கல்லிடைல இருந்த தோழர்கள் படைல ‘ப்ளவுஸ்’ சங்கரன் ரொம்ப முக்கியமான ஒரு ஆள். அவனோட பேரை பாத்துட்டு அவன் எதோ பாக்யராஜ் ரசிகனோ?னு எல்லாம் தப்பா நினைக்க வேண்டாம். மன்மோஹன்சிங் மாதிரியே அவனும் பரமசாது. நார்த்தங்காய் ஊறுகாய் பாட்டில்ல இருக்கும் கரண்டியும் கடைசி துண்டு ஊறுகாயும் மாதிரி நானும் சங்கரனும் அவ்ளோ தோஸ்த். எங்களுக்குள்ள பல ஒத்துமை உண்டு. ரெண்டு பேருக்குமே கணக்கு சுத்தமா வராது, பொங்கல் புளியோதரை குடுக்காத சமயங்கள்லையும் கோவில்லயே தான் எப்போதும் குடி இருப்போம். இந்த மாதிரி சொல்லிண்டே போகலாம். பரிட்சை சமயத்துல ரெண்டு பேரும் பக்கத்துல தான் உக்காருவோம். பரிட்சை எல்லாம் ஒரு டீம் Effort-டோட எதிர்கொள்ளனும்ங்கர நல்ல எண்ணம் தான் அதுக்கு காரணம்.
நண்பேன்ன்ன்டா!!....:)
அவனோட அம்மா மாதிரி வேகமா யாராலையும் தெலுங்கு பேசவே முடியாது, அதுலையும் பக்கத்து தெருல அவாளோட யாரோ ஒரு தூரத்து சொந்தம், நெருங்கின சொந்தம் கூட கிடையாது, ஆச்சாளுக்கு பீச்சா மதினிக்கு உடப்பொறந்தா தான். அந்த மாமியும் இந்த மாமியும் தெருல வெச்சு பாத்துட்டா போதும் "அக்கட போயிஸ்தானு! இக்கட போயிஸ்தானு!"னு ஒரே தெலுங்கு மழை தான் அப்புறம். நாக பஞ்சமி!னு ஒரு விஷேஷம் இருக்கர்தே அந்த மாமியாத்துல அஞ்சு விதமான கொழுக்கட்டை, கடலைபருப்பு பாயாசம் சாப்டதுக்கு அப்புறம் தான் தெரியும். கொழுக்கட்டைல தெலுங்காளை அடிச்சுக்கவே முடியாது. எக்ஸ்ட்ரா கொழுக்கட்டைக்கு ஆசை பட்டுண்டு பக்கி மாதிரி "மாமி! ஹேப்பி நாகபஞ்சமி!"னு எல்லாம் சொல்லி(வழிஞ்சி) நின்னது உண்டு.
வெயில் அடிச்சா வயித்து வலி/ தலை வலினு சொல்லி லீவு போடுவான், மழை பெஞ்சுதுன்னா காய்ச்சல்! ஜலதோஷம்!னு சொல்லி லீவு போடுவான். பாவம் அவன் உடம்பு வாக்கும் அப்பிடி தான். இதுல சுவாரசியமான விஷயம் என்னன்னா தலைவர் அதிதீவிர ஆஞ்சனேய பக்தர். தீபாவளிக்கு முந்தின நாள் அவாத்து பட்டாசாலைல அல்வா கிண்டர்துக்கு எல்லா சாமனையும் எடுத்து வெச்சுட்டு பக்கத்தாத்து வரைக்கும் அவனோட அம்மா போயிருந்த சமயம், கொல்லைபக்கம் வழியா 4 குரங்கு உள்ள வந்துடுத்து, காவலுக்கு இருந்த சங்கரன் ஆஞ்சனேயரை பாத்த பக்தி பரவசத்துல இருந்தப்பவே நெய் பாக்கெட்,பொறிகடலை (டப்பாவோட) எடுத்துண்டு போயிடுத்து. திருப்பி வந்து பதறி போய் நின்ன அவன் அம்மா கிட்ட, "அம்மா, ஆஞ்சனேயர் ஒச்சாயினு!ஒச்சாயினு!"னு சொல்ல, கடுப்பான அந்த மாமி இவனை அடி நொறுக்கிட்டா.
சங்கரனுக்கு இங்க்லிபீஸ்ல க்ஷேக்ஸ்பியரோட சித்தி புள்ளை மாதிரி அப்பிடி ஒரு பாண்டித்யம். 5 ஆம் கிளாஸ்ல முதல் தடவையா லீவு லெட்டர் எழுத சொல்லி குடுத்ததுலேந்து எல்லாரும் இங்கிலிபீஸ்லதான் லெட்டர் எழுதனும்னு டீச்சர் சொல்லிட்டாங்க. பாவம் சங்கரன் தான் ரொம்ப கஷ்டப்பட்டான். மாசத்துல ஒழுங்கா 8 நாள் தொடர்ச்சியா அவன் லீவு போடாம ஸ்கூலுக்கு வந்ததா சரித்திரமே கிடையாது. ராமஜெயம் நோட்டு மாதிரி ஒரு குயர் நோட்ல எப்போதும் ஒரு ஸ்டேன்டேட் பார்மெட்ல 10 லெட்டர் எழுதி அவனோட நைனாட்ட கையெழுத்து வாங்கி ரெடியா வெச்சுருப்பான். இந்த அதிரடி உத்தரவுக்கு அப்புறமும் அவன் அதே முறையை தான் பாலோ பண்ணினான். AS i am suffering from feverகு பதிலா suffering from அத்தை பொண்ணு கல்யாணம், As i am suffering from மாமா பையன் உப நயனம்-னு போட்டு பட்டையை கிளப்பிட்டான். இதெல்லாம் விட பெரிய காமெடி am suffering from குலதெய்வம் கோவில் கொடை விழா/னு ஒரு தடவை எழுதி டீச்சரை கலங்கடிச்சுட்டான். அதே மாதிரி எப்போதுமே grand me 3 days leaveநு தான் கேப்பான். “ரொம்ப கிராண்டான கல்யாணம் போலருக்கு!”னு டீச்சரும் தலைல அடிச்சுப்பா.
கவாஸ்கர் தொப்பி!...:)
எங்க தெருலையே ஒரு அண்ணாட்ட மட்டும் தான் நெஜமான கிரிக்கெட் மட்டை உண்டு, மத்தவா கிட்ட எல்லாம் பீமன் கைல இருக்கும் வஸ்து மாதிரி தான் இருக்கும். அந்த அண்ணா கிட்ட ஒரு கவாஸ்கர் தொப்பியும் உண்டு, யாரு பேட்ஸ்மேனுக்கு பின்னாடி நின்னுன்டு கீப்பிங் பண்ணறாளோ அவா மட்டும் தான் அந்த தொப்பி போட்டுக்கலாம். இந்த கூத்துக்காகவே கீப்பிங் பண்ணர்த்துக்கு சுண்டல் வாங்கர்த்துக்கு நிக்கர மாதிரி எல்லாரும் வரிசையா நிப்பா. ‘ரொட்டி சால்னா’ சேகருக்கும் ‘சக்கப்பழம்’ ஹரீஷுக்கும் இந்த விஷயத்துல அடிக்கடி சண்டை வரும். இருந்தாலும் ரொட்டிசால்னா மேல சக்கப்பழத்துக்கு கொஞ்சம் பயம் உண்டு. இந்த மாதிரி இருந்தப்பதான் ஒரு சமயம் பொத்தை(ஈடன் கார்டன் மாதிரி அது ஒரு பெரிய மைதானம்) மாட்ச்ல க்ளவுஸ் (கையுரை) போட்டு கீப்பிங் பண்ணின ஆளை முதல்தடவையா சங்கரன் நேர்ல பாத்தான். அந்த ஆளு சுச்சா போகர்த்துக்கு போன கேப்ல அந்த க்ளவுஸை ஒரு தடவை கைல போட்டுண்டு 2 - 3 ஓவர் கீப்பிங் பண்ணி பாத்துட்டான். சங்கரனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.
அடுத்த நாள் நாங்க எல்லாரும் முடுக்கு மூச்சா மாமாவாத்து திண்ணைல உக்காச்சுண்டு பேசிண்டு இருக்கும் போது சங்கரன் தடாலடியா பேச ஆரம்பிச்சான். “நம்ம டீமுக்கு எப்பிடியாவது ஒரு ப்ளவுஸ் வாங்கனும்டா, ஒன்னு வாங்கினா கூட போதும் எல்லாரும் மாத்தி மாத்தி போட்டுக்கலாம்"னு அவன் முடிக்கவும் எங்க எல்லாருக்கும் ஒன்னுமே புரியலை, இருந்தாலும் காட்டிக்காம “ப்ளவுஸ் எல்லாம் ரெடிமேட்ல கிடைக்கர்தா என்ன? அதுவும் போக ஒரே டிசைன் எல்லாருக்கும் பிடிச்சி வரவேண்டாமா”னு அவன் வாயை பிடிங்கினோம். “எங்க வாங்கினாலும் ப்ளவுஸ்ல ஒரே டிசைந்தான் கிடைக்கும் அதுவும் போக ரெடிமேட்லதான் நன்னா இருக்கும்”னு சங்கரன் சளைக்காம பதில் சொன்னான். பசங்க விடாமா "ப்ளவுஸ் போட்டுண்டு தெருல எல்லாம் விளையாட முடியுமாடா? தெருல உள்ள மாமிகள் எல்லாம் சண்டைக்கு வரமாட்டாளோ?"னு கிண்டிவிட்டானுங்க, " இந்த மாமிகளுக்கு வேற ஜோலியே கிடையாது, நாம ப்ளவுஸ் போட்டுண்டு விளையாண்டா அவாளுக்கு என்ன வந்தது? யார் என்ன கேக்கறா?னு நான் பாக்கறேன். நாம பயந்து பயந்து நடுங்கர்துனால தான் மாமிகள் எல்லாம் நம்ப கணக்கு டீச்சர் மாதிரி ரொம்ப பாடாபடுத்திண்டு இருக்கா நான் போட்டு விளையாடி காட்டரேன் பாருங்கோ!"னு ஒரு வீரசபதமே போட்டான் சங்கரன்.
கிரிக்கெட் க்ளவுஸ்..:) (RVS அண்ணா! நீங்க என்ன படம் எதிர்பார்த்தேள்னு எனக்கு தெரியும்!..:P)
ஜன்னல் வெச்சதா? ஜன்னல் இல்லாததா? ஜன்னல் வெச்சதுன்னா தாத்தா டெயிலர் கிட்ட தைக்கலாம், ஜன்னல் இல்லாத சாதா டிசைனுக்கு மணி டெய்லர்தான் பெஸ்ட்!”னு ஹரிகுட்டி சொன்னப்பதான் சங்கரனுக்கு மெதுவா புரிஞ்சது, இனிமே புரிஞ்சு என்ன பிரயோஜனம்? அந்த சுபவேளைலேந்து சங்கரனோட பேருக்கு முன்னாடி ‘ப்ளவுஸ்’ அடைமொழி அட்டையா ஒட்டிண்டுருத்து. அதுக்கு அப்புறம் வாசல்ல புடவைகாரர் ராஜேந்திரன் வந்தா போதும், எல்லா பயலுகளும் “சங்கரா, புது குஷ்பு டிசைன் ப்ளவுஸ் வந்துருக்காம்! வாங்கிக்கோடா!”னு அவனை அழ அழ விட்டு வேடிக்கை பாத்துண்டு இருக்கர்துதான் முக்கியமான பொழுது போக்கே!..:)
40 comments:
me the first...
//இதெல்லாம் விட பெரிய காமெடி am suffering from குலதெய்வம் கோவில் கொடை விழா/னு ஒரு தடவை எழுதி டீச்சரை கலங்கடிச்சுட்டான்//
உலொல்லு :))))))))))))) #விழுந்துவிழுந்துசிரிச்சிங்
//ஹேப்பி கிஸ்மஸ்// ஏன் ஓடிக்கிட்டே இருக்கு அதைப்புடிச்சு நிப்பாட்டுங்க நான் கேக்-கேக்கமாட்டேன்!
//ரெண்டு பேருக்குமே கணக்கு சுத்தமா வராது//
Reallyyyyy? Thats a news
ha ha
Template Leave Letter kadai sooper...ana nijamave anda sankaranuku gloves theriyadu othukaren...blouse epadi theriyama irukum ngaren??
suffering from படிச்சு படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சு சிரிச்சு... :) நல்ல ப்ளவுஸ் கதை! ஐ மீன் க்ளவுஸ் கதை :P
சொந்தக் கதையை சங்கரன்னு ஒரு கற்பனா கதாபாத்திரத்தின் மேல ஏத்தி சொல்ற திறமை ஒனக்கு நெறயவே இருக்கு தக்குடு..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Ha ha ha. Sriram-தாத்தா சொல்றது உண்மையா தக்குடு
//பரிட்சை சமயத்துல ரெண்டு பேரும் பக்கத்துல தான் உக்காருவோம்.//
ரெண்டு பேரும்சேந்து கணக்குல சுழிச்சதுக்கு இதுதான் காரணமோ ?
//ஊருகாயும்-விஷேஷம-இருக்கர்தே-(வளிஞ்சு)-
கிண்டர்த்துக்கு-நைனட்ட-உபனயனம்னு-விக்கர//
உனக்கு யாரு தமிழ் வாத்தியார் ?
ஷோபா
தகவல் அருமை
:)))
காமடி கிங் நீங்க தக்குடு .. ;-) ;-)
நா எங்க (கடைகளில்!!) வித்தியாசமா ப்ளவுஸ் பார்த்தாலும் எனக்கு குஷ்பூ ஞாபகம் தான் வரும். இனிமே ப்ளவுஸ்ன்னா தக்குடு ஞாபகம் தான் வரும். கல்லிடைல //ப்ளவுஸ் சங்கரன்// - வலையில 'நெட் ப்ளவுஸ்' தக்குடு. ரொம்ப நன்னாயிருக்கு...
இதே மாதிரி எங்கூரு ஆஞ்சநேய பக்தன் கதை ஒன்னு இருக்கு.. நேரம் கிடைக்கும் போது போடறேன்...
ஊறுகா பாட்டில் கரண்டியும் கடைசி துண்டு ஊறுகாயும்... சூப்பர்... உங்களிடம் ஊறிய நினைவுகள்... அட்டகாசம்.
(சமர்த்தா இருக்குற ஆள ... நீங்க என்ன எதிர்பார்த்தேள்ன்னு எனக்கு தெரியும்ன்னு போட்டு ஏம்பா அடாவடி பண்றே... )
vevagaramana title a irukke..
//ஆச்சாளுக்கு பீச்சா மதினிக்கு உடப்பொறந்தா தான்// ROFL!!!
ama.. sankaran real name thakkuduva? :P
//ஊறுகா பாட்டில் கரண்டியும் கடைசி துண்டு ஊறுகாயும்// ரொம்ப ரசிச்சேன்!
//அம்மா ஆஞ்சனேயர் ஒச்சாயினு!// வெடிச்சிரிப்பு!
லீவ் லெட்டர் ஜோக்ஸ் எல்லாமே செம ரகளை போ!
உண்மையை ஆராய்ந்து கண்டு பிடிக்கும் பாஸ்டன் அண்ணாச்சி, பொற்கொடியக்கா - வாழ்க!
தக்குடு,
எங்கம்மாவும் ரொம்பவே ரசிச்சு சிரிச்சா! grand me leave & குலதெய்வம் கோவில் கொடை விழா ஜோக் ரெண்டும் அல்ட்டிமேட் ரகமாம்!
வெள்ளிக்கிழமை மெனு தக்குடு சுவை அறுசுவைநகைச்சுவை. அனுபவித்தது நார்த்தங்காயும் ஸ்பூனும்.
எல்லாsuffering from ம் சிரிச்சு கலங்கடிக்கவச்சுருச்சு , . ஹேப்பி நாக பஞ்சமி , ப்ளவுஸ் சங்கரன் எல்லாம் சேர்ந்து இப்ப நானும் suffering from தக்குடு போடற அளவுக்கு ஆயிடுச்சு..
அசத்தல் மிகவும் நான் ரசித்து வாசித்த பதிவுகளில் இன்று இதுவும் ஒன்று . பகிர்வுக்கு நன்றி
ஹஹாஹ் தக்குடு எப்படி இப்படிலாம் ??
Thakkudu... supero super.. Boston Sriram sonna maathiri, sondha anubhavathai unga peyarileye pottu irukalaame..
Hi guys!! - hencforth shall we call "Blouse Thak..." :-)
super...paavam sankaran romba apaaviii..not like you neee romba veevaram...
leve letter matter super...btw pictures un blog la display aagala.
'Techops' mami
எதை சொல்றது, எதை விடறதுன்னு தெரியலை தக்குடு எல்லாமே கலக்கல். சிரிச்சு மாளலை. அடுத்த பதிவு ரொட்டி சால்னா சேகரா இல்லை சக்கப்பழம் ஹரீஷா....:))) ஜமாய்
அன்புடன்
சுபா
இட்லி மாமி - :)) வருகைக்கு நன்னிஹை!
ஆயிலு - ரொம்ப சந்தோஷம்பா!!..:)
VGR - அதான் ப்ளவுஸ் சங்கரனோட சிறப்பே!!..:)
கவினயா அக்கா - எனக்கும் சந்தோஷமா இருக்கு!..:)
பாஸ்டன் நாட்டாமை - புரளியை கிளப்பிட்டீங்களே பாஸ்!..;)
மின்னல் - நாட்டாமை தமாசு பண்ணறார்.
ஷோபா மாமி - இப்போதைக்கு நீங்கதான் என்னோட வாத்தியார்
அங்கிதா - வருகைக்கு நன்னிஹை
வித்யா - :)))
RVS அண்ணா - கிங்கும் இல்லை சிங்கும் இல்லை, நம்ப ஆத்து பொMனாட்டிகள் சமையல் மாதிரி என்னிக்காவது உப்பு காரம் சரியா இருக்கும் நம்ப எழுத்திலும் அவ்ளோதான்!..:)
கொடி - தலைப்பு மட்டும் தான் வில்லங்கம்..:)
அனன்யா அக்கா - நீங்களும் அம்மாவும் ரசித்ததில் ரொம்ப சந்தோஷம்பா!
வல்லிம்மா - உங்களுக்கு நார்த்தங்காய் புடிக்கும்னு எனக்கு தெரியுமே!!..:)
பத்பனாபன் அண்ணா - ஹா ஹா ஹா சுவாரசியம் தான்!..:)
பனித்துளி - ரொம்ப சந்தோஷம் பா!..:)
LK - யாரோ புதுசா வந்துருக்கா போலருக்கே!!..;PP
தோஹா sriram - உங்களுக்கு கமண்ட சொல்லி குடுத்ததே தப்பு!!..;)
மாமி - ஹலோ நானும் சாது தான் அக்கா!..:)
சுபா மேடம் - தாங்க்யூ பாஸ்!
Eppadi thakkudu, eppadi:-0 super po, rombha rasichu sirichen, ellame nanaeruku, nethikku adicha comment enna achunu theriyala.
super thakkutu vere unnum sollalai1
லீவ் லெடர் சிரிப்பு வெடி.
RVS என்ன எதிர்பார்த்தார்னு எனக்கும் தெரியும்.
Semma comedy Boss!!! office la thaniyaa ukkaandu sirichcathu poraathunnu aaththula ellaarodaiyum senthu vera sirichchen!
:D :D
Dear Thakkudu, blousai vechundu neenga pannina rousu kalakkal. Title paathuttu yedakodama(blouse) intha manushar yentha photovum poturakodathey bagavaney!nu pray pannindeythaan scroll panninen. Thnk god! thakkudu yennai yemathalai.hppy nagapanjami,akkatapoyistathu,leave letter,kushboo design yellam typical thakkudu style. Onnu nannaa theriyarthu, pombalel sambanthama neenga oru Ph.d apply pannalaam.
Ranjani Iyer
Pona postkum sethu ithula sirichaachu! :)
ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் சரளமான நகைச்சுவை நடை. ஒரு சிலருக்கே கைகூடும் இந்தக் கலை. சிரிச்சுக்கிட்டே ...... இருக்கேன்..
தக்குடு சார். மொதநாள் வந்துட்டு தலையை காட்டிட்டு போயிட்டீங்க. தெருக்கல்யாணத்துக்கு வந்து சாப்பிட்டு மொய் எழுதிட்டு போங்க.
( தக்குடுன்னு டைப் பண்ணா தாக்குது-ன்னு வருது. மனசை தயாரா வச்சிருக்கேன் , வந்து தாக்கிட்டு போங்க.)
சரளமான நகைச்சுவை நடை
Superb. I am still laughing
Vidya akka – roomba santhosham paa!..:)
TRC mama – nanum veera onnum kekkalai..:P
Appathurai anna – yenkkum roomba santhosham..:)
Matangi – aathukku poyyi yennoda nameai repair paniyaachaa..:)
Ranjanai – Apdi ellam photo poda maaten kavalaipadaathengo..:)
Harini – okeeeyy!!..:)
Sivakumar – Thks siva!
Sai – vaango sai sir!..:)
நான் கொஞ்ச நேரம் சிரிச்சு முடிச்சுட்டெ அப்பரம் வந்து கமெண்ட் போடரேன்.. முடியல..
@ Aathira - Thanks for ur first visit and comment..:)
அழைப்பிதழ்:
உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html
நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
எத்தனை தரம் படித்தாலும் உங்க ப்ளாக் போரடிக்காது தக்குடு..
@ வெங்கட் அண்ணா - தன்யனானேன் ஸ்வாமி! :)
@ அமுதா மேடம் - ரொம்ப சந்தோஷம் பா!
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)