Thursday, December 9, 2010

யானை! யானை! - II

Part I
நானும் என்னோட நண்பனும் முன் பக்கமும் பின் பக்கமுமா சரி பண்ணி உக்காந்து பாத்தும் மனசுக்கு திருப்தியாவே இல்லை. நாங்க சரி பண்ணி உக்காசுக்க ட்ரை பண்ணிண்டு இருக்கும் போதே யானை மெதுவா நகர ஆரம்பிச்சது. எங்க ரெண்டு பேருக்குமே வயத்தை கலக்க ஆரம்பிச்சது. என்னோட கைல வெள்ளிக்குடம், அவனோட கைல ஒரு பெரிய கோவில் குடை. நான் மெதுவா யானையோட கழுத்துல இருந்த ஒரு பள்ளத்துல குடத்தை வச்சுண்டு நன்னா கெட்டியா கட்டிப்புடிச்சுண்டேன்.



யான் ஏறிய யானை!!..:)

ஒரு கையால யானை மேல போர்த்தி இருந்த துணியை பிடிச்சுண்டேன். அந்த சமயம் பாத்து வெடிக்காரன் ஒரு வெடியை கொளுத்தி வானத்துல விட்டான். 'டமால்'னு அது வெடிக்கவும் யானையோட நடைல ஒரு அதிர்வு தெரிஞ்சது. நாங்க ரெண்டு பேரும் பயந்து போய்ட்டோம். என்னல ஆச்சு யானைக்கு?னு என்கிட்ட கேட்டான். ‘யானை மனசுக்குள்ள சிரிக்கர்து போலருக்கு!’னு நான் பதில் சொன்னேன். இது வரைக்கும் ஒழுங்கா போயிண்டுருந்த யானையோட நடைல ஒரு வித்தியாசம் தெரிஞ்சது. வலது பக்க முன்னங்காலை ஒருமாதிரி வட்டம் போட்டு வட்டம் போட்டு நடந்தது. என்னடா மாப்ள இது!னு மறுபடியும் குடைக்காரன் தொணதொணத்தான். யானை ஓ! போடுதுடா மாப்ள!னு நான் பதில் சொல்லிண்டே கீழ இருந்த யானைப் பாகன்ட என்ன ஆச்சு?னு விசாரிச்சேன். ‘ஒன்னும் இல்லை தம்பி! முன்னங்கால் முட்டி கொஞ்சம் தேஞ்சுருக்கு, அதனால யானை இப்படித்தான் நடக்கும்!’னு சாதாரணமா பதில் சொன்னார். ‘இதெல்லாம் ஏறர்த்துக்கு முன்னாடி சொல்லமாட்டேளாடா!’னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்.



ஆரம்பமெல்லாம் நன்னாதான் இருக்கு...:)

இதுக்கு நடுல கூட வந்துண்டு இருந்த ஒரு மாமா, ‘ஸ்வாமியோட விஷேஷமே தனிதான்! கணபதி பிரணவ ஸ்வரூபம் இல்லையா, அதான் காலால ‘ஓம்’ போட்டு காமிக்கர்து யானை!’னு பிட்டு போட்டு மத்த மாமாக்களை உச்! கொட்ட வெச்சுண்டு இருந்தார். ‘மாமா! அடுத்த திருப்பத்துல நான் கீழ இறங்கிக்கறேன், நீங்க மேல வாங்கோ! மேலேந்து பாத்தா ‘ஓம்’ இன்னும் தெளிவா தெரியும்!’னு நான் சொன்னதுக்கு அப்பரம் பேசாம வந்தார். நேரம் ஆக ஆக எனக்கு பயம் ஜாஸ்தியாயிண்டே போச்சு. 'யானை சவட்டியதில் பச்சிளம் பாலகன் தக்குடு சட்னி'நு எதுகை மோனையோட தினமணில செய்தி வந்துருமோ?னு பயமா இருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுல ஒரு உருண்டை தான் வைரமுத்துவுக்கு உருண்டது, ஆனா எனக்கு 2 - 3 உருண்டை உருள்ற மாதிரி இருந்தது.

கணபதி உபனிஷத்ல ஆரம்பிச்சு ருத்ரம் சமகம்னு எல்லா ஸ்லோகமும் சொல்ல ஆரம்பிச்சேன். கணபதி பஞ்சரத்னம் மட்டும் சொல்லலை, ஏன்னா அதை சொன்னா பிள்ளையார் 'பாபா ப்ளக்க்ஷிப்' ரைம்ஸுக்கு குட்டிக் குழந்தேள் தலையை ஆட்டிண்டு ஆடரமாதிரி சந்தோஷமா ஆடிண்டே கேப்பாராம். அப்பரம் திவா அண்ணா ப்ளாக்ல இருக்கும் யானை மாதிரி குதிக்க ஆரம்பிச்சுதுன்னா என்ன பண்ணர்து! அதனால சொல்லலை.



பப்பு டார்லிங் ரெடி ஆயாச்சு!!..:)

ஒரு வழியா குத்துக்கல் தெருவுக்குள்ள வந்தாச்சு, அங்க இருந்த ஒரு பாலக்காட்டு மாமி ஆர்த்தி(ஆர்த்தி யாரு? நம்ப பாலக்காடு மாமியோட ஒரே பொண்ணா?னு வளிச்சுண்டு வந்து யாரும் சந்தேகம் கேக்காதீங்கோ!) எடுத்துட்டு சும்மா இருக்காம, ‘தக்குடு! ஆனன மேல உன்னைகாண்ரோது பந்தளராஜகுமாரனாட்டம் இருக்கை கேட்டையா!’னு போட்டா பாக்கனும் ஒரு பிட்டை. யானை எப்ப பந்தாடப்போர்தோ?னு பயந்துண்டு இருந்த நான் உடனே, ‘மாமி! ஆரத்தி தட்டை தள்ளி வெச்சுக்கோங்கொ! ஆரஞ்சு கலர் ரஸ்னா ஜூஸ்!னு நினைச்சு, ‘ஐ லவ் யூ ரஸ்னா!’னு சொல்லிட்டு யானை தும்பிக்கையால உறிஞ்சுடப்ப்போர்து!’னு சொன்னேன். ‘மாமி! நான்! நான்! எப்பிடி இருக்கேன்?னு சொல்லலையே?’னு குடைக்காரன் ஆரம்பிச்சான். ‘பரக்காதடா பரக்காவட்டி! நீ பந்தளராஜாவுக்கு குடை பிடிக்கரவன் மாதிரி லக்ஷணமா இருக்கை போதுமா!’னு அவனை சமாதானம் பண்ணினேன். இதுக்கு நடுல ஒரு நாதாரிப்பய சரவெடியை கொளுத்திப் போட்டு யானையை பதறடிக்க முயற்சி செஞ்சுண்டு இருந்தான்.

சன்னதி தெருல ருக்கு மாமி பாகன் கிட்ட மெதுவா, ‘யேன்டாப்பா! உன்னோட யானை கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் சாப்டுமா?’னு விசாரிச்சுண்டு இருந்தா. நான் உடனே சுதாரிச்சுண்டு, ‘அதெல்லாம் நாங்க கீழ இறங்கினதுக்கு அப்பரம் தெருல வந்து குடுத்துக்கோங்கோ மாமி!னு சொல்லிட்டேன். அவாத்துல கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் பாமாயில்லதான் பண்ணூவா. கண்றாவியா இருக்கும், வாயிலையே வெக்க முடியாது. கேட்டா, கிருஷ்ணருக்கு பாமாவைத்தான் ரொம்ப பிடிக்கும்டா கோந்தை!னு ஒரு நொண்டிச் சாக்கு சொல்லுவா. அவாத்துல யாரும் சாப்டாத பழைய பக்ஷண ஸ்டாக் எல்லாத்தையும் யானைட்ட குடுத்து க்ளியர் பண்ண பாக்கரா. அவாத்து மைசூர்பாவை வச்சு வாய்க்காலுக்கு சைடுல வெள்ளத் தடுப்புச் சுவரே கட்டிடலாம் அவ்ளோ ஸ்ட்ராங்! இதை எல்லாம் திண்ணுட்டு யானைக்கு எதாவது ஆச்சுன்னா அப்பரம் சேதாரம் எங்களுக்குத்தான்.

‘முடுக்கு’மூச்சா மாமா(அவாத்துல 3 டாய்லட் இருந்தாலும் அவர் மட்டும் முடுக்குல போய்தான் எல்லாம், அதனால இந்த பேர் அவருக்கு) ரொம்ப நாழியா யானை பின்னாடி & சைடுல வந்துண்டே இருந்தார். அடிக்கடி யானையோட வாலை பாத்துண்டே இருந்தார். இதை நான் கவனிச்சுட்டு ‘என்ன சமாசாரம் மாமா?’னு கேட்டதுக்கு, மோதரம் பண்ணி போட்டுக்க நீளமான ஒரு யானை முடியை புடுங்கர்த்துக்கு வால்ல தேடிண்டு இருக்கேன்டா கோந்தை!!னு சாதாரணமா சொன்னார். “@#%ரை புடுங்கர்த்துக்கு இதுவாவோய் நேரம்?”னு துபாய் பார்ட்டி நல்ல திட்டிவிட்டுட்டான்.

இதுக்கு நடுல என்னோட வேட்டி முடிச்சு என்னை மாதிரியே ரொம்ப லூசா இருந்தது. வேட்டியை இழுத்துகட்டனும்னா கும்பத்தை கீழ குடுத்தா தான் கட்டமுடியும். கீழ இருந்த கோவில் தர்மகர்த்தா கரகாட்டக்காரன்ல வரும் கனகாவோட அப்பா சண்முகசுந்தரம், “அம்மாடி காமாட்சி! இந்த கரகத்தை ஆட்டம் முடிஞ்சுதான் கீழ இறக்கனும்!”னு கனகாகிட்ட சொன்ன மாதிரி “கும்பத்தை கோவில் வாசல்லதான் இறக்கனும்!”னு உறுதியா சொல்லிட்டார். கோவில் வாசல்ல கும்பல் கும்பலா மடிசார் பொம்ணாட்டிகளும் அவாத்து பிகர்களும் நின்னுன்டு இருந்தா. எல்லாரும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு மினிக்கிண்டு இருந்தா அவா எல்லார் முன்னாடியும் அவுந்த வேட்டியோட ‘சூப்பர்மேன்’ கோலத்துல(வேட்டியை கழுத்துல கட்டிண்டு குதிச்சா சூப்பர்மேன் தானே?) நிக்கப் போறேன்!னு மனசுக்குள்ள பயந்துண்டு இருந்தேன்.



தக்குடு 3 வருஷத்துக்கு முன்னால்...:)

போட்டோகாரன்கிட்ட யானை மேலேந்து இறங்கும் போது ஒரு ஸ்பெஷல் போட்டோ எடுத்து தாங்கோ!னு சொல்லியிருந்தேன், அதனால அவர் ஜூம்பண்ணர காமிராவோட ரெடியா இருந்தார். ‘சூப்பர்மேன்’ கோலம் அமெரிக்கா வரைக்கும் போகப்போகர்து!னு மனசுக்குள்ள ஒரே பதட்டம். ஒரு வழியா கோவில் வாசலும் வந்தது. வெள்ளிக் குடத்தை ஒரு மாமாட்ட குடுத்துட்டு மெதுவா கீழ இறங்கி பாஞ்சாலி மாதிரி ஒரு கையால அவுந்த வேட்டியை பிடிச்சுண்டு மின்னல் வேகத்துல ‘துபாய்’ காந்தி மாமியாத்துக்குள்ள புகுந்துட்டேன். அப்பரம் வந்து சொன்ன பேச்சை காப்பாத்தின யானையை ஒரு பிரதக்ஷிணம் பண்ணிட்டு தும்பிக்கையை தொட்டு வணங்கி ஷாஷ்டாங்கமா ஒரு நமஸ்காரமும் பண்ணினேன்.

இந்த வருஷம் தர்மகர்த்தா பூ மாலையை கைல வெச்சுண்டு, தக்குடு!னு கூப்டவுடனே S.V. சேகர் நாடகத்துல கதாபாத்திரங்கள் 'டஷ்ஷ்ஷ்ஷ்'னு காணாம போகர மாதிரி காணாம போய்ட்டேன். யானை மேல ஆள் ஏறினதுக்கு அப்பரம் தான் பக்கத்துலையே போனேன். துபாய் பார்ட்டி ஆத்தங்கரைக்கே வரலை, ‘தெருலயே நான் இருக்கேன்!’னு சொல்லிட்டான்

28 comments:

Chitra said...

பப்பு டார்லிங் - சமத்து குட்டி.
மூணு வருஷத்துக்கு முன்னால உள்ள உங்கள் போட்டோவை பார்த்து நம்பிட்டோம். உங்கள் பதிவை நாங்க வாசிக்கிறோம் என்பதால், இப்படியா எங்களை சோதிக்கிறது? அவ்வ்வ்வ்.......

Kavinaya said...

//எல்லாரும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு//

ஒரு காதுக்குதானா :P

//தக்குடு 3 வருஷத்துக்கு முன்னால்...:)//

3 வருஷத்துக்கு முன்னாலேயே இவ்ளோ வயசாடுச்சே தக்குடுவுக்கு... அச்சோ பா...வம் :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//யானை ஓ! போடுதுடா மாப்ள//
ஹா ஹா... ROFTL

//பச்சிளம் பாலகன் தக்குடு//
This is 200 much I say...அளவா போய் பேசு உம்மாச்சி கண்ண குத்தும்... ஹா ஹா

//கிருஷ்ணருக்கு பாமாவைத்தான் ரொம்ப பிடிக்கும்டா கோந்தை//
amazing... ha ha...

//தக்குடு 3 வருஷத்துக்கு முன்னால்...:)//
what is this thaakudu? spelling mistake இல்லாம எழுத வராதா... முப்பது வருஷம் முன்னால்னு சொல்ல வன்ஷு ஒரு ஜீரோ மிஸ் ஆய்டுச்சு போல... கவனம் கவனம்... வயசான எப்படி தான் கண்ணெல்லாம் மங்கள் ஆய்டும்னு எங்க பாட்டி சொல்லுவா...

//துபாய்’ காந்தி மாமியாத்துக்குள்ள புகுந்துட்டேன்.//
துபாய்ல விவேகானந்தர் இருந்தார்னு தெரியும்... காந்தி கூடவா...சொல்லவே இல்ல... வரலாற்றுல முக்கியமான விசயமெல்லாம் பதியாம விட்டுடாங்க போல இருக்கே...

Dubukku said...

:)) நல்ல எழுதியிருக்க..

//பரக்காதடா பரக்காவட்டி// - நம்மூர் ஜார்கனெல்லாம் போட்டு தாக்கியிருக்க !!!

மூனு வருஷத்துக்கு முன்னாடி போட்டோ சூப்பர் (ஆனா ஃபாரின் குழந்தை காப்பிரைட்டு பார்த்துக்கோடா தக்குடு..லாயர் பில்லு எகிறிடும்)

சூப்பர்மேன் பேண்டுக்கு மேல ஒன்னு போட்டிருப்பாரே...அந்தப் பழக்கம் மூனு வருஷம் வரைக்கும் இல்லவே இல்லைன்னு சொல்லு.

Porkodi (பொற்கொடி) said...

பந்தள‌ராஜகுமாரன்???? யாரு? நீங்க??? ரைட்டு!! :P

vgr said...

thakkudu, edo photo pottadu nale unnai yanai la ethinannu nambaren :)

Part 3 iruka?

RVS said...

ஸோ லாண்டிங் சேஃபாத்தான் ஆயிருக்கு. நானும் தக்குடுவை முதுகுல ஏத்திண்ட கஜேந்திரன் ராம நாராயணன் படத்தில் வரா மாதிரி ஒரு டான்ஸ் ஆடிருக்கும்ன்னு நினச்சேன். டோடலி Disappointed. ;-)

துளசி கோபால் said...

யாரு அந்தச்சின்னக்குட்டி? பட்டுப்பாவாடையில் ஒரே பளிச்!

தக்குடு கோந்தே....யானை உன்னைக் கைவிடலை பார்த்தியோ!!!!

ஆயில்யன் said...

//அவாத்துல 3 டாய்லட் இருந்தாலும் அவர் மட்டும் முடுக்குல போய்தான் எல்லாம், அதனால இந்த பேர் அவருக்கு//

நல்லா கொடுக்கீறீங்க டீடெய்லு!

//மூனு வருஷத்துக்கு முன்னாடி போட்டோ சூப்பர் (ஆனா ஃபாரின் குழந்தை காப்பிரைட்டு பார்த்துக்கோடா தக்குடு..லாயர் பில்லு எகிறிடும்)//

:))))))))) #நல்ல அலர்ட்டு

பவள சங்கரி said...

ஸ்வீட் பப்பு.....நல்ல சுவையான பதிவுங்க........ஹ..ஹா...

Jeyashris Kitchen said...

This reminds me of our horse riding in kodaikannal when we went for honeymoon.Unnamadiriyae dhan semma bayam ennaku.Instead of too much fear i was loudly singing some movie songs.even now S used to remind me of that incident.
அவாத்துல கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் பாமாயில்லதான் பண்ணூவா. கண்றாவியா இருக்கும், வாயிலையே வெக்க முடியாது. கேட்டா, கிருஷ்ணருக்கு பாமாவைத்தான் ரொம்ப பிடிக்கும்டா கோந்தை!னு ஒரு நொண்டிச் சாக்கு சொல்லுவ
Seriana mamiya irrupa pola.
Very nice post as usual.

mightymaverick said...

உன் அண்ணன் தான், தாத்தான்னு கூப்பிடல... அங்கிள்னு கூப்பிட்டாங்கன்னு ஒரு பதிவு போட்டான்... நீயுமா... வயசாக ஆக எல்லோருக்கும் இளமை திரும்புதுன்னு ஒரு நினைப்பு...


நீ மூணு வருசத்துக்கு முன்னால எப்படி இருந்தேன்னு பெங்களூருல எல்லோரும் (முக்கியமா பொண்ணுங்க) சொன்னாங்க...


பாலக்காட்டு மாமி சரியாதான் சொல்லி இருக்காங்க... பந்தள ராசகுமாரன் இப்போ இருந்தா ஒரு 200-300 வயசு இருக்குமா? அந்த வயசுக்காரன் மாதிரியே இருக்கேன்னு தான் அப்படி சொல்லி இருப்பாங்க...


ஐ லவ் யூ ரஸ்னான்னு சொல்லி உறிஞ்சி குடிச்சிடுச்சுன்னா பரவாயில்லை... வழக்கமா குளிக்கிற பாணியில ஒரு உறிஞ்சு உறிஞ்சி தலைக்கு மேல தூக்கி ஷவர் பாத் எபக்ட்ல மழை பொழிந்திருந்திச்சுன்னா அன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஆரத்தி அபிஷேகம் நடந்திருக்கும்...


இப்போல்லாம் கணபதி ரைம்சுக்கு ஆடுற குழந்தை மாதிரி ஆடுறதில்லை... பரவை முனியம்மாவோட குத்து பாட்டுக்கு ஆடுற மாதிரி தான் நிறைய இடங்களில் ஆடிக் கொண்டிருக்கிறார்...

Raks said...

You always bring smiles when I read your post,lovely post,I too liked all the things quoted above by friends,but what I liked most is - thakkdu madhriye veshtiyum looooosu-- :D :D :D :D :D:D

Harini Nagarajan said...

lols! sema story!

வல்லிசிம்ஹன் said...

தக்குடு ! ஏ க்ளாஸ்.
பல்லெல்லாம் சுளுக்கிண்டுடுத்து:)

Matangi Mawley said...

sirippa control pannindu comment poda kooda mudiyala! aththana sirippu! :D "yaana 'o' podarathu".... apravam- pranavam-bit!! chance-e-illa....

Romba nannaa neenga ezhuthirukkel- apdeengarathunaala- "jimikki pottundu minikkindirukkaraa"- copyright claim pannaama iruppennu nenaikkathel! :D

Suuuuper :D :D

sriram said...

தக்குடு, கலக்கலா எழுதியிருக்கே..

அப்புறம், அஞ்சு வயது குழந்தைக்கு உங்கம்மா ஊரெல்லாம் சலிச்சு பொண்ணு பாக்கறதா கேள்விப் பட்டேன், பால்ய விவாக கேஸ்ல மாட்டிக்கப் போறா சொல்லி வை. அம்பி மற்றும் வாத்யார் கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு இன்னும் 20-25 வருஷம் போகட்டும்னு சொல்லி வைக்கிறேன்,சரியா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

Dear Thakkudu, vilunthu vilunthu sirichom naanum yenga ammavum.you made our day!yaanai O poottathu,mysorepa,mudukku moocha mama yellam chanceyy illai.antha maalai podara photola ungalukku thaniyaa kudai yellam pudichundu oru raja effect irukku..:)irunthaalum antha photola thakkudu mokam sariyaave heriyalainu yenga amma roomba korachal pattundaa!

Ranjani Iyer

Subhashini said...

ஒ போட்ட அந்த யானைக்கு ஒரு ஒ போட்டுக்கறேன் தக்குடு. ஹி ஹி யானை மேலே உக்காசிண்டதுக்கே இநத அமர்க்களம்... பந்தள ராஜா வா புலி மேலே உக்காசிண்டு தக்குடு படும் பாட்டை நினைச்சா முடியல ....:))))) அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்

cheers,
subha

Techops mami said...

super daa.......Thakkudu...kathaya nanna subama mudichuta...nala comedy aa irunthuthu......un vesthi avuthu pochu atha antha photo grapher photo yeduthaan kelvi paten.......un figers yellam Gol! nu sirichudunga num mami's yellamm kana moodidaanum sona...;)

தக்குடு said...

@ சித்ரா அக்கா - நீங்களுமா இப்பிடி!...:)

@ கவினயா அக்கா - நல்ல சந்தேகம் தான்!..;P

@ இட்லி மாமி - அந்த மாமியோட ஆத்துக்காரர் துபாய்ல இருக்கார் & அந்த மாமியோட முழு பேர் காந்திமதி. அடப்பாவி தங்கமணி AT ஆனா மாதிரி அவாளும் துபாய் காந்தி...:PP

@ டுபுக்கு - ஆமாம் வாத்யாரே கொஞ்சம் ஜாக்ரதையாதான் இருக்கனும், நீங்க கேட்ட மேட்டர் எல்லாம் அம்பை கல்லிடைல யாருமே போடமாட்டோமே!..;PP

@ கேடி - நம்பினா சரிதான்!..:)

@ VGR - யோவ்! 2 பார்ட்டுக்கே மூச்சு வாங்குதுயா நான் என்ன இட்லி மாமியா 28 பகுதி போட...:)

@ - நீங்க அப்பிடித்தான் எதிபார்ப்பேள்னு எனக்கு தெரியும்...:)

@ துளசி டீச்சர் - பப்பு தக்குடுவோட கேர்ள் பிரண்ட்...;)

தக்குடு said...

@ ஆயிலு - நம்பதான் அலர்ர்ட் ஆறுமுகம் ஆச்சே!!..;)

@ நித்திலம் - ரொம்ப சந்தோஷம்பா!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - எல்லாம் ரைட்டு அந்த குதிரைக்கு அதுக்கு அப்புறம் என்ன கதியாச்சுன்னு சொல்லவே இல்லையே!..:PP

@ விகடவுள் - ஆமாம், ரஸ்னாவை ஷவர் பண்ணி இருந்தாலும் கதை கந்தல் ஆகி இருக்கும்..:)

@ ராக்ஸ் - நல்ல படிச்சு சிரிச்சுட்டு தக்குடுவை லூசுன்னு சொல்லும் ராக்ஸ் டவுன்! டவுன்!

@ ஹரிணி - ரொம்ப சந்தோஷம்பா!..:)

@ வல்லிம்மா - நன்னிஹை!!!..:)

@ மாதங்கி - ரசிச்சு படிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்பா! 'ஜிமிக்கி' காப்பி ரைட் உங்களுக்குத் தான்....:)

@ பாஸ்டன் நாட்டாமை - எல்லாம் உங்க ஆசிதான்!..:) பப்ளிக் வாட்சிங் நாம தனியா பேசிக்கலாம்..:)

@ ரஞ்ஜனி - ரொம்ப சந்தோஷம்பா! ராஜா எல்லாம் இல்லை மீ சாதாரண குழந்தை. இந்த போட்டோக்கே தெருல தர்மாடி விழும் எனக்கு..:)

@ சுபா மேடம் - குசும்புதான் உங்களுக்கு!!...:)

@ Techops மாமி - போட்டோ எடுக்கர்த்துக்குள்ள தான் நான் ஓடிட்டேனே!!..;)

sury siva said...

யானை சவாரி பேஷ் பேஷ் !!

அது சரி !! நான் பாத்தப்ப இப்படின்னா இருந்தேள் !!
http://menakasury.blogspot.com

சுப்பு தாத்தா.
தாத்தா கான ஸபா ( டிஸம்பர் ஸீஸன் )
http://movieraghas.blogspot.com

Shobha said...

தக்குடு யானை சவாரி ரொம்பவே நன்னா இருக்கு. பப்புவை இப்பிடி எல்லா பதிவுலயும் போட்டு திருஷ்டி ஏத்தி வைக்காதே .
ஷோபா

Shanthi Krishnakumar said...

Lovely and hilarious post. Enna pathi un blogla kanna pinnannu podamey irundhaa poha panni tharuven.

தக்குடு said...

@ சூரி மாமா - உங்க ப்ளாக் போய் பார்த்தேன், போட்டோ நன்னா தான் இருக்கு...;)

@ ஷோபா மேடம் - அதுக்குத்தான் என்னோட போட்டோவையும் போட்டாச்சே! திருஷ்டியே வராது!...:)

@ சாந்தி மாமி - கவலையே படாதீங்கோ!! என்னோட எதிர்கால போஸ்ட்ல உங்களை வம்புக்கு இழுப்பேன்!!..:))

எல் கே said...

//பந்தள ராஜா வா புலி மேலே உக்காசிண்டு தக்குடு படும் பாட்டை நினைச்சா முடியல //

புலி பாவம். அப்புறம் உங்களை மிருக வதை சட்டத்தில் உள்ள போட்டுடுவா

தி. ரா. ச.(T.R.C.) said...

என்னோட இந்த நிலையிலும் சிரிக்கவைத்த பதிவு தக்குடு நீ வாழ்க!

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)