Thursday, December 16, 2010

கணக்கு பண்ணும் துறை

முடி வெட்டுர கடைலேந்து டீ கடை வரைக்கும் இப்போ இதுதான் பேச்சு, //ராஜா, ஸ்பெக்ட்ரம், நிராடியா,கனிமொழி// இது போக இப்போ பரவலா புழக்கத்தில் அடிபடும் ஒரு வார்த்தை மத்திய தணிக்கை துறை(CAG). என்னடா இது தக்குடுவுக்கு என்ன ஆச்சு? நு எல்லாரும் முழிப்பேள்னு எனக்கு தெரியும். பொதுவா இதெல்லாம் எழுதர்துக்குன்னே பல ஜாம்பவான்கள் இருக்கா, குறையொன்றும் இல்லை பாட்டை எப்படி எம் எஸ் அம்மா பாடி கேட்டா தான் நன்னா இருக்குமோ அது மாதிரி இதெல்லாம் அவா எழுதி படிச்சா தான் நன்னா இருக்கும், அதனால நான் எழுதர்து கிடையாது.

அப்போ இப்ப என்ன ஆச்சு கோந்தைக்கு?னு கேக்காதீங்கோ! சமீபத்துல உச்ச நீதிமன்றத்துல நடந்த ஒரு வாக்குவாதத்துல ராஜாவோட வக்கீல் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கார். “CAG அறிக்கை யூகத்துல எழுதினது, உண்மை கிடையாது" அப்பிடின்னு, அதுக்கு தான் இந்த பதிவு.

நம்ப சர்க்கார்ல உருப்படியா இருக்கற சொச்சம் அமைப்புல மத்திய தணிக்கை துறை முதன்மையானது. சொல்லப்போனா அசோகதூண்ல இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நாலாவது சிங்கங்கள்ல இவாளும் ஒன்னு. இது 1935 தனி நாடாளுமன்ற சட்டம் மூலமா உண்டாக்கப்பட்டது. இது எந்த இத்தாலிய உளவாளிகளுக்கும் சலாம் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. (இதே மாதிரி இருக்க வேண்டிய CBI இப்போ congress investigation bureau வா இருக்குனு எல்லாருக்கும் தெரியும்)
தனித்தன்மை வாய்ந்த ஒரு அமைப்பு, இதோட அறிக்கை நாடாளுமன்றத்துல மட்டும் தான் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கைல இருக்கும் விஷயத்தை ஆடிட் பாயிண்ட் அப்பிடின்னு சொல்லுவா. மத்திய சர்க்காருக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே இவாளோட தணிக்கைக்கு உட்பட்டவாதான். மாநிலங்களுக்கு குடுக்கும் நிதியோட அடிப்படைல அதையும் தணிக்கை பண்ணுவா.

தனி தனி குழுவா தணிக்கை பண்ணர்த்துக்கு அனுப்பிவைப்பா. அதுக்கு மூனு மூத்த அதிகாரியும்,2 செக்ஷன் அதிகாரியும், 1 ப்ரதான அதிகாரியும் இருப்பார். மத்திய தணிக்கைத்துறையோட தலைமை அதிகாரி உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு சமமான அந்தஸ்து உள்ளவர். நம்ப பக்கமெல்லாம் ஆவின் சொசைட்டி/ வேளாண்விற்பனை வாரியம் இதுக்கு எல்லாம் ஆளுங்கட்சியோட கடாமீசை உள்ள வட்டத்தையோ மாவட்டத்தையோ தான் தலைவரா நியமனம் பண்ணுவா அதை மாதிரி இது கிடையாது, தணிக்கை துறையில் குறைஞ்சபட்சம் 25 வருஷம் அனுபவம் இருக்கும் ஒரு திறமையான முக்கியமா நேர்மையான தணிக்கை அதிகாரியை தான் தலைமை அதிகாரியா நியமிக்க முடியும்.

தணிக்கை முடிஞ்சு இவாளோட அறிக்கை முதல்ல உயரதிகாரிகிட்ட சமர்ப்பிக்கப்படும், இதை மாதிரி 10 நிலைகள் தாண்டி தான் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வரும். அறிக்கையோட நம்பகத்தன்மை,துல்லியத்தன்மை எல்லாத்தையும் பொறுத்து ஆரம்ப அறிக்கைல 10 பாயிண்டோட ஒரு அறிக்கை போனா கடைசி நிலைல 2 பாயிண்ட்டுக்கு இறுதி நிலை ஒப்புதல் கிடைச்சாலே பெரிய அதிசயம்.

இது எதுக்குன்னா நாடாளுமன்றத்துல சமர்ப்பனம் பண்ணினதுக்கு அப்புறம் யாரும் நாக்கு மேல பல்லை போட்டு பேசிட கூடாதுனு தான். இதன்படி ஒரு பாயிண்ட் அறிக்கைல பிரசுரமாகர்துன்னா அது 100% உறுதியான ஊழல் அபாய அறிவிப்புனு அர்த்தம். எல்லா விதத்துலையும் புரியும் படியும், சகல விதமான ஆதாரத்தோடும் அந்த அறிக்கை இருக்கும். சில கோபாலபுரத்து கோமகன்கள் எழுதும் நெஞ்சுக்கு நீதி! குஞ்சுக்கு பீதி! எல்லாம் இந்த அறிக்கையோட ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.

இதுவரைக்கும் இவாளோட அறிக்கையால வெளிச்சம் காட்டப்பட்ட முக்கியமான முறைகேடுகள்,

1) போப்பர்ஸ் பீரங்கி ஊழல் 2) மாட்டுத் தீவண ஊழல் 3) காமென்(காங்கிரஸ்) வெல்த் கேம்ஸ் 4)ஸ்பெக்ட்ரம் இது தவிர எண்ணிக்கைல அடங்காத பல முக்கிய ஊழல்கள்.

இதெல்லாம் தக்குடுவுக்கு எப்பிடி தெரியும்னு யோசிக்காதீங்கோ! நான் மேய்க்கர அரசாங்க ஒட்டகத்துல சவாரி பண்ணின இந்திய அதிகாரிகள் சொன்ன விஷயம் இது. இவாளோட திறமை,துல்லியத்தன்மை எல்லாம் பாத்துட்டு வளைகுடா நாடுகள் எல்லாத்துலையும் ரொம்ப வருஷமாவே இவாளுக்கு ராஜ உபசாரம். ஐக்கிய நாடுகள் சபையோட பெரும்பாண்மையான தணிக்கை பொறுப்பும் இவாளோட கைலதான் இருக்கு என்பது உபரி தகவல்.

இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தியால இவா கண்டுபிடிச்சு அறிக்கை குடுத்தாலும் எடுக்க வேண்டிய நடவடிக்கை எல்லாம் தேசத் துரோகிகளோட பொதுக்குழுலையும் செயற்குழுலையும் தீர்மானம் பண்ணர்தை பாக்கும் போதுதான் வயத்தெரிச்சலா இருக்கு. அதிசயமா இந்த தடவை உச்ச நீதிமன்றம் தலையிடர்துனால கொஞ்சம் குடைச்சலா இருக்கு இந்த மானம் கெட்ட ஜென்மங்களுக்கு.
வளைகுடா நாடுகள்ல இருக்கும் தலைமை தணிக்கை துறைக்கு “திவான் மஹாசபை”னு பேரு. இங்க இருக்கும் அதிகாரிகளை பாத்தாலே அரசாங்க நிறுவன தலைமை நிதி அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனம். ஏன்னா நம்ப ஊர் மாதிரி அறிக்கையை வாங்கி @#துக்கு அடில போட்டுண்டு ஆட்சியாளர்கள் உக்காசுக்க மாட்டா. நடவடிக்கை எல்லாம் அதிரடியா இருக்கும்.. ஜனநாயகம்! வெங்காயம்!னு சொல்லிண்டு இந்தியால நாம பல்லை இளிச்சுண்டு இருக்க்கர்துனால தான் இப்போ உலகமே நம்மை பாத்து சிரிக்கர்து!..:((

29 comments:

ஆயில்யன் said...

:))

#விடுங்க பாஸ் அவிங்க எப்பவுமே அப்புடீத்தான் !

ஆயில்யன் said...

//அப்போ இப்ப என்ன ஆச்சு கோந்தைக்கு?னு கேக்காதீங்கோ! //

கேக்கல!
கேக்கல!
கேக்கல!
கேக்கல!
கேக்கல!

vgr said...

enge sellum inda padai..yaro yaro arivaro..

திவா said...

இதப்பத்தி எழுதபோனா வயித்தெரிச்சல்தான் அதிகமாகும் ஜெல்யுசில்லுக்கும் கட்டுப்படாது என்கிறதால எழுத மாட்டேன்.

அப்பாவி தங்கமணி said...

Wow...thakkuduvin innoru mugam...nice summary... eluthi padichu naama thaan tension aikkanum brother... enna seyya? CBIkku nee kudutha vilakkam super...

RVS said...

தக்குடு... நிஜமாவே நீதி.. பீதி... அதி பயங்கர சூப்பர். நெனச்சு நெனச்சு சிரிச்சேன். ;-)
கோந்தைக்கு என்னமா கோபம் வரது.. கோபம் வந்தா துர்வாசரா மாறிடும் போலருக்கே.. நல்ல போடு போட்ருக்கே.. குட். ;-)

Chitra said...

ஜனநாயகம்! வெங்காயம்!னு சொல்லிண்டு இந்தியால நாம பல்லை இளிச்சுண்டு இருக்க்கர்துனால தான் இப்போ உலகமே நம்மை பாத்து சிரிக்கர்து!..:((


......ஹி,ஹி,ஹி,ஹி..... ஏதாவது சொன்னேள்? நேக்கு டிவி சத்தத்துல ஒண்ணும் கேக்கல.....

Porkodi (பொற்கொடி) said...

kanamal ponavargal patriya arivippu: peyar thakkudu.. vayadhu 5..

sriram said...

அட்டகாசமான பதிவு தக்குடு. உனக்குள்ள இப்படி ஒரு இந்தியன் தாத்தா ஒளிஞ்சிருந்தது இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே?
லஞ்சம் வாங்கறவனைப் பாத்தா சுடணும் போல இருக்கு, இதையெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்கும் என் மேலேயே எனக்குக் கோபம் வருது. புலம்புவதைத் தவிர நாம் ஒன்னும் செய்வதில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அனாமிகா துவாரகன் said...

//(இதே மாதிரி இருக்க வேண்டிய CBI இப்போ congress investigation bureau வா இருக்குனு எல்லாருக்கும் தெரியும்)//
Class!

DohaSriram said...

//Porkodi (பொற்கொடி) said...
kanamal ponavargal patriya arivippu: peyar thakkudu.. vayadhu 5.. //

கண்டுபிடித்து தருபவர்களுக்கு கமிஷன் தரப்படும். 2G - யில் கொடுத்ததை விட அதிகமாக. CAG பிரச்சனையெல்லாம் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்.

pokkudu (senior) said...

ஸ்வீட் முடிந்து காரமா? நல்லாருக்கு. ஜமாய்ங்க்கோ அண்ணா(!!)

Shobha said...

இது தக்குடு பக்கமா, இல்லை நான் தப்பான அட்ரஸ்க்கு வந்துட்டேனா ?
தக்குடுவுக்கு எதுகை மோனை நன்னாவே வருது
ஷோபா

Vijay said...

தக்குடு,

நைஸ் போஸ்ட். நிறைய சொல்லணும். வெய்ட். வரேன்.

வல்லிசிம்ஹன் said...

சூப்பர். இங்க வீட்டுக்குப் பக்கத்தில டைம்ஸ் நௌ மற்றும் நிறைய தொலைக் காட்சிகளின் வண்டிகள் ரெண்டு நாட்களா நகராம நின்னுது. ஆஹா ஆக்ஷன் இருக்கு போல இருக்கே என்று மிக சந்தோஷம். பன்னபன்னப் பேசினதையே பேசறாங்க. ஏதாவது நடக்குமா என்ன.
தம்பி வாசுதேவன் சொல்ற மாதிரி டைஜீனும் ஜெலுச்சிலும் வாங்கி கட்டுப் படியாகாது:((((
நேரத்துக்குத் தகுந்த பதிவு. ரொம்ப சந்தோஷம் தக்குடு.

subhashini said...

தக்குடுவின் நரசிம்ம அவதாரம்....:)) ரொம்ப சரியா உன் கோவத்தை எழுதி தீத்துட்ட..............

ஸ்ரீ சொன்னா மாதிரி லஞ்சம் வாங்கரவாளை பார்த்தா கோவம் கோவமா வரும்... எதாவது பண்ணனும்னு தோணும். அவாளையெல்லாம் எதுவும் பண்ண முடியாத நம்ப கையாலாகதனைத்தை நினைச்சு வருத்தமாய் இருக்கும்
அன்புடன்
சுபா

Techops mami said...

Correct thambhi...ithu yellaam nenaichala koobama varuthu..pesaama yethavathu terror kita poi sendhu yellarayum sutu thalalamanu thonuthu.........nama thaan ithu yellam kaaranam...people yellam onu senthu thapu senjavanuku on the spot thandana kudukanum..

inum konja naal kalithu paaru intha oolal pathi yellarum maranthu poiduva...we younger generation yellam waste.

but ur blog is super...asusual good examples...

vgr said...

Kovathai kotta ninaipavargal...delhi il irundalo alladu ungal nanbargal delhi il irundalo

http://blogs.timesofindia.indiatimes.com/for-the-people/entry/mobilize-against-corruption

Thakkudu, un popularity use pannu parpom.

Harini Sree said...
This comment has been removed by the author.
Harini Sree said...

"நீயா போஸ்ட் போட்டது?? தக்குடு நீயா போஸ்ட் போட்டது???" எனக்கு இந்த பாட்டு தான் ஞாபகம் வந்துது உங்க போஸ்டை படிச்சதும். நீங்க இந்த போஸ்ட்-அ எழுதும் பொது கண்ணு எல்லாம் செவந்து போய், கை பயங்கர துடிப்போட இருந்திருக்கும் போல?? அந்த வேகம் படிக்கற எங்களுக்கும் (எனக்கும்) இருந்துது. அப்ப அப்ப இப்படி ஒரு பிரேக் தேவை தான். நாடு விட்டு நாடு போய் குப்பை கொட்டினாலும் நான் ஒரு இந்திய பிரஜைனு சொல்லாம சொல்லிட்டேள். எனக்கு ரொம்ப பிடிச்சது கோபாலபுரம் மற்றும் க்ளோசிங் ச்டடேமேன்ட். அசத்திட்டேள். ஆனா நாம எல்லாம் இப்டி வயிறு எரிய எரிய பேசி என்ன பிரயோஜனம்??

1.67lakhs crore is sleeping happily with somebody else.

ஆனா இன்னிக்கி நீங்க என்ன எமாத்திட்டேள். ரொம்ப போர் அடிச்சுது சரி உங்க ப்ளாக் பக்கம் போய் போஸ்ட் படிச்சு சிரிக்கலாம்னு ஆசையோடு வந்த என்னை எமாத்திட்டேள் தக்குடு! எமாத்திட்டேள்!

Matangi Mawley said...

Boss... naadellaam news-a paththu paaththu makkal puzhungindu irukkaa... antha kovam ungalayum vittu vaikkala!

"Niira Radi-Raja-Kanimozhi" conversation- ellaam publish aayirukku.. athellaam padikka padikka, nadakkarathu ellaame oru "well-scripted act" apdeennu nenaikka vaikkarathu!

yaaruku ithanaal aenna laabam? oru prayojanamum yaarukkum illa... enna.. iththana naalaa Ee- oottindiruntha Jaya TV kku nannaa TRP- ratings aerindirukku konjanaalaa... avvalavuthaan..

Matangi Mawley said...

PS: en avipraayam... 60 varushamaa nadakkaathathu iipo onnum perusaa nadanthudala... appo ellkaarukkum theriyala.. ippo etho ellu munaila kaduku munai veleela vanthirukku.. avvalavuthaan.

பத்மநாபன் said...

என் டேஷ் போர்டில் தக்குடுவின் பதிவுகள் அப்டேட் ஆகவில்லை... பதிவு இன்னமும் கொதிக்கிறது... கணக்குத்துறையில் இருப்பதால் விவரங்களை இப்படி வகை வகையா எடுத்து வைத்ததில் ரெளத்திரம் நன்றாக தெரிகிறது... ரத்தக்கையோட பிடித்தாலும் தப்பிக்க வைக்கும் நம்ம சட்டத்தை என்ன செய்வது... வளைகூடா நாடுகள் மாதிரி பாதாள சிறை சட்டம் வந்தால் தான் கொஞ்சமாவது பயம் வரும்....

Bharadhee said...
This comment has been removed by the author.
Bharadhee said...

Bayama irukunga..Ivanga kitta Unakku ithana aayiram kodi tharen. Un naatla irukradhaellam enaku sollunu keta, apdiye kooti(sorry) kaati kuduthruvanga polarukku...

ஹுஸைனம்மா said...

இப்பத்தான் கொஞ்சம் எல்லாம் மறந்து அமைதியா இருந்தேன். மறுபடி கொதிக்க வச்சுட்டேளே!! நினைச்சு நினைச்சு ஆற மாட்டேங்குது... ஒரு சர்வாதிகார ஆட்சி சீக்கிரமே இந்தியாவுல அமையணும்னு வேண்டிகிட்டிருக்கேன்..

தகடூர் தமிழன் said...

அப்டியே வெங்காய பிரச்சினை பத்தியும் பேசிடுங்க..
{வெங்காய விலையை பெரியாரிடம் தான் கேட்க வேண்டும் #தமிழக முதல்வர் கருணாநிதி.}

தக்குடுபாண்டி said...

@ ஆயிலு - நீங்க தான் நம்ப ஊர்காரர் ஆச்சே!! ரொம்ம்ம்ம்ப நல்லவன்யா நீர்!!...:))

@ VGR - அது தான் தெரியவில்லை, ஆனால் அமைதியான கடல் ஆபத்தானது, ஆர்பரிக்கும் அலையாய் மாறி அகிலத்தையே அதில் இழுத்துச்செல்லும்!!..:(

@ appavi அக்கா - ஒரே ஒரு வளத்தை மட்டும் வெச்சுண்டு இருக்கும் சின்ன நாடுகள் செழிப்பா இருக்கும் போது, எல்லா வளமும் இருந்தும் இந்த அரசியல்வியாதிகளால் இந்தியா சுடுகாடாகர்தை பாக்கும் போது வயத்தெரிச்சலா இருக்கு!!..:(

@ சித்ரா அக்கா - :)) விழுந்தாலும் நம்பளால என்ன பண்ணமுடியும்? மிஞ்சிப்போனா ஒரு போஸ்ட் போடுவோம்!

@ கொடி - எல்லாருமே காணாம போயிண்டு இருக்கோம்!

@ பாஸ்டன் நாட்டாமை - நிச்சயமா ஒரு வழி பிறக்கும்!!

@ மின்னல் - :)) நன்னிஹை!

@ sriram அண்ணா - :)) நேர்ல இருக்கு உங்களுக்கு!!

@ பொக்குடு - நன்னிஹை!!

@ ஷோபா மேடம் - என்ன வந்து என்ன பிரயோஜனம் நம்ப தேசத்துக்கு விடுதலை கிடைக்கனும்..:(

@ விஜய் அண்ணா - செளக்கியமா அண்ணா?

தக்குடுபாண்டி said...

@ வல்லிம்மா - கரெக்டு அம்மா! பேசர காலம் எல்லாம் தாண்டியாச்சு, இனிமே செயல்ல தான் எதிர்பாக்கறோம்!

@ சுபா மேடம் - எதாவது இல்லை, அந்த கையை தனியா வெட்டி விட வேண்டும். முள் செடியை அழிப்பதில் அஹிம்சைக்கு இடம் இல்லை!

@ Techops மாமி - எல்லாரும் ஒரு நாள் அதை நிச்சயம் செய்வார்கள்!

@VGR - தக்குடு அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் கிடையாதுப்பா!! சாதாரண மொளகா பஜ்ஜி வியாபாரி!..:(

@ ஹரிணி - அடுத்து போட்ட போஸ்ட் உங்களை மகிழ்விக்கும்!..:)

@ மாதங்கி - நியாயமான ஆதங்கம் மாதங்கி!

@ பத்மனாபன் அண்ணா - அதை ஆவலாய் எதிபார்க்கிறேன்!

@ பாரதி - நலமா! ரொம்ப நாள் ஆச்சே உங்களை பாத்து!

@ ஹுசைன்னம்மா - விரைவில் வரும்!

@ தமிழன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!..:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)