Sunday, December 30, 2012

அவுத்து விட்ட கழுதை 3

Part 1 & Part 2

ஊருக்கு போன கதையை எழுதி முடிக்கர்த்துக்குள்ள அடுத்த லீவு ஆரம்பம் ஆயிடும் போலருக்கு. ‘நடுல கொஞ்சம் தக்குடுவை காணும்’னு சொல்லும்படியா ஆயிடுத்து ம்ம்ம்! என்ன பண்ணர்து சொல்லுங்கோ? 4 பரிட்சைக்கு பணம் கட்டி வச்சுருந்தேன். இந்த மாசத்துக்குள்ள எழுதி முடிக்கலைனா நீ கட்டின டாலர் எல்லாம் கோவிந்தா! கோஓவிந்தா!னு நியூஜர்சிலேந்து ஒரு வெள்ளக்கார மாமி ஓலையை வாசிச்சுட்டா. வேற வழி இல்லாம ‘கொட்டடா கொடையடா’னு அடுக்களை பரண் மேல இருந்த புஸ்தகத்தை எல்லாம் எடுத்து படிச்சு பரிட்சை எழுதி பெருவேம்புடையார் புண்ணியத்துல பாஸ் பண்ணியாச்சு! இந்த கலவரத்துக்கு நடுல போஸ்ட் எழுதினா நான் பிள்ளை பொறந்த மாதிரி இருக்கும்னு பயத்துல ப்ளாக் பக்கமே வரலை.

மெட்ராஸுக்கு வந்துட்டு கல்லிடை கிளம்பர்துக்கு முன்னாடி எங்களோட சொந்தக்காரா ஒருத்தராத்துக்கு சென்னைல போனோம். அவாத்துக்கு பக்கத்துலதான் நம்ப மன்னார்குடி மைனர்வாள் இருக்கார். ஆனது ஆச்சு இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்னு தங்கமணி கிட்ட கெஞ்சி கூத்தாடி மைனர்வாளை தரிசனம் பண்ணர்துக்கு அவாத்துக்கு போனோம். மைனர்வாள் வழக்கம் போல ஆபிஸ்ல இருந்தார். அவாத்து மனுஷா எல்லார்கிட்டயும் ஷேமம்/உபயகுசலோபரி விசாரிச்சு முடிச்சு முக்கால் மணி நேரம் ஆனதுக்கு அப்புறமும் மைனர்வாளை மட்டும் காணலை. 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி மூனாவது முக்கு தாண்டியாச்சு, நாலாவது லெப்ட் திரும்பியாச்சுனு கிரிக்கெட் கமெண்ட்ரி குடுத்துண்டு இருந்தார். இதுக்கு நடுல மைனரோட ரெண்டாவது தவப்புதல்வி அப்பா இப்படித்தான் அம்மாட்டையும் புளுகுவார் ஆனா ஆபிஸ்லேந்து கிளம்பி கூட இருக்கமாட்டார்னு ஒரு குண்டை தூக்கி போட்டா.

தமிழ் சினிமா போலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி கடைசில ஒரு வழியா வந்து சேர்ந்தார். ரெண்டு பேரும் ஒரு கால்மணி நேரம் சந்தோஷமா பேசிண்டு இருந்தோம். மைனரோட பேச்சு அப்பிடியே காவேரி(முன்னாடி இருந்த) பிரவாகம். ஒரு மனுஷன் ஆத்துல உள்ள கவலை எல்லாம் இல்லாம இலக்கியம்,எழுத்துனு சந்தோஷமா மனசை செலுத்தரானா அதுக்கு அந்த ஆத்துல உள்ள தங்கமணி தான் காரணமா இருக்கமுடியும் அப்பிடிங்கர கருத்துல எனக்கு அசஞ்சலமான நம்பிக்கை உண்டு, அதனால அவாத்து மாமியை பாத்து ஸ்பெஷலா ஒரு நமஸ்காரம் சொன்னேன். மைனர்வாள் கூட ரொம்ப நேரம் பேசி முடிச்சதுக்கு அப்புறம் பிரிஞ்சு போக மனசே இல்லாத காதலர்கள் மாதிரி கிளம்பி வந்தோம். அடுத்த நாள் மாமியார் கையால செளக்கியமா சாப்பிட்டு விட்டு சாயங்காலம் அம்மணி சகிதமா ஆம்னி பஸ் ஏறினேன். அந்த பஸ்ல போனா நேர எங்க ஊர் பஸ் ஸ்டாண்ட்ல போய் இறங்கிக்கலாம். தென் தமிழகத்துலேந்து குறிப்பா திருனவேலி பக்கத்துலேந்து வரக்கூடிய ஆம்னி பஸ்ஸுக்கு சில குணாதிசயங்கள் உண்டு. உள்ள ஏறும் போதே கமகமனு ஊதுவத்தி வாசனையும் புது பூமாலை போட்ட பிள்ளையார்/முருகன் படத்தை டிரைவர் பக்கத்துல பாக்கலாம். டிரைவர் சந்தனம்/விபூதி நிச்சயமா இட்டுண்டு இருப்பார். முக்கியமா நீ வா போ!னு ஏகவசனத்துல பேசாம மரியாதையா பேசுவாங்க. வண்டியை கிளப்பர்துக்கு முன்னாடி சீர்காழியோட கனீர் குரல்ல ‘உன்னை முழுமுதலே’ இல்லைனா ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ நிச்சயமா ஒலிக்கும்.
நாங்க ஏறின வண்டில ‘வினாயகனே வினை தீர்ப்பவனே’ ஒலிச்சது. ‘உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது’னு முருகனுக்கும் ஒரு பாட்டை போட்டுட்டு அடுத்து என்னை மாதிரி உள்ள ஆசாமிகளுக்காக பாட்டு போட்டாங்க. ‘ஜிங்கு ஜிங்குனு ஜிமிக்கி போட்டு’ பாட்டு ஒலிச்ச போது ;உங்க ஊர்ல எல்லாம் ஒன்னுபோல இருப்பா போலருக்கு!;னு சொல்லி தங்கமணி தலைல அடிச்சுண்டா. அப்புறம் வழக்கம் போல எதோ ஒரு படம் போட்டா. படத்துல ஹீரோயினை வில்லன் கடத்திண்டு போகும் போது டிரைவருக்கு பசி வந்ததால வண்டியை ஒரு மோட்டல் பக்கமா நிறுத்தினார். பொதுவா ஊருக்கு வெளில ரோட்டோரமா இருக்கும் இந்த மோட்டல் எல்லாம் ‘கமகம மனம் கார்டன் பிரஷ்ஷா’ இருக்கர்தால நான் ஆத்துலேந்து கட்டுசாதக்கூடை கொண்டு போயிடுவேன். பொதுவா ஆம்னி பஸ் எல்லாம் இப்ப நல்ல மோட்டல் பக்கமா தான் நிறுத்தரா அப்பிடிங்கர்து ஒரு நல்ல விஷயம் தான்.

‘காலையிளங்கதிரில் உந்தன் காட்சி தெரியுது!’னு சீர்காழி இதமான குரல்ல மறுபடியும் காத்தால எல்லாரையும் எழுப்பிவிட்டார். சம்பூர்ண ராமாயணத்துல வரும் மண்டோதரி ‘காலையில் பாடும் ராகம்?’னு கேள்வி கேட்டா டிரைவர் அண்ணாச்சிக்கு ‘பூபாளம்’னு சொல்லதெரியுமோ தெரியாதோ ஆனா காத்தால காதுக்கு கேட்கும் படியான பாட்டு மட்டும் தான் அவர் போட்டார். சங்கர் நகர் சிமெண்ட் பாக்ட்ரியை பாத்த உடனே திருனவேலில இறங்க வேண்டியவா எல்லாம் இறங்கர்துக்கு தயார் ஆனா. கல்லிடை காஸ்மோபொலிடன்ல இறங்க கூடியவா எல்லாம் வீரவனல்லூர் கோமதி மில்ஸ் வந்தாச்சுன்னா ரெடி ஆக ஆரம்பிச்சுடுவா. கல்லிடை தேர்வு நிலை பேரூராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறதுனு ஊர் எல்லைல கோட்டை தெருவுக்கு பக்கத்துல போர்ட்ல எழுதி வச்சுருந்தாலும் அது என்னவோ நெஜமாவே வாங்கோ! வாங்கோ!னு அழைக்கர மாதிரி தான் இருந்தது. கல்லிடை காஸ்மோபொலிடன்ல வழக்கம் போல ‘ஏ மாப்ளே எப்படா வந்தே?’ ‘சதுர்த்தி வரைக்கும் இருப்பையா?’ ‘ஆத்துக்காரிக்கு ஊர் பிடிச்சுருக்கா?’ வகையான விசாரிப்புகளுக்கு நடுல பயணம் பண்ணினோம். திருனவேலி இருட்டு கடை அல்வா வாங்கி தருவேளா?னு தங்கமணி ரொம்ப ஆசையா கேட்டாங்க. அதுக்கு என்ன வாங்கி தந்துட்டா போச்சு! புரட்சித்தலைவி புண்ணியத்துல அனேகமா எல்லா கடையுமே இருட்டு கடையாதான் இருக்கு அதனால எந்த கடைல வேணும்னாலும் நாம வாங்கிக்கலாம்னு சொல்லிவச்சேன்.

கல்லிடைல பாதிக்கு பாதி எல்லாம் வயசான தாத்தா பாட்டியா இருக்கா. இளவட்டங்கள் எல்லாம் பெண்களூர்,மெட்ராஸ்,அமெரிக்கா,கனடானு போய் உக்காந்துட்டதால ஊர் கொஞ்சம் வெறிச்சோடிதான் இருக்கு. நாராயணீயம்கிளாஸ்,ஸஹஸ்ரனாமம்/செளந்தர்யலஹரினு எல்லா மாமிகளும் பயங்கர பிசியா இருக்கா. கொஞ்சம் கொஞ்சமா மெட்ராஸ்ல இருக்கர மாதிரி இங்க இருக்கரவாளும் சதாசர்வ காலமும் நைட்டியோட வளைய வந்துண்டு இருக்கா. அனேகமா கூடிய சீக்கரம் நவராத்ரிக்கு தாம்பூலம் குடுக்கும் போது பொம்மீஸ் நைட்டி குடுத்தா எல்லாருக்கும் ரொம்ப உபகாரமா இருக்கும் போலருக்கு.

ரெஸ்ட் எடுக்க ஊருக்கு போனோம்னு தான் பேர் ஆனா ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்காம சுத்து சுத்துனு சுத்தினோம். குருவாயூர்,பாலக்காடு,மதுரை,திருச்சினு ரயிலை பிடிக்கர்து பஸ்ஸை பிடிக்கர்து ஆட்டோவை தொறத்தர்துனு ஒரே ஜாலியா போச்சு. நேரம் கிடைக்கும் போது மிச்சத்தை எழுத முயற்சி பண்ணறேன்.

எல்லாருக்கும் 2013 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :)

21 comments:

s suresh said...

சுவையான அனுபவ பகிர்வு! நன்றி!

Vasudevan Tirumurti said...

//கொஞ்சம் கொஞ்சமா மெட்ராஸ்ல இருக்கர மாதிரி இங்க இருக்கரவாளும் சதாசர்வ காலமும் நைட்டியோட வளைய வந்துண்டு இருக்கா//

கடவுளே!

வல்லிசிம்ஹன் said...

மெட்ராஸ்ல இருக்கறவா எல்லாம் எல்லா நேரத்திலயும் நைட்டி போடறதில்லை தக்குடுமா.:)

எங்க போனாலும் போன் செய்து ஊருக்கு வந்திருக்கோம்னும் சொல்வோமில்ல.:)

வல்லிசிம்ஹன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா. இல்லறவாழ்க்கை இனிதே நடக்க
இன்னும் வாழ்த்துகள்.

RVS said...

மன்னார்குடி ஆள் ரொம்பவும் பாவம் தக்குடு. ”நீங்கதான் உங்காபீஸ் பில்லர்னு” ஏற்கனவே இடிபட்டுக்கொண்டிருக்கும் அப்பாஆஆஆஆவீஈஈஈஈஈஈ. :-) :-)

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தக்குடு.

Lakshmi said...

ம்ம் கல்லிடை பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லலாமில்ல்யா

Sreeram, Doha said...

என்ன தக்குடு! பனி பொழியும் இந்த மார்கழி மாசத்துல "வராக பெருமாளும் வராத பொங்கலும் "....ங்கற ரீதில ஏதேனும் சீசன் மேட்டரா பாத்து நகைச்சுவையாய் பீலா விடுவீர்னு பார்த்தா... பாவம்.. RVS சொன்ன மாதிரி .. மன்னார்குடி (மைனர்வாள் ??) ஆள ஒம்ம ஊர் வண்டி மாதிரி உலுக்கி எடுதிட்டீரே.. அது போட்டும் .. ஆத்துக்காரிக்கு கடைசீல அல்வா "வாங்கி" கொடுத்தீரா ..இல்ல .. அல்வா கொடுத்துட்டீரா .


சந்தடி சாக்குல எக்ஸாம் பாஸ் பண்ணினதை டௌன் ப்ளே பண்ணிட்டீர் பாத்தீரா .. வரப்போகும் புத்தாண்டில் உங்களுக்கு பதவி உயர்வு (கள் ) கிட்ட எங்கள நல வாழ்த்துகள்

sury Siva said...

//கூடிய சீக்கரம் நவராத்ரிக்கு தாம்பூலம் குடுக்கும் போது பொம்மீஸ் நைட்டி குடுத்தா எல்லாருக்கும் ரொம்ப உபகாரமா இருக்கும் போலருக்கு.//

Besh.. Besh !!!


அவுத்து விட்ட அப்படின்னு மட்டும் சொன்னா போதாதா ?
நாங்க என்ன அவ்வளவு மக்கா !! யார் எழுதறா அப்படின்னு படிச்சா புரிஞ்சுக்கமாட்டோமா என்ன?

நவராத்திரிக்கு ப்ளௌஸ் பீஸ் என்று ஒரே பீஸ் ஆல் ரவுண்டு அடிச்சு நம்மாத்துக்கே திரும்பி
வரது இப்பல்லாம் சர்வ சாதாரணமா போயிடுத்து. இப்ப யாருன்னா ப்லௌஸ் போட்டுக்கறா
எல்லாமே சுரீதார் நைட் லே நைட்டீஸ்தானே அப்படிங்கறது எங்காத்து நாட்டி.

அதுனாலே, இனிமே ப்லௌஸ் பீஸுக்கு பதிலா கொலுவுக்கு நைட்டீஸ் கொடுக்கணும், தங்கமணி
நாப்பதுக்கு கீழெ இருந்தால் ஜீன்ஸ் பனியன் கொடுக்கலாம் அப்படின்னு ....

நான் சொன்னா நடக்காது... தக்குடு ஸாரே !! நீங்க ஒரு போராட்டம் நடத்துங்க..

சுப்பு தாத்தா.

sury Siva said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சுப்பு தாத்தா.

R. Jagannathan said...

அமெரிக்கா போய் பரீக்ஷை எழுதினீரா இல்லை தோஹாவிலிருந்தே எழுதினீரா? (அமெரிக்க அனுபவம் வருமோ என்று ஒரு ஆசை!). என்ன பரீக்ஷை? பாஸ் பண்ணியதற்கு வாழ்த்துக்கள். உத்தியோகத்தில் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்!

இப்போதுதான் ஒரு ட்வீட் படித்தேன் - ' தமிழகத்தில் மின் வெட்டினால் பாதிக்கப் படாத தொழிற்சாலை - இருட்டுக் கடை அல்வா பண்ணும் தொழிற்சாலை தான்' என்று!

உங்களுக்கும் உங்கள் மனைவி மற்றும் உறவினர்களுக்கும், இந்த போஸ்ட்டை படிப்பவர்களுக்கும் என் இனிய புது வருஷ வாழ்த்துக்கள்!

-ஜெகன்னாதன்.

Porkodi said...

Part 1, 2, 3 ellam orediya padichutten.. enna vayithu vali jasthiya irukku siricha sirippula.. thakkuduku nu vandhu amaiyum polarku ellame :D

-porkodi.

அமைதிச்சாரல் said...

இனிய புத்தாண்டுக்கும் பரீட்சையில் பாஸ் செஞ்சதுக்கும், அல்வா வாங்கிக் கொடுக்காட்டியும் பூரிக்கட்டையால் அடி வாங்காமத் தப்பிச்சதுக்கும் வாழ்த்துகள் :-)))))))

இராஜராஜேஸ்வரி said...

பரிட்சை எழுதி பெருவேம்புடையார் புண்ணியத்துல பாஸ் பண்ணியாச்சு! -- வாழ்த்துகள்..!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

அமுதா கிருஷ்ணா said...

கழுதை மாதிரி சுத்தினாலும் பாஸ் செய்ததற்கு வாழ்த்துக்கள்.(சும்மா)

Ranjani Narayanan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பூந்தளிர் said...

இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

தக்குடு said...

@ சுரேஷ்- நன்றி சார்!

@ திவாண்ணா - ஆமாம் :(

@ வல்லிம்மா - நீங்க திருக்குறுங்குடினா நான் மெட்ராஸ்காராளை பத்தி சொல்லிண்டு இருக்கேன் :) போன் பண்ணறேன் சரியா!

@ மைனர்வாள் - உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் அண்ணா :)

@ லக்ஷ்மி மாமி - சொல்லுவோம் சொல்லுவோம்

@ பட்டீல் மாமா - எல்லாம் உங்க ஆசிர்வாதம் :)

@ சூரி தாத்தா - ஹா ஹா :)

@ ஜெகன்னாதன் சார் - வரிக்கு வரி ரசிக்கும் ரசிகருக்கு நன்றி!

@ பொற்கேடி - ரைட்டு ரைட்டு!

@ அமைதிசாரல் அக்கா - நன்றி

@ ராஜி மேடம் - நன்றி

@ அமுதா மேடம் - நீங்க சொல்லலாம் தப்பில்லை

@ ரன்ஜனி மேடம் - உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

@ பூந்தளிர் - ரொம்ப சந்தோஷம்! உங்க பேர் ரொம்ப அழகு!

Geetha Sambasivam said...

// கொஞ்சம் கொஞ்சமா மெட்ராஸ்ல இருக்கர மாதிரி இங்க இருக்கரவாளும் சதாசர்வ காலமும் நைட்டியோட வளைய வந்துண்டு இருக்கா. //

சகிக்கலையே. ரேவதி சொன்னாப்போல் மைலையிலே வேணா இருக்கலாம். அம்பத்தூரில் கடந்த பத்து வருடங்களாகப் பார்த்துட்டு இருக்கேன் இந்தக் கொடுமையை! :(( இதை யார் கண்டு பிடிச்சாங்கனு புரியலை!

அப்பாவி தங்கமணி said...

Asusual kalakkals of thakkudu. Unakku solliyaa tharanum...:)

RAMVI said...

// ஒரு மனுஷன் ஆத்துல உள்ள கவலை எல்லாம் இல்லாம இலக்கியம்,எழுத்துனு சந்தோஷமா மனசை செலுத்தரானா அதுக்கு அந்த ஆத்துல உள்ள தங்கமணி தான் காரணமா இருக்கமுடியும் அப்பிடிங்கர கருத்துல எனக்கு அசஞ்சலமான நம்பிக்கை உண்டு, //

சந்தடி சாக்குல உங்கத்து தங்கமணிக்கும் ஐஸ் வச்சுட்ட.
எக்ஸாம் பாஸ் பண்ணிணத்துக்கு வாழ்த்துக்கள்.

A and A said...

Thakkudu, Happy New Year! You missed the dupatta for the nighty :)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)