லோகத்துல நல்லதுக்கே காலம் இல்லை கேட்டேளா? நாம பாட்டுக்கு பாணிபூரி,குலோப்ஜாமூன் அப்பிடின்னு எல்லா மனுஷாளுக்கும் பிரயோஜப்படும் படியான விஷயங்களை சொல்லிண்டு "சிவ சிவா ராம ராமா!"னு யார் வம்புக்கும் போகாம காலத்தை ஓட்டினாலும் தக்குடு வாயை பிடுங்கர்தே குறி!னு இருக்கரவாளை என்னனு சொல்லமுடியும்!! அவாளை சொல்லியும் குத்தம் இல்லை. எப்ப பாத்தாலும் பருப்பு கஞ்சியையும் சுட்ட அப்பளாமுமே சாப்டுண்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் ' நறுக்கு'னு காரம் சாரம் எல்லாம் வேண்டிதான் இருக்கு.
பல மாசமாவே "சமைத்துப் பார்", "சாப்பிட்டும் பார்", So & So அடுக்களை,Mrs. மடப்பள்ளி இந்த மாதிரி எந்த ப்ளாக் பக்கமும் தலை வெச்சே படுக்கர்து கிடையாது. So & So எதுக்கு போட்டு இருக்கை?னு யாரும் கேக்காதீங்கோ! நாம அஹஸ்மார்த்தா எதாவது பேர் போட்டா கூட அந்த பேர்ல ஒரு சமையல் ப்ளாக் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த ‘பாங்க்’ மாமி, ‘நைஜீரியா’ மாமி எல்லாரோட வாய்க்கும் நாம தான் அவல்.
சமையல் ப்ளாக் எழுதரவாளோட முக்கியமான பிரச்சனையே அவாளோட பதிவுக்கு போடும் போட்டோ தான். எல்லாரோட ஆத்துக்காரரும் பானோசானிக் / சோனி எல்லாம் வாங்கி தரமாட்டா, அதனால அங்க இங்கேர்ந்துதான் போட்டோவை ஆட்டையை போட்டு போஸ்ட் போட வேண்டி இருக்கு. இதுல சிலபல பஞ்சாயத்து எல்லாம் வந்துடர்து. பஞ்சாயத்துகளை தவிர்க்க சில யோசனைகளை பார்கலாம்.
‘தேங்காய் சாதம்’னு போஸ்ட் போடும் போது தேங்காயோட படம் எல்லாரும் போடத்தான் செய்வா, அதுக்காக “இந்த தேங்காயோட படம் என்னோட ப்ளாக்ல நான் போட்டது!”னு குழந்தையாட்டமா குத்தம் சொல்லகூடாது. போஸ்ட் போடறவாளும் கூகுளாண்டவர் கிட்ட ‘தேங்காய்’னு சர்ச்ச் குடுத்தாக்க பொள்ளாச்சில விளைஞ்ச தேங்காய்ல தொடங்கி பிலிபைன்ஸ்ல மூக்கு சப்பையா இருக்கும் ஒரு மாமா கைல வச்சுண்டு இருக்கும் தேங்காய் வரைக்கும் குடுக்கர்து. சமயத்துல பிள்ளையார் கோவில் வாசல்ல உடைச்ச சிதறு தேங்காய் படம் கூட வருது! அதுல எதாவது ஒன்னை எடுத்து போட்டுக்கோங்கோ!
இந்த டம்பளர் வசந்தபவனில் ஆட்டய போட்டது'னு பேர் எழுதி வெச்ச மாதிரி இருக்கும் போட்டோலையும் கை வைக்காம இருங்கோ. இதுல என்ன காமெடின்னா ஆத்து மனுஷாளை போட்டோ எடுத்து மூஞ்சி புஸ்தகத்துல போட்டாலும் சிலபேரோட போட்டோல "J@#i’s கிச்சன்" வாட்டர்மார்க் இல்லாம இருக்காது. “இந்த அக்கா எதுக்கு எல்லா போட்டோவையும் அடுக்களைல வெச்சே எடுத்துண்டு இருக்கா?”னு ரொம்ப நாளைக்கு புரியாம முழிச்சுண்டு இருந்தேன்.
பதார்தத்துக்கு பேர் குடுக்கும் போதும் எதாவது வித்தியாச குடுத்தாக்க பிரச்சனை வராது. பிள்ளையார் கோவில் விஷேஷத்துல ராத்ரி நோட்டீஸ் போர்டுல அதிகாலை "கஜ கிண்டி ஹோமம்"னு எழுதி வெச்சுட்டோம். காத்தால 5 மணிக்கு கோவில் வாசல்ல வழக்கம் போல ஒரே மடிசார் & பஞ்சகச்ச கூட்டம். கணபதி ஹோமம்தான் நடந்துண்டு இருந்தது. கணபதி ஹோமத்துக்கு யானை எல்லாம் வந்து இருந்தது. கூட்டத்துல இருந்த ஒரு மாமி மெதுவா “கஜகிண்டி ஹோமம்னு போட்ருக்கேளே?”னு இழுக்கவும், “ஆந்திரால எல்லாம் கணபதி ஹோமத்தை இப்படி தான் சொல்லுவா!”னு முகத்தை பாவமா வெச்சுண்டு சொன்ன போது கொஞ்சமா நம்பினாலும் அதுக்கு அப்புறம் கொஞ்சூண்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு ‘போஸ்டாபிஸ்’ ஹரிகுட்டி காரியத்தையே கெடுத்துட்டான்.
பிலிப்ஸ் ரேடியோல திருனெல்வேலி ஸ்டேஷன்லேந்து அவசரமா இலங்கை ஸ்டேஷன் திருப்பின மாதிரி செல்லமா மன்னி நம்ப காதை முறுக்கிட்டா. ரெண்டு நாளைக்கு காது மடல்ல செம வலி. நிற்க! நீங்களும். இந்த மாதிரி ‘பிசிபேளாபாத்’ பத்தின போஸ்ட் போட்டாலும் ‘பகாளாபாத்'னு தலைப்பு குடுத்தாக்க கொஞ்சம் வித்தியாசமா இருக்குமோ இல்லையோ? அதுக்கு அப்புறம் கூகுள்ல ‘பகாளாபாத்’னு யாராவது தேடினா கூட நம்பளோடுது தான் முதல்ல வந்து நிக்கும். எதிகாலத்துல ‘பகாளாபாத்’னு போஸ்ட் போடும்போது பெயர் உபயம் தக்குடு!னு போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை..:)
Mr. கஜராஜன்
எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா இந்த மாதிரி எந்த பொல்லாப்புலையும் மாட்டிக்கவே மாட்டா. “கார்திகை பொரிக்கு பாகு செலுத்துவது எப்பிடி”, “பிள்ளையார் கொழுக்கட்டைக்கும் பிடிச்ச கொழுக்கட்டைக்கும் என்ன வித்தியாசம்?” இந்த மாதிரி பதிவா போட்டு எல்லாருக்கும் ப்ரண்ட் ஆயிட்டாங்க. நோம்பு அடையை பத்தி சொல்லவே இல்லையே?னு யாரும் கேக்காதீங்கோ!..:)) சிங்கபூர்ல இருக்கும் இந்த ‘நோம்பு அடை’ அக்காவோட வீடு ‘சரவணபவன்’ ஹோட்டல் மாதிரி எப்ப பாத்தாலும் விருந்தாளிகளால ரொம்பி வழியர்தா அங்க உள்ள லோக்கல் நியூஸ் பேப்பர்ல வந்து இருக்கு. இப்ப எல்லாம் சிங்கபூருக்கு போறவா அந்த ஊர்ல இருக்கும் சிங்கத்துக்கு பக்கத்துல நின்னுண்டு போட்டோ எடுக்கராளோ இல்லையோ நேரா இவாத்து காலிங் பெல்லை அடிச்சு ஒரு வேளை சாப்பாடாவது இவாத்துல சாப்பிடாம வரர்து கிடையாது. யாராவது கெஸ்ட் வரர்தை பாத்தாலே இவாளோட ரங்கமணி(அதான் நம்ப அத்திம்பேர்) "மேடத்துக்கு ஒரு ரவாஆஆஆ தோசை"னு ராகமா சொல்லி நக்கல் சிரிப்பு சிரிச்சுட்டு போறாராம்.
இன்னொரு அக்காவோட பானகம் போஸ்டை பத்தி ஒன்னுமே சொல்லலையே தக்குடு?னு ‘பாங்க்’ மாமி வம்புக்கு இழுத்தாலும் நான் எதுவும் வாயை திறக்க மாட்டேன்பா! பானகம் போஸ்டை எல்லாம் நக்கல் அடிச்சாக்க ராமர் உம்மாச்சி ராத்ரி ஸ்வப்னதுல வந்து கண்ணை குத்துவார்! அவாளோட ப்ளாக்ல அனேகமா கோகுலாஷ்டமிக்கு 'சுக்கும் சக்கரை' போஸ்ட் வந்தாலும் வரலாம், வந்தாக்க ஒரு வார்தை எனக்கும் சொல்லுங்கோ!..:)
குறிப்பு - இந்த போஸ்ட் சும்மா 'லூலூவாயிக்கு'தான். அதனால பத்தினி தெய்வங்கள் யாரும் தக்குடுவை திட்டி தீர்க்காதீங்கோ! அப்பிடியே திட்டினாலும் சம்பந்தப்பட்டவா மட்டும் திட்டுங்கோ,”ஒரு பிள்ளைபூச்சி சிக்கியிருக்கான் சும்மா இருந்தா வாடி!”னு அடிக்கர்துக்கு உங்க ப்ரண்டையும் போன் போட்டு கூட்டிண்டு வராதீங்கோ!...:) எல்லாரோட அர்சனையையும் நைஜீரியா மாமிக்கு அனுப்பி வைங்கோ!...:)
27 comments:
ஆஹா சமையல் பண்றவங்க கிட்ட வம்பு - இப்ப - வைச்சுக்காத தக்குடு காலம் களி காலம் :)
நாள பின்னே கடமை நம்மை அழைக்கும்போது நாம் அழைக்கப்போவது இது போன்ற சமையல் எக்ஸ்பெர்ட்ஸைத்தான்! #அவ்வ்வ்வ்வ்
neenga freeya iruntha vaadi nu solrela illa Priya iruntha vaadi nu solrela??? Yaar antha priya thuppu tholaka venumna oru post podalaama?? :P
போட்டுருக்கற எல்லா போஸ்டும் எனக்கு புதுசு. அது சரி, ஏம்பா லேடீச வம்புக்கு இழுக்கறே? பெண் பாவம் பொல்லாதது.
//ஒரு பிள்ளைபூச்சி சிக்கியிருக்கான் ப்ரீயா இருந்தா வாடி!”னு அடிக்கர்துக்கு உங்க ப்ரண்டையும் போன் போட்டு கூட்டிண்டு வராதீங்கோ!...:)//
Over ma!
Ha ha ha. //ப்ரீயா இருந்தா வாடி!”// Priyakka?
கஜகிண்டி ஹோமம்… நல்ல நகைச்சுவை.
சமையல் பற்றியெல்லாம் கிண்டல் பண்ணாதீங்க தக்குடு… அப்புறம் போஜனம் கிடைக்காது தெரியுமோ…..
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது... போஜனம் பண்றதை பத்தி எழுதரவாளை கிண்டல் பண்ணினா இட்லி கூட கிடைக்காது, சொல்லிட்டேன்...:)))
//ஒரு பிள்ளைபூச்சி சிக்கியிருக்கான் ப்ரீயா இருந்தா வாடி!”னு அடிக்கர்துக்கு உங்க ப்ரண்டையும் போன் போட்டு கூட்டிண்டு வராதீங்கோ!...:)//
haha :) :)
ஆமா ஆயிலு... நாளை பின்னே வெறுமே களி மட்டும் தான் கிண்டி கொடுப்பாங்க...
AT - இட்லி இல்லாட்டி நல்லதா முறுகலா நெய் தோசை சுட்டு கொடுக்க மாட்டீங்களா என்ன?
தக்குடு கண்ணா - என்ன "ரமா ரமா"வா? அது யாரு புதுசா?
//பானகம் போஸ்டை எல்லாம் நக்கல் அடிச்சாக்க ராமர் உம்மாச்சி ராத்ரி ஸ்வப்னதுல வந்து கண்ணை குத்துவார்!//
ராமர் வந்து கண்ணை குத்துவாரா? இல்லாட்டி அந்த அக்காவோட தங்கமணி வந்து கண்ணை குத்துவாரா?
//பல மாசமாவே "சமைத்துப் பார்", "சாப்பிட்டும் பார்", So & So அடுக்களை,Mrs. மடப்பள்ளி இந்த மாதிரி எந்த ப்ளாக் பக்கமும் தலை வெச்சே படுக்கர்து கிடையாது.//
கூடிய சீக்கிரமே இந்த மாதிரி ப்ளாக் மட்டுமே படிக்க வரப்ராப்தி ரஸ்து...
தக்குடு, துர்வாசர் ஸ்டைல்-ல பிடி சாபம்! உனக்கு வரப்போற figure எங்களோட ப்ளாக் பார்த்துத்தான் தினம் உனக்கு வடிச்சு கொட்ட போறா ! நீயும் என்கிட்டே 'facebook -ல' சொல்லி அழப்போறே!
@ லதா மாமி - ப்ளேட்டை மாத்தாதீங்கோ! நீங்க தானே எழுத சொன்னேள்!..;PPP
Thakkudu samaiyal padikka aarambicchaacchu:)
vitha vithamaa decembarukku appuram samikkanume.!!!
Thakkudu ppaiya,summaa
sollakkoodaathu.
Nallaave ezhuthare:)
Valliyasimhan amma comment-uku "double like"! :P ;)
namakko already nakku konjam neelam (naan saappatta paththi mattum thaan inga sonnen... neenga aethaavathu karpana pannindaa naan poruppu kidayaathu...)... paarungo-- ungalukku 'idli' kooda kittaathu-nnu sollitaanga, AT! thevayaa??
aetho... rangan chiththam! paaththukongo boss! :)
Oh Thakkudu - getting married in Thai maasam. Sollave illai
ஆஹா.. நான் என்னோட தலைப்பொங்கல் சமைச்ச போஸ்டை படிக்கலியான்னு கேட்க வந்தா இங்க கமெண்ட்ல பெரிய மேட்டர் இருக்கே.. என்ன தக்குடு, பூசணிக்காயை சரியா மறைச்சு வெக்கறது இல்லையா? :P அம்பி மாதிரியே பூரிக்கட்டையும் டையாப்பருமா நீடுழி வாழ வாழத்த வயதில்லை வணங்குகிறேன்.
ippo food ai patri post potadan nokkam ennavo?
//தக்குடு, துர்வாசர் ஸ்டைல்-ல பிடி சாபம்! உனக்கு வரப்போற figure எங்களோட ப்ளாக் பார்த்துத்தான் தினம் உனக்கு வடிச்சு கொட்ட போறா ! நீயும் என்கிட்டே 'facebook -ல' சொல்லி அழப்போறே!//
லதா ஆனாலும் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. நான் என்ன நினைச்சேன் தெரியுமா? கல்யாணத்துக்கு அப்பறம் வீட்டுல நளபாகம் தான். நம்மள தான் கிண்டல் அடிக்கறது எல்லாம். வீட்டுல பாருங்க எப்படி எஸ் மேடம் போடா போறாருன்னு.
ஏதோ சமையல் ப்ளாக் இருக்கறதால உன்னாலே ஊர் வம்பை உழக்கால அளக்க முடியறது. நடத்து ராஜாங்கத்தை.
ஏம்ப்பா உனக்கு இந்த வேலை! எல்லோருமா சேர்ந்துன்டா நீ என்ன பண்ணுவே? ஆனாலும் உனக்கு தெகிரியம் ஜாஸ்த்தி! ;-))
inda mosquito tholla thanga mudiyala pa:)
பிலிப்ஸ் ரேடியோல திருனெல்வேலி ஸ்டேஷன்லேந்து அவசரமா இலங்கை ஸ்டேஷன் திருப்பின மாதிரி செல்லமா மன்னி நம்ப காதை முறுக்கிட்டா. ரெண்டு நாளைக்கு காது மடல்ல செம வலி.//
இப்ப தேவலையோ??
ellaraium intha kalaichu irukkirae, Ithukku ellam saerthu un kalayanthil vanthu ellarum unakku vattium muthula kodukkapora.
தக்குடு... உங்க சமையல் பதிவு ரொம்பவே நெடியை கிளப்பிடுத்தே.. தைமாசங்கறாளே... லீவுக்கு அப்ளை பண்ணிடவா நான்?
The way you write reminds me very much of the slang Actor Madhavan uses in the film 'nala dhamayandhi'... (udane 'naan siricha prabhu maadhiri irupen, paesuna madhavan maadhiri irupen'-nu udans ellam vitudadheenga pls... yen nenju porukadhu! kadhariduven aama!) ;) :p
@ ஆயிலு - எனக்கும் இவாளைதான் பிடிக்கும் ஓய்! இது சும்மா விளையாட்டுக்கு...:)
@ ஹரிணி - வம்புல மாட்டி விட பாக்கர்தே இந்த பொண்ணு!!!..:P
@ கோபாலன் அண்ணா - இவா எல்லாருமே எனக்கு ரொம்ப தோஸ்த் தான், கோச்சுக்கமாட்டா..:)
@ பருப்பாசிரியர் - :))
@ சுனாமி - அய்யய்யோ! நான் அப்பிடி சொல்லவே இல்லை..:)
@ வெங்கட் அண்ணா - இவாளை பத்தி பேசினாதான் போஜனம் கிட்டும்..:)
@ இட்லி மாமி - இட்லி சட்னியோட கிட்டும்..:ப்
@ வெண்கல கடை - வாம்மா மின்னல்!!..:)
@ விகடவுள் - நீங்க குடுத்த வரத்தை உங்களுக்கே அனுப்பி வைக்கரேன்..:))
@ வல்லிம்மா - :))
@ மாதங்கி - வல்லிம்மா கமெண்டை டபுள் லைக் பண்ணினா 2 அடி கிட்டும் உங்களுக்கு!..:PP
@ கோபாலன் அண்ணா - பப்ளிக்! பப்ளிக்!..:)
@ கேடி - யாருக்கு தெரியாம வெச்சாலும் உங்களுக்கு தெரியாம மறைக்க முடியுமா??..:))
@ vgr - என்னோட பாசமலர் ஒன்னு ரெட்டை நாடியா இருக்கு, அது வந்தா சமைச்சு போடனும் அதான்..:P
@ மதுரம் அக்கா - இங்கையே எல்லாருக்கும் எஸ் மேடம்! தானே போடுண்டு இருக்கேன்..:)
@ ஷாந்தி மாமி - :))
@ மைனர்வாள் - அக்காமார்களை வம்புக்கு இழுக்க தெகரியம் வேண்டாம் ஓய்..:)
@ Jeyashri அக்கா - :))
@ ராஜி அக்கா - உங்க ஒருத்தருக்காவது தக்குடு மேல பாசம் இருக்கே! ரொம்ப சந்தோஷம்..:)
@ வாசகன் - எல்லாம் தேதியை கணக்கு பண்னிண்டு இருக்கு மாமா..:)
@ Mohanji - பத்திரிக்கை அனுப்பின உடனே புக் பண்ணுங்கோ!..:)
Gopika akka, thank you! thank you! lol about your last half comment..:)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)