Thursday, October 6, 2011
மாமி..... சுண்டல்!!!
அப்ப்ப்ப்ப்ப்ப்பாடி! இருங்கோ கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன். 9 நாளா மூச்சு விடக்கூட நேரமில்லை கேட்டேளா? எல்லாராத்துலையும் நவராத்ரி நன்னா கழிஞ்சுதா? நம்பாத்துலையும் சூப்பரா கழிஞ்சது. தக்குடு உங்காத்துல கொலு வெச்சேளா?னு உடனே கேக்காதீங்கோ. என்னோட ரூம்ல தினமுமே கொலுதான். வச்சது வச்சபடிக்கு ஆடாம அசையாதைக்கி இருந்தா கொலு தானே? :) 'இந்த தீபாவளியை போத்திஸில் கொண்டாடுவோம்'னு மூக்கும் முழியுமா இருக்கர எதாவது ஒரு குஜராத்தி பிகர் டிவி விளம்பரத்துல சொல்லற மாதிரி நாங்க எல்லாம் 'இந்த நவராத்ரியை கருங்குளம் மாமாவாத்துல கொண்டாடுவோம்'னு சொல்லாமையே கொண்டாடிட்டோம். ஒன்பது நாளும் அவாம் அமர்களப்பட்டது. அவாத்து வாசல்ல ‘கருங்குளம் அன்னசத்திரம்’னு ஒரு போர்டு மட்டும் தான் மாட்டலையே தவிர முழூ நேர சத்திரமாவே மாத்திட்டோம்.
பூமாதேவியை நேர்ல பார்கனும்னா அவாத்து மாமியை பாத்தாபோதும். ‘ஜாடிக்கேத்த மூடி’னு சொல்லுவாளே அதை மாதிரி ஜோடி. மாமா ஒரு காரியத்தை மனசுல நினைச்சாலே போதும் சொல்லாமையே அந்த மாமி பண்ண ஆரம்பிச்சுடரா. எல்லாராத்து மாமிகளும் பண்ணற மாதிரி மாமாவோட நைஸ் வேஷ்டியை நைஸா விரிச்சு அழகா கொலு வச்சுருந்தா. ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’ங்கர கதையா இவாத்துல கொலு வெச்சதுக்கு தக்குடுவுக்கு ஒன்பது நாளும் ராத்திரி சுண்டல் & ஆஹாரம். இவாத்து ஜோசியரும் எதாவது 'அப்பிராணி' பண்டாரத்துக்கு ஆஹாரம் போடச் சொல்லியிருப்பாரோ?னு கொஞ்சம் சம்சியம் தான். நடுல ஒரு வெள்ளிக்கிழமை 10 - 15 பேரை கூப்பிட்டு அவாளுக்கும் மம்மு போட்டதுக்கு அப்புறம் தான் சந்தேகம் தெளிஞ்சது. வந்த மாமிகள்ல இரண்டு மூனு பேர் கல்யாண ஆத்து கட்டுசாதகூடை மாதிரி டப்பால வேற கட்டி எடுத்துண்டு போயிட்டா. ஒரு கரண்டி மம்மு போட்டாலே அவா தாயாருக்கு சமானம்!னு சாஸ்திரத்துல இருக்கு. மாமி கையால ஒன்பது நாள் மம்மு சாப்பிட்டதால வாய் நிறைய அம்மா!னே கூப்பிடலாம். “நவமி அன்னிக்கி பூர்த்தி ஆகர்தே என்ன ஸ்வீட் பண்னனும் தக்குடு?”னு என்கிட்ட மாமி கேட்டதால “மட்டா கொஞ்சமா திரட்டிப்பால் வேணும்னா பண்ணிக்கோங்களேன்!”னு சொல்லிட்டேன். சுலபமா பண்ணலாமேனுதான் சொன்னேனேதவிர, நீங்க எல்லாரும் நினைக்கர மாதிரி எனக்கு பிடிச்ச வஸ்து!னு சிபாரிசு பண்ணலை.
குட்டி அம்பாள் ..:))
பூஜை மாதிரியான புண்ணிய காரியங்கள் பண்னும் போது ‘நான் பண்ணறேன்’ அப்பிடிங்கர எண்ணமே வரகூடாது. அதே மாதிரி பூஜைக்கு நடுல நாம மத்தவாளுக்கு செளபாக்கிய வஸ்துக்கள் தரும் போது ‘நான் குடுக்கறேன்!’ ‘அவா வாங்கிக்கறா!’ அப்பிடிங்கர பா(bha)வம் மனசுல வந்ததுன்னா அந்த ஷணமே நம்மோட பூஜாபலன் பூஜ்ஜியம் ஆயிடும். மேல இருக்கர படத்தை பாத்த உடனே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. தரக்கூடியவாளோட கை கீழ இருக்கு & வாங்கிக்கக் கூடிய அந்த குட்டி அம்பாளோட குஞ்சுக்கைகள் மேல இருக்கு. அதுலையும் இன்னும் விஷேஷமா வாங்கிண்டு ஆசிர்வாதம் பண்ணர மாதிரி நம்மோட கண்ணுக்கு தெரியர்து. இந்த பா(bha)வம் & சிரத்தை தான் பூஜைல ரொம்ப முக்கியம்.
சின்னப்பையனா இருந்த போது எங்க தெருல சுண்டல் வாங்கர்து அவ்ளோ ஜாலியா இருக்கும். சில மாமிகள் கை நிறையா தருவா! சில மாமிகள் கரண்டியை கரண்டியை காட்டுவா!! கரண்டியை காட்டர மாமி ஆத்துக்கு எல்லாம் மாமி இல்லாத நேரமா போய் மாமாட்ட வசூல் பண்ணிடுவோம். மாமூல் வசூல் பண்ண போகும் தாதா மாதிரி கோஷ்டி கோஷ்டியா தான் போவோம். வாங்கின சுண்டலை அங்க வெச்சே சாப்பிடமுடியாது. எல்லாராத்து சுண்டலையும் ஒன்னு சேர்த்து நிறையா இருக்கர மாதிரி ஆக்கிட்டு சாப்பிடர்துல ஒரு அல்ப சந்தோஷம். ஒன்னு ரெண்டு மாமிகள் ஆத்துல ரெண்டாம் தடவை போனா பலன் இருக்கும், ஆனா அப்போ கூட்டம் சேர்க்காம போகனும். ப்ளவுஸ் சங்கரனும் நானும் தான் எப்போதுமே செட்டு. கடலைபருப்பு பொட்டலம் பண்ணி வந்த காலி ப்ளாஸ்டிக் பையை கைல வச்சுப்போம். அவன் ஒரு அனுமார் பைத்தியம்ங்கர்தால அனுமார் படம் போட்ட எதாவது ஒரு கடலைமாவு காலி கவரை தூக்கிண்டு வருவான். அதனால அவனோட கவர்ல போட்ட எல்லா சுண்டலுமெ எப்போதும் ஒரு கடலைமாவு வாடையோடையே இருக்கும். சில சமயம் அம்பானி பிஸினஸ் மாதிரி கலெக்ஷன் ஓஹோ!னு ஆகி கவர் எல்லாம் ரொம்பி வழிய ஆரம்பிச்சுடும். அந்த மாதிரி சமயத்துல என்ன பண்ணர்துன்னு தெரியாம ப்ளவுஸ் சங்கரன் திருதிருனு முழிப்பான். நான் எப்போதுமே முன் ஜாக்ரதையா ரெண்டு பக்கமும் கால்படி சுண்டல் கொள்ர மாதிரி பாக்கெட் உள்ள டவுசர் தான் போட்டுண்டு போவேன். “ராத்திரி எலி வந்து கடிக்கபோகர்துடா!”னு அம்மா சத்தம் போடர்தை காதுல வாங்கிக்காம ஜாஸ்தியா வர சுண்டலை எல்லாம் டவுசர் பாக்கெட்ல போட்டுப்பேன்.
எல்லா மாமியும் போன உடனே சுண்டலை எடுத்து தந்துடமாட்டா. நெத்தி வேர்வை நிலத்துல சிந்த பாடுபட்டாதான் பட்டானி சுண்டலை ருசிபாக்கமுடியும். இந்த மாமிகள் “முதல்ல அகிலா மாமியாத்துல வாங்கிண்டு வா!” ‘அகரம்’ கோமு மாமியாத்துல வாங்கியாச்சா?னு ஆயிரத்தெட்டு பிசுக்காரம் பண்ணிப்பா. உடனே ரோஷம் வந்து அவாத்துல வாங்காம போயிடகூடாது! வியாபாரத்துல பொறுமை அவசியம். எங்க அண்ணாவுக்கு வேற நான் பங்கு குடுக்கனும். ‘கிடைக்ககூடிய எல்லா சுண்டலையும் அண்ணாவுக்கு பங்கு குடுத்தா படிப்பு நன்னா வரும்!’னு சொல்லி என்னை ரொம்ப நாளைக்கு ஏமாத்தி வச்சுருந்தான். நானும் லூசு மாதிரி ரொம்ப வருஷம் குடுத்துண்டு இருந்தேன். இந்த பொண்கொழந்தேளை பாத்தா எங்களோட வானரபடைக்கு பொறாமையா இருக்கும். அவாளை மட்டும் பலகாய்ல உக்காசுக்க சொல்லி தாம்பூலம் குடுத்து சுண்டலை கவர்ல போட்டே குடுப்பா. கொசு அடிக்கர மாதிரி தொடைல ‘டப் டப்’னு அடிச்சுண்டு கட்டத்தொண்டையும் நெட்டத்தொண்டையுமா ‘லம்போதர லகுமிகரா’னு பாடவேற ஆரம்பிச்சிடுவா. ஒரு தடவை ரொம்ப எரிச்சலா போஸ்டாபிஸ் ஹரி ‘போரும்டீ! சீக்கரம் முடிங்கோ!’னு கத்திட்டான்.
அந்த மாமி கோபம் வந்து “நீங்களும் ஒரு பாட்டு பாடினா தான் உங்க எல்லாருக்கும் புட்டு!னு சொல்லிட்டா. அந்த மாமியாத்துல உருப்படியா இருக்கர ஒரே வஸ்து அந்த புட்டு தான், சுண்டல் எதுவும் வாய்ல வெக்கர்துக்கு விளங்காது. எங்களோட புட்டு ஆசைல அநியாயமா இப்படி ஒரு லோடு மண்ணை அள்ளிகொட்டின ஹரிகுட்டியை அடிச்சி துவம்சம் பண்ணலாம்னு எங்களுக்கு தோனித்து. ஆனா திடீர்னு ஹரிகுட்டியே ‘அஹஹம்!’னு தொண்டையை சரி பண்ணிண்டான். எங்க எல்லாருக்கும் பயங்கர ஆச்சர்யம் வால் இல்லாத வானரங்கள் ஒன்னுகூடி அமைச்ச ‘வால்லில்லா வானரப்படை’யான நம்ப ‘வால்’குடிக்கு நடுல ஒரு ‘லால்குடியா’னு ஷாக் ஆயிட்டோம். நின்னுண்டு பாடலாமா? உக்காசுண்டு பாடலாமா?னு மேல மேல ஹரிக்குட்டி பாம் போட்டான். நாட்டைல பாடட்டுமா இல்லைனா நாட்டைகுறிஞ்சில பாடட்டுமா?னு அடுத்த சந்தேகம் அவன்டேந்து. “முதல்ல மூக்கைஉறிஞ்சாம பாடுலே!” னு பொண்கொழந்தேள் நக்கல் அடிச்சது. மாமியாத்து டோங்கா கிண்ணத்துல இருந்த புட்டு கிடைச்சுடும்னு முழூ நம்பிக்கையோட ஹரிக்குட்டியை பாத்தோம்.
அ..அ..அ...!னு சுருதிப் பெட்டி எபக்ஃடை முதல்ல குடுத்துட்டு "வாடி என் கப்பக்கிழங்கே!"...னு கீர்த்தனையை ஆரம்பிச்ச உடனே எல்லாரும் 'க்ளுக்'னு சிரிச்சோம். பெரிய ஜேசுதாஸ் மாதிரி அந்தப் பய கண்ணை மூடிண்டு ‘வாடி! ஆ ஆ வாடி! வா வா வாடி!’னு ப்ருக்கா எல்லாம் போட்டான். என்ன தோணித்தோ தெரியலை அந்த மாமிக்கும் சிரிப்பு வந்துடுத்து. “வள்ளி மாமிக்கு....னு வந்து பொறந்துருக்கு பாரு!”னு சொல்லிண்டே எங்க எல்லாருக்கும் சின்னக்குழந்தை பாரக்ஃஸ் சாப்பிடர ஸ்பூனால இக்கினி இக்கினி!யா 2 ஸ்பூன் புட்டு போட்டா. “இந்த ஸ்பூன்ல குடுத்தா அடுத்த நவராத்ரிக்கும் இதே புட்டை வச்சு ஓட்டிடலாம் மாமி!”னு ‘சக்கப்பழம்’ ஹரிஷ் கமண்ட் அடிச்சுட்டு வந்துட்டான். அடுத்த நாள்லேந்து யாரும் ஹரிக்குட்டி கூட சுண்டல் வாங்க போகர்துக்கே தயங்கினா. ஏடாகூடமா ஆம்பூர் கோமு மாமியாத்துல வச்சு “நேத்து ராத்திரி யம்ம்ம்மா!”னு பாடி தொலைச்சான்னா அந்த மாமி அருமாமனைல வச்சு எங்க எல்லாரையும் நறுக்கிடுவா!ங்கர பயம் தான் காரணம்.............:)
நவராத்ரிக்கு மாமிகள் ஜாக்கெட், பாவாடை, புடவை குடுக்கர மாதிரி சிவராத்ரிக்கு ஏன் மாமாக்கள் யாரும் ‘வைக்கிங்’ முண்டா பனியன், வார்வச்ச டிராயர், வேஷ்டி எல்லாம் குடுக்கமாட்டேங்கரா??னு சமுதாய அக்கறையோட பலதடவை நானும் எங்க அண்ணாவும் பேசிண்டதுண்டு..........:)
Subscribe to:
Post Comments (Atom)
54 comments:
நான்தான் first-u!
-பருப்பு ஆசிரியன்..
சுண்டலுக்கு சொன்னேன் தக்குடு...
கிண்டலா சொல்லலே...!
-பருப்பு ஆசிரியன்
நவராத்திரி சுண்டல் கலக்ஷன் பற்றிய இந்த பகிர்வு மனதை கொள்ளை கொண்டது தக்குடு. இந்த மாமிகளுக்கு என்ன ஒரு பாரபட்ஷம்... :)
"கொசு அடிக்கறா மாதிரி தொடைல 'டப் டப்'னு தட்டிண்டு..."
"வால்குடிக்கு நடுவுல ஒரு லால்குடியா.."
ரசித்த வரிகள்! நியாயமான சமுதாய அக்கறைதான்!
வழக்கம் போல காமெடியோட ஒரு நல்ல பதிவு தக்குடு!
கொலுமுழுக்க அதகளம் தான்... நாட்டை குறிச்சி .....முக்கை உறிஞ்சு .... தக்குடுக்குன்னே வந்து விழுகுது ...
சரி வைக்கிங் க்கு அடி போட்டுட்டே இருக்கே ஒன்னும் நடக்க மாட்டேங்கறது .....
வாங்கறவா, குடுக்கறவா பத்தி சொல்லியிருக்கற விஷயம் சூப்பர். மற்றபடி சிரிசிரி விஷயங்கள்ல எதைச் சொல்ல எதை விடன்னு தெரியாததால, எதையுமே சொல்லலை! :)
தக்குடுவுக்கு அம்பாள் அனுக்கிரகம் எப்பவும் இருக்கட்டும்!
சிரிச்சு,சிரிச்சு மாளல தக்குடு ! இப்போ நீ தோகாவில கொண்டாடற நவராத்திரி matured way யா இருக்குன்னும். ஆனாலும், உனக்கு கிராமத்து அப்பாவித்தனமான சின்னவயசு நவராத்திரி எத்தனை அருமையா இருக்குன்னும் புரியறது. ம்ம்ம்... என்ன இருந்தாலும் அது மாதிரி வராது. நினைச்சு, நினைச்சு சந்தோஷ பட்டுக்கலாம்.
Very Nice. Typical agrahram incidents :) I have sent you an email. Looking for my classmate who is from Kallidai...
// நவராத்ரிக்கு மாமிகள் ஜாக்கெட், பாவாடை, புடவை குடுக்கர மாதிரி சிவராத்ரிக்கு ஏன் மாமாக்கள் யாரும் ‘வைக்கிங்’ முண்டா பனியன், வார்வச்ச டிராயர், வேஷ்டி எல்லாம் குடுக்கமாட்டேங்கரா??னு சமுதாய அக்கறையோட பலதடவை நானும் எங்க அண்ணாவும் பேசிண்டதுண்டு..........:) //
அதானே... :))
வால்லில்லா வானரப்படை’யான நம்ப ‘வால்’குடிக்கு நடுல ஒரு ‘லால்குடியா’னு ஷாக் ஆயிட்டோம். /
நவராத்திரி மலரும் நினைவுகள் அருமை!
தக்குடு காமெடியா எழுதுரதுல உன்னை அடிச்சுக்க ஆளே கிடையாது. புட்டு புராணம் சூப்பர் காமெடி. எதைச்சொல்ல எதை விட .அடுத்து தீபாவளி சர வெடியா அணுகுண்டா?
நவ ராத்திரிப் பதிவு அமர்க்களம்
அதுவும் கடைசியா வைச்ச கோரிக்கை அட்டகாசம்
மாமிகள்தான் மனசு வைக்கனும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வழக்கம் போல நல்ல காமெடியான பதிவு :)
ஹாஹாஹாஹா
செம லகலகலக :-))))
//‘கிடைக்ககூடிய எல்லா சுண்டலையும் அண்ணாவுக்கு பங்கு குடுத்தா படிப்பு நன்னா வரும்!’னு சொல்லி என்னை ரொம்ப நாளைக்கு ஏமாத்தி வச்சுருந்தான்.//
hahahahahahaa!
சூப்பர் (வழக்கம்போல்!)
comedy!!! enjoyed very much.it reminded of our childhood navarathri days.serial set traffic light road laying, ... our colony boys will claim their share of sundal only after contributing the above said park items...hmmm those days!!sasisuga203
சூப்பர் தக்குடு .எப்பவும் சந்தோஷமா சிரிச்சு சாப்பிட்டு இதே மாதிரி எங்களையும் சிரிக்க வைங்க .
//“மட்டா கொஞ்சமா திரட்டிப்பால் வேணும்னா பண்ணிக்கோங்களேன்!”னு சொல்லிட்டேன். சுலபமா பண்ணலாமேனுதான் சொன்னேனேதவிர, நீங்க எல்லாரும் நினைக்கர மாதிரி எனக்கு பிடிச்ச வஸ்து!னு சிபாரிசு பண்ணலை.//
அடப்பாவி தக்குடு திரட்டுப்பால் பண்ணறது என்னா அவ்வளவு சுலபமா? பால கைவிடாம கிளரத்துக்குள்ள உயிர் போயிடும் போ!உனக்கு ரொம்ப தான் குசும்பு.
பதிவு படு அமர்க்களம்.சிரிச்சு சிரிச்சு மாளல.
Thirattuppaal enna summa vandhudumaa...aanaalum thakkudu idhu konjam too much...adhuvum navami-kku niraiya vaelai irukkum samayam..
Aaha..'Kosu adikkara maadhiri"...thappu thappa vaera thattaradhula oru kushi theriyuma?
Aah...super padhivu-nu conclude pannittaen!
'இந்த தீபாவளியை போத்திஸில் கொண்டாடுவோம்'னு மூக்கும் முழியுமா இருக்கர எதாவது ஒரு குஜராத்தி பிகர் டிவி விளம்பரத்துல சொல்லற மாதிரி
.....ஆரம்பமே சிரிப்பு சரவெடி டா அம்பி! தூள் கிளப்பிட்டே....
//. எங்க எல்லாருக்கும் பயங்கர ஆச்சர்யம் வால் இல்லாத வானரங்கள் ஒன்னுகூடி அமைச்ச ‘வால்லில்லா வானரப்படை’யான நம்ப ‘வால்’குடிக்கு நடுல ஒரு ‘லால்குடியா’னு ஷாக் ஆயிட்டோம். //
// “முதல்ல மூக்கைஉறிஞ்சாம பாடுலே!” னு பொண்கொழந்தேள் நக்கல் அடிச்சது.//
ரொம்ப ரசிச்ச வரிகள் இது. உங்களுக்கு எதுகைமோனையோட காமெடி நன்னா வருதே...ரொம்ப பொறாமையா இருக்கு தக்குடு உங்களை பார்க்க...
நானும் நவராத்திரி பிசி அம்பி. இப்பத்தான் டைம்கிடைச்சது..
கடைசி டவுட் கரெக்ட்..அதெல்லாம் இனிமேல் கொலுவில் கொடுக்க சொல்லி சட்டம் போடனும்.
தக்குடு ஜி,
சிரிச்சு சிரிச்சு கையெல்லாம் நடுங்கறது. இந்த மாதிரி வானர அட்டகாசம் எங்கயும் பார்த்ததில்லை:)
திரட்டிப்பால் பார்சல் மனுப்பவும்,
திரட்டிப்பால் ஒட்டகப்பாலா இல்லை தாமிரபரணி தண்ணிப் பாலா?
சூப்பர் ....ஒரே சிரிப்பு ....
இப்படி எழுதுவேன்னு தெரிஞ்சா.. கரண்டியை காட்டியிருக்க மாட்டா.... கரண்டியால ரெண்டு போட்ருப்பா.... :-))
வழக்கம் போல அமர்க்களம்... :-))
வால்...லால்... லொள்ளு....
வர சிவராத்திரிக்கு உனக்கு அட்லீஸ்ட் யாராவது காசித்துண்டாவது வச்சுக்கொடுக்கனும்னு சிவனை வேண்டிக்கிறேன்... :-))
நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டேள், போங்கோ..பொம்மனாட்டிகளக் கூப்பிடறா மாதிரி, நம்மளையும் கொலுக்கு கூப்பிட்டா.. நாமளும் நம்ம ஆம்பள தொண்டையோட, ஒரு கரகரப்ரியாவோ..இல்ல ஜான் ஹிக்கின்ஸ் மாதிரி எந்தரோ மஹானுபாவலுவோ ..பாடிட்டு, அவா கொடுக்கப் போற ஜாக்கி பனியன்,ஜெட்டி,சேப்புக் கலர் ஈரிழைத் துண்டு(பெரிசா...)ஒரு சோப்பு டப்பா,வித் புதிய க்ரீன் பியர்ஸ்..ஒரு ஜரிகை அங்கவஸ்த்ரம் கொடுத்தா....
வேண்டாம்னா சொல்லப் போறோம், நாம்?
அது சரி..அந்த கருங்குளம் மாமி அட்ரஸ் சொன்னா தேவலை..
அடுத்த கொலுவாக்காவது குடும்பத்தோட நானும் ’ட்ரை’ பண்ணுவேனில்ல....
அன்புடன்,
”ஆரண்ய நிவாஸ்”
Thakkudu, serichu serichu enagu ore vayathuvali.
yeppo vare doctor kitta kuttindu pogarathukku?
Kuttiambal sema jor.
chanceaa illa..naan padichitu viluntu vilunthu sirichi office la pakathula irukarava yellam yena yena nu ketka aramichitaa....algudi, blosue sankaran paatu yellam ooo..hooo....super siripu.
@ பருப்பு ஆசிரியர் - :))
@ வெங்கட் அண்ணா - மாமிகளே இப்படிதான் அண்ணா!! :)
@ sriram அண்ணா - :))
@ மஹி - ரைட்டு!!
@ ரசிகமணி - தீபாவளிக்கு எதாவது பேறுமா?னு பாக்கறேன்! ஹீம்ம்ம்ம் எங்ங்ங்க!! :)
@ கவினயா அக்கா - கவினயா அம்பாளோட அனுக்கிரஹம் எப்போதும் வேணும் !! ஹா ஹா! :)
@ தா தலைவி அக்கா - அதேதான் அக்கா
@ சுந்தரபாண்டியபுரம் அக்கா - மெயில் மயில் எல்லாம் அனுப்பி இருக்கேன் பாருங்கோ!! :)
@ துபாய் ராஜா - :)
@ ராஜி அக்கா - நன்னிஹை!!
@ லெக்ஷ்மி மாமி - நன்னா இருந்தா சந்தோஷம் தான்! :)
@ ரமணி சார் - மாமிகள் மனசு வச்சாதான் சாப்பாடே கிடைக்கும்!
@ பாங்க் மாமி - :))
@ துளசி ரீச்சர் - பெரிய ஆட்கள் வந்துருக்காங்க போலருக்கு!! :)
@ அமைதி சாரல் அக்கா - :))
@ திவாண்ணா - :))
@ கெளதமன் சார் - நன்னி (வழக்கம் போல)
@ சசி அக்கா - :))
@ தேவதை - ஆசிர்வாதத்துக்கு நன்னிஹை! :)
@ ரமா மாமி - கருங்குளம் மாமி மைக்ரோஓவன்ல பண்ணிட்டா!!! :)
@ பிரபாவதி மேடம் - நன்னிஹை!
@ நைஜீரியா மாமி - நீங்களும் நிறையா கொசு அடிச்சுண்டு இருக்கேள் போலருக்கே?? :P
@ சித்ரா அக்கா - டாங்க்ஸ் யக்காவ்!!
@ கா குயில் - ஒரு பொறாமையும் வேண்டாம். தக்குடு ஒரு வெத்துவேட்டு!! :)
@ அமுதா மேடம் - எதோ பாத்து பண்ணுங்கோ!! :)
@ வல்லிம்மா - அனுப்பிட்டா போச்சு!!
@ கோபாலன் அண்ணா - ரெண்டும் இல்லை அல்மராய் பால் :P
@ செளம்யா - :))
@ மைனர்வாள் - ஒரு பிரபல எழுத்தாளர் வாயால வாழ்த்து வாங்கர்துல சந்தோஷம் தான் :)
@ மூர்த்தி சார் - எல்லாரும் மாமி ஆத்துக்கு வந்தா அப்புறம் நான் எங்க போகர்து!! :)
@ விஜி மாமி - டாக்டர் எல்லாம் வேண்டாம் மாமி. மறுபடியும் ஒரு போஸ்ட் போட்டா சரியாயிடும்.
@ Techops மாமி - ரொம்ப சந்தோஷம் பா!! :)
“ராத்திரி எலி வந்து கடிக்கபோகர்துடா!”...
அண்ணாவுக்கு பங்கு குடுத்தா படிப்பு நன்னா வரும்...
சிவராத்ரிக்கு ‘வைக்கிங்’ முண்டா பனியன்...
Ha ha ha ha!! Good one!!
கொஞ்சம் செண்டிமெண்டு.. கொஞ்சம் சீரியஸ்.. நல்ல பிளாஷ்பேக்.. நிறைய காமெடி.. நல்ல பினிஷிங்..
KS Ravikumar படம் பாத்த மாதிரி இருக்கு!
@ vishwa - Thank you for your nice words :))
கொலு போஸ்ட்லயும் குஜராத்தி பிகரை கொண்டு வந்த பாத்தியா தக்குடு...அங்கதான் நீ நிக்கற...;))) குட்டி அம்பாள் செம கியூட்... நீ சொன்ன விளக்கம் சூப்பர்..:)
அடுத்த வருஷத்லேந்து முண்டா பனியனுக்கு அலையாதீர். சுமங்கள ஆணா லட்சணமா 9 முழ வேஷ்டிய தேத்த பாரும்.
எங்க அம்மா-கொலு லாம் அவ்வளவா போக மாட்டா... எங்க அப்பாக்கு பிடிக்கும். ஆனா அவர யாரும் கூப்ட மாட்டா! நீங்க கொடுத்த last line ஐடியா- ஜோர்! இந்த சின்ன வயசுல பாட்டு பாடின comedy செம்ம செம்ம! கண்ணுலேர்ந்து தண்ணி வந்துடுத்து- சிரிச்சு சிரிச்சு! அண்ணா-க்கு பங்கு கொடுத்தா படிப்பு வரும்-நு நீங்க ஏமாந்தா மாதிரி- நானும் சின்ன வயசில ஏமாந்திருக்கேன்.. அத பத்தி ஒரு post ல எழுதறேன்! :) ஒரே nostalgia ... ultimate boss!!
குறும்புக்காரகுப்புசாமியே எங்க நான் நாலுநாள்முன்னாடி அளிச்ச பின்னூட்டம்? சுண்டலா நினச்சி அதை ஸ்வாகா பண்ணிட்டியா?:)
போகிறது திரும்பி விரல் வலிக்க டைப்பண்றேன் நேர்லபாக்றப்போ இதுக்காக விரலுக்கு வைரமோதிரம் அளித்து பிராயச்சித்தம் செய்துக்கோ என்ன?:)
//தக்குடுவுக்கு ஒன்பது நாளும் ராத்திரி சுண்டல் & ஆஹாரம். இவாத்து ஜோசியரும் எதாவது 'அப்பிராணி' பண்டாரத்துக்கு ஆஹாரம் போடச் சொல்லியிருப்பாரோ?னு கொஞ்சம் சம்சியம் தான். நடுல ஒரு வெள்ளிக்கிழமை 10 - 15 பேரை கூப்பிட்டு அவாளுக்கும் மம்மு போட்டதுக்கு அப்புறம் தான் சந்தேகம் தெளிஞ்சது. வந்த மாமிகள்ல இரண்டு மூனு பேர் கல்யாண ஆத்து கட்டுசாதகூடை மாதிரி டப்பால வேற கட்டி எடுத்துண்டு போயிட்டா. ஒரு கரண்டி மம்மு போட்டாலே அவா தாயாருக்கு சமானம்!னு சாஸ்திரத்துல இருக்கு. ////
சரியான வாலுத்தனம் ஒவ்வொரு வரிலயும்.
//சிவராத்ரிக்கு ஏன் மாமாக்கள் யாரும் ‘வைக்கிங்’ முண்டா பனியன், வார்வச்ச டிராயர், வேஷ்டி எல்லாம் குடுக்கமாட்டேங்கரா??னு சமுதாய அக்கறையோட பலதடவை நானும் எங்க அண்ணாவும் பேசிண்டதுண்டு////
யாருக்கு வேணாலும் கொடுக்கலாம் உங்கரெண்டுபேருக்கும் கொடுத்தா அதுக்கும் இப்படி ஏதாவது ஏடாகூடப்பதிவுபோட்டு மானத்தை வாங்குவீங்கப்பா:) நகைச்சுவையா எழுதறதுல எங்க தக்குடு கடுகு(பெரிய நகைச்சுவை எழுத்தாளர் கடுகு தெரியுமோல்லியோ?)
தீபாவளிக்கு பட்டாசே வேண்டாம் தக்குடு இதப்படிச்சாலே வெடிச்சிரிப்புதான்:)
@ இட்லி மாமி - குஜ்ஜு பிகர் முந்திரி பருப்பு மாதிரி அதை கொண்டு வந்தாதான் அல்வா சோபிக்கும்! :)
@ தோஹா அன்பன் - லீவுக்கு ஆத்துக்காரி குழந்தையை பாக்கர்துக்கு போனா அந்த காரியத்தை மட்டும் பார்க்கனும்! :P
@ மாதங்கி - ரொம்ப சந்தோஷம் பா! உங்களோட பதிவை படிக்க ஆவலுடன் வெயிடிங்கு!
@ ஷைலஜாக்கா - பலதுறைகள் பத்தியும் எழுதும் உங்களை மாதிரி ஒரு படைப்பாளிக்கு என்னோட போஸ்ட் பிடிச்சுருக்கர்துல ரொம்ப சந்தோஷம் அக்கா! :)
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Yet again, a nice post thakkudu. Nee ponnungala pathi yezhuthaatha post yethavathu unnoda indha blog le irukaanu paathen.... en kannuku yetuna varaikum kaanum :p
இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்
//Gopikaa Ramanan said...
Yet again, a nice post thakkudu. Nee ponnungala pathi yezhuthaatha post yethavathu unnoda indha blog le irukaanu paathen.... en kannuku yetuna varaikum kaanum :p//
Well said your honour... கவர்மண்ட் கூட பொண்ணுங்களுக்கு 33% தான் இட ஒதுக்கீடு பண்ணி இருக்காங்க...ஆனா நம்ம தக்குடு ஒரு ஒரு போஸ்ட்லயும் 99% இட ஒதுக்கீடு செய்யறவர்... எனவே அதற்கான அங்கீகாரமாய் ஒரு முப்பெரும் விழாவாக நடத்தி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்க வேண்டுமென இந்த சபையை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்... I rest my case your honour..:))))
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
மஞ்சுபாஷிணி
அபாரம்.வரிக்கு வரி சிரிக்கணும்னா உங்க வலைப்பூதான்.குட்டிப் பொண்ணு படத்தப் பாத்ததும் மனசுல தோணுன விஷயங்கள அப்புறம் உங்க எழுத்துலயும் படிச்சேன்.ஆழமும் தெரி(றிக்)கிறது எழுத்தில், மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களும்!
நகைச்சுவை எல்லோருக்கும் வாயப்பதில்லை. அது வரம் கிடைத்த மாதிரி. உங்கள் ஒட்டகப் பராமரிப்பு பற்றிய செய்திகளை எழுதுங்களேன். ரசிக்கலாம்.
அருமையான நகைச்சுவைப் பதிவு.
இப்போது தான் உங்கள் பதிவை முதல் முறையாக படிக்கிறேன்.
மற்ற முந்தைய பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
மிகவும் ரசித்தேன்.. :)))
உங்க கடைசி வரிக் குறும்பை ரசித்தேன்
இன்னிக்குத்தான் இதைப் பார்த்தேன்...கலக்கறேள் தக்குடு சார்...:-)
Really enjoyed reading this post.. loved this line
/அமைச்ச ‘வால்லில்லா வானரப்படை’யான நம்ப ‘வால்’குடிக்கு நடுல ஒரு ‘லால்குடியா’னு ஷாக் ஆயிட்டோம்/
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)