அப்ப்ப்ப்ப்ப்பாடி! ஒரு வழியா ஊருக்கு போய்ட்டு திரும்பி வந்தாச்சு. ஓஓஓஓ! தக்குடுவை இன்னும் காணுமே!!னு மனசுக்குள்ள தவிச்சு போயிருந்தாலும், யாராவது கேட்டா? ஓஓ! அந்த சமத்து இத்தனை நாள் இல்லாம நிம்மதியா இருந்தது!னு சொல்லிண்டே எதாவது ஊர் வம்பு கிட்டுமானு எல்லாரும் ஆசையா ஓடி வருவேள்னு தக்குடுவுக்கு நன்னா தெரியும். நெறையா எல்லாம் விஷயம் ஒன்னும் தேறலை, ஆயிர கணக்குல ரூபாயை செலவு பண்ணி ஊருக்கு போய்ட்டு 2 போஸ்டுக்கு கூட மேட்டர் தேத்த முடியலை, ம்ம்ம்ம்! என்ன பண்ண முடியும் கலி முத்தி போய்டுத்து.
கல்லிடை காஸ்போபொலிடன் சிட்டில எல்லா மாமிகளும், அவாளோட பொண்களும், ஒரு ஓஒரமா அவாத்து மாமாக்களும் செளக்கியமா இருக்கா. வாய்க்கால்லையும் ஆத்தங்கரைலையும் தண்ணி கரைபுரண்டு ஓடர்து. என்ன ஒரே குறைனா தெருக்கள் எல்லாம் ஒரு கலகலப்பே இல்லாம இருக்கு. தக்குடு! நீ என்ன சொல்ல வராய்?னு நம்ப ஷோபா அக்கா மாதிரி யாரும் நடிக்க மாட்டேள்னு நான் நம்பறேன்..:)
போன வருஷம் தோஹா கிளம்பி போகும்போதே யார்டையும் அவ்ளோவா சொல்லிண்டு எல்லாம் வரலை, ஏன்னா எங்க தெருல நெறையா மாமா & மாமிகளுக்கு தபோபலம் ஜாஸ்தி, அப்புறம் என்னோட ப்ளைட் தோஹால இறங்கர்துக்கு பதிலா ஆப்கானிஸ்தான்ல லான்ட் ஆயிடும். அதானால பாதி பேர் இன்னும் எங்கிட்ட ‘பெங்களூர்ல அப்பரம் என்ன விஷேஷம்?னு தான் கேட்டா. நானும் ‘பெங்களூருக்கு என்ன! நித்யம் விஷேஷம்தான்!’னு சமாளிச்சுட்டேன். இருந்தாலும் சில மாமிகளுக்கு தெரியும், அவாள்ட்ட எல்லாம் வசமா சிக்கினேன்.
ஒன்னொன்னும் ஒரு ரகமா இருந்தது. ஒரு பயலுக்கும் தோஹா!னு ஒரு ஊர் இருக்கர்தே தெரியலை. 2006 ல காசை எல்லாம் கரியாக்கி asain games எல்லாம் நடத்தியும் ஒரு பிரயோஜனமும் இல்லை. முத்தமிழையும் வளர்க்கும் 'மானாட மயிலாட'வோட பைனலை தோஹால வெச்சு நடத்த சொல்லலாம்னு இருக்கேன். அப்பரம் தோஹா பேரை சொன்னாலே எல்லாம் 'ஆஹா'!னு சொல்லுவா. தோஹா US- ல இருக்கா கனடால இருக்கானு ருக்கு மாமிதான் வாயை பிடிக்கினா மொதல்ல. அந்த மாமியோட அக்கா புள்ளை US-ல இருக்கான், அண்ணா நாட்டுப்பொண் கனடால இருக்கா அதனால அந்த மாமிக்கு அந்த ரெண்டு இடம் தான் வெளிநாடுனு ஒரு எண்ணம். நானும் முகத்துல ஒன்னும் காட்டிக்காம 'ரெண்டுக்கும் நடுசென்டர்ல இருக்கு'னு சொல்லிட்டேன். (இப்ப என்ன கனடால இருக்கர நம்ப இட்லி மாமிட்டயா போன் பண்ணி கேட்டுண்டு இருக்கப் போறா ருக்கு மாமி).
புதுசா உள்ள வீடா இருந்தா ‘குண்டல கோமா மாமியாத்துக்கு அடுத்தாம், ஸ்டைல் மீனா மாமியாத்துக்கு முந்தினாம்’ நு பிரபலமானவாள வெச்சு அடையாளம் சொல்ற மாதிரி நானும் எல்லார்டையும் 'துபாய்க்கு மிக மிக அருகில்'நு சரவணா ஸ்டோர்ஸ் ஸ்னேகா மாதிரி கை எல்லாம் ஆட்டி ஆட்டி சொல்லவேண்டியதா போச்சு. அந்த சமயம் பாத்து பாகவதர் மாமா வந்து தொலைக்கனுமா! அவர் உடனே, 'தோஹாவுக்கும் துபாய்க்கும் எவ்ளோ தூரம் தக்குடு?' னு அவர் பங்குக்கு ஒரு சந்தேகத்தை கிளப்பினார். அவர்ட்ட போய்ண்டு ' By air 45 மினிட்ஸ், by road 6 hrs நு எல்லாம் விலாவாரியா விளக்கிண்டு இருக்கர்து எல்லாம் ஆகாத காரியம்னு மனசுல பட்டதால ஒரே வரில அவருக்கு பதில் சொன்னேன். துபாய்லேந்து யாராவது 'ஜெய் ஜானகி காந்தஸ்மரணம்'னு கத்தி சொன்னாக்கா தோஹாலேந்து நான் 'ஜெய் ஜெய் ராமா ராமா'னு சொல்லிடலாம் மாமா!அவ்ளோ பக்கம்னு சொன்னதுக்கு அப்பரம் அவர் எந்த சந்தேகமுமே கேக்கலை, பேஷ்! பேஷ்!னு சொல்லிட்டு போய்ட்டார்.
இதுக்கு நடுல மெதுவா கிச்சா மாமா பேச ஆரம்பிச்சார். ‘அந்த ஊர்ல இருக்கர்துக்கு எல்லாம் யோகம் பண்ணியிருக்கனும், என்ன ஒரு ஊரு! என்ன ஒரு க்ளைமேட்டு!’னு அவர் ஆரம்பிக்கவும் எனக்கு பால்பாயாசம் குடிச்ச மாதிரி இருந்தது. கிச்சா மாமாவுக்காவது தோஹா பத்தி தெரிஞ்சுருக்கே!னு நான் சாமாதானம் ஆகர்துக்குள்ள, அதுல மண்ணள்ளி போட்டுட்டார். அங்க எல்லாருமே ஜெகஜோதியா இருப்பாளாமே? எல்லாரும் காத்தாட வளைய வந்துண்டு சதா சர்வ காலமும் பீச்லையே தாச்சுண்டு இருப்பாளாமே?னு ஏகப்பட்ட 'மே' போட்டார். எனக்கு ஒன்னும் புரியலை, கலர் கலராவா?? எங்க ஊர்ல ஒரே கலர்தானே உண்டு. ‘கருப்புதான் நேக்கு புடிச்ச கலரு!’னு குழாய் மைக்கு வெச்சு பாட்டு போடவேண்டிய ஊராச்சே! காத்துகூட போகமுடியாம இருப்பா, இவர் என்னடானா காத்தாட இருப்பா!னு சொல்றாரே?னு எனக்கு ஒரே குழப்பம். மங்களூர்லேந்து பக்கம் இல்லையா?னு அவர் கேக்கவும் எனக்கு புரிஞ்சது. நாசமா போச்சு மாமா! அது கோவா, நான் இருக்கர்து தோஹா'னு சொல்லிட்டு நகர்ந்தேன். இத்தனை வயசுக்கு அப்புறம் உங்காத்து மாமாவுக்கு ‘காத்தாட ஜெகஜோதியா’ இருக்கரவாளை பாக்கனுமாம், ஜெகஜோதியா விசாரிக்கறார் மாமா'னு அவாத்து மாமிட்டையும் மறக்காம பத்த வெச்சுட்டு வந்தேன்.
29 comments:
வாங்க ராசா வாங்க :)
போட்டோஸ் செம கலக்கல்
போஸ்ட் செம சிரிப்பு
ம்ம்ம் பேக் டு பெவிலியன்?
கல்லிடைல ஒரு வேலை சாதிச்சுக்க நினைச்சேன்!
ஆயில்யன் போட்டோஸ்தானே? யாரோ மண்டபத்துல கொடுத்த மாதிரி இருக்கே?
welcome back thakkudu.loved the explanation u have given to the bhagavathar mama reg the distance between dubai and doha.Cant control my laughter.Nice and timely humor.
Wow ! Nice humorous Post. Kallidai nerle parthamathri irukku:) Iam missing ambai & kallidai!Hope you had a pleasant journey!
Lovely post, well written in the own thakkudu's way! Both the pictures are strikingly appealing!
ஒஹொ,சென்னைவந்து தோஹா போயாச்சா. எங்களுக்கெல்லாம் அப்பளம் கொடுத்துட்டு ஓடியாச்சாக்கும்.
இன்னிக்குத் தான் தக்குடு பிள்ளை வரேன்னு சொல்லித்துன்னு நினைத்தேன். இப்ப தோஹாவே போய்ச் சேர்ந்தாச்சு.ஹ்ம்ம்.
பரவாயில்லை இத்தனை குசும்பும் ,சிரிப்பும் பார்க்கமக் கஷ்டமாத்தான் இருந்தது. அதனால் விட்டுடறேன்.
படங்கள் மூலமாக ஊர்பக்கம் கொஞ்சம் நேரம் போய் விட்டு வர உதவி செய்ததற்கு நன்றி.
Welcome back!
தக்குடு.. Welcome Back.
போன இடுகையின் பின்னூட்டத்தில சொன்னத செஞ்சியா?? (என்ன செஞ்சியான்னு கேக்கப் படாது)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
nalla comedy po..
welcome back!!!
Aahaa! Welcome back...Kallidaila mattum illai ella idangalayum oru pudhu ooru paera kaetta Doha- Goa confusion madhiridhaan...
Appa vaai vittu sirichchaen!
அது சரி தக்குடு எல்லா விஷயத்தையும் போட்டேயே எதுக்கு வந்தேன்ற விஷயத்தைச் சொல்லவேயில்லை. கேட்டா புவனா அக்கா கிட்டெ சொல்லிட்டேன் அங்கே கேளுங்கிர.
.அப்பாடா வந்திட்டிங்க ..ஊரில் எல்லோரும் நலம் தானே ...படம் சூப்பர் தக்குடு
Haiiiiiiiiiiya, thakku vanthaaaachu..:) welcome back thakkudu. 40 days paithyam piducha mathiri aayiduthu. uurukku poytu vantha kadai pramaathama irukku. line by line thakkudu stamp..:) as usual friday oru post poduvelaa?? plessss!
Ranjani Iyer
Hei where is the comment I added on wednesday? Vara vara comment ellam thiruttu pogudhaa... very bad very bad
//தி. ரா. ச.(T.R.C.) said...
அது சரி தக்குடு எல்லா விஷயத்தையும் போட்டேயே எதுக்கு வந்தேன்ற விஷயத்தைச் சொல்லவேயில்லை. கேட்டா புவனா அக்கா கிட்டெ சொல்லிட்டேன் அங்கே கேளுங்கிர//
அடப்பாவமே இப்படியெல்லாம் வேற பொய் சொல்ல ஆரம்பிச்சாச்சா? என்கிட்ட ஒண்ணும் சொல்லலங்க... கேட்டா "வம்பி"னு பட்டம் வரும்னு நானும் வாயே தெறக்கல... என்னோட கமெண்ட் வேற காணோம்... அதையும் தூக்கியாச்சு போல... நீங்களே கேளுங்க இந்த ஞாயத்த
புதன் கிழமை நான் போட்ட கமெண்ட் இது... என்னோட மெமரில இருந்து யோசிச்சு மறுபடியும் போட்டிருக்கேன்... இதுவும் காணாம போனா INTERPOL போவேன்... ஆமா சொல்லிட்டேன்...
//ஆயிர கணக்குல ரூபாயை செலவு பண்ணி ஊருக்கு போய்ட்டு 2 போஸ்டுக்கு கூட மேட்டர் தேத்த முடியலை//
அடப்பாவி போஸ்ட் தேத்தவா அவ்ளோ தூரம் உங்க தோஹா பஸ் ஸ்டாண்ட்ல நின்னாலே விஷயம் தேறுமே...
//இப்ப என்ன கனடால இருக்கர நம்ப இட்லி மாமிட்டயா போன் பண்ணி கேட்டுண்டு இருக்கப் போறா ருக்கு மாமி//
ஹி ஹி... எங்க வீட்டுல போனே இல்ல.. ஒன்லி வலை (நெட்... இன்டர்நெட்...)... இப்ப என்ன பண்ணுவீங்க சார்... ஹா ஹா ஹா
தோஹா / கோவா.... ஹா ஹா ஹா... சிரிச்சு சிரிச்சு வயறு புண்ணா போச்சு... அந்த மாமா அட்ரெஸ் குடு உன்னை பத்தி நெறைய சொல்லணும் அவர்ட்ட...
:D :D hope you had a gr8 trip... Ganesh festival 10 days nadakkum neley?? atha paththi ezhuthalaye?
"thapopalan jaasthi"!!! :D LOLz.... ippolaam namla thavira nerayaa perukku thapopalan thaasthiyaathaan irukku!!
saravana stores sneha vaattam!! semma comedy.. :D :D
//ஒரு பயலுக்கும் தோஹா!னு ஒரு ஊர் இருக்கர்தே தெரியலை.//
ஹஹா தோஹாவுல இருக்கரவாளுக்கும் கல்லிடை தெரியவே தெரியாதே.
//நம்ப ஷோபா அக்கா மாதிரி யாரும் நடிக்க மாட்டேள்னு நான் நம்பறேன்..:)//
ஹிஹி நமக்கு நடிக்க எல்லாம் தெரியாதுங்கோ ! நான் பாத்த கல்லிடை பற்றி நான் சொன்னா தக்குடுவுக்கு என்ன ரோஷம் வருது பாரு. :))
Shobha
Not sure if my previous comment was posted. Thanks for visiting my blog, Thakkudu. You hve a funny blog here. So excited to discover the thamizh blogs!
sri
ஆயிர கணக்குல ரூபாயை செலவு பண்ணி ஊருக்கு போய்ட்டு 2 போஸ்டுக்கு கூட மேட்டர் தேத்த முடியலை, ம்ம்ம்ம்! என்ன பண்ண முடியும் கலி முத்தி போய்டுத்து.
Back to form pola. Great post Thakkudu. Aaana mela solla vandhadhu engeyo aarambichi vera madhiri mudicha madhiri irukku. I thought ஆயிர கணக்குல ரூபாயை செலவு பண்ணி ஊருக்கு போய்ட்டு yaarum maatala/set aagala nu solla vandhuttu post thetha mudiyalanu maathina madhiri irukku. Cha indha akka mind voice la namma sonnadha kandupidichuttala ne irukka thambi! Kavala padaadha next time fix pannidalam.
:)))
தக்குடூ... மிஸ்ட் யூ :)
soo cute ithana azhaga irukku unga blog...
andha kadasimamavoda goa , doha confusion super pongo
@ LK - :))
@ ஆயில்யன் - நன்னிஹை!!..:)
@ திவா அண்ணா - என்ன காரியம்னு சொல்லுங்கோ அண்ணா! நீங்க நிச்சயமா சத்கார்யமாதான் பேசுவேள், இங்க இருந்து கூட அடியேனால உங்களுக்கு ஸஹாயமா இருக்க முடியும். மெயில் அனுப்புங்கோ!
@ ஜெய்ஷ்ரீ அக்கா - ரொம்ப சந்தோஷம்பா!!..:)
@ ஜெய்ஷ்ரீ மேடம் - நன்னிஹை டீச்சர்!...:)
@ ராக்ஸ் - நன்னிஹை ராஜி!..:)
@ வல்லி அம்மா - அடுத்த தடவை கட்டாயம் தக்குடு உங்களை பாக்கர்துக்கு வரும்! சரியா!..:)
@ சித்ரா அக்கா - அதுக்கு தானே படம் போட்டதே!!..:)
@ நாட்டாமை - அட போங்கையா! டுபுக்கு அண்ணாச்சி கிட்ட பேசவே முடியலை...:(
@ VGR - நன்னிஹை!!..:)
@ லதா மேடம் - ரொம்ப சந்தோஷம்பா!..:)
@ TRC மாமா - :))
@ சந்தியா மேடம் - எல்லாரும் செளக்கியம் பா!..:)
@ ரஞ்ஜனி - அவ்ளோ சந்தோஷமாபா? சமத்தா இருந்தேளா?
@ இட்லி மாமி - :)) சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்க வம்பி மாமி தான்..:)
@ மாதங்கி - ஆமாம் தபோபலம் ஜாஸ்தி!...:)
@ ஷோபா அக்கா - கல்லிடை தெரியாத வரைக்கும் ஷேமம்!..:)
@ sri- Thanks for ur frst visit. i hope u enjoyed my blog.
@ மதுரம் அக்கா - வில்லங்கமானா இருக்கு உங்க கமண்ட்!!..:)
@ கவினயா அக்கா - :)) நன்னிஹை!!
@ காயத்ரி - ரொம்ப சந்தோஷம்பா!..:)
கல்லிடை..உன் சொல்லிடை சிக்கி சிரிக்க வச்சுதுப்பா...
பாலைவனத்திலிருந்து போய் பச்சை பசேல்லுன்னு பார்க்கறப்ப கண்ணு கூசியிருக்குமே ( ஒர்ரே அர்த்ததில படிக்கணும் )
கோவா....தோஹா....மாமா இப்படி சோகத்தை கெளப்பிவிட்டுட்டாரே....இனி கருப்ப பார்க்கறப்ப எரிச்சல்கூடத்தானே செய்யும்.....
கல்லிடையில் இருந்து ராஜம்மாள் என்ற பெண் என்னுடன் படித்தார்.ட்ரையினில் பாளையங்கோட்டைக்கு படிக்க வந்தார்.சாராள்தக்கர் காலேஜுக்கு..
@ Padbanaban sir - correctuthaan, orey peelings of indiavaa aayiduththu...:)
@ Amutha madam - welcome back madam! i know saara 'tukker'...:P but i don't know that rajam madam.
'தக்குடு ,
உங்கள் பதிவுகளை படித்தவுடன் கல்லிடையை பார்க்க வேண்டும்
போல ஆவலாக உள்ளது .வி.கே. புரத்தில் ,என் பைய்யன் கொஞ்ச
நாட்கள் வேலை பார்த்த சமயத்தில் கல்லிடை வழியாக சென்றிருக்கிறேன் .
படங்கள் அருமை .அப்பள பெருமை வேறு .முடியும்போது உங்கள் ஊரை
பார்க்கவேண்டும்
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)