Thursday, July 14, 2011

கண்டக்டர்


வரலெக்ஷ்மி பூஜை ஸ்பெஷல் போஸ்ட் சுந்தரி உம்மாச்சி ப்ளாக்ல படிக்க தவறாதீகள்!!


Part 1 Part 2

பெண்களூர்ல நாங்க தங்கி இருந்த வீட்டை சுத்தி நாலு நாலு சப்பாத்தி பிகர்களா சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தா. அதுவும் இல்லைனா 10 - 12 பிகர்களை உள்ளடக்கிய பேயிங் கெஸ்ட்டா இருக்கும். பொறாமை பிடிச்ச சில பேர் நாங்க தான் இதுக்கு நடுல தங்கினோம்னு மாத்தியும் சொல்லர்து உண்டு. எங்களோடுது வீடுனு சொல்லர்தை விட மொட்டை மாடில வடிவமைக்கப்பட்ட அழகான கிளி கூண்டுனு சொல்லலாம். வீட்டோட சொந்தக்காரர் ரெட்டிகாரு! ஒன்னாம் தேதிலேந்து அஞ்சாம் தேதிக்கு உள்ள ஏழுகுண்டலவாடுவை பாத்துட்டு வந்து நமக்கு லட்டு ப்ரசாதமும் தருவார். திருப்பதில கோஷம் போடற மாதியே எங்களையும் பக்திபரவசத்தோட கூப்பிடுவார். எங்க அண்ணா பேரையும் என் பேரையும் முழுசா கூப்பிடர்துல அவருக்கு சொல்லமுடியாத ஆனந்தம்.

அதுக்காக வாடைகையை கம்மி பண்ணிடலை, எப்போதும் எங்க அண்ணாவுக்கு விண்டு குடுக்கும் லட்டுல கூட கொஞ்சம் லட்டு கிட்டித்து அவ்வளவுதான்!. ரெட்டி எப்போதுமே துட்டு விஷயத்துல ரொம்ப கெட்டி. வாரக் கடைசில எங்களுக்கு ஒரே போக்கிடம் பக்கத்துல இருந்த போஃரம் மால் தான். போகும் போது நிச்சயமா எங்க அண்ணா நடத்தி தான் கூட்டிண்டு போவான். திரும்பி வரும் போது சில சமயம் நல்ல மனசு இருந்தா பஸ்ல ஏறுவான். ஆனா அந்த ஊர்ல நடந்து போகர்தும் ஒரு தனி சுகம் தான் தெரியுமோ! அந்த ஊர்ல தொடர்ந்து பத்து நிமிஷம் நடந்தேள்னா நிச்சயமா ஒரு பார்க் வந்துடும். எங்க ஆத்துலேந்து நாங்க நடந்து போகும் முப்பது நிமிஷத்துக்குள்ள இரண்டு பார்க் வரும்னா பாருங்கோளேன். ‘மாப்ளே! மாப்ளே!’னு இரண்டு பேரும் மாறி மாறி பேசிண்டே நடந்துடுவோம்.

அவா ஊர்ல சாயங்கால சமயம் நாம மணி பாக்கர்துக்கு கடிகாரத்தை பாக்கனுங்கர அவசியமே இல்லை. பார்க்ல இருக்கரவா உக்காசுண்டு இருக்கும் பொஷிஷனை வெச்சே கண்டு பிடிச்சுடலாம். ரோட்லேந்து பாத்தேள்னா பார்க்ல இருக்கும் சிமெண்ட் சார்ல ஜோடிகள் கலகலனு சிரிச்சு பேசிண்டு இருந்தா அஞ்சரை மணினு அர்த்தம். ஆறு மணினா பையன் பொண்ணோட கையை புடுச்சுண்டு ஜோசியம் சொல்லிண்டு இருப்பான். ஒருத்தர் மடில ஒருத்தர் தலை வெச்சு தாசுண்டாச்சுன்னா ஆறறை மணி ஆயாச்சுனு அர்த்தம். ‘அதுக்கப்புறம்! அதுக்கப்புறம்!’னு ஏழு மணியை பாக்கர்த்துக்கு எல்லாரும் நாக்கை சப்பு கொட்டாதீங்கோ! ஏன்னா ஏழு மணிக்கு அந்த ஜோடி கிளம்பி போய் அடுத்த ஜோடி வந்துடும். "ஹே தக்குடு! இதை எல்லாம் எதுக்கு நீ பாத்துண்டு இருந்தாய்?"னு சிரிக்காதீங்கோ! எதிர்காலத்துல பொதுஅறிவு சம்பந்தமா எழுதனுமேங்கர கடமை உணர்ச்சிதான் காரணம். இதை விட சுவாரசியமான விஷயம் என்னன்னா, ஏகப்பட்ட பேர் அந்த சமயம் பார்க்ல அரை டவுசரை போட்டுண்டு கைவீச்சும் கால்வீச்சுமா வாக்கிங் பண்ணிண்டு இருப்பா. எதுவுமே நடக்காத மாதிரி வளையவரும் மத்திய மந்திரிகள் மாதிரி இதை கண்டுக்கவே மாட்டா.

மால்ல போய் நின்னுண்டு வேடிக்கை பாக்கர்து ஒரு நல்ல பொழுதுபோக்கு! அப்போ அங்க போய் ஒன்னுமே வாங்கமாட்டேளா?னு தானே கேக்கறேள்.எனக்கு வேண்டிய சாமான்செட்டு எதுவுமே அங்க கிட்டாது. நம்ப சாமான்செட்டெல்லாம் கல்லிடை காஸ்மோபொலிடன்ல மட்டும் தான் கிட்டும். பத்து ரூபா சாமானை ஐனூறு ரூபாய் குடுத்து லூசுதான் வாங்கும். ஒரு ரூபாயை ஒரு ரூபாயா பாக்கக் கூடாது, அதுக்குள்ள 20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்னு என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனும் நானும் அடிக்கடி சின்னவயசுலையே சொல்லிப்போம். சப்பாத்தி பிகர்கள் & பிகர்களோட மண்டகப்படி உபயதாரர்(அதான்பா பாய் ஃப்ரண்ட்)அடிக்கும் லூட்டி காமெடியா இருக்கும். அந்த பிகர் “ஏ சாய்யே! ஓ சாய்யே!”னு கண்ணுக்கு தெரியர எல்லா வஸ்துவையும் வாங்கி தரசொல்லும். பிகரை கூட்டிண்டு வந்த மாக்கானும் சிரிக்கர மாதிரியே முகத்தை வெச்சுண்டு மனசுக்குள் கதறி அழுதுண்டே வாங்கி குடுப்பான். சில ஜோடிகளை பாத்தாக்க பையன் நல்ல வாட்டசாட்டமா கடோத்கஜன் மாதிரி இருப்பான், ஆனா அந்த பிகர் "என்னை தூக்கி விடு! எங்க அக்காளை ஏத்தி வுடு!"னு சொல்லும்படியா இருப்பா.

அதென்னவோ இந்த பொண்கொழந்தேளுக்கு கரடி பொம்மையை பாத்தாக்க ஏன் தான் இப்படி ஒரு பைத்தியமோ. ஒருவேளை அவாளோட அப்பா மாதிரியே இருக்கர்தால இருக்குமோ? “சோஓஓஓஒ ச்வீட்ட்ட்ட்ட்ட்ட்!”னு சொல்லிண்டு அதை கட்டிபுடிக்கர அழகை பாக்கனுமே! பேசாம கரடியா பொறந்துருந்தா ஜென்ம சாபல்யம் கிடைச்சுருக்கும்!னு அதை வாங்கிகுடுக்கும் பையன்கள் பரிதாபமா முழிப்பான். கரடி வாங்கமுடியாட்டியும் ஒரு நாகுட்டி பொம்மையாவது வாங்காம விடமாட்டா. அனேகமா எல்லா பைத்தியங்களும் இப்போ குங்க் ஃபூ பாண்டா கரடி பொம்மைக்கு shift ஆகி இருக்கும்னு நினைக்கறேன்.



பர்ர்ர்ர்ர்ர்கர்....;)

அங்க வியாபாரம் பண்ணும் பர்க்கர் பிசா பக்கத்துல எல்லாம் தலை வெச்சு கூட படுக்கமாட்டோம். நாலு பன்-னை ஒன்னு மேல ஒன்னு அடுக்கி வச்சு அதை ஒரே கடில கடிக்கர்துக்கு ஒவ்வொருத்தரும் வாயை பொளப்பா பாருங்கோ!!! பகவானே! வாயா இல்லைனா கொல்லம் ரயில்ல வரும் மலை குகையா!னு நமக்கு சந்தேகமா இருக்கும். இதே மாதிரி எப்ப பாத்தாலும் வாயை பொளந்துண்டு இருந்தாக்க ராமாயணத்துல வரும் கபந்தன் மாதிரி வாய் ஆயிடாதோ?னு எங்க அண்ணா கிட்ட சந்தேகம் கேப்பேன். பர்க்கர்,பிசா எல்லாம் வெள்ளக்காராளோட தேசத்துல உள்ள சீதோஷணத்தை மனசுல வெச்சுண்டு ஸ்ருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள். நம்ப ஊர்ல அடிக்கர வெயிலுக்கும் மழைக்கும் ஏத்த மாதிரியான இட்லி தோசை தான் நமக்கு சரியா இருக்கும். ஒரு விஷயம் கவனிச்சேளோ? நம்ப ஊர்ல இருக்கும் சமத்துகள் எல்லாம் பிசா,பர்க்கருக்கு ஆளா பறக்கர்து. கனடால இருக்கர சிலபேருக்கு இட்லி மாவு பொங்கலையே!னு கவலை பிடுங்கி திண்கர்து. ஹம்ம்ம்ம்ம்ம்! என்ன பண்ணமுடியும். அவாஅவா பண்ணின கர்மா....:))



பஸ்ல வரும் பராசக்தி!!

எல்லா கூத்தையும் பாத்துட்டு மாலுக்கு போய் திரும்பி வரும் போது பஸ்ல வருவோம். இந்த ஊர்ல பொம்ணாட்டி கண்டக்டர்கள் ஜாஸ்தி. பாரதி கண்ட புதுமை பெண்களா நம்ப கண்ணுக்கு அவா தெரிவா. கூட்டமா இருந்தா தாண்டி வந்து டிக்கெட் வாங்கமாட்டானு நினைச்சா நாம தான் ஏமாறுவோம். எப்பேர்பட்ட கூட்டமா இருந்தலும் நடுல புகுந்து வந்துடுவா. மரியாதை தெரியாத மெட்ராஸ்ல இருக்கறவா பேசற மாதிரி நீ! வா! போ!னு ஒருமைல பேசினா கர்னாடகாகாரா நம்ப கடவா பல்லை பேத்துடுவா. நம்ப ஊர்ல இருக்கர மாதிரியே பொம்ணாட்டிகளுக்கு தனியா 10 சீட் உண்டு. அது போக மிச்சம் உள்ள சீட்லையும் அவா பாட்டுக்கு வந்து உக்காச்சுப்பா. உங்களுக்கு அன்னிக்கி யோகம் நன்னா இருந்தா ஆரஞ்சு கலர் டீசார்ட் போட்ட ஒரு மார்டன் டிரெஸ் மகாலெட்சுமி உங்க பக்கத்துல வந்து உக்காசுண்டு எம்.பி த்ரீ ப்ளேயர்ல அழகா தலையை ஆட்டி ஹிந்தி பாட்டு கேட்டுண்டு இருக்கும். நாம ஏவிஎம் சரவணன் அப்பச்சி மாதிரி சமத்தா கையை கட்டிண்டு உக்காசுண்டு இருக்கனும்.

கண்டக்டர்கள் அடிக்கடி ‘உளக்கடே பன்ட்ரிரி'னு சொல்லிண்டே இருப்பா. ஆரம்பத்துல அதுக்கு “பன்னி மாதிரி வழியை அடச்சுண்டு நிக்காதீங்கோ!”னு சொல்லறார்தா அடிச்சு விட்ட எங்க அண்ணாவோட கப்சாவை அப்படியே நம்பிட்டேன். கன்னடம் தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அதோட அர்த்தம் பிடிபட்டது. சேஞ்ச் கொட்ரிரீ!னு ஆம்பளை கண்டக்டர் & பொம்ணாட்டி கண்டக்டர் இரண்டு பேர்கிட்டயும் மரியாதையா நாம கேக்கலாம். முதல் தடவை நான் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கிட்ட திடீர்னு “சேஞ்ச் கொட்ரிரீ!”னு கன்னடத்துல பேசி சில்லரை வாங்கினதும் எங்க அண்ணா பயந்து போயிட்டான். அதுலேந்து என்னோட சேர்ந்து உக்காசுக்க மாட்டான். நாலு சீட்டு தள்ளியே தான் நிப்பான். என்னைக்காவது ஒரு நாள் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கையாள ‘திருசாத்து’ வாங்குவேன்னு எப்போதும் ஆவலா எதிர்பாத்துண்டு இருப்பான். பகவானோட புண்ணியத்துல கடைசி வரைக்கும் அந்த மாதிரி ஆகலை.

பெண்களூர் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதுல பல விஷயங்கள் ரயில் பெட்டியின் ஜன்னலோரத்துல எதிர்பக்கமா வேகமா ஓடும் மரங்கள் மாதிரி மறந்து போயிடர்து. ஆனா சில விஷயங்கள் மட்டும் ஜன்னலை தாண்டி முகத்துல தெளிச்ச மழைச்சாரலா நினைவுல நிக்கர்து........

நினைவுகள் உள்ள வரை கனவுகள் தொடரும்..........

33 comments:

Anonymous said...

//அதென்னவோ இந்த பொண்கொழந்தேளுக்கு கரடி பொம்மையை பாத்தாக்க ஏன் தான் இப்படி ஒரு பைத்தியமோ. //
I hate such girls.

Unknown said...

20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்னு என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனும் நானும் அடிக்கடி சின்னவயசுலையே சொல்லிப்போம். //

mappu neenga kanakkilla pulithan poonga..

ஸ்ரீராம். said...

கடைசி பாரா வர்ணனை ரொம்ப பிரமாதம் தக்குடு...பலப்பல வரிகள்கை படித்து சிரித்தேன். கண்டக்டரின் கன்னட பாஷை, ஃபிகருக்கு வேண்டியது வாங்கிக் கொடுக்கும் மாக்கான்... நல்ல ஃப்ளோ... நிறைய நிறைய பாராட்டுகள்.

Unknown said...

சான்சே எல்லா தக்கது
பெங்களூர் போனது இல்லை
உங்கட பதிவு பாத்து போகணும் தோன்றது
பகவான் அருள் கிடைக்கட்டும்

Unknown said...

வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதுல பல விஷயங்கள் ரயில் பெட்டியின் ஜன்னலோரத்துல எதிர்பக்கமா வேகமா ஓடும் மரங்கள் மாதிரி மறந்து போயிடர்து. ஆனா சில விஷயங்கள் மட்டும் ஜன்னலை தாண்டி முகத்துல தெளிச்ச மழைச்சாரலா நினைவுல நிக்கர்து......///

really nice thakkadu

i like the way you writting..

Unknown said...

சேஞ்ச் கொட்ரிரீ!//appdina enna artham???

Unknown said...

மீதி கொடுடி அப்படின்னு மரியாதையை இல்லாம வருமா ?

பத்மநாபன் said...

கோவையில் ங்க... ங்க... மாதிரி பெண்களூரில் ரி .ரி ரிங்காரம் ...இதுக்காகவே அடிக்கடி சேஞ்சு வாங்கியிருப்பிங்களே......
கனவுகள் தொடரட்டும் ...சில கனவுகள் சீக்கிரம் நனவாகட்டும் .....

கௌதமன் said...

//இதை விட சுவாரசியமான விஷயம் என்னன்னா, ஏகப்பட்ட பேர் அந்த சமயம் பார்க்ல அரை டவுசரை போட்டுண்டு கைவீச்சும் கால்வீச்சுமா வாக்கிங் பண்ணிண்டு இருப்பா. எதுவுமே நடக்காத மாதிரி வளையவரும் மத்திய மந்திரிகள் மாதிரி இதை கண்டுக்கவே மாட்டா.//

இந்த இடத்தில் புன்னகை, பெரு நகை ஆயிற்று.

RAMA RAVI (RAMVI) said...

ஆமாம் தக்குடு கர்னாடகா மக்கள் அவர்களும் மரியதை கொடுப்பார்கள், நம்மிடமும் மரியாதை எதிர்பார்ப்பார்கள்..
அது சரி இப்படி பார்க்ல உட்கர்ந்துண்டு இருக்கற ஜோடிய எல்லாம் வேடிக்கை பர்த்ததாலதானோ என்னமோ இப்ப வேடிக்கையே பார்க்க முடியாத ஊருல இருக்க>????

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன்.... தொடரட்டும் பெண்களூர் நினைவுகள்.... :)

Angel said...

//நினைவுகள் உள்ள வரை கனவுகள் தொடரும்......//தொடரட்டும் !!!.
(இப்ப லேட்டஸ்ட் toys .. Taaty bear ,me to you bear then Meerkats )
.

RVS said...

அந்த லாஸ்ட் பாரா டச் நச்சுன்னு இருந்தது. தக்குடு ஒரு கர்சீப் கொடுக்கட்டா! என்னதுக்கா... தாவங்கட்டை ப்ரதேசத்தை துடச்சுக்க...

இதெல்லாம் பர்மணெண்ட்டா இங்கதான் இருக்கும்.. ஞாபகம் இருக்கட்டும். ஜாக்கிரதை!

Shobha said...

Suthi suthi annavum thambiyuma Bangalore la irukkara Chapathi figuregalaye sutheerukkeenga nnu nallave puriyuthu.
Shobha

Vasagan said...

\பொறாமை பிடிச்ச சில பேர் நாங்க தான் இதுக்கு நடுல தங்கினோம்னு மாத்தியும் சொல்லர்து உண்டு.\

Nampittaen

\எதிர்காலத்துல பொதுஅறிவு சம்பந்தமா எழுதனுமேங்கர கடமை உணர்ச்சிதான் காரணம்\

Ivalalu detailla kavanichikirae un kadamai unarchiyai evalaparatunaalum thakkum.

Valakam pol sol pirayokam kalakkal.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//‘மாப்ளே! மாப்ளே!’னு இரண்டு பேரும் மாறி மாறி பேசிண்டே நடந்துடுவோம்//
அண்ணனும் தம்பியும் மாப்ளே மாப்ளே பேசிப்பேளா...என்ன கொடும சார் இது...:))

//மால்ல போய் நின்னுண்டு வேடிக்கை பாக்கர்து ஒரு நல்ல பொழுதுபோக்கு//
சைட் அடிக்கறதுக்கு இப்படி ஒரு பேர் பேரு இருக்கா... சரி சரி..:)

//ஒருவேளை அவாளோட அப்பா மாதிரியே இருக்கர்தால இருக்குமோ//
நோ கமெண்ட்ஸ்...சொல்ல வேண்டியவா சொல்லுவா...:)

//கனடால இருக்கர சிலபேருக்கு இட்லி மாவு பொங்கலையே!னு கவலை பிடுங்கி திண்கர்து//
அவ்வ்வவ்வ்வ்....

//மரியாதை தெரியாத மெட்ராஸ்ல இருக்கறவா//
அட வம்பே... ஏன்? உனக்கு இருக்கு ஆப்பு..:)

நான் இது வரைக்கும் பெங்களூர் போனதில்ல... இனி போனா இதெல்லாம் நியாபகம் வந்து தனியா சிரிச்சு லூசு பட்டம் வாங்க போறேன்னு நினைக்கிறேன்...அப்ளாஸ் போஸ்ட்...:)

கடம்பவன குயில் said...

கண்டக்டர் நன்னாத்தான் இருக்கிறார்.

//ஒரு ரூபாயை ஒரு ரூபாயா பாக்கக் கூடாது, அதுக்குள்ள 20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்னு என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனும் நானும் அடிக்கடி சின்னவயசுலையே சொல்லிப்போம்//

ஆனாலும் பாவம் அம்பி ஒன் ஆத்துக்காரி. ஆனாலும் ரொம்ப சிக்கனமா இருப்பேள் போலயே.உங்க பாச்சா எல்லாம் ஆம்படையாளிடம் பலிக்காது தக்குடு.

Anonymous said...

mmmm.Bangalorela ivvalavu vishayam irukkaa.

karadi bommai vaangi kodukariyaa illaiyaannu paarkkaren. athenna appaaviyaiyum vidaama kadi'' kodukkirathu) puriyalaiye!!!!
vallima

SRINIVAS GOPALAN said...

சின்ன குழந்தைனு உன்னைச் சொல்லிகிறாய் - அந்த குழந்தை பெங்களூருல பண்ணின வேலைய பாரு.
எனக்கு ஒரு பழமொழி தான் ஞாபகம் வரது - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
நீ தோஹாக்கு ஒட்டகம் மேய்க்கப் போய் பார்க்கே இல்லாம கஷ்டப்படரதுல கொஞ்சம் விளைஞ்சது. மிச்சம் மீதி டிசம்பர்க்கு அப்புறம் தை மாசம் விளைஞ்சுடும் :)

Matangi Mawley said...

"ரெட்டி எப்போதுமே துட்டு விஷயத்துல ரொம்ப கெட்டி."--- ROFL !!! :D
அது கடக்கட்டும்... இந்த இடத்துல இந்த விஷயத்த நான் சொல்லியே ஆகணும்...

உங்களுக்கு RVS sir கொடுத்திருக்கற "கல்லிடையின் காதல் நாயகன்"- அப்டீங்கற பட்டத்துக்காக- ப்ரத்யேகமான வாழ்த்துக்கள்! ;)

"ஒரு ரூபாயை ஒரு ரூபாயா பாக்கக் கூடாது, அதுக்குள்ள 20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்..."-- ஆஹா! ஆஹா! என்ன ஒரு mathematical brain boss உங்களுக்கு!! ச! chance ஏ இல்ல!!

கடேசி paragraph excellent! ரொம்ப ரொம்ப அழகா.. ஆ.. ஆ இருக்கு!
ஆச்சு December நெருங்க நெருங்க இன்னும் என்னல்லாம் hidden talent உங்களுக்குள்ளேர்ந்து வெளி வரப்போறதோ!! :P

RVS said...

அது என்ன Decemberருக்கு அப்புறம்? எனக்கு ரொம்ப ஆவலா இருக்கு....

மாதங்கி... நா பட்டம் குடுத்ததை BOSS ப்ரூவ் பண்றாராம்!!! ;-))

Madhuram said...

//சப்பாத்தி பிகர்கள் & பிகர்களோட மண்டகப்படி உபயதாரர்(அதான்பா பாய் ஃப்ரண்ட்)அடிக்கும் லூட்டி காமெடியா இருக்கும்.//

Indha line about boy friend cracked me up.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெண்களூர் நினைவுகள் அருமை. பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Kavinaya said...

நல்லா சிரிச்சேன் தக்குடு :) நன்றி.

//அதுல பல விஷயங்கள் ரயில் பெட்டியின் ஜன்னலோரத்துல எதிர்பக்கமா வேகமா ஓடும் மரங்கள் மாதிரி மறந்து போயிடர்து. ஆனா சில விஷயங்கள் மட்டும் ஜன்னலை தாண்டி முகத்துல தெளிச்ச மழைச்சாரலா நினைவுல நிக்கர்து........//

கவுஜ... கவுஜ... :)

இராஜராஜேஸ்வரி said...

நினைவுகளும் கனவுகளுமாக ஓடிய கவிதைப் படைப்பு...

சிவகுமாரன் said...

//பத்து ரூபா சாமானை ஐனூறு ரூபாய் குடுத்து லூசுதான் வாங்கும். ஒரு ரூபாயை ஒரு ரூபாயா பாக்கக் கூடாது, அதுக்குள்ள 20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்///

-- தககுடு பொழக்கத் தெரிஞ்ச பிள்ளை.

Anonymous said...

your post rekindled my memory about banglore. i was there for twelve years and keep going there even now. the sad part is it is spolt forever in the name of development.you dont get tired when u take a walk even it is 2km.now there is hardly any place is left for pedestrians.hmmm. the best part i enjoyed was avm saravanan s example....lol nice post. sasisuga203

R. Ramesh said...

nanri anne:)

sury siva said...

//மரங்கள் மாதிரி மறந்து போயிடர்து. //

உம்மாச்சி அப்படின்னு ஸத் விஷ்யத்துலே ஒரு சீரியல் ஆரம்பிச்சேளே !! அதை கன்டின்யூ பண்ணனுமே அப்படின்னு நினைக்க மறந்து போனதையும் சேத்து சொல்லுங்கோ !!


சுப்பு ரத்தினம்.

vidhas said...

EPPADI THAKKUDU!! CHAPPATHI FIGURE RUM AVALODA MANDAGAPADI UPAYATHARARUM LOL :-)

BANGALORE LLA PANNA LOLLUKKU THAAN DOHA LA PARKE ILLAMA ERUKKE:-)

தக்குடு said...

@ சுனாமி - :))

@ சிவா- கட்டாயம் போயிட்டு வாப்பா!! :)

@ sriram அண்ணா - நன்னிஹை!! :)

@ பத்துஜி - கரெக்டா சொன்னேள் அண்ணா! :)

@ கெளதமன் சார் - :))

@ ரமா மாமி - அதே அதே

@ வெங்கட் அண்ணா - சரிங்க சார் :)

@ தேவதை - :))

@ மைனர்வாள் - இதுக்கெல்லாம் பயந்தா பொதுவாழ்க்கைகு வரமுடியுமா?? :ப்

@ ஷோபா மாமி - :))

@ வாசகன் மாமா - ரொம்ப சந்தோஷம் :))

தக்குடு said...

@ இட்லி மாமி - பாயிண்ட் பாயிண்டா படிச்சு ரசிச்சதுக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா!! :))

@ க.குயில் - :)) ஜாடிக்கேத்த மூடியாதான் புடிப்போம்!!

@ வல்லிம்மா - சுவிஸ்லேந்து கமண்ட் போட்ட வல்லிம்மாவுக்கு ஒரு சோடா சொல்லுங்கோ! :)

@ கோபாலன் அண்ணா - உங்க வாயால சாபம் தராதீங்கோ! :)

@ மாதங்கி - டிசம்பர் வரைக்கும் தான். அப்புறம் கப்சிப்னு ஆயிடுவேன் :)

@ மதுரம் அக்கா - :))

@ வை கோ சார் - நன்னி சார் :)

@ கவினயா அக்கா - :))

@ ராஜி மேடம் - :))

@ குமரன் - வாங்க புலவரே!!

@ சசி அக்கா - அங்க இருந்தவாளுக்கு தான் அதோட அருமை புரியும் அக்கா!! :))

@ ரமேஷ் அண்ணா - :))

@ சூரி மாமா - போஸ்ட் போட்டாச்சே!!

@ வித்யா அக்கா - :))

மோகன்ஜி said...

கடைசி பாராவில் கலக்கிட்டேள். வானவில்லுக்கு வந்தா 'ஜானு'வைப் பார்க்கலாம்

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)