எங்க ஊர் பிள்ளையார் கோவில்ல 10 நாள் சதுர்த்தி உத்ஸவம் உண்டு. பத்து நாளும் தெருவே சும்மா 'கலகல'னு இருக்கும். பத்து நாளுக்கு நடுல ஒரு 2 நாள் பெரிய லெவல்ல ஹோமம்,அபிஷேகம்,லக்ஷார்சனை இதை மாதிரி எதாவது இருக்கும். விஷேஷ நாள் அன்னிக்கி காத்தால தெருல இருக்கும் நண்டு நசுக்குலேந்து தொடங்கி 65 வயசு மாமா வரைக்கும் எல்லாரும்(ஆண்கள்) ஆத்தங்கரைக்கு அபிஷேக ஜலம் எடுத்துண்டு வரர்த்துக்கு போய்டுவோம். பொம்ணாட்டிகள் எல்லாரும் கால் வெக்கர்த்துக்கு கூட இடம் விட்டு வைக்காம தெரு முழுசும் கோலம் போட்டு கும்பத்தோட வரப்போகும் தெரு மனுஷாளை வரவேற்கர்த்துக்கு ஆர்த்தித்தட்டு சகிதமா ‘சரக் சரக்’னு சத்தம் வரும் மடிசார்/பட்டுப் பாவாடையோட வாசல்ல நின்னுன்டு இருப்பா. எல்லார் வீட்டு தங்கமணிகளும் அன்று மட்டும் ‘ஜில் ஜில்’ ரமாமணிகளாக மாறிடுவா.
கோவில் வாசல் கோலம்!!
பிகர்கள் எல்லாம் ‘தாவணி போட்ட தீபாவளி’யாக காட்சி அளிப்பார்கள். மடிசார் புடவைல எத்தனை கலர் உண்டு?னு உங்க யாருக்காவது சந்தேகம் இருந்தா ஒரு தடவை எங்க ஊருக்கு வாங்கோ!...:) மாமிகளோட மடிசாரை பாத்தே அவாளோட சாமர்த்தியம் எப்பிடின்னு சொல்லிடலாம், ஜவுளி கடை பொம்மைக்கு கட்டி விட்ட மாதிரி சில பேருக்கு இருக்கும், சிலபேர் மடிசாரை கட்டிண்டு வரமா சுத்திண்டு வந்துட்டு நிலால நடக்கும் நீலாம்ஸ்ட்ராங் மாதிரி குதிச்சு குதிச்சு நடப்பா, ஒரு சில பேருக்குத்தான் தாத்தா டெயிலர் கிட்ட அளவு குடுத்து தைச்ச மாதிரி கனகச்சிதமா இருக்கும். அதுலையும் சில பேர் அவாளோட வலது பக்க இடுப்புல சரியா செவ்வகமா மடிச்ச ஒரு வெள்ளை கர்ச்சிப்பை ‘இன்டியன் ‘ஸ்பின்’ பவுலர் கும்ப்ளே மாதிரி சொருகி வெச்சுருப்பா, அது இருந்துதுன்னா அந்த மாமி கரெக்ட்டா மடிசார் கட்டிக்கரான்னு அர்த்தம்.
எனக்கு தெரிஞ்ச ஒரு மாமி!...:)
ஆண்கள் எல்லாம் நதில ஸ்னானம் பண்ணிட்டு ஜரிகை வேஷ்டி எல்லாம் கட்டிண்டு கும்பதை எடுத்துண்டு மேளதாளத்தோட எல்லா தெருவும் சுத்தி வருவோம். சாதரண நாட்கள்ல பழைய பைத்தார வேஷ்டியும், அழுதுவடிஞ்ச மூஞ்சியுமா இருந்த பல மாமாக்கள் அன்னிக்கி பாத்தேள்னா மழுங்க ஷேவ் பண்ணி, சந்தனக் கீத்து, குங்குமப்பொட்டு சகிதமா ‘பளீர்’ மயில்கண் வேஷ்டியோட ‘தில்லானா மோஹனாம்பாள்’ சிவாஜிகணேசன் மாதிரி அம்சமா இருப்பா. அவாத்து மாமிகளே, ‘இது எங்காத்து மாமாவா?’னு ஆச்சர்யப்படுவா.
1 கிலோ எடை உள்ள பிரதான வெள்ளிக்குடத்தை யானை மேல உக்காசுண்டு யார் எடுத்துண்டு வரா அப்பிடிங்கர்து கடைசி வரைக்கும் பரமரகசியமா இருக்கும். அது வெறும் குடம் கிடையாது, பிள்ளையாரையே கொண்டு வரமாதிரி ஒரு நம்பிக்கை எல்லாருக்கும். தக்குடு மாதிரி பொடிப் பயலுக்கு எல்லாம் அந்த சான்ஸ் கிட்டினதே கிடையாது. பெங்களூருக்கு வேலைக்கு போனதுக்கு அப்பரம் முதல் தடவையா சதுர்த்திக்காக கல்லிடை போயிருந்தேன். வழக்கம் போல நானும் ஆத்தங்கரைக்கு போயிருந்தேன். நதிக்கு பூஜை எல்லாம் பண்ணினதுக்கு அப்பரம் கைல அழகான ஒரு மல்லிபூ மாலையை வெச்சுண்டு கோவில் தர்மகர்த்தா, ‘தக்குடு! இங்க வாடா கோந்தை!’னு கூப்ட்டார். பக்கத்துல போனா 'படக்'னு மாலையை கழுத்துல போட்டு, ‘தக்குடுதான் யானை மேல வரப்போறான்!’னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டார்.
முதல் தடவையா அந்த வாய்ப்பு எனக்கேவா?னு ஆச்சர்யமா இருந்தது . பொதுவா எப்போதும் பயங்கர போட்டி நடக்கும். இந்த தடவை போட்டியே இல்லை, அதுவும் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அந்த வருஷம்தான் 3- 4 கோவில் யானை மதம் பிடிச்ச சம்பவம் சன் டிவில வந்ததால ப்ளான் பண்ணி என்னை சிக்கவெச்சுட்டாளோ?னு கூட ஒரு சந்தேகம் வந்தது. இதுக்கு நடுல யானைல நம்ப கூட இன்னொரு ஆளும் வருவார். நம்ப பின்னாடி உக்காசுண்டு குடை பிடிச்சுண்டு அவர் வரணும் அதுதான் அவரோட டுயூட்டி. எனக்கு ஜோடியா என்னோட ஸ்கூல்ல படிச்ச ஒரு பையனை தேர்ந்தெடுத்துருந்தா. அவனை பத்தி கொஞ்சம் சொல்லியே ஆகனும். துபாய்ல ஸ்டோர் கீப்பரா வேலை பாத்துண்டு, லீவுக்காக ஊருக்கு வந்துருந்தான். பாக்கர்த்துக்கு ஆள் சும்மா ஆஜானுபாகுவா 6 அடி ஒசரத்துல கஜக்குட்டியாட்டமா இருப்பான். ஸ்டோர்ல க்ரேன் ரிப்பேர் ஆனா சாமானையெல்லாம் இவன் கையாலையே தூக்கி வச்சுடலாம். குடை புடிக்கரவந்தான் முதல்ல ஏறனும். இவன் ஏறினோன்னே யானை ஒரேடியா கீழ படுத்துர கூடாதே!னு எனக்கு கவலையா இருந்தது.
நல்ல வேளை யானை எப்பிடியோ அவனை தாங்கிடுத்து. அடுத்து இப்போ நான் ஏறனும். ஏறர்த்துக்கு முன்னாடி வண்டி கண்டிஷன்ல இருக்கா?னு செக் பண்ணிக்கர டிரைவர் மாதிரி நான் பாகன்ட போய், “யானைக்கு மம்மு அக்கம் எல்லாம் குடுத்தாச்சா? காத்தால நரசூஸ் காபி குடுச்சோனே யானை சுச்சா & கக்கா எல்லாம் போச்சா?”னு கேட்டேன். “சுச்சா & கக்கா எல்லாம் on the way-ல தான் யானை போகும்!”னு பாகன் சொன்னார். வெள்ளிக்கும்பத்தை பக்கத்துல இருந்த ஒரு மாமாட்ட குடுத்துட்டு, நான் ஏறர்த்துக்காக தூக்கி காமிச்சுண்டு இருந்த யானையோட வலது காலை தொட்டு மொதல்ல கண்ணுல ஒத்திண்டேன். ‘அப்பனே வினாயகா! நம்ப ரெண்டுபேருக்குள்ள ஆயிரம் அபிப்ராய பேதம் இருக்கலாம், ஆனா அதை எல்லாம் நாம பேசித்தான் தீர்த்துக்கனும், எக்காரணத்தை கொண்டும் வன்முறைல இறங்கக் கூடாது!’ அப்படின்னு யானை கிட்ட ஒரு டீலிங் பேசிட்டு, அப்பரம் ஒரு மாதிரி தம் கட்டி யானை மேல ஏறியாச்சு.
பட்டுப் பாவாடையில் ஒரு பட்டூ!!..:)
கஜாரோஹணம் ஒன்னும் அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. கஜம் + ஆரோஹனம் = யானையேற்றம், “யானையோட உடம்பு அசைவுக்கு ஏத்தமாதிரியே நாமும் அசைஞ்சு குடுக்கனும். யானையோட கழுத்துல ரொம்ப நேரம் உக்காரக் கூடாது. கழுத்துப் பகுதில ரயில் தண்டவாளம் மாதிரி 2 எலும்பு உண்டு, அதுக்கு நடுலதான் கும்பத்தை வைக்கனும், வேற எடத்துல வெச்சா கவுந்துடும்!”நு என்னோட குருனாதர் சொன்னது எல்லாம் ஞாபகத்துல இருந்தது.
இருந்தாலும் ரொம்பவே பயமா இருந்தது. கரெக்டா யானை கிளம்பர்த்துக்கு முன்னாடி கோவில் தர்மகர்த்தா எங்கேந்தோ ஓடியே வந்தார். ‘பத்ரமா வாடா தக்குடு!’னு சொல்லபோறார்னு பார்த்தா, ‘வெள்ளிகுடம் பத்ரம்டா!’னு சொல்லி அவர் ‘தர்மகர்த்தா!’னு நிரூபிச்சுட்டுப் போனார்.
அதுக்கு அப்புறம் தான் காமெடியே ஆரம்பிச்சது...........(தொடரும்)
41 comments:
யானை யானைன்னு ஓடோடிவந்த என்னை ஏமாத்தலைடா கோந்தை:-) நன்னா இரு. ஆசீர்வாதம்
ஆனைகதையா, நான் ரெடி!
ஆமா நடந்ததை எழுத ரூம் போட்டு யோசிக்கனுமா?
. ‘அப்பனே வினாயகா! நம்ப ரெண்டுபேருக்குள்ள ஆயிரம் அபிப்ராய பேதம் இருக்கலாம், ஆனா அதை எல்லாம் நாம பேசித்தான் தீர்த்துக்கனும், எக்காரணத்தை கொண்டும் வன்முறைல இறங்கக் கூடாது!’
அதுலையும் சில பேர் அவாளோட வலது பக்க இடுப்புல சரியா செவ்வகமா மடிச்ச ஒரு வெள்ளை கர்ச்சிப்பை ‘இன்டியன் ‘ஸ்பின்’ பவுலர் கும்ப்ளே மாதிரி சொருகி வெச்சுருப்பா, அது இருந்துதுன்னா அந்த மாமி கரெக்ட்டா மடிசார் கட்டிக்கரான்னு அர்த்தம்
தக்குடு நீ கணக்குலே கெட்டி
தக்குடு, ரொம்ப அருமையா இருக்கு. அடுத்த பதிவுக்கு காத்துண்டுருக்கேன்.... யானைனாலே அழகு தான். வருண் ஒருவாட்டி யானை மேலே சவாரி பண்ணிருக்கான்.
சுபா
ஆஹா இது நகர்வலம் வந்த கதையா ரைட்டு நடக்கட்டும் :)
//தி. ரா. ச.(T.R.C.) said...
அதுலையும் சில பேர் அவாளோட வலது பக்க இடுப்புல சரியா செவ்வகமா மடிச்ச ஒரு வெள்ளை கர்ச்சிப்பை ‘இன்டியன் ‘ஸ்பின்’ பவுலர் கும்ப்ளே மாதிரி சொருகி வெச்சுருப்பா, அது இருந்துதுன்னா அந்த மாமி கரெக்ட்டா மடிசார் கட்டிக்கரான்னு அர்த்தம்
தக்குடு நீ கணக்குலே கெட்டி
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :))
T.R.C. மாமா, தக்குடு கணக்குலே மட்டும் இல்லை எல்லா விஷயத்துலயும் கெட்டி.... கட்டி சமத்து...:))
சுபா
தக்குடு,
இந்த எழுத்து நான் பார்த்த போது காணோமே. ஒரே சமத்துக் குழந்தையா இருந்தியேடாப்பா:)
ம்ஹூம் உன் முன்னால் மடிசார்லாம் கட்டிண்டு வர மாமிகள் இந்தப் பதிவைப் படிப்பாளோ!!
யானை முடி குத்துமே. எப்படி சமாளிச்சியோம்மா:)
அடுத்த பதிவு நாளைக்கே போடவும். பட்டு'' படங்கள் அத்தனையும் ஸ்வீட்.
"madisaar- suththindu vanthu... neil armmstrong aattam..." -- semma comedy thakkudu boss!! suuuuper!! :D :D
aduththa part eppadaa varum-nu waiting!!!!!
//பிகர்கள் எல்லாம் ‘தாவணி போட்ட தீபாவளி’யாக காட்சி அளிப்பார்கள்//
அதானே...என்னடா இன்னும் மேட்டர்க்கு வர்லியேனு பாத்தேன்...
//பட்டுப் பாவாடையில் ஒரு பட்டூ!!..:)//
பட்டூ அமக்களம்....கிட்டு எங்க?
//அதுக்கு அப்புறம் தான் காமெடியே ஆரம்பிச்சது...........(தொடரும்) //
அடப்பாவி... இதுல தொடருமா... உனக்கு இதெல்லாம் அநியாயமா இல்ல? என்னை யாரும் இனிமே தொடரும் போடறதுக்கு திட்ட கூடாது சொல்லிட்டேன்...
அது சரி அந்த காமடி என்ன? யானை வெள்ளி குடத்தை மட்டும் வெச்சுட்டு உன்னை தள்ளி விட்டுடுச்சு தானே... ஹா ஹா ஹா... (ஒகே.. மீ எஸ்கேப்...)
தக்குடு, இந்த வாட்டி பதிவை விட - அந்த ரெண்டு குட்டீஸ் அசத்திட்டாங்க..... :-)
தக்குடு,
வாத்யார் டுபுக்கார் ஃப்ளைட் ஓட்றது பத்தி பதிவு போட்டதும் அதுக்கு எதிர் பதிவு மாதிரி யானை ஓட்றது பத்தி பதிவா? நடத்து நடத்து...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ரொம்ப அருமையா சுவாரசியமா எழுதியிருக்கீங்க! தொடருங்கள்!
மடிசார் பட்டு , பாவாடை பட்டு ரெண்டுக்கும் தக்குடு காலடி மண்ணை எடுத்து சுத்திப் போடவும். சஸ்பென்ஸ் வைச்சு தொடரும் போட்டதாலே தக்குடுவுக்கு நோ "ஓ".
// ஆமா நடந்ததை எழுத ரூம் போட்டு யோசிக்கனுமா? //
ரிப்பீட்டு.
ஷோபா
Dear Thakkudu, oru agraharathu functionai motion cameravoda pooi paakkara maathiri irukku, madisar and right side iduppu place yellam vantha poothu control illama sirichun & yenga ammavukku kekkavey vendam, //intha pullaiku madisar podavai katti vidavey theriyum poolarukku//nu sonna. in btwn, yenga atthai neelamstrg maathirithan kuthippa madisar kattindaa...:) waiting for next part.
Ranjani Iyer
dear thakkudu
sema comedy
thodarungal
balu vellore
இந்த தடவை ஊருக்கு போய் நல்லா போட்டோ கலக்ஷன் போல இருக்கு.... கோலம் , பட்டுக் குழந்தைகள் எல்லாம் கனஜோர் ...
கஜ த்தை கஜகர்ணம் போடவைக்கும் தக்குடுக்கு இவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷனா.....
அடுத்து யானைக்கு என்னாச்சு ...சீக்கிரம்
யானை யானை அழகர் யானை
யானை மேல் தக்குடுவும் ஏறும் யானை...
மடிசார் கட்டின்டிருக்கும் போது யார் கணுக்கால் ரொம்ப தெரியாம கட்டிக்கராளோ அவாதான் கெட்டிக்கார மடிசார் மாமி. குனிஞ்சு குனிஞ்சு இழுத்துவிட்டுண்டே வரவா தான் "நீலா" ஆம்ஸ்ட்ராங் மாதிரி. சில பேர் மடிசாரை கட்டிக்காம இடுப்பை சுத்தி ரெண்டு சுத்து சுத்திண்டு பசங்க சாக்கு ரேஸ் ஒடராமாதிரி நடந்து வருவா.. "சித்த வேகமா வாங்கோ மாமி "ன்னு யாராவது அவசரப்படுத்தினா தடுக்கி கீழே விழுந்துடுவா...வாய் வெத்தலைப்பாக்கு போட்டுக்கும்... ;-) ;-)
usual comedy koranjaalum endingla pinnitel! adutha vaaram varaikkum ellam wait panna mudiyaathu
Aiyo, seekram aduththa padhivu poduppaa...
@ RVS anna - நீங்க இந்த பாரால வந்து நிப்பேள்னு நான் எதிர்பார்த்தது வீண் போகலை. எலி கூட்டுல வந்து விழற மாதிரி சிக்கிட்டேளே!! இந்தியா வரும் போது உங்களோட இந்த விளக்கம் எல்லாம் அக்கா கிட்ட வாசிச்சி காட்டறேன் சரியா!!
aduthu ennanu parpom
vgr
Nalla post thakkudu,amstrong madhri nadakkra maami - naan pathadhu illaye...
Kolam superb,neeyum nalla dhan padam kamikra...maami-pattuoo nu,postukagave photo pudippa polum :P
Elephant light..hehe highlights than..Vera enna ~
## சில பேர் அவாளோட வலது பக்க இடுப்புல சரியா செவ்வகமா மடிச்ச ஒரு வெள்ளை கர்ச்சிப்பை ‘இன்டியன் ‘ஸ்பின்’ பவுலர் கும்ப்ளே மாதிரி சொருகி வெச்சுருப்பா,##
## அந்த வருஷம்தான் 3- 4 கோவில் யானை மதம் பிடிச்ச சம்பவம் சன் டிவில வந்ததால ப்ளான் பண்ணி என்னை சிக்கவெச்சுட்டாளோ?னு கூட ஒரு சந்தேகம் வந்தது.##
## தர்மகர்த்தா எங்கேந்தோ ஓடியே வந்தார். ‘பத்ரமா வாடா தக்குடு!’னு சொல்லபோறார்னு பார்த்தா, ‘வெள்ளிகுடம் பத்ரம்டா!’னு சொல்லி அவர் ‘தர்மகர்த்தா!’னு நிரூபிச்சுட்டுப் போனார்.##
:D :D Enjoyed !
innimae madisar pudaivaiyai parkum podhu un gnabagam dhan varum.
Post the next part soon
வித் ப்ளஷர்.. பேஷா சொல்லிக்கோ... அக்காவுக்கு இந்த அண்ணாவோட பவுஷு என்னன்னு ரொம்ப நன்னா தெரியும். ஊரார் சொல்றதை கேட்டுண்டு என்ன ஒன்னும் தூஷிக்க மாட்டா. சரியா.
அவளுக்கு நான் கல்லானாலும் ஜொள்லானாலும் புருஷனாக்கும்.. நன்னா தெரிஞ்சுக்கோ ;-) ;-)
(ஜொள் அப்படிங்கற வார்த்தை ஒரு ரைம்மிங்க்காக இங்க சேர்த்துருக்கேன். உடனே இதுக்கும் எதிர் கமென்ட் போடப்டாது. சமர்த்தோன்னோ... ;-) )
//இந்தியா வரும் போது உங்களோட இந்த விளக்கம் எல்லாம் அக்கா கிட்ட வாசிச்சி காட்டறேன் சரியா!!//
தக்குடு, என்னாதிது சின்னப்புள்ளத் தனமா இருக்கு?? சில்க் போஸ்ட் மாதிரி நெறய இடுகைகளின் ஸ்கிரீன் ஷாட் எங்க கிட்ட இருக்கு. உனக்கும் பொண்ணு பாக்கறாங்கன்னு கேள்விப்பட்டோம், அப்புறம் உன் இஷ்டம்.. :)
வெங்குட்டு : கவலைப் படாதீங்க, நாங்க இருக்கோம், இந்த தக்குடு பயலின் முகத்திரையை நாம சேந்து கிழிக்கலாம்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Romba naal kazhichu yenaku comment peti open aagi iruku....
Thakkudu..nee periya aalu..ladies vizayam yellam nanna theriyarthu :-)
example kudukavea nee room pootu yosipa nu neenikiren...super aa iruku..
madisar with karchip sorikindu irukira maami photo poturukalaam...
kutties super.
waiting for next part.
பாஸ்டன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அருள் இருக்கிற வரை யாரும் என்னை அசைச்சுக்க முடியாது.
தக்குடு கொடுக்கை ஓட்ட நறுக்கிடுவோம். மடிசாறு கட்டிண்டு வந்தாளே மகராஜின்னு நீ கல்லிடை பஸ்டாண்ட்ல சைட் ராகம் பாடினது நேக்கு தெரியுமே!! ;-)
கோலமும் குட்டீஸும் அழகு. தக்குடு பவனி வரதைப் பாக்க காத்துண்டிருக்கேன்... சீக்கிரம் சொல்லு கோந்தே :)
பிகர்கள் எல்லாம் ‘தாவணி போட்ட தீபாவளி’யாக காட்சி அளிப்பார்கள்
::))))
@ துளசி டீச்சர் - நன்னிஹை!!..:)
@ திவா அண்ணா - தன்யனானேன்!!..:)
@ TRC மாமா - :))பதில் சொன்னா மாட்டிப்பேன்!!
@ சுபா மேடம் - நன்னிஹை!..;)
@ ஆயிலு - ஓக்கே சார்வாள்!..:)
@ வல்லிம்மா - எப்பவுமே தக்குடு சமத்துதான்..;) மாமி படிச்சா நான் காலி!..:)
@ மாதங்கி - வரும்! வரும்!..:)
@ இட்லி மாமி - கிட்டு அடியேன் தான்..:)
@ சித்ரா அக்கா - எதோ ஒன்னு அசத்தினா சரி!..:)
@ பாஸ்டன் நாட்டாமை - டுபுக்குக்கு போட்டியா வண்டி ஓட்டினா கோட்டிதான் புடிக்கும். அவரு மலை 'அண்ணா'மல..:)
@ எஸ் கே - நன்னிஹை பாஸ்!
@ ஷோபா மாமி - இந்த வாரம் அடுத்த பார்ட் வந்துடும்..:)
@ ரஞ்ஜனி - அம்மாவோட டயலாக்கை கேட்டு உங்களுக்கு சந்தோஷமா இருந்துருக்குமே?? தெரியும் எனக்கு!!..:PP
@ பாலு அண்ணா - ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்த மாதிரி இருக்கு!!...;)
@ பத்துஜி - வெள்ளிக்கிழமை வெளி வரும்..:)
@ ஹரிணி - மொதல்ல நீங்க விஷேஷ போட்டோ அனுப்புங்கோ அப்பரம் தான் போஸ்ட் எல்லாம்..;P
@ லதா மாமி - :))
@ VGR - :)) paapomey!!
@ Raks - இல்லைனா உங்க முன்னாடி எல்லாம் தாக்குபிடிக்க முடியுமா?? காலிப்ளவர் கோப்தா கண்ணுலையே நிக்குது..:)
@ செளம்யா - ரொம்ப சந்தோஷம் அக்கா!..:)
@ ஜெய்ஷ்ரீ அக்கா - ஞாபகம் வந்தா சரி!..;)
@ RVS anna - :))
@ நாட்டாமை - கழக விதிகளை மீறாதிங்கோ நாட்டாமை!..:)
@ 'Tech'ops மாமி - //cmmt peti open aagi irukku// அதான் மெட்ராஸ்ல மழை கொட்டர்து..:) மாமி போட்டோ எல்லாம் போட்டா அப்புறம் நான் காலி!..;)
@ கவினயா அக்கா - வெள்ளிக்கிழமையிலே வெளி வரும்!..:)
@ சக்தி - உங்க பேரை சொன்னாலே தெம்பு வரும் மனசுக்கு!..:)
நல்லா எழுதியிருக்க..நல்ல வந்திருக்கு. குழந்தைகள் ஃபோட்டோ சூப்பர்.
@ Dubukku - நெஜமாவே போஸ்ட் சுமாராவாவது இருந்தா தான் நீங்க கமண்டுவேள்னு எனக்கு தெரியும். சந்தோஷம் வாத்யாரே!!..:)
Mami and pattu are cute! Well and thats a beautiful nostalogic kolam...
@ Poetry - இன்னிக்கி என்ன ஆச்சுன்னே தெரியலையே தக்குடு!! அதிசயமான ஆட்கள் எல்லாம் உன்னோட பொட்டிகடையை எட்டிப் பாக்கறாளே!!..:) இங்கிலிபிஸ் கவிதை! நன்னிஹை!!
நல்லா இருக்கு
குழந்தைகள் சுப்பர்
எங்கண்ணே பட்டுகுருக்கும், சுத்தி போட சொலுங்கோ
‘வெள்ளிகுடம் பத்ரம்டா!’ மாமா சொன்னது சரிதானே.. தக்குடு..!
@ Thangampalani sir - Thanks for the first visit and comment!..:)
@ Gayathri - Thanks for your nice comment madam!..:)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)