Saturday, November 20, 2010

மூஞ்சி புஸ்தகம்

இதை எந்த புண்ணியவான் கண்டுபிடிச்சானோ!!! அட ராமா! இதுல எல்லாரும் படுத்தரபாட்டை பாத்தேள்னா தாங்கமுடியாது. அடுத்த வேளை சாப்பாடுக்கு வழி இருக்கோ இல்லையோ எல்லாருக்கும் மூஞ்சி புஸ்தகத்துல ஒரு பக்கம் இருக்கு. தத்துனூண்டுலேந்து ஆரம்பிச்சு தாத்தா பாட்டி வரை எல்லாரும் இதுல அடிக்கற லூட்டி இருக்கே! அம்ம்ம்ம்மாடி! 2004 -ல நாலு பொழப்பத்த வெள்ளைக்கார துரைகள் கண்டுபிடிச்ச இந்த நெட்வொர்க் இன்னிக்கி லோகத்துல இல்லாத இடமே இல்லை.




ஸ்டேட்டஸ் மெசேஜ் போடர்த்துக்கு அவனவன் படும் அவஸ்தையை பாத்தா சிரிப்பு தான் வருது. நச்'னு ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போடர்து ஒன்னும் நாயுடு ஹால்ல போய் கலர் எல்லாம் பாக்காம எலாஸ்டிக்கை மட்டும் இழுத்து பாத்து சாமான் வாங்கிண்டு வர்ர மாதிரி ஈசியான விஷயம் கிடையாது. அதுலையும் நாம போட்ட மெசேஜை பாத்துட்டு குறைஞ்சது ஒரு 10 பேராவது வந்து காறி துப்பிட்டு போனா தான் நம்ம மனசுக்கு திருப்தியா இருக்கு. கல்லிடைல அழகான பிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்ட மாதிரி வர வர இந்த ஸ்டேட்டஸ் மெசேஜுக்கும் கடுமையான பஞ்சம் வந்துடும் போலருக்கு. என்னோட தோஸ்த் ஒருத்தன் 3 இட்லி ஒரு வடை நு அவனோட முகப்புப்பக்கத்துல போட்டுருந்தான். என்ன்ன்னடா இது?னு வடிவேல் குரல்ல அவன்கிட்ட கேட்டா, காத்தால உடுப்பி ஹோட்டல்ல அவன் சாப்பிட்ட டிபனாம் அது. வித்தியாசமா இருக்கட்டுமேனு போட்டானாம். எப்பிடியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!..:) இந்த மாதிரி யோசிக்கத் தெரியாதவா எல்லாரும், பக்கத்தாத்து பாட்டி வழுக்கி விழுந்ததுலேந்து ஆரம்பிச்சி, எதிர்த்தாத்து மாட்டுக்கு பிரசவத்துல கன்னுகுட்டி பொறந்தது வரைக்கும் எல்லாத்தையும் போடறா!

காளை மாடு காசிக்கு போனாலும் கட்டி தான் உழுவாளாம், அதை மாதிரி இங்க வந்தும் இந்த கவிதை சொல்லறவாளோட தொல்லை தாங்க முடியாது. ஒரு வாரமா சிரைக்காத தாடியை பேனாவால வருடிண்டே வேப்பமரத்து உச்சிக் கிளையை வெறிச்சு பாத்துண்டே எழுதின கவிதைனு முதல் வரியை வாசிச்சோன்னே சொல்லிடலாம். எதோ சந்தோஷமான கவிதைனா கூட சகிச்சுக்கலாம், "என்னை ஏன்ன்ன் பிடிக்காதென்றாய்!"னு ஒப்பாரி வெக்கறவாளை பாத்தாளே, நம்ப கவுண்டமணி மாதிரி 'சத்ய சோதனை'னு சொல்லும்படியா ஆயிடும்.

தேங்காய் இல்லாமல் தேங்காய் சாதம் செய்வது எப்படி? எலுமிச்சை இல்லாமல் எலுமிச்சை சாதம் செய்வது எப்பிடி?னு சமையல் மாமிகள் சவுண்ட் இங்க(யும்) கொஞ்சம் ஜாஸ்தி. எலுமிச்சை இல்லாத சாதம்னா அப்போ அது மஞ்சப்பொடி சாதம் தான்!னு கமண்ட் போடலாம்னு கூட மனசுக்கு தோனும், இருந்தாலும் பத்தினி தெய்வங்களோட சாபத்துக்கு ஆளாக வேண்டாம்னு பேசாம இருந்துடுவேன். லோகம் பூராவே லெமன் சாதம் இப்பிடித்தான் இருக்கும் போலருக்கு!னு நினைச்சுண்டு இந்த மஞ்சப்பொடி சாதத்தை டப்பர்வேர்ல(Tupper ware) கட்டிண்டு போய் ஆபிஸ் மைக்ரோஓவன்ல சூடு பண்ணி சாப்பிடும் அவாத்து அப்பாவி ரங்கமணிகள் உண்மைலேயே கர்மவீரர்கள் தான்.

ராத்திரி முழுசும் தூங்காம கண் முழிச்சு யோசிச்சு ஒரு விஷயம் போட்டதுக்கு அப்புறம் எவனாவது ஒருத்தன் வந்து அழகா கமண்ட் போட்டுட்டு, அடுத்து வரக் கூடியவா எல்லாரும் அந்த கமண்டுக்கு 'லைக்'நு க்ளிக் பண்ணும் போது அந்த கடை மொதலாளியோட வயத்தெரிச்சலை பாக்கர்த்துக்கு கண் கோடி வேண்டும். ஒரு லெவல்ல வெறுத்துப் போய் அந்த மொதலாளி, “அவனோட கமெண்டுக்கெல்லாம் லைக் போடாதேடி!”னு சொல்லும் போது நம்மால சிரிப்பை அடக்க முடியாது.



பிக்காஸால அக்கவுண்ட் இல்லாதவா எல்லாரும் மூஞ்சி புஸ்தகத்தை அக்காஸா மாதிரி உபயோகப்படுத்திண்டு இருக்கா. அவாளோட நாத்தனார் கல்யாணத்துல நர்த்தனம் ஆடினதுலேந்து, புளியோதரை சாப்டுட்டு நயாகரால கை அலம்பின போட்டோ வரைக்கும் எல்லாத்தையும் இதுல போட்டுடுவா. US-ல இருக்கும் என்னோட ஒரு தோழி, தோழினு சொல்லர்தை விட உடன்பிறப்புனே சொல்லலாம். அவாளோட அக்காஸால சூரியகாந்தி பூ, ரோஜாப்பூ போட்டோ மட்டும் தான் இருக்கும். “ஆத்து மனுஷாளை வரிசையா நிக்க வெச்சு, ‘ஸ்மைல் ப்ளீஸ்!’னு ஜிப்பா போட்ட ஒரு போட்டோக்ராப்பர் மாமா சொல்லும் போது பாதி கண்ணை மூடிண்டு உங்காத்துக்காரா போஸ் குடுத்த போட்டோ ஒன்னு கூட இல்லையா உங்கிட்ட?”னு நான் மானம் கெட்ட கேள்வி கேட்டும் இன்னைய தேதி வரைக்கும் ஒரு போட்டோ போடலை அந்த அமுக்கு. இன்னோரு சமத்துக்குடம் அவனோட 2 வயசு போட்டோ ஒன்னை போட்டுட்டு, எப்பிடி இருக்கு? எப்பிடி இருக்கு?னு என்கிட்ட ஓயாம கேட்டுண்டே இருந்தான். “கழுதை குட்டியா இருக்கும் போது ரொம்ப அழகா இருக்குமாமே? அதை பத்தி நீ என்ன நினைக்கரை?”னு கேட்டதுக்கு அப்புறம் சத்தம் இல்லாம இருக்கான்.
உன்னோட தோழி அவளோட போட்டோவை பத்தி கமண்டி இருக்கா, பாக்க வா தக்குடு!னு என்னோட இன்பாக்ஸுக்கு FB-லேந்துஒரு மெயில் வந்தது. அங்க போய் க்ளிக் பண்ணினா ஒரு பெரிய்ய்ய்ய காண்டாமிருகம் போட்டோ வருது. அப்போ இதுதான் உன்னோட போட்டோவா?னு கேக்கனும் போல இருந்தது எனக்கு..:)

இவ்ளோ இம்சை இருந்தாலும் சில சமயம் நன்னாவும் இருக்கு. நமக்கு தெரிஞ்ச ரெண்டு பொம்ணாட்டிகள், “காலெஜ்ல நீ சைட் அடிச்ச பையனுக்கு கல்யாணமாம்டீ!” “தீபாவளிக்கு என்னடி பண்ணினை?” “நான் ஒன்னும் பண்ணலைடீ! போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் பக்கத்தாதுல எதிர்த்தாலுலேந்து வரும் ஓசி ஸ்வீட்டை வெச்சே ஓட்டலாம்னு இருக்கேன்டீ!” “அப்பிடியே உனக்கு வரர்தை இங்க கொஞ்சம் தள்ளி விடுடி!”னு அவாளுக்குள்ள மாத்தி மாத்தி பேசின விஷயம் எல்லாம் நோகாம படிக்கும் போது பலபேருக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு. இருந்தாலும் தக்குடுவுக்கு பொதுவா ஊர்வம்பே பிடிக்காதுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும். அதனால நான் இதெல்லாம் படிக்கவே மாட்டேன். அதுவும் போக எனக்கு இந்த ஸ்டேட்டஸ் மெசேஜ், தத்துவம் இதுலெல்லாம் ஞானம் கிடையாது.



குத்துவிளக்கின் கையில் அகல்விளக்கு...:)

(குறிப்பு - எல்லாருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்! அதிர்ஸம் பொரி எல்லாம் பக்கத்தாத்ல இருக்கும் தக்குடு மாதிரியான சின்னகுழந்தைகளுக்கும் குடுத்துட்டு நீங்களும் சாப்டுங்கோ!)

34 comments:

ஆயில்யன் said...

//இந்த கவிதை சொல்லறவாளோட தொல்லை தாங்க முடியாது///

நொம்ப கரீக்ட்டு!

//பிக்காஸால அக்கவுண்ட் இல்லாதவா எல்லாரும் மூஞ்சி புஸ்தகத்தை அக்காஸா மாதிரி உபயோகப்படுத்திண்டு இருக்கா

இல்லியே நான் நெண்டு போட்டோத்தானே ராசா வைச்சிருக்கேன்! :)

//குத்துவிளக்கின் கையில் அகல்விளக்கு...:)//

யாரு வூட்டு குத்துவெளக்கு பாஸ்?

ஆயில்யன்
ப்ரம் http://www.facebook.com/aayilyan மூஞ்சிபுக்லேர்ந்து!

BalajiVenkat said...

///தக்குடுவுக்கு பொதுவா ஊர்வம்பே பிடிக்காதுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும்/// என்ன கொடும இது... பொய் சொல்ல ஒரு வரம்பே இல்லையா நோக்கு....

BalajiVenkat said...

ஆஹா வடை போச்சே .... அதும் திருக்கார்த்திகை அன்னிக்கி .... :(

BalajiVenkat said...

///கழுதை குட்டியா இருக்கும் போது ரொம்ப அழகா இருக்குமாமே///

ஆமாம் கொழந்தே கழுதை குட்டிய இருக்கறச்சே நன்னா தான் இருகும்மாம் .... :P

Prasanna said...

நானும் இப்படித்தான் ஊர் வம்பே புடிக்காது - (பக்கத்து வீட்டை எட்டி பார்த்துக்கொண்டே டயிப் பண்ணது ஹிஹி)

பரிசல்காரன் said...

//20004 -ல நாலு பொழப்பத்த வெள்ளைக்கார துரைகள் கண்டுபிடிச்ச //

இந்த ஸ்பெக்ட்ரம் மேட்டருக்கு அப்பறம் எதெதுக்கு எத்தனை சைபர்ங்கறதே மறந்துடுத்து பாருங்கோ..!

எஸ்.கே said...

நான் இப்பத்தான் புதுசா அதில சேர்ந்திருக்கேன்! என்ன பண்றதுன்னே தெரியலை! அதில இருக்கிறது கற்றுக்கிறதுக்கே நாளாகும் போல!

எஸ்.கே said...

இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்!

Sowmya said...

அற்பனுக்கு வாழ்வு வந்தா..அர்த்த ராத்திரில கூட குடை புடிப்பான் - இப்படி தலைப்பு வெச்சிருக்கலாம் தக்குடு.. :) Facebook ஆ அது எங்கே இருக்கு? --

Face it - is the indirect msg of face book ?

Harini Nagarajan said...

Naidu hall vishiyam ellam ungalukku yepdi theriyum??? onnum sari illai. Athu mattum illama intha deepavaliki neenga panninatha vera yaaro rendu pengal panninatha ezhuthi irukarathu aniyayam. :P ponaa porathu kaarthigai thirunaal vaazhthukkal!

Matangi Mawley said...

"Farmville" vittuttele!!

en friends nerayaa per- engaaththu maadu paal karanthuthu-nnu pesindiruppaa! facebook account illaatha naal-la naan romba confuse aaiduven... ippo thaan puriyarathu!!

ellaame correct thaan... naamalum antha kumbal thaan!

Anonymous said...

//காத்தால உடுப்பி ஹோட்டல்ல அவன் சாப்பிட்ட டிபனாம் அது. வித்தியாசமா இருக்கட்டுமேனு போட்டானாம். எப்பிடியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!..:) //
ஹா ஹா. மூஞ்சி புத்தக ஸ்டேட்டஸ் மெஜேஜ் போட நானும் அப்பப்போ தலைய பிச்சுண்டு இருந்திருக்கேன்.

எலுமிஞ்ச சாதம் பரா சூப்பர். தக்குடு டச்ச்ன்னா இது தான்.

/பிக்காஸால அக்கவுண்ட் இல்லாதவா எல்லாரும் மூஞ்சி புஸ்தகத்தை அக்காஸா மாதிரி உபயோகப்படுத்திண்டு இருக்கா. //

அக்காஸா நன்னா இருக்கே.

//“கழுதை குட்டியா இருக்கும் போது ரொம்ப அழகா இருக்குமாமே? அதை பத்தி நீ என்ன நினைக்கரை?”னு கேட்டதுக்கு அப்புறம் சத்தம் இல்லாம இருக்கான்.//
கிளாஸ்

//அவாளுக்குள்ள மாத்தி மாத்தி பேசின விஷயம் எல்லாம் நோகாம படிக்கும் போது பலபேருக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு.//

ஹா ஹா.

ரூம் போட்டு யோசிச்ச தக்குடுக்கு ஒரு ஓ போடு.

ரொம்ப லேட்டான தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிட்டு அப்புறம் கார்த்திகை திரு நாள் வாழ்த்துக்கள் சொல்லும்
- மின்னல்

Anonymous said...

@ Prasanna,

//நானும் இப்படித்தான் ஊர் வம்பே புடிக்காது - (பக்கத்து வீட்டை எட்டி பார்த்துக்கொண்டே டயிப் பண்ணது ஹிஹி) //

Class!!!

Kavinaya said...

எங்கிட்ட மூஞ்சி பொத்தவம் கெடையாது, அதனால நான் பதிவப் படிக்கலை! கு.பொ. படமும் சிநேகா படமும் அழகா இருக்கு :) கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள் தக்குடு!

Raks said...

amukku,samathu kudam - yengerdhu dhan ungalukku ipdillam yosikka mudiyudho! Nalla per vacheenga ponga!! Nakkal panna ungalukku solliya tharanum :)

தக்குடு said...

@ ஹரிணி - அந்த ரெண்டு பொம்ணாட்டிகள் சம்பாஷனை நம்ப சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்காவுக்கும் Raks-அக்காவுக்கும் நடுல நடந்தது...:) ஆனா நான் அதை படிக்கவே இல்லை..:)

Subhashini said...

என்ன ஒரு மொழி பெயர்ப்பு தக்குடு தொடரட்டும் உன் நக்கலும் நையாண்டியும்..:)))

vichujj said...

pon

vgr said...

good post!! suthama expect pannala...ennada moonji pusthagam na nan edo nanna illada book pathi solla porenu pathen...unexpected surprise...

"அடுத்த வேளை சாப்பாடுக்கு வழி இருக்கோ இல்லையோ எல்லாருக்கும் மூஞ்சி புஸ்தகத்துல ஒரு பக்கம் இருக்கு." -- punch dialogue...sooperu....idai padithu thirunthatum facebook ile vazhum makkal.

on retrospect...vazhkaya facebook la vazha koodathu seri...vera edula vazhanam? thakkudu pondra nyanasthargal badil kooralam :)

தக்குடு said...

@ ஆயிலு - யார் வீட்டு குத்துவிளக்குனு எல்லாம் தெரியாது, ஆனா கூகிள் இமேஜஸ்ல குத்துவிளக்கு! குலவிளக்கு! நு எது டைப் பண்ணினாலும் ஸ்னேகா படம் தான் வருது...:)
(இப்ப எல்லாரும் டைப் பண்ணி பாப்பாங்க பாருங்க ஆயிலு!)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தக்குடுவுக்கு பொதுவா ஊர்வம்பே பிடிக்காதுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும்//
எப்பா சாமி... பொய் சொல்ல அளவு சலவெல்லாம் இல்லையா உங்க ஊர்ல... ஹா ஹா...


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... மூஞ்சி பக்கத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும் என்ன relation ... ஒண்ணு விட்ட அக்கானு சொன்னா வழக்கு போடுவேன் ஆமா....

சிநேகா படத்த போட்டு வயத்தெரிச்சல கொட்டிகிட்ட ... ஏன்னா? வீட்டுல ஒரு சிநேகா விசிறிய வெச்சுட்டு என் பாடு எனக்கு தான் தெரியும்...ஹ்ம்ம்....

பின்னூசி குறிப்பு:
சிவனேன்னு இருந்த என்னை மிரட்டி மூஞ்சி பக்கம் ஆரம்பிக்க சொன்னது சாட்சாத் இந்த தக்குடு தான் எனும் உண்மையை இந்த ப்ளாக் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்...

RVS said...

ஊர்வம்பு அடிக்காத தக்குடுக்கு..
மூஞ்சி புஸ்தக வரலாற்றிலேயே உன்னோடதுதான் ரொம்ப லட்சணமா இருக்காமே! ரெண்டு மாமி மூஞ்சிக்கு கையை முட்டுக்கொடுத்து பேசிண்டு போனா.. அகல் விளக்கேற்றும் குத்து விளக்கு நன்னா இருந்தது. ;-) ;-) நோக்கு பிடிச்ச சிலுக்கு பாட்டு போட்ருந்தேனே.. பார்த்தாயோ கோந்தே... ;-)

Anonymous said...

Dear thakkudu, ungalukku uurvambu pidikkathunu sonna athai yaarum oththukkamaataa! akkaasaa,manjappodi sadam,kandamirukam,amukku,samathukodam usage yellam typical thakkudu style..:) yepdi yepdi, kuthuvilakunu search pannina sneha varaala ungalukku?..:P naidu hall veera ulla vanthurukku. we enjoyed ur post. one week post yen podalai?..;(

Ranjani iyer

Kavitha said...

Facebook!!!!!!!!!! Super :)

lata raja said...
This comment has been removed by the author.
lata raja said...

Sorry Thakkudu, the earlier comment was intentially deleted.
Super post...nanna sirichchaen..and the follow up comments are equally superb. Aanaal paavam enga Jeyashriyum RAKSum..edhukku avangala iththanai vambu pannrae?
Idhukku maela, kaarthaala pozhudhu vidiyaradhae moonji posthagaththula dhaan...
onnum illainnaalum chumma oru naalu thadavai news feed pakkaththai maelum keezhum scroll panni paarkkara alaadhi(vambu padikkum) inbam thani.

தக்குடு said...

@ லதா மாமி - டிலிட் எல்லாம் பண்ண வேண்டாமேபா! தக்குடு ஹாஸ்ய பாவத்தோடதான் உங்க கமண்டை எடுத்துக்கும், அதனால கவலை வேண்டாம். எங்க ஜெய்ஷ்ரீ& Raks இல்லை நம்ப ஜெய்ஷ்ரீ அக்கா & Raks அக்கா.....:)

அமுதா கிருஷ்ணா said...

குத்து விளக்கு, அகல் விளக்கு நைஸ்...

Krishnaveni said...

மூஞ்சி புஸ்தகம்...))))))) super comedy name......)))))

தக்குடு said...

@ பாஜி - :))

@ பிரசன்னா - ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துட்டு கலக்கல் கமண்டும் போட்டுடேளே!!..:)

@ பரிசல் - பெரிய தலை எல்லாம் இந்த குட்டி பையன் கடை பக்கம் வந்தது மிக்க சந்தோஷம்!..:) நன்னா இருந்துதுன்னா அடிக்கடி வாங்கோ!

@SK - கவலையே படாதீங்கோ! சீக்கரம் கெட்டு குட்டிசுவரா போய்டலாம்..:)

@ செளம்யா அக்கா - அக்காவுக்கும் அதுல ஒரு பக்கம் உண்டுன்னு கேள்விப்பட்டேன்!!..:P

@ மாதங்கி - கமண்ட் பண்ண வரவாளுக்கு கொஞ்சம் விட்டு வைக்க வேண்டாமா அதான் சொல்லலை..:)

@ அனாமிகா - மின்னல் எல்லம் வந்துட்டு போயிருக்காங்க போலருக்கு??..:) நன்னிஹை!!

தக்குடு said...

@ ராக்ஸ் அக்கா - நீங்க மட்டும் தான் வந்துருக்கேள், உங்க தோஸ்த்(jeya akka) எங்க காணும்??..:)

@ சுபா மேடம் - நன்னிஹை!!..:)

@ விச்சு சார் - உங்க கமண்டே புரிலை தலைவா!!..:(

@ VGR - புக் எல்லாம் படிச்சு அதை பத்தி பதிவு போடர்துக்கு மேல் மாடில நிறையா சரக்கு வேணும்(உங்களை மாதிரி). Me சாதாரண மொளகா பஜ்ஜி கடை மொதலாளி!!..:)

@ இட்லி மாமி - எல்லாத்துக்கும் தனி தனியா போஸ்ட் போட்டா அப்புறம் இது 'அதே கண்களோட' பாகம் ரெண்டானு கேப்பா எல்லாரும்..:P

@ RVS - காய்ச்சல்னு சொல்லி ஊரை ஏமாத்தின்டு சிலுக்கு பாட்டு போடும் அப்பாவி RVS அண்ணா!! நம்ப ரெண்டு பேரை பத்தியும் மாமிகள் தான் பேசிப்பா..:) ஸ்னேகா போட்டோ பத்தி நீங்க ஜொள்ளுவேள்னு எனக்கு தெரியுமே!!..:)

@ ரஞ்ஜனி - நிஜம்ம்ம்ம்மா எனக்கு ஊர் வம்பே பிடிக்காதுப்பா!! நம்புங்கோ! எதோ உங்க எல்லாருக்கும் நாட்டு நடப்பை எல்லாம் சொல்லனுமேனுதான் பக்கதாது சுவர்ல காதை வெச்சு கேக்க வேண்டி இருக்கு!..:)

@ இங்கிலீஷ் கவிதை - நன்னிஹை!!

@ அமுதா மேடம் - நன்னிஹை!!,,:)

@ வேணி மேடம் - :))

Madhavan Srinivasagopalan said...

comedy piece..
nice way of writing.

தக்குடு said...

@ கவினயா அக்கா - மாப்பு மன்னிப்பு! குத்துவிளக்கை எல்லாருக்குமே பிடிக்கும்!..;0

@ மஹாதேவன் - முதல் வருகைக்கு நன்னிஹை, உங்க முழுபேரையும் டைப் பண்ண ஒரு நாள் ஆகும் போலருக்கு!..:) பாஸ்போர்ட்லயும் இதே பேர்தானா??( US/UK போனா வெள்ளக்கார இமிக்ரேஷன் ஆபிசர் தொலஞ்சான்)

பத்மநாபன் said...

// எனக்கு இந்த ஸ்டேட்டஸ் மெசேஜ், தத்துவம் இதுலெல்லாம் ஞானம் கிடையாது.//

மொகர புத்தகத்துல தத்துவமா போட்டு புரிய வேண்டியவங்களுக்கு புரியவைக்கிறதில கில்லாடிக்கு ஞானமில்லையா...

போகப் போக தக்குடுத்துவங்கள் இன்னமும் இறுக்கப்படும்....

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)