Thursday, January 17, 2013

அவுத்து விட்ட கழுதை 5

Part 4


குருவாயூர் போயிட்டு வந்து நாலு நாள் கல்லிடைல இருந்தோம். எங்க ஊர்காராளுக்கு அவாத்து விஷயம் ஒரு வண்டி இருந்தாலும் அடுத்தாத்து சமாசாரங்கள்ல அலாதி பிரியம். 'ஏதுடா தக்குடு! ஆத்துக்காரியை கூட்டிண்டு எதாவது ஊருக்கு போயிட்டு போயிட்டு வந்துண்டு இருக்கை? எதாவது வீடு/கீடு/இடம் வாங்கராப்ல இருக்கையோ?'னு பொழுதுபோகாத பக்கத்தாத்து மாமி பல்ஸ் பாக்கர்த்துக்கு முயற்சி பண்ணினா. 'ஆமாம் மாமி! பாபனாசம் போகர வழில நடுகாட்டுல 2 கிரவுண்ட் இடம் சகாய விலைல வந்துருக்கு அதைதான் போய் போய் பாத்துட்டு வந்துண்டு இருக்கோம்'னு சொன்னதுக்கு அப்புறம் சத்தம் காட்டாம இடத்தை காலி பண்ணினா. ஊருக்கு போன சமயம் நம்ம ப்ளாக் நண்பர் துபாய் ராஜாவும் இந்தியா வரர்தா இருந்தது. கல்லிடைல வந்து மீட்பண்ணறேன்னு சொல்லியிருந்தார் ஆனா கடைசில லீவு கிடைக்காததால வரமுடியலை பாவம். திடீர்னு ஒரு நாள் நான் வீட்ல இல்லாத நேரம் போன் பண்ணி 'துபாய் ராஜா சிங்கபூர்லேந்து பேசரேன்'னு எங்கம்மாகிட்ட சொல்லியிருக்கார். 'தக்குடு ராத்ரி சாப்பிடர்துக்குதான் ஆத்துக்கு வருவான் அப்ப பண்ணுங்கோ!'னு சொல்லி அம்மா போனை வச்சுருக்கா. ‘பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைனாலும் தோஹா மந்திரி/துபாய் ராஜா/கனடா ராஜகுமாரினு பேருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’னு எங்கப்பா சாப்பிடும் போது சொல்ல ஆரம்பிச்ச உடனே ‘ஆஹா எந்த பயபுள்ள போன் பண்ணிச்சு தெரியலையே?’னு யோசனையா இருந்தேன். கரெக்டா நம்ப துபாய் ராஜா போனை போட்டு அதை எங்கப்பா எடுத்துட்டு ‘இந்தாடா தோஹா ராஜா! துபாய் ராஜா லைன்ல இருக்கார் வந்து பேசு!’னு நக்கல் அடிச்சதுல என்னோட தங்கமணிக்கு பரமதிருப்தி.


துபாய் ராஜாவும் நானும் ஒரு நாற்பது நிமிஷம் பேசி இருப்போம். தங்கமான மனுஷன் குழந்தை மாதிரி பேசினார். பேசி முடிச்சுட்டு பெருமையா ‘ஐயாவுக்கு சிங்கபூர்லேந்து கால் பண்ணி பேசரா பாத்தியா?’னு பார்வையாலையே அம்மா/அப்பாவை ஒரு லுக்கு விட்டேன். ‘முக்கால்மணி நேரமா பேசர்தை பாத்தா கால் சிங்கம்பட்டிலேந்து வந்த மாதிரினா இருக்கு’னு சொல்லி க்ளீன் போல்ட் ஆக்கினது அப்பா தான். நானும் ரிச்மெண்ட்லேந்து கவினயா பேசினாக! கனடாலேந்து இட்லிமாமி பேசினாக! அபுதாபிலேந்து அனன்யா பேசினாக! சொன்னாலும் நம்பர்துக்கு யாரும் தயாரா இல்லை. ரைட்டு விடு நம்ப முகராசி அப்பிடி!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். ஊர்ல இருக்கரவரைக்கும் கல்யாணம்/காதுகுத்து இந்த மாதிரியான விஷேஷங்களோட மகிமை நமக்கு தெரியர்து இல்லை, வெளி நாட்டுல எங்கையாவது வசமா சிக்கினதுக்கு அப்புறம் தான் லீவுல ஊருக்கு போகும் போது ‘எவனாவது கல்யாணம்/காட்சினு எதாவது வைக்கனும் கடவுளே! அறுபதாம் கல்யாணமா இருந்தா கூட ஓக்கேதான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறேன்னு வேண்டிகிட்டு போவோம். என்னோட கல்யாணத்துக்கு போன வருஷம் ஊருக்கு வரும்போது கூட ‘ஹைய்யா ஜாலி கல்யாணம்!’னு ஊருக்கு கிளம்பி போனபோது, ‘பாவம்! உலக நடப்பு தெரியாம விட்டில்பூச்சியா இருக்கானே இந்த பிள்ளை!’னு தோஹால இருக்கும் மாமாக்கள் எல்லாம் வருத்தப்பட்டா.


மதுரைல ஒரு ப்ளாக் நண்பருக்கு கல்யாணம். மதுரைல போய் கல்யாணத்துக்கு போனா அங்க ப்ளாக் மனுஷா ஒருத்தரையும் காணும். ‘திருப்பதில பாம்பு வந்த கதையை எட்டணா போஸ்ட் கார்டுல எழுதி 80 பேருக்கு போஸ்ட் பண்ணின மாதிரி எல்லாருக்கும் காப்பி பண்ணி மெயில் அனுப்பினையேடா ஒருத்தரும் வரலையா!’னு ஹீன குரல்ல மாப்பிள்ளைகிட்ட கேட்டேன். ‘எல்லாரும் கடைசி சமயத்துல கவுத்திட்டா! ஜானுவாசத்துல பால்பாயாசம் விடுவானு சொன்னதால முகூர்தத்துக்கு வரவேண்டிய அனன்யாக்கா ஜானுவாசத்துக்கே வந்துட்டு போய்ட்டா!’னு பொலம்பினான். தெரிஞ்சமனுஷா யாராவது இருந்தா அவா கழுத்தை அறுக்கலாம்னு பாத்தா ஒருத்தரும் இல்லை. அப்புறமென்ன, இலை போடரவரைக்கும் யாரோ ஒரு மெட்ராஸ் மாமா என்கிட்ட மொக்கை போட்டுண்டு இருந்தார். முந்தின நாள் சாயங்காலமே மதுரையோட செல்லக்கிளி மீனாட்சியை போய் தரிசனம் பண்ணிட்டு வந்துட்டதால மத்யானமே திருச்சிக்கு கிளம்பினோம். ரெங்க நாத ஷேத்ரத்துல நம்ப அம்பத்தூர் கீதா மாமி சமீபத்துல தான் குடிவந்துருக்கர்தா கேள்விப்பட்டதால மாமியாத்துக்கு போலாம்னு முடிவு பண்ணினோம். திருச்சிலேந்து ஸ்ரீரெங்கம் வந்து பாலம் தாண்டும் போது தான் போன் பண்ணி மாமி உங்காத்துக்கு வர எந்த பஸ் ஸ்டாப்ல இறங்கனும்னு கேட்டா. அம்மா மண்டபத்துல இறங்கு தக்குடு!னு பதில் வந்தது. புரட்சித்தலைவி இந்த தொகுதியை ஏன் தேர்தெடுத்தார்னு அப்பதான் புரிஞ்சது.


ஒரு ஆட்டோவை பிடிச்சு கீதாபாட்டியாத்தை கண்டுபிடிக்க முயற்சி பண்ணினேன். ‘ஒரு ஏ டி எம் மெசின் இருக்கு பாரு! அப்புறம் ஒரு கல்யாண மண்டபம்! ரைட் சைடுல ஒரு முடுக்கு!’னு மாமி போன்ல சொல்லிண்டே வந்தா. ‘எல்லாம் இருக்கு மாமி உங்க அபார்ட்மென்ட் எங்க இருக்கு அதை சொல்லுங்கோ!’னு கேட்டேன். ஒரு வழியா கல்யாணமண்டபத்துக்கு எதிர்பக்க கட்டிடம் வந்தது. கீழ இறங்கி செக்யூரிட்டி கிட்ட இங்க ஒரு பாட்டி மெட்ராஸ்லேந்து....னு ஆரம்பிக்கர்துக்குள்ள ‘மாமா சொன்னதையே கேக்காம தொணதொணனு பேசிண்டே இருப்பாங்களே அந்த பாட்டியா?’னு கரெக்டா கேட்டார். அவரே தான்னு கன்பார்ம் பண்ணிண்டு அவாத்துக்கு போனா மாமிக்கும் மாமாவுக்கும் பரமசந்தோஷம். திடீர்னு ரெங்கம் ஸ்தல புராணம் சொல்ல ஆரம்பிச்சுட்டா. சுமாரா முக்கால்மணி நேரம் பேசி முடிச்சதுக்கு அப்புறம் ‘இப்ப நேரம் இல்லை அதனால சுருக்கமா சொல்லிட்டேன்’னு அந்த மாமி சொல்லும்போது தங்கமணி மிரண்டு போய் இருந்தா. அப்புறம் ரூம்ல போய் குளிச்சு திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை தரிசனம் பண்ணர்துக்கு ரெடி ஆயிண்டு இருந்தபோது, ‘ஏஏஏ அப்பா! அந்த மாமி எவ்ளோ விஷயம் சொல்லறா!’னு ஆச்சர்யப்பட்ட தங்கமணி கிட்ட ‘இதெல்லாம் அந்த மாமிக்கு ஜுஜூப்பி! காசில ஆரம்பிச்சு ராமேஸ்வரம் வரைக்கும் தலபுராணம் சொல்லுவா. சிலசமயம் எல்லாத்தையும் ஒரே சமயத்துல சொல்ல முயற்சி பண்ணி நம்பளையும் சேர்த்து குழப்பி விட்டுருவா அதுதான் கொஞ்சம் பிரச்சனை! ஆனா அந்த மாமிக்கு இருக்கும் சுறுசுறுப்பு யாருக்கும் வராது! புதுசு புதுசா விஷயம் கத்துக்க குழந்தை மாதிரி ஆசைபட்டு கத்துப்பா. எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துண்டு நம்ப மேல பாசம் காட்டுவா!’னு சொன்னேன்.ரெங்கனின் கோபுரம்


திருவானைக்கா கோவில் ரொம்ப பெரிசா இருந்தது. உள்ள போக போக வந்துண்டே இருந்தது. தாடங்க மகிமை உள்ள ஷேத்ரம் அப்பிடிங்கர்து இதோட சிறப்பு. சுவாமி அனுக்கிரஹத்துல கூட்டம் இல்லாம இருந்ததால ஒரு தடவை லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லி பிரார்த்தனை பண்ணமுடிஞ்சது. பஞ்சபூத ஸ்தலத்துல இது ஜல ஸ்தலம். ரொம்ப நேரம் கோவில்ல தான் இருந்தோம். அதுக்கப்புறம் கீதாமாமியாத்துக்கு திரும்பி வந்தோம். மாமியாத்து மாடிலேந்து பாத்தா ஒரு பக்கம் உச்சிபிள்ளையார் கோவில், ஒரு பக்கம் ரெங்கனாதர் கோவில் கோபுரம், ஒரு பக்கம் திருவானைக்கா கோவில் கோபுரம் & ஒரு பக்கம் காவிரி ஆறும் தெரியர்து. அடுத்த நாள் காத்தால சீக்கரமே கிளம்பி கோவிலுக்கு போகனும்னு முடிவு பண்ணினோம். அர்த்தராத்ரி 3.30 மணிக்கே எழுந்து குளிச்சுட்டு மாமா/மாமி கிட்ட சொல்லிண்டு கோவிலுக்கு நடக்க ஆரம்பிச்சோம். கோவில் ரெங்கா கோபுரம் வாசல்ல நீளமா ஒரு க்யூ. எனக்கு ரூபாய் குடுத்து அந்த வரிசைல போய் சாமி பாக்கர்துல உடன்பாடு கிடையாது. அதனால எந்த கோவில் போனாலும் கொஞ்ஜம் நேரம் ஆகும். வரிசைல ஊர்ந்து ஊர்ந்து போகும்போது ஒரு லோக்கல் மாமா ப்ரெண்ட் ஆனார். ஒரு கைடு மாதிரி அவர் எல்லா விஷயமும் சொல்லிண்டே வந்தார். அந்த ஊர்ல கீதா மாமி குடும்பம் & அந்த கோவில் மாமாவோட உபகாரம் ரொம்ப செளகர்யமா இருந்தது. கடைசில ஸ்ரீரெங்க நாயகனையும் ஸ்ரீரெங்க நாயகியையும் கண்குளிர தரிசனம் பண்ணினோம்.


அதுக்கு அப்புறம் மிச்சம் இருந்த நாட்களை கல்லிடை மெட்ராஸ்னு கழிச்சுட்டு தோஹா கிளம்பி வந்தாச்சு! பொறுமையா ஐந்து பாகம் அவுத்துவிட்ட கழுதையை படிச்சு ஆதரவு குடுத்த எல்லா அன்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

17 comments:

RAMVI said...

அதுக்குள்ள முடிஞ்சுடுத்தா?? இன்னும் கொஞ்சம் பதிவு போட்டா உன்னோட “வெகுளித்தானமான” எழுத்தை நாங்க ரசிச்சு மகிழ்ந்திருப்போமே!!

அமைதிச்சாரல் said...

ஊர் சுத்திட்டு ஒரு வழியா தேர் நிலைக்கு வந்தாச்சு போலிருக்கு. சந்தடி சாக்குல கீத்தாம்மாவையும் விட்டு வைக்காம 'புகழ்ந்தாச்சு' :-)))))))

இராஜராஜேஸ்வரி said...

மாமியாத்து மாடிலேந்து பாத்தா ஒரு பக்கம் உச்சிபிள்ளையார் கோவில், ஒரு பக்கம் ரெங்கனாதர் கோவில் கோபுரம், ஒரு பக்கம் திருவானைக்கா கோவில் கோபுரம் & ஒரு பக்கம் காவிரி ஆறும் தெரியர்து.

அழகான காட்சி ..!

பூந்தளிர் said...

ஹா ஹா என்ன எழுத்து. ஊர் சுத்த தெரிஞ்ச மாதிரியே எழுதவும் வந்திருக்கு. பகிர்வுக்கு நன்றி

கோவை2தில்லி said...

அகிலாண்டேஸ்வரியை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம்....

நீங்க வந்த போது எனக்கு தெரியாது. அதுக்கப்புறம் ஒருநாள் மாமியாத்துக்கு போன போது நீங்க வந்தது பற்றி சொன்னார். இனி திருச்சி வந்தா சொல்லுங்கோ...

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா எங்க ஊருக்கு வந்துட்டு போனது பத்தி விஸ்தாரமா பதிவு எதிர்பார்த்திருந்தேன்....

சீக்கிரமே முடித்தா மாதிரி இருக்கு... :)

கீதா மாமி சொல்லிண்டு இருந்தா... விவரங்கள் தக்குடு எழுதுவார்னு....

அடுத்த தடவ வரும்போது சொல்லுங்க தக்குடு.... நானும் அங்கே இருந்தா சந்திக்கலாம்!

DiaryAtoZ.com said...

Nice writing. Thank you!

அமுதா கிருஷ்ணா said...

சென்னையில் எந்த மாமியையும் சந்திக்கவில்லையா???

பால கணேஷ் said...

கீதா மாமி வழி சொன்ன அழகையும், அவங்க ஸ்தல புராணம் விவரிச்ச பாங்கையும் அழகாச் சொல்லி அசத்திட்டீங்க. நல்ல ஸ்ரீரங்க தரிசனம் கிடைச்சதுல சந்தோஷம்.

அப்பாவி தங்கமணி said...

//எங்க ஊர்காராளுக்கு அவாத்து விஷயம் ஒரு வண்டி இருந்தாலும் அடுத்தாத்து சமாசாரங்கள்ல அலாதி பிரியம்//
எல்லா ஊர்லயும் இந்த கேட்டகரி மக்கள் உண்டு...:)


//இந்தாடா தோஹா ராஜா! துபாய் ராஜா லைன்ல இருக்கார் வந்து பேசு!’னு//
ஹ ஹ... இது சூப்பர்


//மாமா சொன்னதையே கேக்காம தொணதொணனு பேசிண்டே இருப்பாங்களே அந்த பாட்டியா//
பாத்து தக்குடு அடுத்த வாட்டி உச்சி பிள்ளையார் பாக்க போறப்ப ஜாக்கிரதை...:)

vidhas said...

Ella urukkum poitu vanthathu mathri erunthathu. Trichy ennoda uru theriyumo. I like your appa's comment doha raja, dubai raja :-)

Geetha Sambasivam said...

தக்குடு இங்கே வந்து கேசரி, தோசை எல்லாம் மொக்கினதை எழுதவே இல்லையே! அநியாயம்பா. காலம்பர மூணு மணிக்கே நானும் எழுந்துண்டு போனாப் போறதுனு காப்பி போட்டுக் கொடுத்தேனே, சொல்லாண்டாமோ! :P :P :P :P :Pஅப்புறமா அண்ணா குரல்லே தம்பி பேசி திராசவை ஏமாத்தினது, என்னை ஏமாத்த நினைச்சு ஏமாந்தது எல்லாமும் எழுத வேண்டாமோ? :))))))

துபாய் ராஜா said...

\\‘பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைனாலும் தோஹா மந்திரி/துபாய் ராஜா/கனடா ராஜகுமாரினு பேருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’னு எங்கப்பா//

\\எங்கப்பா எடுத்துட்டு ‘இந்தாடா தோஹா ராஜா! துபாய் ராஜா லைன்ல இருக்கார் வந்து பேசு!’னு நக்கல் அடிச்சதுல என்னோட தங்கமணிக்கு பரமதிருப்தி.//

\\பேசி முடிச்சுட்டு பெருமையா ‘ஐயாவுக்கு சிங்கபூர்லேந்து கால் பண்ணி பேசரா பாத்தியா?’னு பார்வையாலையே அம்மா/அப்பாவை ஒரு லுக்கு விட்டேன். ‘முக்கால்மணி நேரமா பேசர்தை பாத்தா கால் சிங்கம்பட்டிலேந்து வந்த மாதிரினா இருக்கு’னு சொல்லி க்ளீன் போல்ட் ஆக்கினது அப்பா தான்.//


ஹா...ஹா..ஹா.அப்பா கமெண்டெல்லாம் கலக்கல் தக்குடு.இன்ஷா கணேசா,அடுத்த தடவை நிச்சயம் சந்திப்போம்.

தக்குடு said...

@ Geetha Patti - அப்புறம் ரெண்டு டம்ப்ளர் ஜலம் குடிக்க தந்தேளே அதையும் சேர்த்து கமண்ட்ல போடுங்கோ! :P
உங்களோட பராகிரமங்களை சொன்னா சந்தோஷபடாம 'சாப்பிட்டதை விட்டுடையே'னு கவலைபடுவாளா???

RVS said...

காவேரிக்கரை எப்போதுமே நல்லாயிருக்கும்பா... உன்னோட ஹாஸ்ய எழுத்துமாதிரி... :-)

Anonymous said...

yaaravathu kalyanathukku koopida maatalaannu nee yengaraiyaa !? yaarkita reel vidara ? kooptavaa veetukku nee vanthaiyaa !? Grrrrrrr.............


Romba kovama irukkom.

Chennai Akka & Athimber

Kavitha Bhargav said...

தாங்க்ஸ் தக்குடு. நீங்க சொன்ன அடையாளத்த படிச்ச உடனே, 'அட! இது நம்ம வீட்டோட அடையாளம் ஆச்சே'ன்னு பாத்தா, அது நாங்க இருக்க அபார்ட்மெண்ட் தான் !!!

Was exited and contacted Geetha maami immediately. Next time you should visit our house as well.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)