Friday, June 18, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 5

எல்லாம் நல்ல படியாக சந்தோஷமாக கதை கேட்டு முடிக்கும் வேளையில் ஸ்ரீவத்சன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்

அப்பா! உங்கள்ட ரொம்ப நாளாவே ஒரு விஷயம் சொல்லனுன்னு இருந்தேன். இப்ப சொல்லிட்டா தேவலைனு நேக்கு தோனர்து!னு பீடிகை போட்டான்.

என்னடா சொல்லப்போறாய்?னு கேக்கர மாதிரி அவனை நிமிர்ந்து பாத்தார் வரதாச்சாரி.

நான் ஒரு பொண்ணை விரும்பறேன்பா!னு ஸ்ரீவத்ஸன் ஆரம்பிச்சான்.

என்னடா சொல்றை!னு விஜி மாமி குரலை உசத்தர்துக்கு முயற்சி பண்ணும்போதே, இருடி! என்ன சொல்லறான்னுதான் பாப்போமே! என்பது போல் மாமியை சைகையால் நிறுத்தினார் மாமா.

கோயம்புத்தூர் PSG காலேஜ்ல நான் அப்ப B.E(EEE)3rd year படிக்கும் போது அவள் பர்ஸ்ட் இயர் படிச்சுண்டு இருந்தா!னு சொல்ல ஆரம்பிச்சான் ஸ்ரீவத்ஸன்.

அப்ப நீ 4th இயர் படிக்கும் போது அவள் 2nd இயர் இல்லையா?னு அந்த சமயத்திலும் நக்கல் அடிச்சது நம்ப வைஷு குட்டி.

வைஷூ நீ பேசாம இரு!னு மாமா மெதுவா சொன்னார்.

அவள் கெமிக்கல் இன்ஜினியரிங் ப்ராஞ்ச், ரொம்ப நல்ல பொண்ணுப்பா! பரமசாது! நம்பாத்துகாரா எல்லார் மேலையும் ரொம்ப மரியாதை உள்ள பொண்ணு அவள்!னு ஸ்ரீவத்ஸன் சொல்ல சொல்ல விஜி மாமிக்கு கோவம் வந்தது. என்னடா நினச்சுண்டு இருக்கை மனசுல? ஒரேடியா தலைல தூக்கி வச்சுண்டு குழந்தேளை கொண்டாடினா இப்படித்தான் ஆகும்!னு மாமாவை பாத்து சொன்னாள்.

கெமிக்கல் இன்ஜினியரிங்கா? அதான் உங்களுக்குள்ள நல்ல கெமிஸ்டிரியோ?னு மறுபடியும் வைஷு மெதுவா ஆரம்பிச்சுட்டு அப்பரம் அடி விழுமோங்கர பயத்தில் நிறுத்திட்டாள்.

மாமா எதுவும் பேசாம ஸ்ரீவத்ஸன் மேல்கொண்டு பேசர்துக்கு காத்துண்டு இருந்தார்.

அவளோட பேர் செளஜன்யா, பூர்வீகம் திருக்கோவிலூர் பக்கம். அவளோட அப்பா & அம்மா ரெண்டு பேருமே நல்ல மனுஷாதான். அப்பா சென்ட்ரல் கவர்மெண்ட்ல உத்யோகத்துல இருக்கார். அவாளுக்கும் விஷயம் தெரியாது, இப்போதான் அவளுக்கு சன்மார்ல உத்யோகம் கிடைச்சுருக்கு, ஆனா ஒரே ஒரு விஷயம்...!!னு நிப்பாட்டிட்டு மீண்டும் தொடர்ந்தான், அவள் புளியோதரை கிடையாது அவள் தச்சு மம்மு பார்ட்டி, ஆனா அவாளுக்கு குலதெய்வம் எல்லாம் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள்தான்!னு அவசரமாய் சொன்னான்.

என்னடா நடக்கர்து இங்க? எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்றையேடா!! பெருமாளே!னு வருத்தம் கலந்த குரலில் கொஞ்சம் கண்ணீரோடு விஜி மாமி தன் மனதில் இருப்பதை வெளியில் கொட்டினாள்.

ஷேக்ஸ்பியர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது!னு மாமா ஒரு பெருமூச்சோடு ஆரம்பித்தார். ‘Love is beautiful, amazing, wonderful,...it is the best thing in the world untill it happens to "UR CHILDREN" நு அந்த மனுஷன் சொன்னது சரியாதான் இருக்கு! இப்ப என்னடி ஆயிடுத்து? நமக்கும் அவாளுக்கும் கொஞ்சம்தான் வித்யாசம். களத்துல நாம சக்கரை வாழப்பழ கலவைலேந்து பரிமாற ஆரம்பிப்போம், அவா திருக்கண்ணமுதுலேந்து தொடங்குவா, நாம விஸ்வக்சேன பூஜைலேந்து ஆரம்பிப்போம், அவா கணபதி பூஜைலேந்து ஆரம்பிப்பா. புளியோதரையையே கடைசி வரைக்கும் சாப்டாமா கடோசில நெஞ்சை கறிக்காம இருக்கர்துக்கு நாமளும் கொஞ்சம் தச்சு மம்மு சாப்டர்து இல்லையா? இவனுக்கு தச்சுமம்முதான் இஷ்டம்னா நாம என்னடி பண்ண முடியும். கொஞ்ச கொஞ்சமா நம்பாத்து பழக்கவழக்கம் எல்லாம் சொல்லிகுடுத்துடலாம்!னு மாமா சொல்லி முடிக்கும் போது மாமியும் வைஷூவும் பேச்சு வராமல் அப்படியே ஆச்சர்யமா மாமாவை பாத்துண்டு இருந்தா.

அவாத்துகாராளை வந்து பேச சொல்லுடா ஸ்ரீவத்ஸா!னு சொல்லிண்டே மாமா பெட்ரூமுக்குள்ள போய் ட்ரெஸ் மாத்திண்டு வந்தார்.

அப்பா என்னை மன்னிச்சுக்கோங்கோ!னு சொல்லிண்டே வரது மாமா காலில் விழுந்தான் வத்ஸன். என்னடா கோந்தை! எழுந்துருடா!னு அவனை எழுப்பினார்.

அப்பா நான் சொன்னது எல்லாம் உண்மை கிடையாதுப்பா, உண்மைலையே அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது, உங்க கொழந்தேள் காதலிக்கரா!னு சொன்னா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்!னு சும்மா டெஸ்ட் பண்ணினேன்!னு சொல்லி முடிக்கவும் விஜி மாமி வந்து ஸ்ரீவத்ஸன் காதை பிடிச்சு திருகினாள்.

அதானே பாத்தேன், நம்ப அண்ணாவுக்கு எங்கேந்து இவ்ளோ தைரியம் வந்தது?னு எனக்கே ஆச்சர்யமா இருந்தது, காதலிக்கர அளவுக்கு நம்ப அண்ணா பெரிய ஆளோ!னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்!னு வைஷு நையாண்டி பண்ணினது.

கோந்தை! நான் ஒன்னும் பழைய பஞ்சாங்கம் கிடையாது, கரி இன்ஜின் ரயில்ல போனவா அதுலையே போகனும்னு அவசியம் இல்லை, காலத்துக்கும் அவசரத்துக்கும் ஏத்த மாதிரி எலக்ட்ரிக் ட்ரெயின், மெட்ரோ ட்ரெயின் & புல்லட் ட்ரெயின்ல கூட போகலாம். ஆனா ரயில் தண்டவாளத்துல தான் போகனும்,ரோட்ல ஓட்ட முடியுமா? பாரம்பர்யம் பண்பாடு மீறின கார்யமா இருக்க கூடாது. அதாவது நம்பளோட பாரம்பர்யத்துக்கு பங்கம் வராமா நம்ப கார்யம் இருக்கனும். ரெங்கனாதன் மாமா சம்மதத்தோடதான் உங்க அம்மா கையை நான் பிடிச்சேன். அப்பா அம்மாவை வயத்தெரிய விட்டுட்டு ஒரு வாழ்க்கையை கொழந்தேள் நினைச்சு பாக்ககூடாது!னு மாமா முடிக்கும் போது அப்பாவை பெருமையோடு அவர் குழந்தைகளும், ஆத்துக்காரரை வெட்கம் கலந்த பெருமையோடு விஜி மாமியும் பார்த்தாள்.

விஷமக்கார கண்ணன்! பொல்லாத விஷமக்கார கண்ணன்!னு அருணா சாய்ராம் வரது மாமாவின் நோக்கியா போனிலிருந்து பாடினார்கள். ஹலோ வரதாச்சாரி ஹியர்!னு மாமா போனை எடுத்து பேசினார்.

டேய் வரதா எப்டிடா இருக்கை? நாந்தான்டா உன்னோட பால்ய ஸ்னேகிதன் சீமாச்சு பேசறேன். எப்படியோ கஷ்ட பட்டு உன்னோட நம்பரை புடிச்சுட்டேன்டா!னு இடைவெளி விடாமல் பேசினார் சீமாச்சு என்ற ஸ்ரீநிவாசன்.

டேய் சீமாச்சு! எப்டிடா இருக்கை? எவ்ளோ நாள் ஆச்சுடா உங்கிட்ட பேசி!னு மாமாவும் சந்தோஷமா பேசினார்.

டேய் உன்னோட புள்ளையான்டான் ஜாதகம் ஜெய்ஸ்ரீ மாமி மூலமா எனக்கு கிடைச்சதுடா, என்னோட பொண்ணுக்கு ப்ரமாதமா பொருந்தர்து, நோக்கு சம்மதம்னா என்னோட பொண்ணை பாக்கர்துக்கு எல்லாரும் திருச்சிக்கு வாங்கோ! பொண்ணோட பேர் செளஜன்யா!னு ஸ்பீக்கர் போனில் சீமாச்சு சொல்லவும் மொத்த குடும்பமும் ஆச்சர்யமாக ஸ்ரீவத்ஸனை பார்த்தது.............:)

இந்த சமயத்தில் இந்த கதைக்கு(??!!) ஆதரவு & நேர்மையான பின்னூட்டம் அளித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் தக்குடுவோட பணிவான நமஸ்காரங்கள். இன்னோரு முக்கியமான விஷயம், இந்த கதைக்கு தன்னுடைய குடும்பத்தில் உள்ள எல்லாருடைய பெயரையும் (except our vaishu kutty and seemaachu) உபயோகபடுத்திக் கொள்ள அனுமதி அளித்த சிரஞ்சீவி. வரதாச்சாரி & செளபாக்யவதி.விஜயலெக்ஷ்மி வரதாச்சாரி தம்பதிகளுக்கு இந்த கதையை அன்பளிப்பாக தக்குடு சந்தோஷமா குடுக்கர்து. இந்த கதையில் வருவது போல் வைஷூ மாதிரி படுசுட்டியா ஒரு பொண்கொழந்தையும், தக்குடு மாதிரி சூதுவாது இல்லாத ஒரு பிள்ளக் கொழந்தையும் அவாளுக்கு அனுக்கிரஹம் ஆகனும்னு அப்ரமேயஸ்வாமியை ப்ரார்த்தனை பண்ணிக்கறேன்.

மேலும் ஐயங்கார் பாஷை சம்பந்தமா நிறையா ஆலோசனை சொன்ன என்னோட ‘தோஸ்த்’ VGr-ருக்கும், வல்லி அம்மாவுக்கும், ‘தோஹா’ ஸ்ரீவத்சனுக்கும் தாசன் கடமைபட்ருக்கேன்.

(Note - அடுத்த வாரம் தக்குடுவோட இன்னோரு ப்ளாக்கான உம்மாச்சி காப்பாத்து!ல போஸ்ட் போடப்படும். எல்லாரும் மறக்காம வாங்கோ! சரியா!!)

31 comments:

LK said...

//பாரம்பர்யம் பண்பாடு மீறின கார்யமா இருக்க கூடாது. அதாவது நம்பளோட பாரம்பர்யத்துக்கு பங்கம் வராமா நம்ப கார்யம் இருக்கனும். ரெங்கனாதன் மாமா சம்மதத்தோடதான் உங்க அம்மா கையை நான் பிடிச்சேன். அப்பா அம்மாவை வயத்தெரிய விட்டுட்டு ஒரு வாழ்க்கையை கொழந்தேள் நினைச்சு பாக்ககூடாது!னு ///

excellent thakkudu. this is the most important point .. good work keep it up

LK said...

/காதலிக்கர அளவுக்கு நம்ப அண்ணா பெரிய ஆளோ!னு ஒ//

i liked it

ஆயில்யன் said...

//விஷமக்கார கண்ணன்! பொல்லாத விஷமக்கார கண்ணன்!னு அருணா சாய்ராம் வரது மாமாவின் நோக்கியா போனிலிருந்து பாடினார்கள்.//

LOL :))))))))))

ஆயில்யன் said...

//இந்த சமயத்தில் இந்த கதைக்கு(??!!) ///

ரைட்டு இது கதையா நிசமா அப்படிங்கறதுல கதையாசிரியருக்கே பெரிய டவுட் வந்திருப்பதும் தற்போது நிலவி வரும் சூழலில் உம்மாச்சி காப்பாத்து!ன்னு எஸ்கேப்பு ஆகறதும்

ம்ம்! நடக்கட்டும் நடக்கட்டும் :))))

துளசி கோபால் said...

வண்டி தண்டவாளத்திலேயே ஓடட்டும்.

நல்ல 'கதை'

:-))))

அநன்யா மஹாதேவன் said...

நான் முன்னமே கெஸ் பண்ணினாப்புல இது உண்மைக்கதை தான்னு ப்ரூவ் பண்ணியாச்சு. சந்தோஷம். ஆனா இன்னும் கூட கொஞ்சம் ஓப்பனா உண்மையை ஒத்துண்டு இருக்கலாம். ஜெயஸ்ரீ மாமி ஜாதகம் பொருத்தம் செளஜன்யா.. ஹ்ம்ம்.நடத்து நடத்து.. கேட்டா இல்லவே இல்லைன்னு சாதிப்பே!

பார்த்துக்கலாம்!
மொத்தத்துல ஹேப்பி எண்டிங். சந்தோஷம்.
தக்குடு
கதை ஸ்டார்டிங்ல இருந்து எண்டிங் வரைக்கும் ரொம்பவும் அருமையா போச்சு. நகைச்சுவை நிழலாடிண்டே அருமையான நரேஷன்..
ஜேஜா பத்தின ப்ளாகும் இந்த ப்ளாக்கும் ஆல்டர்னேட் வீகெண்ட்ஸா? :((( ரெண்டும் சைமல்டேனியஸா போடலாமோன்னோ?
என்னமோ!

வல்லிசிம்ஹன் said...

ஓ. முடிஞ்சுபோச்சா.
வரதாச்சாரின்னு யாரு இப்ப எல்லாம் பேரு வச்சுக்கறாங்க:)
சரி தக்குடு சொன்னா ஒத்துக்க வேண்டியதுதான்.
இப்ப என்ன எனக்குப் புரியலைன்னும் சொல்கிறேன்.
வாழைப்பழம் சர்க்கரை எந்தப் பக்கம் சிவன் ஜியா?

ரொம்ப அருமையான தொடர். வரதுமாமா விறுவிறுப்பாக் காதலிச்சுப் பிரமாதமாக் கல்யாணத்தில முடிச்ச மாதிரி,
கதை எழுதின தக்குடுவுக்கும் சீக்கிரமே விவாஹப் ப்ராப்திரஸ்து.

வல்லிசிம்ஹன் said...

நல்ல பொண்ணா நானும் தேடறேன்.

Harini Sree said...

finishing super! mama climax la pinni eduthuttaar! :)

//தக்குடு மாதிரி சூதுவாது இல்லாத ஒரு பிள்ளக் கொழந்தையும் // innuma intha ooru ungala nambindu irukku??? :P

Pepe444 said...

GREAT BLOG MY FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME >> http://artmusicblog.blogspot.com/

Chitra said...

..... நல்ல நகைச்சுவை நடை. super!

Life is beautiful!!! said...

Thakkudu, ithuku munnadi rendu part padikala innum aana itha padichiten. Nalla iruku :)

jeyashrisuresh said...

nice ending thakkudu.
unnoda tamil,especially the iyengar style is very amazing.now a days i am reading so many tamil articles in many blogs.happy to see people are so passionate towards the language. waiting to see more from ur blogs

அப்பாவி தங்கமணி said...

///‘Love is beautiful, amazing, wonderful,...it is the best thing in the world untill it happens to "UR CHILDREN" //
அட அட அட.....

//பொண்ணோட பேர் செளஜன்யா!//
ஐயோ... இது என்ன அலைபாயுதே ரீமேக்ஆ? எப்படியோ சௌஜன்யமா இருந்தா சரி தான்...

To be honest, great. If we read the first part now, we can so much see how your writing style curve gone up and up from then.... congrats.... அடுத்த கதை எப்போ?

அப்பாவி தங்கமணி said...

//ஜெயஸ்ரீ மாமி ஜாதகம் பொருத்தம் செளஜன்யா.. ஹ்ம்ம்.நடத்து நடத்து.. கேட்டா இல்லவே இல்லைன்னு சாதிப்பே!//

இதெல்லாம் சபைல கேக்கலாமோ... என்னம்மா நீ?

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் ஒரு பொண்ணை விரும்பறேன்பா!னு ஸ்ரீவத்ஸன் ஆரம்பிச்சான்

தக்குடு எனக்கு இங்கே வயத்தை கலக்கறது.நம்பி இரங்கலாமா! வல்லியம்மாவேறே பாவம்.

நல்ல படியா கதையை முடிச்சி சுபம்ன்னு சினிமாலே போடறா மாதிரி போட்டு முடுச்சுட்டே.

vgr said...

tkp,

Thanks for the story!! kalakittai.

nallabadiya kadaiyai mudichutai. Arumai.

Sowjanya - duplicate * Sowjanya - Original super. Thandavalathila than rayil odanama...Very funny!!

anju part'il azhaga kadaya mudichurukai. adukum paratukal.

Kanchi varadar anugrahathula seekrame vivaha prapthirasthu.

Ponnu peru vasihnavi ya, sowjanya va, ranjani ya....enna edirparkara :)

கோமதி அரசு said...

கதை அருமை தக்குடு.

பொல்லாத விஷமக்காரகண்ணன் உங்கள் பிராத்தனையை நிறைவேற்றுவான்.

Porkodi (பொற்கொடி) said...

:)))))))) இது வெறும் கற்பனை காவியம்னு நீங்க சொல்லிட்டா அதை நாங்க நம்புவோம்ன்னு நீங்க நம்பறீங்க? ஹைய்யோ ஹைய்யோ.. கதை சூப்பர், நிஜத்துலயும் சௌஜன்யமாவே இருக்கட்டும்! (அம்பி, இந்த கதையை படிச்சு எக்கச்சக்க டென்ஷன்ல இருக்காரோ, கமெண்டே பாக்கறது இல்லியே?)

கவிநயா said...

//ஆனா ரயில் தண்டவாளத்துல தான் போகனும்,ரோட்ல ஓட்ட முடியுமா? பாரம்பர்யம் பண்பாடு மீறின கார்யமா இருக்க கூடாது.//

சூப்பர் தம்பீ!

நினைப்பது கிடைக்க, விரும்புவது கைகூட, வாழ்த்துகள்! :)

siva said...

hmmm...

nice da ambi..
nana eluthi erukkka..anga anga cinema toch thirarthu..annal nalla erukku.

valthukal

பத்மநாபன் said...

ரசிச்சு படிச்சேன் தக்குடு... எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை..பாஷை, கோர்வை,கிண்டல், எல்லாமே இந்த வயசுல இவ்வளவா ? ஆச்சர்ய படவைக்கிறது..வாழ்த்துக்கள்..தொடருங்கள்..

Matangi Mawley said...

nice.. nalla katha.. aanaa ipdi yethaathu vathsan solluvaannu guess panninaen.. aana intha ending guess pannala.. advice kadesila was good... Shakespeare qute panninathu romba poruththamaa irunthathu...

good!

Anonymous said...

Dear Thakkudu, azakaa mudichurukkel kadhaiyai, ungalooda kadhaikku shekespeare yellam vanthurukkanga poolarukku? neenga irukkara yedathukku oru sheikhuthaan varuvaarnu nenachen..:)(jst kdng sariyaa).alrdy yenga amma aahaa! ohoo!nu ungalai thalaila thukindu aaduva, ippo intha end paathathukku apparam keekkavey vendam..:) so next weeklenthu 'Meendum TKP'yaa??..:)

@ VGr - //Ponnu peru vasihnavi ya, sowjanya va, ranjani ya....enna edirparkara :)// ohoo, ranjaniyum listla irukkaa??...:)

Ranjani Iyer

மங்குனி அமைச்சர் said...

அப்ப நீ 4th இயர் படிக்கும் போது அவள் 2nd இயர் இல்லையா?னு அந்த சமயத்திலும் நக்கல் அடிச்சது நம்ப வைஷு குட்டி.///

வைசு வெரி நைசு

தக்குடுபாண்டி said...

@ LK - :)))

@ ஆயில்யன் - சின்னப்புள்ளத்தனமா அங்க என்ன சிரிப்பு??..:))

@ துளசி டீச்சர் - 'கதை'னு போட்டு ஸ்மைலியா போடரேள்??....:))

@ அனன்யா அக்கா - நீங்க என்ன சொல்லறேள்னே நேக்கு புரியலை அக்கா!!..;PP

ஒரு போஸ்ட் போடர்துக்கே முடியாம முழிசுண்டு இருக்கேன்...:)

@ வல்லி அம்மா - வரதாச்சாரியை உங்களுக்கு மெயில் அனுப்ப சொல்லட்டுமா??..:) எங்க சைடு உள்ள ஐயங்கார்கள் அப்படிதான் சாதிப்பா களத்துல. நன்னிஹை!!..:)

@ ஹரிணி - நம்பிதான் ஆகனும் அது அவங்க தலை விதி!..:)

@ பெப்பி - நன்னிஹை...:)

@ சித்ரா அக்கா - நனிஹை அக்கா!

@ மஞ்சு அக்கா - செல்லாது! செல்லாது! ஒழுங்கா பழைய போஸ்ட் எல்லாம் படிச்சுட்டு வாங்கோ!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - என்ன இருந்தாலும் உங்க மாங்கோ ஐஸ்க்ரீம் மாதிரி வருமா??...:)

@ அடப்பாவி அக்கா - நீங்க சொன்னா சரிதான்! வம்பு பேசரர்துல உங்களை மிஞ்ச முடியாதுப்பா!!...:)

தக்குடுபாண்டி said...

@ TRC மாமா - ஒன்னும் பயப்படாதீங்கோ! உங்களுக்கு தெரியாம தக்குடு எதுவும் பண்ணமாட்டான்...:)

@VGr - நான் தான்பா தாங்க்ஸ் சொல்லனும், ஆமா! ஆமா! எத்தனை ரயில் நான் ஓட்டியிருக்கேன் அல்ரெடி!!..:) ஹலோ என்னப்பா எல்லாரும் வந்து ஆசிர்வாதமா அள்ளி விட்டுண்டு இருக்கேள்? மக்களே இங்க ஒன்னும் நடக்கலை இவா எல்லாரும் புரளியை கிளப்பராங்க!..:)

@ கோமதி மேடம் - நன்னிஹை!!..:)

@ கேடி - பத்த வச்சியே பரட்டை!! நெஜம்ம்ம்ம்மா இது கதைதான்!...:)

@ கவினயா அக்கா - என்ன ஒரு வில்லத்தனம்!!..:)

@ சிவா - முதல் வரவுக்கு நன்னிஹை!!..:)

@ பத்பனாபன் சார் - அதானே எங்கேந்து வந்தது??..:)) நன்னிஹை!!

@ மாதங்கி - வாங்கோ மேடம்! //vathsan solluvaannu guess panninaen//அதனாலதான் வத்சன் சொல்லலை..:)

@ ரஞ்ஜனி - வாங்கோ ரஞ்ஜனி, ஷேக்கு அப்பரமா வருவார்..:)உங்க அம்மாவுக்கு தக்குடு செல்லப் பிள்ளைதான்..:) VGr sir சும்மா வம்புக்கு இழுக்கறா நீங்க நம்பாதீங்கோ!..:)

@ மங்குனி - வாருங்கள் மன்னா! நீண்ட நாட்கள் ஆகி விட்டதே நீங்கள் வந்து!..:)

Anonymous said...

ரொம்ப நல்லர்ந்தது. பலே பலே...

Meenakshi Sankaran said...

கலக்கறீங்க தக்குடு....இயல்பான நகைச்சுவை இழையோட கதை சொல்லியிருக்கீங்க. அருமை!

Ram S Rathinam said...

PSG Tech-la Chemical Engg. irukka?

தக்குடுபாண்டி said...

@ bharadhee - Thank you sir!..:)

@ மீனா அக்கா - எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்..:)

@ ராம் அண்ணா - நீங்கதான் கேட்டு சொல்லனும்...:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)