எங்க ஊர் பக்கமெல்லாம் ஒரு பட்டப்படிப்பு முடிச்சாலே அதுக்கப்புறம் அந்த பையன் வீட்டுல இருக்க முடியாது. அதிகாலையில் நம்ப அம்மா பால் வாங்கப் போகும்போதே, உங்காத்து அம்பிக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியர்து இல்லையோ?? மேற்கொண்டு என்ன பண்ணப்போறான்? அப்படின்னு எதிர்தாத்து மாமி திரியை கிள்ளி சத்தம் இல்லாமல் கில்ட் வெடியை பத்த வைத்துவிடுவார்கள். அதுக்கப்புறம் நாம எங்க நிம்மதியா தூங்க?? காப்பி கலக்கும் போதே, நம்ப வயத்தையும் சேர்த்து கலக்கிவிட்டு விடுவார் அம்மா. இந்த நடைமுறையில் இருந்து நானும் தப்ப முடியவில்லை.
நீங்க இஷ்டப்பட்ட வேலைக்கோ, அல்லது ஒரு சாதாரண கம்பெனி வேலைக்கோ நீங்க போகமுடியாது. அம்புஜா மாமியோட ஓர்படி புள்ளை வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில்(அல்லது மற்ற முன்னணி நாலு கம்பெனியில் எதாவது ஒன்று) வேலை பார்த்தாதான் உங்களை மனுஷஜென்மமாகவே அந்த மாமி மதிப்பா. இதை மீறி அவாளுக்கு தெரியாத எதாவது ஒரு MNC –ல்(For eg Honeywell(தேன்கிணறு))வேலைக்கு நீங்கள் சேர்ந்து விட்டால் அவ்ளோதான் கதை. பாவம் முத்து மாமி புள்ளை! ஏதோ கிணறு வெட்டிக் கொடுக்கிற கம்பெனில வேலைக்கு சேர்ந்துருக்கானாம்! என்பார்கள். புதன் கிழமை வரும் 'இந்து' பேப்பர் வாங்குவதற்கு மட்டும் பெரிய அடிபுடியே நடக்கும், ஏன்னா அன்னிக்கிதான் 'ஆப்பர்சூனிட்டி' இணைப்பும் சேர்ந்து வரும். இரண்டேமுக்கால் ரூபாய் கொடுத்து அந்தப் பேப்பரை வாங்கி நாம பார்த்தா, அதுல ஒரே பல்பு மயமா(நம்ப மங்குனி அமைச்சர் வாங்கினது போக மிச்சம் உள்ளது) இருக்கும். எல்லா வேலைக்கும் குறைந்த பட்சம் மூனுலேந்து ஆறு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் கேட்பார்கள்,அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா நான் ஏன்டா இந்தப் பேப்பரை வாங்கி புறட்டப்போறேன்! என்று நமக்கு தோனும். அதையும் மீறி எதாவது ‘பிரஷ்ஷர்’ ஓப்பனிங் இருந்தாலும் அது B.E,B.Tech,B.Sc அந்த மாதிரி இருக்கும். கணக்கு புள்ளைக்கு வேலை கிடைப்பது/பொண்ணு கிடைப்பது ரெண்டுமே ரொம்ப கஷ்டம்.
ஒரு காலை நேரத்தில் சந்தி எல்லாம் பண்ணி விட்டு, அம்மா சூடாக வார்த்து வச்சுருந்த இட்லியில் ஒரு ஆறு இட்லியை தேங்காய் சட்னியோடு பக்குவமாய் உள்ளே தள்ளிக் கொண்டு இருந்த போது, என்னோட அப்பா, ஒரு குறிப்பிட்ட பக்கத்தை கையில் எடுத்துக் கொண்டு வேகமாக பட்டாசாலைக்கு(டைனிங் ஹால்) வந்தார். Life is calling...... where are you?? னு கிங்பிஷர் சரக்கு விளம்பரம் மாதிரி ஒரு வேலை வாய்ப்பு விளம்பரம் பிரசுரமாகி இருந்தது. விளம்பரத்துக்கு கீழே பார்தால் அது ஒரு முக்கியமான மென்பொருள் நிறுவனத்தின் விளம்பரம். அப்பா அம்மா வெளில போகும்போது என்னமாதிரி சின்னக்குழந்தைகள் எல்லாம் கையை ஆட்டி சொல்லும் ஒரு 2 எழுத்து வார்தையை நாமகரணமாய் கொண்ட கம்பெனியின் மென்பொருள் பிரிவிற்கு ஆள் எடுப்பதற்கான விளம்பரம் அது. இந்த விபரம் அனைத்தும் அப்பா வாசிச்சு சொன்னது, பாதியில் இட்லியை விட்டுட்டு வந்தால் சூடு ஆறிவிடும் என்பதால், எடுத்த காரியத்தை கருமமே கண்ணாக முழுவதுமாக முடித்து விட்டு நிதானமாக வந்து பேப்பரை புரட்டினேன். என் கடமை உணர்ச்சியை கண்டு எங்கம்மா தலையிலடித்துக் கொண்டு போனார்.
முதலில் எழுத்துத்தேர்வு, அதன் பின்பு மூச்சுத் திணறத் திணற யாரெல்லாம் அந்த கம்பெனியில் ப்ரியா(வேலையில்லாமல்)இருக்காளோ, அவாளெல்லாம் நேர்முகத்தேர்வு நடத்துவார்கள் என்று விளாவரியாக விளக்கி இருந்தார்கள். முதலில் நம்முடைய 'பயோடேட்டா' வை அவாளுக்கு மெயிலில் அனுப்பி வைக்கவேண்டும். நம்ப ஜாதகம் அவாளுக்கு மாட்ச் ஆகி இருந்ததுனா, நம்பளை பொண்ணுபார்க்க மன்னிக்கவும், எழுத்துத் தேர்விற்கு அழைப்பார்கள்.
ரிட்டர்ன்டெஸ்டு சென்னையில் வைத்து என்று அந்த விளம்பரத்தில் இருந்தது. அந்த சமயம் எங்க அண்ணா சென்னையில்தான் எதோ ஒரு கேக்ரான்! மோக்ரான்! கம்பெனியில் ப்ளாக் படித்துக்கொண்டே நடுவில் சமயம் கிடைக்கும் போது வேலையும் பார்த்துக்கொண்டிருந்தான். அதுவும் போக எங்க வீட்டில் 'ஆனந்தம்'படத்துல வர மம்முட்டி மாதிரி எங்க அண்ணன். எதுனாலும் பெரியவன்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்! என்று அம்மா, அப்பா ரெண்டுபேரும் சேர்ந்து சொல்லிவிடுவார்கள். அவ்ளோதான் எங்கண்ணனை கையிலையே புடிக்க முடியாது. பயங்கரமா லெவல் காட்டுவான்.(இப்பவும் அவனிடம் கேட்காமல் நான் எதுவும் செய்யமுடியாது). ஒருமாதிரி ரிட்டன்டெஸ்ட் எழுத எனக்கு அழைப்பும் வந்தது. பையை தூக்கிக் கொண்டு சென்னையை நோக்கிப் புறப்பட்டேன்.
மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் என்னை அழைத்துக் கொண்டு போக உடன் பிறப்பு காத்திருந்தது.
அடுத்த நாள் காலையில் அஞ்சு மணிக்கே எனக்கு முழிப்பு வந்துவிட்டது. கசகசனு மேல எல்லாம் ஒரே வியர்வை, காத்தாடி பாட்டுக்கு சுத்திண்டு இருந்தது ஆனா ஒரு பிரயோஜனமும் இல்லை. அடுத்த அதிர்ச்சி எனக்கு காத்துக்கொண்டிருந்தது. ஒரு பிளாஸ்டிக் குடத்தையும்,ஒரு வாளியையும் என்னோட கையில் கொடுத்தான். அடுத்த தெருவில் இருக்கும் குழாயில் போய் நம்ப தண்ணி புடிக்கணும்!னு சொன்னான். எங்க தெரு கோவில் புள்ளையாருக்கு பித்தளை குடத்துல தண்ணி சுமந்துருக்கேனே ஒழிய வீட்ல எல்லாம் 24 மணி நேரமும் தாமிரபரணி குழாயில் களி நடம்புரியும். புடிச்சுண்டு வந்ததுக்கு அப்புறம் ஒரு வாளி தண்ணியை பாத்ரூமுக்குல்ல வச்சுட்டு, இதுல நீ என்ன பண்ணமுடியுமோ அதை எல்லாம் இன்னும் 15 நிமிஷத்துல பண்ணி முடி!னு சொல்லிட்டு போய்ட்டான். அந்தத் தண்ணியில் பட்ட சோப்பில் துணி/உடம்பு ரெண்டுலையும் நுரையே வரவில்லை(இந்த ஊர்ல மட்டும் உப்புல தண்ணியை கலப்பா போலருக்கு! என்று நினைத்துக்கொண்டேன்..). மனமே பொறு!னு சொல்லிட்டு ஒரு மாதிரி குளிக்கும் படலம் முடிந்தது.
ஆட்டோவெல்லாம் வச்சு என்னை அந்த நிறுவனம் இருக்கும் ஜவஹர்லால் நேரு சாலைக்கு கூட்டிண்டு போனான். “அண்ணன் ராமதுரை அழைக்கிறார், அலைகடலென திரண்டு வாரீர்!”னு எல்லா ஊர்லையும் போஸ்டர் அடிச்சு ஒட்டியது போல,உள்ள நுழஞ்சா சுமார் இரண்டாயிரம் பேர் வரிசைல நின்றுகொண்டிருந்தார்கள்(பாவம்! எந்த அம்புஜா மாமியோட பிரஷரோ??). இது எதோ ரயில்வே எக்ஸாம் மாதிரினா இருக்கு!னு நான் வியந்து போனேன். ஊர்ல இருக்கும் நூலகத்திலிருந்து R.S.அகர்வாலோட( நம்ப சோனியா அகர்வாலோட பெரியப்பாதான் அவர் தெரியுமா கொடி??) எழுத்துத் தேர்வு
புக்கெல்லாம் படிச்சுட்டு வந்திருந்தேன். அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை மாட்டிண்டு ஒரு நாலு HR தடியன்களும் கூடவே பொறுப்பான நாலு HR பிகர்களும் பிரசவ ஆஸ்பத்திரி மாதிரி அங்கையும், இங்கையுமா உலாத்திக் கொண்டு இருந்தார்கள். பரிட்சை எழுத வந்தவர்கள் எல்லோரும் (என்னைத் தவிர) எதோ மந்திரிச்சுவிட்ட கோழி போல இருந்தார்கள்.
சிறிது நேரத்தில் ஒரு HR மாமா தன் சொம்புகள் புடை சூழ வந்தார். ஒரு பதினாலு நிமிடம், என்னமோ அவருடைய துறையை சேர்ந்தவாதான் அந்த பில்டிங்கையே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல மைக்கில் பீத்தினார். அதன்பிறகு உணவு உண்ணும் இடத்தில் டேபிளுக்கு 2 பேர் வீதம் நாங்கள் உட்கார வைக்கப் பட்டோம். என்னோட டேபிள்ல இருந்த பையனிடம்(ஆமாம், பையந்தான்), எல்லாம் படிச்சுட்டு வந்துருக்கியா!னு வாஞ்சையாக விசாரித்தேன். அவன் காது செவிடாவன் போல எந்த ரியாக்ஷனுமே பண்ணவில்லை. இந்த ஊர்ல உள்ளவா பேசர்துக்கே பத்து ரூவா கொடுக்கனும் போலருக்கு!னு நினைத்துக் கொண்டேன்.
பரிட்சையோடு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் அடுத்த பதிவில்.........:)
81 comments:
//நம்பளை பொண்ணுபார்க்க மன்னிக்கவும், எழுத்துத் தேர்விற்கு அழைப்பார்கள்.///
அம்பி எங்க போனீங்க. உங்க தம்பிக்கு சீக்கிரம் கல்யாண ஏற்பாடு பண்ணவும்
//ந்த வருஷத்தோட படிப்பு முடியர்து இல்லையோ?? மேற்கொண்டு என்ன பண்ணப்போறான்? அப்படின்னு எதிர்தாத்து மாமி திரியை கிள்ளி சத்தம் இல்லாமல் கில்ட் வெடியை பத்த வைத்துவிடுவார்கள்.//
எல்லா ஊர்லயும் இதே வேலைதான் சிலருக்கு ..
//எதுனாலும் பெரியவன்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்! என்று அம்மா, அப்பா ரெண்டுபேரும் சேர்ந்து சொல்லிவிடுவார்கள். அவ்ளோதான் எங்கண்ணனை கையிலையே புடிக்க முடியாது//
அம்பி வேற மாதிரி இல்ல சொன்னார் என்கிட்டே ...
வழக்கம் போல வடை மன்னன் வடையை கௌவிட்டார் போல இருக்கு. :-))
சென்னை பெரிய ஷாக்கோ? முன்னே பின்னே போனதில்லை?
வாவ்.. செமய இருந்துச்சு தக்குடு.. சிரிச்சு முடியல..
ஆஹா.. ஆஹா.. தக்குடு.. பதிவுக்கு பதிவு.. எழுத்து மெருகேறுது.. ரொம்ப ஜோர்.. சிரித்து சிரித்து வயித்த வலி!
எதைக்கோட் பண்ண எதை விட?ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. உன் அண்ணா, ப்ளாக் படித்துக்கொண்டே சமயம் கிடைத்தால் வேலையும் பார்த்து வந்தாரா? என்ன ஒரு நையாண்டி? சூப்பர் போ!
தம்ப்ர்ரீ
நான் பிளாக் ஆரம்பிச்சதே 2006 பிப்பரவரி 18ல தான். நீ இன்டர்வியூவுக்கு வந்தது 2004 அக்டோபர் மாசம்.
வரலாறு மிக முக்யம் அமைச்சரே!
"கேக்கறவன் அனன்யாவா இருந்தா கேழ்வரகுல கேசரி தின்னேன்!னு சொல்வானாம்."
அந்த ரெட் கலர் சுடிதார் பொண்ணு மேட்டரும் அடுத்த பதிவுல வரும்னு நினைக்கறேன்.
@அனன்யா மேடம், சும்மா லுலுவாயிக்கு. ரிதமிக்கா இருக்கறதால உங்க பெயரை யூஸ் பண்ணிட்டேன். கோவப் படாதீங்க.
இப்படிக்கு
(இப்பவும்) 'ஆனந்தம்' மம்முட்டி
//நான் பிளாக் ஆரம்பிச்சதே 2006 பிப்பரவரி 18ல தான். நீ இன்டர்வியூவுக்கு வந்தது 2004 அக்டோபர் மாசம்//
டேய் அண்ணா, //கம்பெனியில் ப்ளாக் படித்துக்கொண்டே // அதனாலதான் எழுதிக் கொண்டு இருந்தான்னு சொல்லலை, மொதல்ல ரொம்ப நாளைக்கு நீ ப்ளாக் படிச்சுண்டு மட்டும்தான் இருந்தாய்!
//வரலாறு மிக முக்யம் அமைச்சரே!//
உன்னோட வரலாறை தெளிவா தெரிஞ்ச ஒரே ஆள் நான் தான்......:)(vise versa)
//அந்த ரெட் கலர் சுடிதார் பொண்ணு மேட்டரும் // அது ரெட் சுடிதார் இல்லை க்ரீன்...;)
கீதா பாட்டியோட ரொம்ப ஈஷிக்கர்துனால நம்ப அனன்யா அக்காவை கே--நு சொல்லியிருக்க வேண்டாம்.....:)
"Honey-well" written. ha,ha,ha,ha....
அடுத்து என்ன...நல்லா எழுதி இருக்கின்றிங்க...உங்க அண்ணா...ப்ளாக் பக்கம் எல்லாம் வருவாங்களா...
இதென்ன அநன்யா வா..... ரமா? எல்லா ப்ளாக்லேயும் என்னையே டார்கெட் பண்ணி அடிக்கறாளே! அந்தப்பக்கம் கீத்தா மாத்தா, இந்தப்பக்கம் அப்பாவித்தங்கமணி, நடூவுல நீயா? அம்பி... வெரி ஆஃப் தி டூ மச்!
//எங்க ஊர் பக்கமெல்லாம் ஒரு பட்டப்படிப்பு முடிச்சாலே அதுக்கப்புறம் அந்த பையன் வீட்டுல இருக்க முடியாது.//
Adhukku dhaan enga Madras pasanga madhiri vivarama irukkanum. Pakkathaathu mama pona varusham start panna engineering college la BE padikannum. Adhula edho border la pass senjapparam, veetula velaiku po sonna, indha BE kellam velai kidaikkadhu, US poi MS pannanum, oru 25 lacs bank loan podungappa nu oru chinna anugunda veesanum. Apparam yaaravadhu velaikku po nu vaaya thirappa? Nijamave nee romba nallavan pola irukku thambi.
//இதை மீறி அவாளுக்கு தெரியாத எதாவது ஒரு MNC –ல்(For eg Honeywell(தேன்கிணறு))வேலைக்கு நீங்கள் சேர்ந்து விட்டால் அவ்ளோதான் கதை.//
Enakku oru funny incident gyabagam varudhu, idha padichapparam. Enakku therinja oruthar MCA ellam pannittu HP la vela join panninaar. Aana veetula avaru Hindustan Petroleum vela paakiraru ninaichittu, paavam ivvalavu padichittu poyum poi oru gas cylinder company la poi vela paakirane nu varutha patta.
//'ஆனந்தம்'படத்துல வர மம்முட்டி மாதிரி எங்க அண்ணன். எதுனாலும் பெரியவன்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்!//
Naan ellam evvalavu feel panren theriyuma kooda porandhavanga yaarum illaiyenu!
பயனுள்ள பதிவு தக்குடு, பகிர்ந்தமைக்கு நன்றி..
அப்புறம் அது vise versa இல்ல, Vice Versa..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//அடுத்த அதிர்ச்சி எனக்கு காத்துக்கொண்டிருந்தது. ஒரு பிளாஸ்டிக் குடத்தையும்,ஒரு வாளியையும் என்னோட கையில் கொடுத்தான். அடுத்த தெருவில் இருக்கும் குழாயில் போய் நம்ப தண்ணி புடிக்கணும்!னு சொன்னான்//.
Ennai poruthavaraikkum neenga Madras la successfulla kuppai kottittengana ulagathula endha moolaikku ponaalum samalichukkalam. Appadi patta enga oora kindal adikaradha naan vanmaiyaga kandikiren. Ippa Doha la endha Thamiribarani thanni vandhu payudhu unga veetu kitchen sink la?
On the whole, the post was very good. Thamirabharani thanni kudichava ellarum ippadi thaan nalla ezhudhuvangalo?
சூப்பர்... நெறைய கமெண்ட் பண்ணனும்னு கை துருதுருங்கறது... ஆணி ஓவரா இருக்கு... டேமஜெர் கடன்காரன் வேற மொரைக்கறான்... அடுத்த பகுதியும் முடியுங்கோ (கிரீன் or ரெட் சுடிதார் எல்லாம் தான்)...அப்புறம் ஒண்ணா வெக்கறேன் கம்மெண்டு (வேட்டு...)
//தென்ன அநன்யா வா..... ரமா? எல்லா ப்ளாக்லேயும் என்னையே டார்கெட் பண்ணி அடிக்கறாளே! அந்தப்பக்கம் கீத்தா மாத்தா, இந்தப்பக்கம் அப்பாவித்தங்கமணி, நடூவுல நீயா? அம்பி... வெரி ஆஃப் தி டூ மச்! //
kavalaipadathe aduta pathivula nanum join panren
//கீதா பாட்டியோட ரொம்ப ஈஷிக்கர்துனால நம்ப அனன்யா அக்காவை கே--நு சொல்லியிருக்க வேண்டாம்.....:) //
i like this u c
நன்னா எழுதறேள்..அடிச்சு ஆடுங்கோ :-)
//கணக்கு புள்ளைக்கு வேலை கிடைப்பது/பொண்ணு கிடைப்பது ரெண்டுமே ரொம்ப கஷ்டம்.//
டைரக்டா சொன்னாலே கண்டுக்கமாட்டாங்க இதுல ஒளிச்சு வைச்சு சொல்லுறீரே தக்குடு! :)))
# நோட்டட் 1
//முக்கியமான மென்பொருள் நிறுவனத்தின் விளம்பரம். அப்பா அம்மா வெளில போகும்போது என்னமாதிரி சின்னக்குழந்தைகள் எல்லாம் கையை ஆட்டி சொல்லும்????
ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியல ராசா டைரக்டா சொல்லும் எந்த கம்பெனியும் கண்ணுவைச்சுப்புடாது நீர் சின்னகுழந்தைதான்!
//, நம்பளை பொண்ணுபார்க்க மன்னிக்கவும், //
#நோட்டட் 2
//இப்பவும் அவனிடம் கேட்காமல் நான் எதுவும் செய்யமுடியாது//
அம்பி:- ஒகே ஒகேய்ய்ய் #நோட்டட் பண்ணியதெல்லாம் கன்சிடர் செய்யிறேன்ப்பா!
:))))
//எல்லாம் படிச்சுட்டு வந்துருக்கியா!னு வாஞ்சையாக விசாரித்தேன். அவன் காது செவிடாவன் போல எந்த ரியாக்ஷனுமே பண்ணவில்லை.//
அவன் சோகம் அவனுக்கு, ”என்னடா இவனை நம்பி வந்தா இப்பிடி கேள்வி கேக்கறானே. அப்போ நாமளே சொந்தமா தான் அடிச்சி எழுத்து தேர்வு அட்டண்ட் பண்ண்னுமா? ...ம்ம்ம்..” ன்னு எவ்ளோவோ கவலைகள். இதுல பத்து கொடுக்கறேன்..இருவது கொடுக்கறேன்னுக்கிட்டு...
Rombha nadri thakku paa,,,mulusaum padichen,,rombha feel panni ezhuthirukka purinjukka mudiuthu,,ithu verum interwal oeda nikkuthae climax eppo ezhuthi mudikka poerenga paa,,,,
கல கல கல கல கல கலக்கல்
thambi blogku mattum comment podara ambiku kandanangal
witty!! really funny to read. Good write-up.
Dint i write..
"We want to create a society where Doctors and Engineers are not the only money fetching occupations. We would want to motivate a person studying commerce that he can earn well too. We don't want the students to flock to the IT and Computer Science professions. We want an environment where students would be empowered to choose Law, Economics, Commerce, Literature & public service. Show them that these professions pay well too if you are ready to work hard."
Only when this dream of mine comes true, thamirabarani BSC maths, kutralam BA political science etc ku ellam viduvu kalam pirakam namma nattil :)
But dude, are you working in TCs? Whats up with Doha, Qatar then?
One more thing: post ellam padikum bodu comedy puriyardu. Ana engellam neenga referrals of name and ava pathi ezhudarelo ada ellam puriyala. So oru pudu post where ananya, ambi, thangamani, geetha patti, lk, porkodi matrum palar pathi (avalo names than nyabagam varudu) -- yar yaru enna enna nu ezhudinel na pudusa padikara valuku comments comedyum purinjuka vasadiya irukum.
Once again, well done on this one buddy!
Thanks for visiting my blog.. I appreciate your feedback. Hope to see you again.
:))))
yenga vgr, ungluku naan enna pavam senjen? yen indha kola veri?
//நம்ப சோனியா அகர்வாலோட//
yappa sami! naan varalai indha aataiku!
@vgr
ithuku pathila enga blogku vanthu padingo
@pors
eppadilam varanga paruma
First time visiting your blog! As i said naan konjam somberi! Romba Sooper! Neraya vishiyam rathiri 12 maniku mela vaai vittu sirikara maari irunthuthu! Hope amma vanthu kathava thattama irukanum! :P
//sriram said... பயனுள்ள பதிவு தக்குடு//
எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்... Sriram நீங்க நெஜமாவே படிச்சு தான் கமெண்ட் போட்டீங்களா
//So oru pudu post where ananya, ambi, thangamani, geetha patti, lk, porkodi matrum palar pathi (avalo names than nyabagam varudu) -- yar yaru enna enna nu ezhudinel na pudusa padikara valuku comments comedyum purinjuka vasadiya irukum//
VGR Sir VGR Sir உங்களுக்கு வேணுங்கற detail நான் சொல்றேன். தயவு செஞ்சு தக்குடு கிட்ட கேக்க வேண்டாம்... (பொய் தவிர வேற எதுவும் சொல்ல தெரியாது சின்ன கொழந்தை பாவம்.நான் சொல்றதுல நம்பிக்கை இல்லேன்னா சுத்தி நாலு பேர கேட்டு பாருங்கோ )
//LK said...
//நம்பளை பொண்ணுபார்க்க மன்னிக்கவும், எழுத்துத் தேர்விற்கு அழைப்பார்கள்.///
அம்பி எங்க போனீங்க. உங்க தம்பிக்கு சீக்கிரம் கல்யாண ஏற்பாடு பண்ணவும்//
ஒருஒரு போஸ்ட்லயும் இதே கருத்து தான் வலியுறத்த படுகிறது... ஆனா யாரும் கண்டுராப்ல காணோம் பாவம்
//Mathuram Said - Nijamave nee romba nallavan pola irukku thambi//
மதுரம், ப்ளீஸ் போதும். நான் அழுதுருவேன்...
//LK said...
thambi blogku mattum comment podara ambiku kandanangal//
வழிமொழிகிறேன்....
//Madhuram said... //'ஆனந்தம்'படத்துல வர மம்முட்டி மாதிரி எங்க அண்ணன். எதுனாலும் பெரியவன்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்!//Naan ellam evvalavu feel panren theriyuma kooda porandhavanga yaarum illaiyenu! //
Don't feel Madhuram. என்னை உங்க சிஸ்டர்ஆ நெனச்சுகோங்க.... (இதுக்கு யாரும் எந்த எக்ஸ்ட்ரா கமெண்ட்ம் போடக்கூடாது சொல்லிட்டேன் ஆஆமா)
@AT: ungala already naan sisteraa ethundaachu.
@Porkodi - just for G.K. vera eduvum illa :)
@LK - padichen. ana kelvi ku badil illaye.
@Appavi Thangamani - neenga sonnalum ok than :)
naan appalikka varen marubadium
ஆஹா , சிரிப்புக் குடும்பத்தின் இளவலே வாழ்த்துகள்.
மம்முட்டி அண்ணா ப்ளாகுக்கு அப்புறம் இங்கதான் நிறைய சிரித்தேன். ஃபண்டாஸ்டிக். தக்குடு. மனசு லேசாகி விட்டது. தாமிரபரணி ஆத்துக்கே வரதா.
இந்த மாதிரி ஒரு கல்லிடைக் குறிச்சியில் வாழ்ந்து பார்க்க ஆசை வரது:(
//(இதுக்கு யாரும் எந்த எக்ஸ்ட்ரா கமெண்ட்ம் போடக்கூடாது சொல்லிட்டேன் ஆஆமா) //
mudiyala
//“அண்ணன் ராமதுரை அழைக்கிறார், அலைகடலென திரண்டு வாரீர்!”//
தமிழ் வலைத் தலைவர் தக்குடி பாண்டி அழைக்கிறார்.
தயங்காது, தவறாது,
திரைகடலாயினும் தாண்டியே வாரீரென அறைகூவும்
போஸ்டர்கள் மின்னும் அந்நாள்
வெகு தூரமில்லை.
L.K. said."
அம்பி எங்க போனீங்க. உங்க தம்பிக்கு சீக்கிரம் கல்யாண ஏற்பாடு பண்ணவும்"
நானும் வழி மொழிகிறேன்.
சுப்பு தாத்தா.
//அந்த ரெட் கலர் சுடிதார் பொண்ணு மேட்டரும் // அது ரெட் சுடிதார் இல்லை க்ரீன்...;)//
ம்ம்ம்... சபாஷ். சரிரியான போட்டி.. ஹா...ஹா.ஹா... இருவரையும் ஆட சொல்..(வீரப்பா ஸ்டைல்ல படிக்கவும்).
Thanks for the feedback on my blog!
ஹைய்யோ :-))))))))))))
யூ மேட் மை டே!!!!
@subbu thatha
nama solli enna agaporathu nanum sollindu irukken yarum kekara mathiri teriyala...
@ LK - வடையை கவ்வர்துல நீர்தான் நிபுணர்...;)
@ திவா அண்ணா - வாங்கோ அண்ணா! மொதல்லேந்தே சென்னை நமக்கு அவ்ளோதூரம் இஷ்டம் கிடையாது!
@ ராகவ் - ரொம்ப சந்தோஷம் ராகவ்!..:)
@ அனன்யா அக்கா - எல்லாம் உங்க ஆசிர்வாதமும் ஆதரவும் தான்...;)
@ அம்பி - நீ எல்லாம் மூத்த பதிவராச்சே?? என்னோட பதிவுக்கு எல்லாம் வர மாட்டியேடே??....;)
@ சித்ரா அக்கா - என்ன சிரிப்பு அங்க??...:)
@ அனன்யா - பிரபலமான பதிவர்னாலே எல்லாரும் கலாய்ப்பா போலருக்கு??...:)
@ மதுரம் அக்கா - நல்ல யோசனைதான்...;)
ஒன்னும் பீல் பண்ண வேண்டாம், தக்குடு இருக்கும் போது யாரும் பீல் பண்ணக்கூடாது!,,,:)
@ பாஸ்டன் - சங்கத்து ஆளுங்க பதிவு எல்லாத்துலையும் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டு கடுப்பேத்தும் நம்ம பாஸ்டன் நாட்டாமைக்கு கேடியோட கொலகார கதைல ஒரு கேரக்டர் ரோல் குடுத்துர வேண்டியது தான்...;)கேடி, ஒரு ஆள் சிக்கியாச்சு!
@ மதுரம் அக்கா - தோஹால தாமிரபரணி வருதோ இல்லையோ, சென்னை மாதிரி உப்புத்தண்ணி வரலை...;)
ரொம்ப சந்தோஷம்...:)
@ அடப்பாவி தங்ஸ் - ஒன்னும் அவசரம் இல்லை, மெதுவாவே நீங்க வாங்கோ!...;)
@ LK - :))))
@ ரிஷான் - நன்றி நண்பா!
@ ஆயில்யன் - நம்ப எல்லாம் ஒரே ஊர்ல இருக்கோம், அது ஞாபகத்துல இருக்கட்டும்!...:)
@ விஜய் அண்ணா - வருகைக்கும் கருத்துக்கும் நன்னி!...:)
@ சத்யா ஷ்ரீதர் - முதல் வருகைக்கு நன்றி! அடுத்த பகுதி வரும் வெள்ளிக் கிழமை வரும், மறக்காம வாங்கோ சரியா??...:)
@ மலை வாத்தியார் - ஒரு வார்த்தைக்கு அதிகமாக கமண்ட் போட்ட நம்ம வாத்தியாருக்கு ஒரு ஜோடா உடைச்சு கொண்டு வாங்கப்பா!...:)
@ LK - ரைட்டு..:)
@ VGr - நல்ல சிந்தனைதான்,
/about TCS/நான் அந்த கம்பெனில ஒன்னும் வேலை பாக்கலை, அங்க வேலை பாக்கர்துக்கு பதிலா ஊர்ல நாலு எருமை மாடு வாங்கி மேச்சுடலாம்!னு என்னொட நண்பர்கள் சொன்னா!...;)
ஆஹா! நீங்க சொல்ற ஆளுங்க எல்லாமே ரொம்ப டேஞ்சரான ஆளுங்கப்பா!...:)
@ Umaji - Umaji, aapkaa commentkeeliyee meraa danyavaath!!
@ கேடி - கொலைவெறியை பத்தி நீங்க மட்டும் தான் பேசமுடியும்..;)
@ LK - :))))
@ ஹரினிஷ்ரீ - முதல் வருகைக்கும் தங்கள் மகிழ்ச்சிக்கும் ரொம்ப சந்தோஷம், அம்மா கதவை தட்டினாளா அப்பரம்??...:)
@ அடப்பாவி தங்ஸ் - நான் சொல்லட்டுமா உங்களை பத்தி??..:)
மதுரம், ஓவர் பீலிங்கா இருக்கு...;)
@ VGr- கவலையை விடுங்கோ! நான் தனியா மெயில் அனுப்பறேன், சபைல வேண்டாம்...;)
@ வல்லியம்மா - ரொம்ப சந்தோஷம் அம்மா! அவனும் நானும் ஒன்னு தான், நான் ஊருக்கு வரும்போது உங்களையும் சிங்கம் மாமாவையும் கல்லிடை கூடிண்டு போறேன் சரியா?? நவதிருப்பதி எல்லாம் ரொம்ப கிட்டதான் இருக்கு!
@ சூரி மாமா - வருகைக்கு நன்றி! இங்க ஏற்கனவே பல லகடுகள் இருக்கா மாமா! தக்குடு சாதாரணமான ஒரு பதிவர் அவ்ளோதான்..;)
@ விஜய் அண்ணா - உங்க தங்கமணி வரட்டும் நான் பேசிக்கரேன்...;)
@ UMA - Umaji, shukriyaa!!
@ துளசி டீச்சர் - ரொம்ப சந்தோஷம் டீச்சர்!...;)
@ LK - :)))
தக்குடு...ஆனாலும் இது அநியாயம் ....இப்படியா பாதியிலேயே விட்டுட்டு போறது? எழுதரச்சேயே ரெண்டு பதிவையும் எழுதிட்டு ஒண்ணா போட்டுட வேண்டியது தானே....எப்படியும் வெள்ளி, சனி, ஞாயிறு வந்து எல்லாரும் பார்க்க தான் போறா...இதுல என்ன உங்களுக்கு ஊர் பட்ட suspense ... எனக்கு ஒரு நல்ல புக்-ஐ ரசிச்சு படிச்சுண்டு இருக்கச்சே கை-ல இருந்து பிடுங்கிண்டு போற மாதிரி இருக்கு.... :-(
வார இடையில் நேரம் கிடைத்தாலும் எழுத முயலுங்கள் ப்ளீஸ்....excellent writing! keep up the great work!
கலக்கிப்புட்டீங்க தக்குடு....ஆமா, சென்னை நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லாம் உங்களை எப்படி சும்மா விட்டாங்க இந்த பதிவுக்கு :))
நல்ல பதிவு தக்குடு, நானும் சென்னைக்கு வந்த புதிதில் நுரைக்காத, மஞ்சள் கலர் உப்புத்தண்ணீயைப் பார்த்து மிரண்டு போனது உண்டு. மிக்க நன்றி.
பரவாயில்லை தக்குடு உங்கண்ணா ஒரு பக்கெட் தண்ணி கொடுத்தார், எங்க சித்தி அரைபக்கெட் தண்ணிர்தான் அலாட் செய்தார்கள். நான் கால் பக்கெட்டில் முடித்தது கண்டு ரொம்ப சந்தோசம் ஆகிவிட்டார்கள். மகனே நீதாண்டா சென்னைக்கு லாயக்கு என்று பாராட்டு வேற.
். பரிட்சை எழுத வந்தவர்கள் எல்லோரும் (என்னைத் தவிர) எதோ மந்திரிச்சுவிட்ட கோழி போல இருந்தார்கள். ////
சத்தியமா நம்பிட்டோம்
ennapa ithu ippadi sattasabhai kootathai thalli vecha maathiri unga interview climax aum thalli vechuttenga,,,
@ வெட்டி - வாரம் ஒரு பதிவு! இதுதான் நம்ப பாலிசி, இன்னும் கொஞ்சம் கிடைக்காதா?னு மனசு நினைக்கும் போது நாம நிப்பாட்டிடோம்னா அதோட டேஸ்ட் நமக்கு ஞாபகத்திலேயே இருக்கும்!...:)வரும் வெள்ளிக்கிழமை பிடுங்கிண்டு போன புக் உங்களுக்கு கிட்டும்!!!!..:)
@ ம'பதி அண்ணா - ரொம்ப சந்தோஷம்! ஊருக்கு போகும்போதுதானே கவலைபடனும்....:)
@ பித்தன் அண்ணா - நம்மாள எல்லாம் கப்பு தண்ணில காலம் தள்ள முடியாது சாமி!!..:)
@ மங்குனி - வருகைக்கு நன்னி அமைச்சரே!!..:)
@ ஸத்யா - க்ளைமாக்ஸ் வரும் வெள்ளிக்கிழமை அன்னிக்கி, மறக்காம வாங்கோ! சரியா!!
//சின்னக்குழந்தைகள் எல்லாம் கையை ஆட்டி சொல்லும் ஒரு 2 எழுத்து வார்தையை//
ஏங்க இது என்ன கிசு கிசுவா.. கம்பனி பேர போட்டு ஓடைக்க வேண்டி தானே :)
கலகலவென செல்கிற அனுபவம் சூப்பர் :))
டேய்.... அண்ணனும் தம்பியும் சேர்ந்து அடிக்கிற கூத்து தாங்க முடியலடா... உங்க அண்ணியும் இந்த மொக்கை கூட்டத்துல உண்டா? (நல்லா கவனிக்க... பழைய பதிவுகளை எல்லாம் சொல்லக்கூடாது... உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கப்புறம் தான் மொக்க மாமியா மாறி இருக்க முடியும்.)
Nice post!!
Hi thanks for the comment. You have a nice blog. This is a very good post.
mappu..
kalkkala erukkku padhivu..
emputta nalla namaku theriyama pochey...
nakkal,
nayandi,
melam,
thalam,
ellam erukku
spl ennana porkodiya mattividrathu rumba pdichuerukku..
nandri valga valamudan
complan surya.
indaiyila erunthu
ungalkuku spl. member padhavi kudukkapadukirathu.sambala 5625.18cent us doller.
varuthapadtha vaasippor sangam
complan surya
ஹா ஹா ஹா... கலக்கல் எழுத்துக்கள்:)
@ பிரசன்னா - கம்பெனி பேரு கமண்ட்ல இருக்கு பாருங்கோ! முதல் வருகைக்கு நன்னி!
@ வித்யாசமான கடவுள் - ஆஹா! நீங்க எப்பிடி என்னோட ப்ளாக்கை கண்டுபிடிச்சேள்???...:)
@ மேனகா அக்கா - நன்னிஹை!..;)
@ கீதா அக்கா - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!...:)
@ காம்ப்ளான் சூர்யா - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!
@ ப்ரியா - முதல் வருகைக்கும் கமண்டுக்கும் நன்னிஹை!
Nice post. written very well.
என் பிளாகிற்கு வந்ததற்கு நன்றி... தங்கள்.கதை படிக்க மிகவும் நன்றாக இருந்தது.. following you
Hi, thanks for dropping by, sorry couldnt understand this lang so i dont know what have you commented, am sure you liked it...do come again...take care
//@ அம்பி - நீ எல்லாம் மூத்த பதிவராச்சே?? என்னோட பதிவுக்கு எல்லாம் வர மாட்டியேடே??....;)//
உங்க அண்ணனை நீயே கிழவன் என்று சொன்னதுக்கப்புறமுமா அவன் அங்கிள்னு கூப்புட்டாயிங்கன்னு ஒரு பதிவு போட்டான்???
//@ வித்யாசமான கடவுள் - ஆஹா! நீங்க எப்பிடி என்னோட ப்ளாக்கை கண்டுபிடிச்சேள்???...:)//
நீயே சொந்த காசுல என் பதிவுல வந்து சூனியம் வச்சுகிட்ட தம்பி... இதுல முதல் பதிவுல இன்ட்ரோ வேற... அம்பி தம்பின்னு பின்னூட்டம் போட்டது நான் தான்னு...
Hi, Thanks for dropping by again,seems like a good post,wish i could read it..
பாண்டி அனைத்தும் உண்மை ..ரொம்பக் கலக்கலா இருக்கு அடுத்தது எப்ப ..காத்து இருக்கிறோம்
Thakkudupandi avargale unga tamizh nadai romba nalla iruku. Padika interesting a irunthathu...continue the gud job :)
Thank you for visiting my blog and for your feedback.
haha... very funny and interesting. Waiting for the next part!!!!
@ கிருஷ்ணவேனி - ரொம்ப சந்தோஷம்பா!
@ ஷ்ரீ வித்யா - முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப சந்தோஷம்!..:)
@ sushma - yaa sure, i will come again
@ வித்யாசமான கடவுள் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!...:)
@ sushma - yaa sushma, your writing's are interesting only!...:)
@ தென்னம்மை - முதல் வருகைக்கு நன்னிஹை! வெள்ளிக்கிழமை நம்ம கடைல புது சரக்கு கிட்டும்! மறக்காம வாங்கோ! சரியா!!
@ Life is beautiful - உங்க ப்ளாக் name also beautiful...:) நாளைக்கு அடுத்த பதிவு!..:)
@ kiran - Thanks for your comments
@ வானதி - முதல் வருகைக்கும் கமண்டியதுக்கும் நன்னிஹை! ..:)
தக்குடு, இப்புடி கலக்குறீங்களே... :) வாழ்க! சீக்கிரமே கல்யாண ப்ராப்திரஸ்து! :)
//கவிநயா said...
தக்குடு, இப்புடி கலக்குறீங்களே... :) வாழ்க! சீக்கிரமே கல்யாண ப்ராப்திரஸ்து!//
ithathanga nan ovvoru postlaium solren nadaka mattenguthu
ரொம்ப ஓவரா கொட்டாவி விடாத... ஒட்டகம் கிடைச்சுச்சுடா நல்ல இடம்னு சுச்சு போய்டப் போகுது...
செம கலக்கல் :-)))))
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)