என்னடா இது தக்குடு ஊர்ல இல்லாத அதிசயமா சீக்கரமே போஸ்ட் போட்ருக்கானே?னு எல்லாரும் ஆச்சர்யமா இருக்கா? பதிவை படிக்க படிக்க காரணம் புரியும்.
பொதுவா ஒரு ஆத்துல கடைசி குழந்தையா பொறந்தா அதுல பல சிக்கல்கள் உண்டு. நாம என்ன தான் கஷ்டப்பட்டு ஒரு நல்ல காரியம் பண்ணினாலும்(பண்ணினது கிடையாது, ஒருவேளை பண்ணினா)ஆத்துல நம்மை யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. அப்பிடியே கண்டுண்டாலும் 'இந்த சின்னப்பயலோட கார்யத்தை பாத்தேளா"னு தான் கேட்டுப்பாளே தவிர உருப்படியா ஒன்னும் ஒப்பேறாது. உங்களுக்கு மூத்தது அண்ணாவா இருந்தா அது ஒரு மாதிரி, அக்காவா இருந்தா கதை வேற மாதிரி.
எனக்கு வந்து வாய்ச்சது அண்ணாங்கர விஷயம் எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும் (ஆமா! ஆமா!னு வம்புக்கு சப்பு கொட்டிண்டு சுபா மேடம் சொல்லும் பதில் எனக்கு கேக்கர்து). அந்தப் பயலை பத்திதான் இந்த பதிவு.
உங்களுக்கு எல்லாம் பதிவர் அம்பியை (மூத்த பதிவர்!னு பீலா விட்டுண்டு அலையர்து தனி கதை) தான் தெரியும், தக்குடுவோட அண்ணாவை தெரியாது இல்லையா?
தந்திரம் பண்ணர்துல நம்பியார், சிரிக்கர்துல வீரப்பா, குசும்போட பேசர்துல அசோகன் ஆனா ஆத்துலையும் சரி வெளிலயும் சரி ஒரு எம்ஜிஆர் இமேஜ் இவனுக்கு (நம்ப கீதா பாட்டி அம்பத்தூர்ல அடிக்கர விசில் சத்தம் தோஹா வரைக்கும் கேக்கர்து). ஸ்கூல் படிக்கர காலத்துல சாயங்காலம் ஆத்துக்கு வந்தா வெளில விளையாடவே போக மாட்டான். அவனுக்கு கை,கால் & ட்ரெஸ்ல துளி அழுக்கு ஆகக் கூடாது, அதே மாதிரி எந்த காயமும் படாமா சக்கரகட்டியா உடம்பை பாத்துப்பான். கேரம்,செஸ்,சைனீஸ் சக்கர் இந்த மாதிரி உடம்புல படாத விளையாட்டா விளையாடுவான். எதுவும் இல்லைனா ஒரு புஸ்தகத்தை வெச்சுண்டு உக்காசுண்டுருவான்.
வாதாபி & வில்லாளன்...:)
தக்குடு அப்பிடி கிடையாது, ஸ்கூல் பையை வாசல இருந்தே ஆத்துக்குள்ள “சார் போஸ்ட்!” மாதிரி தூக்கி போட்டுட்டு 'ப்ளவுஸ்' சங்கரன்,’மாலாடு’ பாலாஜி,ரவிக்கு,ஹரிக்குட்டி,’மூஞ்சூர்’ மகேஷ்,’கிடுகிடு’கிரி,‘ரொட்டி சால்னா’ சேகர், கிச்சாகுட்டி,'சக்கப்பழம்' ஹரீஷ் இவாளோட விளையாட போயிடுவேன். நமக்கு எல்லாம் போட்டு இருக்கும் வெள்ளை கலர் ‘செளம்யா’ ப்ராண்ட் பனியன் மஞ்சக்கலர் ஆனா தான் ராத்திரி தூக்கமே வரும்.குறைஞ்சபட்சம் ஒரு ரத்தக் காயமாவது உடம்புல இருந்தா தான் சாப்பாட்ல கை வைக்கும் வீரப் பரம்பரை. தெரு தண்டர்துல எவ்ளோ பிசியா இருந்தாலும் சாப்பாடு டையத்துக்கு டாண்!னு வீட்ல ஆஜர் ஆயிடுவேன்.
நோகாமா நொங்கு திண்கர்துல எங்க அண்ணா மன்னன். தெரு முழுசும் இருக்கர எல்லா மாமிக்கும் தக்குடு செல்லப்பிள்ளைனு உங்க எல்லாருக்குமே தெரியும், அதனால நவராத்ரி சமயத்துல சுண்டல் கலெக்ஷன் ரொம்ப மும்மரமா நடக்கும். எங்க அண்ணா ஒரு ஆத்துக்கு கூட வரமாட்டான் ஆனா ஆத்துல இருந்த மேனிக்கே 50% சுண்டலை என்கிட்ட இருந்து தந்திரமா வாங்கி ஆட்டையபோடுவான். 'அலமேலு மாமியாத்துக்கு போனியா?' 'சுந்தரா மாமியாத்துக்கு போனியா?'னு ப்ராஜக்ட் மேனேஜர் மாதிரி வக்கனையா என்கிட்ட கேப்பான். 'செல்லம்மா மாமியாத்துக்கு ரெண்டாம்தரம் போ ல, அவாளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், ஒன்னும் சொல்லமாட்டா!னு ரெண்டாம் தடவை வேர அனுப்பி வெப்பான். நான் இப்போ இருக்கர மாதிரியே அப்போவும் கள்ளம் கபடமே தெரியாது, பைத்தியம் மாதிரி போய் வாங்கிண்டு வந்து அவனுக்கும் குடுப்பேன். 8 - 12 கிளாஸ் வரைக்கும் அவன் (ரொட்டி சால்னாவுக்கு ஆசை பட்டு) NCC-ல எல்லாம் இருந்தான். லொங்கு! லொங்கு!னு 2 மணி நேரம் “பீச்சே மூட், ஆகேசலேகா ஆயேமூட்!”னு பரேட் பண்ணினா 2 ரொட்டி கிட்டும், அதுல பாதி ரொட்டி டிபன் பாக்ஸ்ல போட்டு எனக்கு கொண்டு வருவான் (இல்லைனா நான் எதுலையும் பங்கு குடுக்கமாட்டேன்).
அந்தப் பய போட்ட பழைய ஸ்கூல் யூனிபார்ம் தான் எனக்கு வரும். அவன் துணியை எல்லாம் அழுக்காக்காம அப்பிடியே வெச்சுருந்து எனக்கு தள்ளி விட்டுடுவான். அவனுக்கு எப்போதும் புதுசு கிடைக்கும், பைத்தார தக்குடுவுக்கு எப்போதுமே பழைய ட்ராயர் தான். ‘உன்னோட சந்துல என்ன அருமாமனையா இருக்கு? தார்பாய்ல தான் உனக்கு ட்ராயர் தெய்க்கனும்!’ னு எங்க அம்மா என்னை சத்தம் போடுவா, ஏன்னா ஒரு ட்ராயர் போட்டு சரியா 2 மாசத்துல நமக்கு டிக்கில போஸ்ட் ஆபிஸ் ஓப்பன் ஆயிடும். ஆரம்பத்துல 15 பைசா போஸ்ட் கார்ட் சைஸ்ல இருக்கும் ஓட்டையை, ஒரே நாள்ல 10 ரூவா கவர் போஸ்ட் பண்ற சைஸுக்கு பெரிசாக்கி அடுத்த ட்ராயருக்கு அடி போடுவேன்.
நான் எட்டாம் கிளாஸ் படிச்சுண்டு இருந்த போது திடீர்னு ஒரு நாள் அவனுக்கு மதுரை காலேஜ்ல படிக்க இடம் கிடைச்சுருக்குனு சொல்லி மதுரை அனுப்பி வெச்சுட்டா, முதல்ல ஒன்னும் தெரியலை, அன்னிக்கி ராத்திரியே ஒரே அழுகையா வந்துடுத்து, நித்யம் அவனை 2 மிதியோ நாலு அடியோ குடுத்துட்டு அவன் மேல ஏறி படுத்துண்டாதான் எனக்கு தூக்கமே வரும் (வேற யாரையும் உதைக்கவும் முடியாது ஏன்னா, “கழுதை மிதியை கழுதைதான் தாங்க முடியும்!”னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா). அவன் இல்லைனவொடனே எதோ மாதிரி ஆயிடுத்து. 10 நாளைக்கு சாப்ட உக்காசுண்டா அவன் இல்லாட்டாலும் அவனோட சாப்படர தட்டையும் எனக்கு பக்கத்துல எடுத்து வெச்சுப்பேன், படுக்கையும் அதே மாதிரி தான். 'ஒளியும் ஒலியும்'ல தர்மத்தின் தலைவன் படத்துலேந்து 'தென்மதுரை வைகை நதி' பாட்டு வந்தா பயங்கர பீலிங் ஆகி கண்ணுல ஜலம் வந்துடும்.
எங்க அப்பா அம்மாவுக்கு அடுத்த படியா என் மேல அளவு கடந்த பாசம் வெச்சுருக்கும் ஒரு ஜந்து அவன் தான். குணமா/அனுசரனையா எல்லாம் அவனுக்கு பேச தெரியாது, எதாவது ரெண்டாம் தடவை கேட்டாளே சல்லு!புல்லு!னு எரிஞ்சு விழுவான். ப்ளாக்லதான் எதோ காமெடி பீஸ் மாதிரி வளைய வந்துண்டு இருக்கான். நான் அதெல்லாம் கண்டுக்கவே மாட்டேன். "அவன் எப்பிடி இருந்தாலும் அவன் தான் உன்னோட அண்ணா!"னு அம்மா சொன்னதுதான் மனசுல இருக்கு. 'டேய் அண்ணா!'/பெரிய மாப்ள!னு எப்போதும் மரியாதையாதான் அவனை கூப்பிடுவேன்.
எள்ளு ஒன்னை எட்டா பங்கு வெச்சுடுவான், துட்டு விஷயத்துல ஆசான் பயங்கர உஷார்! ஆனா நான் படிப்பு முடிச்சு வேலை தேட ‘பூலோக சொர்க்கமான’ பெங்களூருக்கு போன போது 4 சட்டை பேன்ட்,ஒரு துண்டு, 2 மயில்கண் வேஷ்டி வித் அட்டாச்சுடு அங்கவஸ்த்ரம் (வித் அட்டாச்சுடு ப்ளவுஸ் மாதிரி),ஒரு கோபிகட்டி,பஞ்சபாத்ரம்(சந்தி பண்ண) மட்டும் தான் கொண்டு போனேன். மத்தது எல்லாம் "அண்ணா பற்று" தான்..:)
இப்போ எதுக்கு அண்ணா புராணம்?னு கேக்கர்து புரியர்து! டிசம்பர் 1 தான் எங்க அண்ணா பூலோகத்துல உதிச்ச நாள். நான் நிச்சயமா கம்பர் கிடையாது, ஆனா அவன் எனக்கு என்னிக்குமே சடையப்ப வள்ளல் தான்! காசா பணமா? கூகுளாண்டவர் குடுத்த ஓசி ப்ளாக்ல அவனை பத்தி நாலு வரி எழுதலாம்னு தோணித்து.சொல்லியாச்சு!
டேய் அண்ணா! ஹேப்பி பர்த்டே டா! சந்தோஷமான மனசோடையும், ஆரோக்கியமான உடம்போடையும், பிக்கல் பிடுங்கல் இல்லாம தீர்க்காயூசா நீ இருக்கனும்னு உம்மாச்சி கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்.
44 comments:
//டேய் அண்ணா! ஹேப்பி பர்த்டே டா//
சூப்பரெய்ய்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் அண்ணா :)
//பொதுவா ஒரு ஆத்துல கடைசி குழந்தையா பொறந்தா அதுல பல சிக்கல்கள் உண்டு. நாம என்ன தான் கஷ்டப்பட்டு ஒரு நல்ல காரியம் பண்ணினாலும்//
ஆமாம் பாஸ் ஆமாம்!
விடுங்க பாஸ் இந்த அண்ணா’ஸ்க்களே இப்புடித்தான்
டெரர் அட்டாக்கா இருக்கும்ன்னு ஆர்வப்பட்டு வந்தா கடைசியில ஒரே தெய்வீக டச்சிங்க் பண்ணி ஆஹா ரைட்டு!
சே என்ன ஒரு பாசம்..:)
தட்டெடுத்து வச்சது கேட்டு கண் கலங்கிடுச்சுப்பா..
அம்பிக்கு வாழ்த்துக்கள்..தம்பிக்கும் வாழ்த்துக்கள்.
suuuuuuuuuuper thakkudu Boss!!! :D unga style-a romba azhagaa happy b'day sollirukkel!! :)
[unga anna per-a solli solli vaaththiyaar-ellaam ungala adichchatha paththi sollavey illayee??!!]
naanum unga annaa-kku Very Happy b'day sollikkaren!! :)
Very well written!!!
கலக்கல்! அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!!
தக்குடு
அட்டகாசமான பி.நா வாழ்த்துக்கள், சத்தியமா இதுவரை நான் பாத்த B'day Greeting லேயே இதுதான் பெஸ்ட். காமடியும் செண்டியும் கலந்து சூப்பரா இருக்கு.
BTW, Happy B'day Ambi.
//பொதுவா ஒரு ஆத்துல கடைசி குழந்தையா பொறந்தா அதுல பல சிக்கல்கள் உண்டு// ரொம்ப சரி, கடேசியா பொறந்துட்டு நான் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது, ஊர்ல இருக்குற எல்லாரும் அம்மாகிட்ட, மாமி உங்க மொதோ பையன் இருக்கற இடமே தெரியாது, இது (என்னைத்தான்) இப்படி ரோடே கதின்னு கெடக்கேன்னு சொல்லி அடி வாங்கி கொடுப்பா..
பழைய ட்ரெஸ் : இதுதான் இருக்கறதுலயே கொடுமை. இதுல எனக்கு உச்சபட்ச மனித உரிமை மீறல் நடந்திருக்கு - தீபாவளிக்கு ஒரே துணி எடுத்து ரெண்டு பேருக்கும் சட்டை தைப்பாங்க, நமக்கெல்லாம் ஒரு சட்டை 1 வருசம் கிழியாம இருந்தா அதுக்கே தனியா ஒரு தீபாவளி கொண்டாடலாம், ஆனா பெரிசு இருக்கே அது துணிய அவ்ளோ பத்திரமா பாத்துக்கும். ஒரு டிசைன்ல சட்டை ஒருவருசமா போட்டு கிழிச்சிட்டு அதே டிசைன்ல Used சட்டை வந்தா எப்படி இருக்கும் எனக்கு??
//‘உன்னோட சந்துல என்ன அருமாமனையா இருக்கு? தார்பாய்ல தான் உனக்கு ட்ராயர் தெய்க்கனும்!’ னு எங்க அம்மா என்னை சத்தம் போடுவா, // இந்த டயலாக்கின் காப்பி ரைட் எங்கம்மா கிட்டதான் இருக்க்குன்னு இவ்ளோ நாள் நெனச்சிக்கிட்டு இருந்தேன் - Same Blood
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
டேய் அண்ணா! ஹேப்பி பர்த்டே டா! சந்தோஷமான மனசோடையும், ஆரோக்கியமான உடம்போடையும், பிக்கல் பிடுங்கல் இல்லாம தீர்க்காயூசா நீ இருக்கனும்னு உம்மாச்சி கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்.
..... Thats so sweet! Convey our birthday wishes to your aNNaa!
ஹாப்பி பர்த்டே அம்பி / தக்குடு அண்ணா
(வாவ்...சூப்பர் பாசமலர் போஸ்ட்... நானும் என் உடன் பிறப்பும் கூட இப்படி அடிக்கடி சென்டி ஆய்டுவோம்... முக்கியமா இந்த மாதிரி நாள் கிழமைல... கலக்கிட்ட தக்குடு)
நகைச் சுவையில் ஆரம்பிச்சு பாசத்துல முடிச்ச பதிவு அருமையா இருக்கு தக்குடு ...
சிரிக்க சிரிக்க எழுதி பாசக்கண்ணீர் வர வச்சுட்டே ..இந்த மாதிரி தம்பி கிடைக்க அண்ணன்கள் கொடுத்து வச்சிருக்கனும்....தம்பிடா...
thakkudu, kadaikutty-oda kashtam ennanu enakkum theriyum. indha anna-lam epdiyo perfect gentleman-nu amma appa kitta per vaangi namakku vera high standard set panniduva!! Anyways, naduvula anga anga onna pathi poi sollindaalum anna pathi touching-a ezhudhi enna onnum solla vidama pannita. my birthday wishes to your anna too.
இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாவ் அட்டகாசம் தக்குடு. உன்னத்தனை சமத்து ஆருக்கு வரும். சமத்து சக்கரக்கட்டி அண்ணாவுக்காக ஒரு பாசமலர் பதிவு. வடுவூர் ராமா லக்ஷ்மணா படத்தை போட்டே பாரு அதுலதான் உன்னோட அறிவொளி பட்டொளி வீசி பாரெங்கும் பறக்கறது.
எனக்கெல்லாம் பர்த்டே வந்தா இதுபோல எழுத தம்பி இல்லையேன்னு ஒரே அங்கலாய்ப்பா இருக்கப்பா.. நீ ஷேமமா இருக்கணும். ;-)
அம்பின்னாவுக்கு ஒரு ஹாப்பி பர்த் டே!!! ;-)
கலக்கிட்ட தக்குடு!!!!!!!!!
Happy birthday to your pasamalar =))
//(வித் அட்டாச்சுடு ப்ளவுஸ் மாதிரி//
அஃப் கோர்ஸ், ஒரு ஆங்கிள்லே பார்த்தே அண்ணா கூட ஒரு அட்டாச்ட் ப்ளௌஸ் மாதிரி தான்.
ப்ளௌஸ் இல்லாம ஒத்தரை பாத்துட்டு, பாத்துண்டே இருக்கமுடியுமோ !!
ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு ஸமானஹ. என்று வசனம்.
இந்த தக்குடுவுக்கு இது மாதிரி ஒரு அண்ணா வந்ததற்கு ஈரேழு ஜன்மத்துலே புண்ய காரியம்
செஞ்சுருக்கணும்.
தக்குடுவும் தக்குடுவோட ப்ராதாவும் ( ப்ரா இல்ல ) நீடுழி வாழ அந்த பெருமாளைப் ப்ரார்த்திக்கிறேன்.
மீனாட்சி பாட்டி.
http://pureaanmeekam.blogspot.com
தக்குடு... கண்ணு கலங்கிடுச்சு. சூப்பர் பதிவு. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படியே ஒற்றுமையா சந்தோஷமா இருக்க இதயபூர்வமான வாழ்த்துகள்!
அம்பிக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
me last konthea...not only dress..school /colleage poonalum akka paru...iva anu volda (akka peru Anu) thankga tanea..nu solluvaa..both studied in same school and colleage.
yena taan irunthalum nama arivu avvaluku varaathu...muthathu mula ilayathu kaalai..nu yenga amma solluva. naan thirumba mutha pillai chella pillai, illaya pillai yedupaar kai pillai nu counter dialog adipen :-)
unooda B'day wishes super....convey my wishes to ur anna........
unoda Blog remided my chilhood...yenakum akka school la irunthu chocalate yellam kondu vanthu taruva..anna naan angeyea saapitu vanthuduven...
ippavum yenkathula ava dress taan yeanku varum. oru naalum naan avala Akka nu kupita historyea kidaiyathu........
yenkathu la antha blade vachiruka nu thitu vangarthu akka taan..yena naan dressaa kizhika maaten...because i will be always in ...screat :-)
'Techops' mami
Comedyaa aarambichu sentiyaa mudichuta superaa irrukku. Ithukku thaan boss wait and see nu yesterday mail potiyaa...:)) kalakitaa poo. ambikku birthday wishes sms pannitane...
//ஏன்னா ஒரு ட்ராயர் போட்டு சரியா 2 மாசத்துல நமக்கு டிக்கில போஸ்ட் ஆபிஸ் ஓப்பன் ஆயிடும்.//
pazhasu pottunda ippadi thaan.. paavam thakkudu..:((
//ஆரம்பத்துல 15 பைசா போஸ்ட் கார்ட் சைஸ்ல இருக்கும் ஓட்டையை, ஒரே நாள்ல 10 ரூவா கவர் போஸ்ட் பண்ற சைஸுக்கு பெரிசாக்கி அடுத்த ட்ராயருக்கு அடி போடுவேன்.//
Ithu typical thakkudu buthi...:)))
Cheers,
Subhashini
thats really a nice way of wishing ur brother. A comedy post with sentimental touch.
//8 - 12 கிளாஸ் வரைக்கும் அவன் (ரொட்டி சால்னாவுக்கு ஆசை பட்டு) NCC-ல எல்லாம் இருந்தான். லொங்கு! லொங்கு!னு 2 மணி நேரம் “பீச்சே மூட், ஆகேசலேகா ஆயேமூட்!”னு பரேட் பண்ணினா 2 ரொட்டி கிட்டும், அதுல பாதி ரொட்டி டிபன் பாக்ஸ்ல போட்டு எனக்கு கொண்டு வருவான்.//.
My sister and me also joined NCC in school days to relish the yummy parrota and chalna they give. :)))))
Cho chuweet thakkudu :) Ennakum thambri.. nu onnu poranthu irukke Hmm...
Neer adichu neer vilagumam ba..ithana athu !!
Wish you many more happy returns of this day Ambi !!
பொதுவா ஒரு ஆத்துல கடைசி குழந்தையா பொறந்தா அதுல பல சிக்கல்கள் உண்டு. நாம என்ன தான் கஷ்டப்பட்டு ஒரு நல்ல காரியம் பண்ணினாலும்(பண்ணினது கிடையாது, ஒருவேளை பண்ணினா)ஆத்துல நம்மை யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. அப்பிடியே கண்டுண்டாலும் 'இந்த சின்னப்பயலோட கார்யத்தை பாத்தேளா"னு தான் கேட்டுப்பாளே தவிர உருப்படியா ஒன்னும் ஒப்பேறாது. உங்களுக்கு மூத்தது அண்ணாவா இருந்தா அது ஒரு மாதிரி, அக்காவா இருந்தா கதை வேற மாதிரி.
superta kannu enakkunnu ezuthinaa maathiri irukku
Happy birthday to anna ambi(vathaapi)
Wish ur brother a very happy birthday
you too have a blog!! surprise for me! This is my first time here. Wow! Kalakiteenga. Anna loouku thappadha thambi. Super! :))))
Happy Birthday ambi sir!
--SKM
இராம லக்ஷ்மணா மாதிரி நீங்க இரண்டு பேரும் சிரஞ்சிவியா சீரும் சிறப்புடனே
வாழ்ந்து பெத்தவாளுக்குப் பெருமை சேக்கணும்
சுப்பு தாத்தா
Dear Thakkudu, another master piece from thakkudu. comedy and sentiment rendaiyum within 2 parakulla change panni yelutharthu onnum avloo easy kedaiyaathu and i saw the live reaction in my mom's face. 10 seconda varaikkum kolanthai maathiri sirichundu iruntha avaalooda kannulenthu thediernu oreyy jalamaa vanthuruthu..:( yenga mamavukku(ammavoda anna)call panni 10 nimisham pesinathukku apparamthan normal aanaa. yennoda mattum 6 times intha postai read pannina, innum how many times read pannuvanu yennala sollamudiyaathu(naanum thaan..;)). convey our birthday wishes to that lucky anna also..:)
Ranjani iyer
டேய் அண்ணா! ஹேப்பி பர்த்டே டா! சந்தோஷமான மனசோடையும், ஆரோக்கியமான உடம்போடையும், பிக்கல் பிடுங்கல் இல்லாம தீர்க்காயூசா நீ இருக்கனும்னு உம்மாச்சி கிட்ட nanum பிரார்த்தனை பண்ணிக்கறேன்.
சூப்பர் தக்குடு.
இது போன்ற பாசக்காட்சிகளை நான் 'முப்பத்தியாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்' படத்துல கூட பாத்தது கிடையாது தெரியுமா? உன் பதிவை படிச்சு உணர்ச்சி வசப்பட்டு ஒடனே எங்க அக்காவுக்கு போன் போட்டு 'நீ காலேஜ் படிக்கறச்ச ஊர்ல உள்ள தெருவெல்லாம் பெருக்கிட்டு எனக்கு அன்பாக் கொடுத்தியே ஒரு பழைய தாவணி அதை கோவத்துல அன்னிக்கு நான் கிழிச்சு போட்டதுக்கு மன்னிச்சுக்கோடி யக்கா' ன்னு ரொம்ப சென்டியா சொன்னேன். அவ ரொம்ப குழம்பி போய் 'ராங் நம்பர்' ன்னு சொல்லி போனை வச்சுட்டா. :-))
அம்பிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஆஹா சென்டியா தாக்கிட்ட போல...நல்லா எழுதியிருக்க...கல்க்கு
அம்பி - பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
Romba samatha anna Birthday ku wishing post potrukiye,convey my wishes to ur anna!!
Thakkudu.....emotional??? Very nice post. En prarthanaiyum saerattum...also eppavum this should stay the same-nu prarthikkaraen!
Aaththuala kadaikkuttiyaa porandha kashtam paththi enakku puriyaadhu..aanaal mooththadhukkum sakala kashtangalum irukku...edhu panninaalum'onna paarththu adhu rendum paazhaa poradhugal, periyavala lakshnamaa nadandhukka vaendaamaa-nnu' oru dialogue adikkadi varum theriyumaa?
rotfl!!! thakkudu, amazing post :))))) dinner podhu padikka edhayavadhu thorapom nu vandha ivlo posta!!!!!
என்ன தக்குடு கோந்தே..... படா ஃபீலிங்ஸா இருக்கே!!!!!!
ஹேப்பி பர்த் டே டு உங்கண்ணா.
ம்ம்ம் பீலிங்க்ஸ்......
தக்குடு கூட நல்ல போஸ்ட் போடறா மாதிரி இருக்கு! :P
@ ஆயிலு - நன்னிஹை!!..:)
@ முத்தக்கா - நன்னிஹை!!..;)
@ மாதங்கி - ரொம்ப சந்தோஷம்பா!!..:)
@ சுகந்தி - சொல்லியாச்சு!!..:)
@ பாஸ்டன் நாட்டாமை - ரொம்ப சந்தோஷம் அண்ணா! டெம்ப்ளேட் பின்னூட்டம் போடும் எங்க நாட்டாமையே இவ்ளோ சொன்னது உண்மைலயே சந்தோஷம்!!..:)
@ சித்ரா அக்கா - நிச்சயமா அக்கா!!..;)
@ இட்லி மாமி - எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்!!..:)
@ பத்துஜி - நன்னிஹை!!..:)
@ விபா அக்கா - ஓசி டீ பார்ட்டியே கமண்ட் எல்லாம் போட்டு இருக்கே!! அதிசயம் தான்...:)
@ Lk - ரைட்டு boss!!..:)
@ RVS அண்ணா - என்ன அண்ணா இப்பிடி சொல்லிட்டேள், தக்குடு உங்க தம்பி தான்..:)
@ மின்னல் - :)) ஓக்கெய்ய்! ஓக்கெய்ய்!!
@ சுப்பு தாத்தா - எங்க மீனாட்சி பாட்டி ஒன்னும் இப்படி சொல்லமாட்டா, அவாளோட பேரை ரிப்பேர் ஆக்காதீங்கோ!!..:P
@ கவினயா அக்கா - அதுதான் வேணும் அக்கா!!..:)
@ 'Tech ops'மாமி - அது என்ன ரகசியம்? சொல்ல கூடாதா??..;P
@ சுபா மேடம் - :)) நீங்கதான் அம்பி கட்சியாச்சே, தக்குடுவுக்கு அதிசயமா சப்போர்ட் பண்ணறேள்!!..:)
@ ஜெய்ஷ்ரீ அக்கா - ஓஒ! நீங்களும் பரோட்டாவுக்கு பரேட் பண்ணின கோஷ்டியா??..:PP
@ செளம்யா அக்கா - தத்துவம் எல்லாம் நன்னதான் இருக்கு, அடி வாங்கினவனுக்கு தான் தெரியும்...:)
@ TRC மாமா - நம்ப ரெண்டு பேர் கதையும் ஒன்னு தானே மாமா எல்லாத்துலையும்...:)
@ SKM - வந்தது அம்மாவா? பொண்ணா? :) சந்தோஷம் அக்கா!!..;)
@ மீனாட்சி பாட்டி - இதுதான் எங்க பாட்டியோட வார்த்தை....:)
@ ரஞ்ஜனி - அச்சோ!! அம்மா இப்போ பரவா இல்லையா?? உங்க அன்புக்கு தக்குடு கடமைபட்டு இருக்கு!!..:)ஆசிர்வாதம் அண்ணாவுக்கு மட்டும் தானா??..:(
@ VGR - சந்தடி சாக்குல எங்க அண்ணாவை டா போட்டு கூப்டாச்சு. காப்பி பேஸ்ட்ல நீங்க தான் கிங்கு!!..:)
@ இட்லி மீனா அக்கா - கிலுகிலுப்பா எதாவது படம் பேர் சொல்லி இருக்கலாம். மொட்டை படம் தான் கிடைச்சுதா?..:))
@ டுபுக்கு அண்ணா - சந்தோஷம் வாத்யாரே!!..:)
@ ராஜி அக்கா - நன்னிஹை!..:)
@ லதா மாமி - உங்க ஆசிர்வாதம் போல!! அப்போ நீங்க அக்கா சொக்கா போலருக்கு!!..:)
@ கேடி - வாங்கோ கேடி! செளக்கியமா!!..:)
@ துளசி டீச்சர் - ஆமாம்..:0
@ திவா அண்ணா - நக்கல்தான் உங்களுக்கு..:P
ஹாப்பி பர்த்டே அம்பி .
இந்த மாதிரி ஒரு தம்பிக் குழந்தை இருக்கே. அதுக்கே பகவான் கிட்ட நன்றி சொல்கிறேன்.
தக்குடு பைய நீயும் நூறாயுசு அண்ணா ,பிறந்த நாள் வாழ்த்தூகள் சொல்லிண்டு சந்தோஷமா இருக்கணும்ராஜா.
நானும் கடைசி எங்காத்துல. தம்பியுடையான் அம்பி ரொம்ப லக்கி .
ஒரே பாசமலர் போஸ்ட் போ . :)
ஷோபா
@ valli amma - Unga aasirvathamthaan yenakku venum!!..:)
@ shoba madam - Namba yellam oru settu appo!!..:))
dear thakudu
comedy aga ezhudi irundhalum touching agavum irundathu. super.
enge annanin response?
balu vellore
Dear Thakkudu, //ஆசிர்வாதம் அண்ணாவுக்கு மட்டும் தானா??..:(// yenna ipdi keetutel? life time subscription maathiri yenga ammavooda full aasirvaathanum ungalukkuthan.Poona pogarthunnu unga annavuku athisayamaa aasirvatham panni irukka avlootha...:)
Ranjani Iyer
@ balu anna – Roomba santhosham anna! Rumba naalaikku apparam inga kaanarthu!!..:)
@ Ranjani - amma is soooo sweet!!..:)
Unga annakku ennoda pirantha naal vaazhthukkal late agave koorum vazhakkathai vaithiruppathu Harini Sree! :P
@ harini - yenna ivloo sikkaram vanthuteel? next December 1'st neenga vanthaalum naan aasarya padamaaten....;PP
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)