்த்துக்கு அவரோட தங்கமணியும் அவங்க விலக்கமாத்து அடியும் ஒரு காரணம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.//

தக்குடு, விள்க்குமாத்து அடி எல்லாம் ஒரு பொருட்டே இல்ல. லேட்டஸ்ட் குழவி கல்லாம்..எஸ்கேப்.....:))

Vijay said...

//அடுத்த நாள் காலைல பாத்தா மாம்பழ கலர்ல மருதாணிக் கலர் பார்டர் போட்ட புது பட்டுப்பாவாடை எல்லாம் போட்டுண்டு நின்னது நம்ப ஆளு, அவளோட பொறந்த நாளாம்! நம்ப தான் பாரி வள்ளலோட பத்தாவது தலைமுறை ஆச்சே! உடனே என்னோட கழுத்துல இருந்த நீளமான ஒரு செயினை கழட்டி அவளோட கழுத்துல போட்டு விட்டுட்டேன். அந்த சமயம் பாத்து அவளோட அம்மா & அப்பா ரெண்டு பேரும் வந்துட்டா, ஆனா ஒன்னும் சொல்லலை. அவளை விட்டு பிரிஞ்சு வர மனசே இல்லை. புது ட்ரெஸ்ல என்னோட பப்பு! எப்புடி இருக்கா பாத்தேளா??..:)//

எல்லாம் செரி, பப்புவோட அம்மா அப்பா ரெண்டு பேரும் அந்த நீஈஈஈளமான செயினை காணோம்ன்னு தேடிண்டு இருந்தாளாமே..நீங்க போன பின்னாடி...(அப்கோர்ஸ் அது அவங்க போட்டதாமே...நீங்க வேற மாதிரி எழுதிட்டதா இல்ல சொல்றா...)

Vijay said...

For follow up.

mightymaverick said...

உங்க அண்ணன் லெப்ட்ல திரும்ப ரைட்ல கை காமிச்சானே அந்த இடமெல்லாம் சேமமா இருக்கா (இந்த இடத்துக்கு பேரு ஸ்ரீ லெப்ட்... ஹிஹிஹி)

ரிஷபன் said...

உடனே என்னோட கழுத்துல இருந்த நீளமான ஒரு செயினை கழட்டி அவளோட கழுத்துல போட்டு விட்டுட்டேன்.
போட்டோல இருக்கற செயினா..?!

Shobha said...

பப்புவுக்கு நன்னா பப்பு மம்மு குடுத்து ஊட்டமா வளத்தியிருக்கா :)
ஷோபா

தக்குடு said...

@ vijay anna - sssssssssssssappaa ippavey kannai kattuthey!!..:) again start music panniyaacha yennoda blogla??...:))

Dubukku said...

//கல்லிடைல நீச்சல் தெரியாதவன் எவனாவது இருந்தா, ‘அம்பைல போய் குளில!’னு எங்க ஊர்ல நக்கல் விடுவது வாடிக்கை. //
இந்த ஒரு விஷயத்திலாவது நாங்க உங்க ஊரப் பத்தி சொல்றத உல்டா பண்ணி சொல்லாம இருந்திருக்கலாம். இதுக்கு கூடவா எங்க ஊர காப்பி அடிக்கனும். போட்ட ஃபோட்டாலாம் எங்க ஊர் ஃபோட்டோ...பதிவுக்கு பேரு மட்டும் கலக்கல் கல்லிடை. திருந்தவே மாட்டீங்கடா...உங்கள சொல்லி குற்றமில்லை. காப்பியடிக்கிறதுக்கும் உங்களுக்கு எங்க ஊரவிட்டா யாரு இருக்கா...

//ன்னை பாக்கர்த்துக்கு டுபுக்கு அண்ணாச்சி நேரம் ஒதுக்கவே இல்லை// - முதல் நாள் மட்டும் வேலையா வெளியே போய்ட்டே. ஆனா அதுக்கப்புறம் யாரோ ஒருத்தர் ரெண்டு நாளா அண்ணாச்சி அங்கேயே வீட்டுலயே இருங்க இதோ வந்துட்டேன்னு காதிருக்க வெச்சாரு. அவங்க அண்ணாச்சி வந்த போது கூட அவரு பயங்கர பிஸியாம் :)))

தக்குடு said...

@ டுபுக்கு அண்ணாச்சி - வாங்க துரை வாங்க! இவ்ளோ பிஸியான ஆளு இந்த பொடிப்பய குடிசைக்கு வந்ததே பெரிரிரிரிரிய விஷயம் தான்..:P எதோ நாங்க ப்ளாக் மாதிரி கலை சேவை எல்லாம் ஆரம்பிக்கர்த்துக்கு முன்னாடியே இந்த அம்பைகாரங்க ஆரம்பிச்சி வரலாற்றை திரிச்சி எழுதிட்டா அது உண்மை ஆயிடுமா? உண்மை என்ன?னு உலகத்துக்கு சொல்லுடா தக்குடு!னு எங்க அக்காதான் ஊர்ல சொல்லி அனுப்பி வச்சாங்க.

ஹலோ இந்த சால்ஜாப்பு எல்லாம் இங்க வேண்டாம். உங்களை பாக்கனும்னு 2 நாள் முன்னாடியே மதுரைலேந்து கிளம்பி ஊருக்கு வந்தவனாக்கும் நான். அண்ணாச்சி வந்த சமயம் கோவில் விஷயமா வெளில போய்ட்டேன் அவ்ளோதான்....:)

Jeyashris Kitchen said...

nalla ooru po. un kutti devadai semma cute. paavam romba bayandhupoi iruuka.Btw, aaraichi mudiyu enna? silk cottona,coracottona?,illa dharmaadiya?????

Vijay said...

//@ vijay anna - sssssssssssssappaa ippavey kannai kattuthey!!..:) again start music panniyaacha yennoda blogla??...:))//

நிறுத்துபா...நிறூத்த்து...இந்த க்ண்ண கட்டர கதையெல்லாம் வேணாம்.. எல்லா கேள்விக்கும் பதிலு வேணூம் பதிலூ...ஆஆமா...

எனக்கு மட்டும் இல்ல, என் சார்பா கேள்வி கேட்ட ஜெயஸ்ரீசுரேஷ், டுபுக்கு, ரிஷபன், வித்தியாசமான் கடவுள்...எல்லாருக்கும்....(என்னாது நீங்க யாரும் என் சார்பா கேக்கலயா.. ஹாலோ..ஹலோ...எனக்கு காது செரியா கேக்கலபா...வரட்டா...)

Raks said...

Nice post :) I liked your dream gal the best! :) :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//(கல்லிடை கனவான்களை வரவேற்கும் அம்பை அலங்காரவளைவு)//

அடேயப்பா நீ உங்க ஊர்ல இவ்ளோ பேமஸ்னு சொல்லவே இல்லையே தக்குடு

//(எல்லா சினிமாவிலும் தலைகாட்டும் மருதமரங்கள்)//

very nice picture



//ஒரு சீரியலுக்கான டைட்டில் பாட்டுக்காக ‘இட்லி’ பாறை பக்கத்துல ஆடிண்டு இருந்தா//

இட்லி பாறைனா என்ன? நெஜமாவே டவுட்... நோ கிண்டல் ஒகே...



//அவா கட்டிண்டு இருந்த புடவை சில்க் காட்டனா அல்லது கோரா காட்டனா அப்படிங்கர சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்கர்துக்காக தான் நான் பாக்க போனேன்னு சொன்னா நீங்க நம்பவா போறேள்...:) //

ச்சே ச்சே... உன்ன பத்தி அப்படி எல்லாம் நாங்க தப்பா நெனப்போமா...(ஹா ஹா)



//புது ட்ரெஸ்ல என்னோட பப்பு! எப்புடி இருக்கா பாத்தேளா??..:)//

நீ இவ்ளோ விலாவாரியா சொல்றப்பவே இப்படி தான் இருக்கும்னு நான் மொதலே கெஸ் பண்ணிட்டேன்... அல்வா ஊர்காரங்க பத்தி தெரியாதா? ஹா ஹா ஹா (cute baby...சுத்தி போட சொல்லு)



கலக்கல் போஸ்ட் தான்...ஹா ஹா ஹா

Ananya Mahadevan said...

@அப்பாவி, நீ வேணா இட்லி பாறையில போய் இட்லி ட்ரை பண்ணிப்பார்த்துடேன்.. ஒரு வேளை நல்லா வருமோ என்னமோ? ஹீஹீ

@தக்குடு,
எங்கள் தலைவரின் ஊரை தாறுமாறாக விமர்சித்ததை வன்மையா கண்டிக்கிறேன். என்ன நினைச்சுண்டு இருக்காய்? சுண்டைக்காய், வெண்டைக்காய் எல்லாம் தி கிரேட் கல்லிடைகாஸ்மோவாம், ஐபாட், லாப்டாப், எந்திரன் எல்லாம் தி அம்பை வில்லேஜாம்.. கிர்ர்.. ரேஸ்கல்!
பப்புவுக்கு மஹா மட்டமான டேஸ்டு.. பாவம் குழந்தை.. அதை விட்டுடு.. அழற லெவலுக்கு வந்திடுத்து.. ஃபோட்டோ பார்த்தாலே தெரியறது.

இவண்
தலைவரின் உண்மையான சங்கத்தலைவலி ச்ச்சாரி, சங்கத்தலைவி,
அநன்யா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அநன்யா மஹாதேவன் said...
@அப்பாவி, நீ வேணா இட்லி பாறையில போய் இட்லி ட்ரை பண்ணிப்பார்த்துடேன்.. ஒரு வேளை நல்லா வருமோ என்னமோ? ஹீஹீ//

என்னத்துக்கு, என் இட்லியா பாறையா எது பெஸ்ட்னு எல்லார் வாய்க்கும் அவல் குடுக்கவா? வேண்டாம்பா, I gave up with this idli and idli gave up on me too... ha ha ha

Anonymous said...

Unnoda blogla postai vidaa comments yellam bayangaraa sirippaa irukku thakkudu...:P

Techops mami

தக்குடு said...

@ ஆயிலயன் - பிச்சு! பிச்சு! பப்பு எனக்கு மட்டும் தான் சொந்தம்...:)

@ பரவஸ்து அண்ணா - உங்களை எப்பிடி வரவெச்சா பாத்தேளா என்னோட பப்பு!!...:)

@ TRC மாமா - போட்ருக்கேனே! நன்னா பாருங்கோ!..:)

@ விஜய் அண்ணா - தக்குடு வந்து போனதுல கல்லிடை நகரமே செழிச்சு செல்வ வளம் தாண்டவம் ஆடர்தாம்..:)

தியேட்டர் பத்தி தான் அடுத்த பதிவு..:)

ஆமாம், அம்பையை கல்லிடை ஜெயிச்ச ஞாபகார்த்தமா அம்பைல நாங்க கட்டினது தான் அந்த வெற்றி வளைவு..:)

நாலு பேர்ல ஒரு பிகர் பேரு கூட எதோ அனிதா!னு சொன்னா....;)

குழவி கல்லு மேட்டர் நானும் படிச்சேன்..:)

கொடுத்து கொடுத்து சிவந்த கைகள்யா நமக்கு, அதனால உங்க பாயிண்ட் செல்லாது! செல்லாது!..:)

@ வி கடவுள் - ஆமாம், செளக்கியமா இருக்கு...:) அது ஒரு ஜாலியான அனுபவம் இல்லையா?...:)

@ ரிஷபன் சார் - ஆமா, அந்த நீளமான செயின் நம்ப செயிந்தான்...;)

@ ஷோபா அக்கா - உங்க காலடி மண்ணை எடுத்து என்னோட பப்புவை சுத்தி போடனும்...:P

@ ஜெய்ஷ்ரீ அக்கா - அது கோரா காட்டன் தான்...:) தக்குடு இதுல எல்லாம் தப்பே விடமாட்டான்..;)

@ ராஜி மேடம் - பப்புவுக்கு ரசிக/ரசிகைகள் ஜாஸ்தி ஆயின்டே போகர்து..:)

@ இட்லி மாமி - நீங்க அந்த பாயிண்ட்ல வந்து நிப்பேள்னு எனக்கு தெரியுமே!!..:P

@ அனன்யா அக்கா - அபுதாபி ரவுடி! கொஞ்ஜம் அடக்கி வாசிங்கோ! இது பங்காளிப் பிரச்சனை...:)

@ Techops mami - எப்பிடியோ ஜாலியா இருந்தா சரிதான்..:)

Vijay said...

//விஜய் அண்ணா - தக்குடு வந்து போனதுல கல்லிடை நகரமே செழிச்சு செல்வ வளம் தாண்டவம் ஆடர்தாம்..:)

தியேட்டர் பத்தி தான் அடுத்த பதிவு..:)

ஆமாம், அம்பையை கல்லிடை ஜெயிச்ச ஞாபகார்த்தமா அம்பைல நாங்க கட்டினது தான் அந்த வெற்றி வளைவு..:)

நாலு பேர்ல ஒரு பிகர் பேரு கூட எதோ அனிதா!னு சொன்னா....;)

குழவி கல்லு மேட்டர் நானும் படிச்சேன்..:)

கொடுத்து கொடுத்து சிவந்த கைகள்யா நமக்கு, அதனால உங்க பாயிண்ட் செல்லாது! செல்லாது!..:)//

ஆமா தக்குடு, நீ கத்தார் ராசாவோட தத்து பையனோன்னோ, இங்க இருந்து எல்லா காசையும் அங்க கொண்டுட்டு போய் கொடுத்துட்டியோன்னா, அதான் செல்வ வளம் தாண்டவம் ஆடரது...அய்ய... ஊருல நீ நடத்தின வசூல் வேட்டைல தலை மறைவானவா இப்போதான் ஒருத்தர் ஒருத்தரா திரும்பிண்டு இருக்காளாம்...

எப்படியோ பதிவுக்கு மேட்டர் தேத்திட்டீங்க. ம்ம்..

வெற்றி விழா வளைவுன்ன அங்க போய் ஏன் கட்டுவானேன்? ஓ... உங்க ஊருல செங்கல்லு, சிமெண்டு, கம்பி போன்ற உதாவாக்கரை பொருள் ஏதும் இல்லலே. காஸ்ட்லியான களிமண்ணு, முங்கிலு, இது மட்டும்தானே கெடக்கும்...ம்ம்...

ஒரு ஃபிகர் பேர் சொல்லிச்சி சரி, ஆனா மீதி மூணும் பேர கெடுத்துருச்சாமே...அது ஏன் சொல்லலை?

குழவிக்கல்லு மேட்டர் படிச்சிதான் தெரிஞ்சிண்டயா? இல்ல.. இதுக்கு சூத்தரதாரியே நீதானா? (டுபுக்கு...கீப் அன் அய் ஆன் தக்குடு ஆல்வேஸ்)..

அது என் பாயண்ட்டே இல்ல தக்குடு, பொருள தொலச்சவாளாட கதறல்.. நான் வெறும் மீடியா தான். வேணும்னா இந்த வாரம் நம்ம எல்லாரும் போய் “கதை அல்ல, நிஜம்” லஷ்மி கிட்ட ஒக்காந்து நியாயம் கேக்கலாம். செயின திருப்பி கூட தர வேண்டாம், இந்த தண்டனையே போதும்...ஹா...ஹா...ஹா..(காப்பி ரைட் தாங்ஸ் டு அப்பாவி தங்கமணி)

Anonymous said...

Dear Thakkudu, first of all Pappu is soooooooooooooo sweeeeeeet! ungalooda chainai vechu kovil theraiyee(temple car)iluthudalaam poolarukku..:) neengalum photola 2 marumaalooda samatha alzakathaan irukkel..:) 'Paakkarthukku saaduvaa irukkey intha pillai'nu my mom also commenting about you. silk cotten pombeleelai nanna site adichelaa??..:P

Ranjani Iyer

அமுதா கிருஷ்ணா said...

மருமகள்கள் அழகு..

Krishnaveni said...

Hilarious writing, cute baby photos, nice

Matangi Mawley said...

hee..hee!! unga GF suuuperubbbuuu!!! :D :D

enna comparison- unga oorkum ambaikkum! suuper!

தக்குடு said...

@ Amutha madam - marumagalkal mattum thaanaa??..:(

@ krishnaveni madam - dank u! antha 3rd photola irukkum 3 baby pathithaaney you are commenting...:)

@ Matangi - yellarooda kannum yennoda Pappu melathan irukku..:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)