Friday, June 11, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 4

ஸ்ரீரங்கம் போகர்துக்கு திருச்சி ஸ்டேஷன்ல இறங்கிட்டு அங்கேந்து பஸ்ஸு புடிச்சு பிரயாணம் பண்ணினேன். அந்த பொண்ணையே மனசுல நினைச்சுண்டு போனதால எனக்கென்னவோ ப்ராணாயாமம் பண்ணின்டு போகர மாதிரி இருந்தது!னு மாமா உற்சாகமா ஆரம்பித்தார்.

எங்க நரசு மாமா சொன்ன மாதிரியே அவரோட அசிஸ்டெண்ட்டோட ஆத்தை கண்டுபிடிச்சு அவாத்து கதவை தட்டினேன். நான் போயிறங்கின சமயம் காத்தால சமயம் அதனால சுப்புலெக்ஷ்மி அம்மாவோட விஷ்ணு ஸகஸ்ர நாமம்(B side) திருக்கண்ணமுதுல தேனும் கொஞ்சம் சாதிச்ச மாதிரி திவ்யமா கேட்டுண்டு இருந்தது. ஆராமுதன் அண்ணா நரசு மாமா பேரை கேட்டோனே சம்பந்தி உபசாரம் பண்ண ஆரம்பிச்சுட்டார். காலை மட்டும் கொஞ்சம் மடக்கிண்டு இரண்டு கையையும் ஏந்தர மாதிரி வச்சுண்டார்னா ஆராமுதன் அண்ணா பாக்கர்துக்கு சும்மா 'கருங்குளம்' கல் கருடர்தான். அவாத்து மாமி ஐயங்கார் கட்டு கட்டிண்டு தாயார் மாதிரி இருந்தா. வசந்த பரிமளா!னு அழகான நாமதேயம் அவாளுக்கு. நான், வசந்தா மண்ணி!னு கூப்ட ஆரம்பிச்சுட்டேன்.

நோக்கு பூர்விகமே ஸ்ரீவில்லிபுத்தூர்தானா!னு மண்ணிதான் ஜாரிக்க ஆரம்பிச்சா. இல்லை மண்ணி! கரக்டா சொல்லனும்னா மன்னார்குடிதான் என்னோட பூர்வீகம்!னு நான் சொன்னவொடனே ஆத்துக்காரர்ட கேக்காமையே அட்டியல் மாலை கிடைச்ச ஒரு பொம்ணாட்டியோட முகம் மாதிரி அப்படி ஒரு மலர்ச்சி மண்ணி முகத்துல. கேட்டேளா? நம்பாத்து அம்பிக்கு பூர்விகம் மன்னார்குடியாம்!னு பெருமை பொங்க சொன்னா.
(நேக்கு அப்பவே மண்ணியோட பூர்வீகம் என்னனு புடிபட்டுருத்து)

நல்லவேளைடா அம்பி, மன்னார்குடி!னு சொல்லி என்னை காப்பாத்திட்டை, நீ இங்கதான் தங்கப்போரைனு அவள்ட நான் இன்னும் சொல்லலை(அதாவது அப்ரூவல் வாங்கலை) இனிமே கவலை இல்லை!னு ஆராமுதன் அண்ணா மெதுவா என்ட சொல்லிண்டு இருக்கும்போதே, ‘சொர்ர்ர்னு!’னு ஒரு ஆத்து ஆத்தி மணக்க மணக்க ஒரு பில்டர் காப்பியை எடுத்துண்டு வந்துட்டா வசந்தா மண்ணி.

நீ எதோ முக்கியமான கேஸ் பத்தி விசாரிக்க வந்துக்கை!னு மாமா லெட்டர்ல எழுதி இருக்காரே?னு நான் கொண்டு வந்த லெட்டரை படிச்சுண்டே கேட்டார் ஆராமுதன் அண்ணா. நானும் ஆமாம் முக்கியமான ஒரு கேஸ்தான்!ங்கர மாதிரி மண்டையை ஆட்டினேன். காபி டம்பளரை கீழ கூட வைக்கவிடலை அந்த மண்ணி. ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ! ஆகாரம் தயார் பண்ணரேன்!னு சொல்லிட்டு அவாளோட ஆபிஸுக்குள்ள(கிச்சனுக்குள்ல)போய்ட்டா மண்ணி. இந்த மாமா ஆரு?னு கேட்டுண்டே உத்ஸவ மூர்த்தியாட்டம் ஒரு குட்டி குழந்தை வந்தது, கோந்தையோட மாமாடா தேசிகா!னு ஆராமுதன் அண்ணா அந்த பெரியவருக்கு(??!) என்னை அறிமுகம் பண்ணி வச்சார்.

மாமாவோட கதைல இருந்த சுவாரசியத்தால விஜி மாமி, வைஷூ குட்டி, ஸ்ரீவத்ஸன் யாருமே குறுக்க கேள்வி எதுவும் கேக்காம கர்மஸ்ரத்தையா கேட்டுண்டு இருந்தா.

சாயங்காலம்தான் ரங்கனை சேவிக்கர்துக்காக என்னை அழைச்சுண்டு போனார் அண்ணா, ஸ்ரீரங்கம் ஊரோட அழகே அழகுதான். சில பொண்களை போகும் வழில பாத்ததுக்கு அப்பரம், அவசரப்பட்டு அந்த பொண்னை கமிட் பண்ணின்டோமோ?னு சந்தேகம் வர அளவுக்கு எல்லாரும் என்னப்பாரு! உன்னப்பாரு!னு இருந்தா!னு வரது மாமா சொன்னவுடன் விஜி மாமியால் சிரிப்பை அடக்கவே முடியலை. போரும்!போரும்! கதையை மட்டும் சொல்லுங்கோ!னு ஒரு அதட்டல் போட்டா.

தாளராசன் படித்துறைல போய் கை கால் எல்லாம் அலம்பிண்டு அதுக்கப்பரமா நாங்க ரெங்கன் சன்னதிக்கு போனோம், அழகா தாச்சுண்டு அம்சமா இருந்தார் ரெங்கனாதர்.'வகுள பூஷண பாஸ்கரர்' ஏன் இவனோட அழகுல சொக்கிபோனார்னு இப்போதான் புரியர்து!னு ஒரு பிட்டை ஆராமுதன் அண்ணாட்ட போட்டவுடனே அவர் ஆடி போய்ட்டார்.வரதா! நீ கிரிமினல் லாயர்னுதானே சொன்னை, ஆனா நீ பேசர்தை பாத்தா எதோ பெரிய வித்வான் மாதிரினா இருக்கு!னு அண்ணா முடிக்க,மன்னார்குடிகாராளுக்கு ஸ்வாதீனமாவே பெருமாளோட தாஸபாவம் ஜாஸ்தினு!வசந்தா மண்ணியும் சொல்லிட்டு காலரை நிமிர்த்திக்கரமாதிரி புடவையை ஒரு தடவை சரிபண்ணின்டா!னு மாமா விவரித்தார்.

ஒரே பந்துல 2 விக்கெட்டை அவுட்டாக்கின ஒரே பவுலர் எங்க அப்பா மட்டும்தான்!னு வைஷூ கூச்சல்போட்டாள்(வைஷூவுக்கு கொஞ்சம் கிரிக்கெட் பைத்யம் உண்டு).

ஸ்வாமியை சேவிச்சுட்டு வெளில ப்ராகாரத்துக்கு வந்ததுக்கு அப்பரம் அங்க ஒரு மாமாவை பாத்தோம். என்னடா ஆராமுதா! செளக்கியமா இருக்கியா? வசந்தா எப்பிடிமா இருக்கை?னு ரொம்ப கம்பீரமா அந்த மாமா இவாளை விசாரிச்சார்.பக்கத்துல இருந்த அவாத்து மாமிகைல இருந்த தாம்பாளத்துலேந்து ஒரு பழத்தை எடுத்து தேசிகனுக்கு குடுத்துண்டே, இந்த அம்பி யாரு?னு கேட்டார்.எங்க சீனியர் நரசிம்மாச்சாரி மாமாவோட ஜூனியர், ஒரு கேஸ் சம்பந்தமா இங்க வந்துருக்கான்!னு அண்ணா சொன்னார்.

நாங்க பேசிண்டு இருக்கும்போதே ரங்ங்ங்ங்ங்க புரவிஹாரா!னு அழகான முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதி ப்ருந்தாவன சாரங்காவில் ரீங்காரமிட்டது. ரூபக தாளம் தப்பாம இருந்தது. பக்கத்துல எதோ ப்ராகாரத்துல யாரோ பாடரா போலருக்குனு வியூகம் பண்ணின்டேன். என்னடி மைதிலி! ஒன்னோட பொண்ணரசி பாட ஆரம்பிச்சாச்சு போலருக்கு?னு அந்த மாமா மாமிட்ட கேட்டதை வச்சு அவாளோட பொண்ணுதான் பாடரானு நேக்கு புரிஞ்சது.

இதுக்கு நடுல சங்கீதம் முடிஞ்சு அந்த பொண்ணு அங்க வந்தது. சரியா நான் அந்த பொண்ணை பாக்கும்போது அரங்கனோட கோவில் மணி டைண்! டைண்!னு அடிச்சது, ப்ருந்தாவன சாரங்கால பாடினது என்னோட வசந்த ராகம்னு அப்பதான் எனக்கு புரிஞ்சது, என்னை பாத்தவொடனே அவளுக்கும் ஆச்சர்யம் கலந்த வெட்கம். இங்க எப்பிடி வந்தார் இந்த மனுஷர்?னு யோசிக்கர மாதிரி இருந்தது அவளோட கண்.

அம்பி எதுல கெட்டிக்காரன்?னு அந்த மாமா என்னை பாத்து கேக்கும் போது கரக்டா அந்த பக்கமா ஒரு பட்டாச்சார்யார் கைல ஒரு பெரிய வெண்சாமரத்தை கொண்டு போனார். இவர் இதுலதான் கெட்டிக்காரர்!னு சொல்லற மாதிரி அந்த சாமரத்தையும் என்னையும் பாத்துட்டு அந்த பொண்ணு ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சது!னு மாமா சொல்லிமுடிக்கவும்.

டாப் கியர்ல போட்டு கதையை தூக்கிட்டேளே அப்பா!னு ஸ்ரீவத்சன் பெருமையோடு சொன்னான்.

நம்ப மாமா மாமி யாரு?னு சொல்லவே இல்லையே மண்ணி?னு வசந்தா மண்ணிட்ட கேட்டேன். மாமா பேரு ரெங்கனாதன்,திருச்சி மாஜிஸ்ட்ரேடா இருக்கார், அது அவாத்து மைதிலி மாமி, பக்கத்துல இருக்கர்து அவாளோட மூனாவது பொண்ணு விஜி!னு மண்ணி சொன்னதுக்கு அப்பரம்தான் அந்த மாமாவுக்கு 'மஹாராஜா' மிக்ஸி மாதிரி மூனு பொண்ணு இருக்குங்கர விவரமே புடிபட்டது. விஜி கட்ட கடோசி மினி மிக்ஸ் ஜார்!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்.

நம்பாத்து பாட்டிக்கு இப்போ உடம்பு பரவால்லியா?னு ஆராமுதன் அண்ணா மாமிட்ட விசாரித்தார். அம்பிக்கு பூர்வீகம் எதுவோ?னு மைதிலி மாமி கேக்கும்போதே, வரதுவுக்கு மன்னார்குடி!னு மண்ணி பதில் சொன்னா. மன்னார்குடி பூர்வீகம், ஆனா ஸ்ரீவில்லிப்புத்தூர்தான் எல்லாம்!னு நான் சொல்லவும். நம்ப ஊர் கொழந்தையா நீ!னு மைதிலி மாமி என்னோட பக்கதுக்கு வந்துட்டா. ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பந்தமா நிறையா விசாரிச்சா மைதிலி மாமி. ஆத்துக்கு வாடா கோந்தை! நீ நம்ப ஊர்காராளாயிட்டை!னு அவா சொல்லும்போது, பய எங்க போனாலும் பொழச்சுப்பான்!ங்கர மாதிரி ஆராமுதன் அண்ணாவும் மண்ணியும் என்னை பாத்துண்டு இருந்தா! னு சொல்லிண்டே மாமா சிரிச்சார்.

அதுக்கு அப்பரம் பல கார்யங்கள் பண்ணி கடைசில ஆராமுதன் அண்ணா & எங்க நரசு மாமா எல்லாருமா அந்த ரெங்கனாதன் மாமாட்ட பேசிபார்த்தா, அந்த மாமா கொஞ்சம் கூட மசியவே இல்லை. கடைசில நான் எதிர்பார்க்காத மாதிரி கல்யானத்துக்கு சம்மதம்!னு சொன்னதால எனக்கு சப்புனு ஆயிடுத்து!னு மாமா சொல்லவும். ஏன்ப்பா?னு வைஷூ கேட்டாள்.

பழைய படங்கள்ல வர எம்.ஆர். ராதா மாதிரி அவர் கல்யாணத்துக்கு சம்மதிக்காம வேற மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி குடுப்பார்னு பாத்தா அவர் சம்மதம்!னு சொல்லி என்னோட ஆசைல மண்ணவாரி போட்டுட்டார். அவர் மட்டும் சம்மதிக்கலைனா ஸ்ரீரங்கத்துலையே குத்துவிளக்கு மாதிரி வேற நல்ல பொண்ணா பாக்கலாம்னு சப்பு கொட்டிண்டு இருந்தேன்!னு மாமா நக்கல் அடித்தார்.

எல்லாம் நல்ல படியாக சந்தோஷமாக கதை கேட்டு முடிக்கும் வேளையில் ஸ்ரீவத்சன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான்.... (தொடரும்)

(Note - Next week will be the last part)

26 comments:

எல் கே said...

adapavi next week mudikaryiaa???

தி. ரா. ச.(T.R.C.) said...

மண்ணி இல்லேடா மண்ணு மன்னி. சரியா திருத்து. கதை நால்லாதான் கொண்டு போறே.பக்கலாம் முடிவு எப்படின்னு.

தி. ரா. ச.(T.R.C.) said...

எதோ பிருந்தா சாராங்கா ந்னு போட்டுட்டே சரி கதை நல்லா இருக்கான்னு அடுத்த பதிவிலே சொல்லறேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி எதுல கெட்டிக்காரன்?னு ஒரு பட்டாச்சார்யார் கைல ஒரு பெரிய வெண்சாமரத்தை கொண்டு போனார். இவர் இதுலதான் கெட்டிக்காரர்!னு சொல்லற மாதிரி அந்த சாமரத்தையும் என்னையும் பாத்துட்டு
தக்குடு இந்தியாவுக்கு வந்தா பங்களூர்பக்கம் போகப் போறேதே இல்லைய்யா? தீர்மானம் ஆயிடுத்தா?

துளசி கோபால் said...

//சுப்புலெக்ஷ்மி அம்மாவோட விஷ்ணு ஸகஸ்ர நாமம்(B side)//

:-))))))))))))

வல்லிசிம்ஹன் said...

பி சைடா:)
அப்புறம் மன்னியைத் தி.ரா.ச சொல்லிட்டார்:)

ஒரே கோத்ரம்னு சொல்லி ட்ராக் மாறப் போறதா;)
அடா அடா என்னமாக் கதை போறது!!
அப்புறம் இன்னோரு விஷயம் அம்பி,சாரி அம்பியோட தம்பி!! ஸ்ரீரங்கத்துக்காராள்ளாம் வந்திருக்கேர், போயிருக்கேர் அப்படீன்னு சொல்லுவாங்க:)

வல்லிசிம்ஹன் said...

oru orijinal Srirangaththup pennai enakkuth theriyum.!!

மதுரையம்பதி said...

//வகுள பூஷண பாஸ்கரர்// யாரப்பா இது?....அதை கொஞ்சம் சொல்றது...:-).

கதை முட்ஞ்சுடுத்துன்னு பார்த்தா, மீண்டும் தொடரும் போட்டிருக்கீங்களே?.

வல்லியம்மா சொன்ன ஸ்ரீரங்கத்துப் பெண்ணை எனக்கும் தெரியுமே :-)

Porkodi (பொற்கொடி) said...

//ஆத்துக்காரர்ட கேக்காமையே அட்டியல் மாலை கிடைச்ச ஒரு பொம்ணாட்டியோட முகம் மாதிரி அப்படி ஒரு மலர்ச்சி //

எப்புடி இப்புடி? :) கதை ரொம்ப நல்லா இருக்கு தக்குடு. எனக்கு இப்பவே புளியோதரையும் தச்சு மம்முவும் சாப்பிடணும் போல இருக்கு. :-(

எல் கே said...

//னக்கு இப்பவே புளியோதரையும் தச்சு மம்முவும் சாப்பிடணும் போல இருக்கு. :-( //

veetla senju saapidu .. ohh sorry unaku cook panna teriyaathe

vgr said...

adengappa, modalla enga athula ellarukum kamichudanam polaruke ;)

Thanks for the Story :) nanna ezhudrukai!!!!

Harini Nagarajan said...

nalla kathai! oru payyan manasu oru payyanukku thaan theriyum! Varadhu mama oda kathaapathram aarambathula irunthe pasangalukku thevayaana ella kunaathiyangalodayum irukku. mooku aagattum oor vittu oor thaavarathaagattum! good! :)

Jeyashris Kitchen said...

story nanna poindirukku, nice write up. waiting for the final episode.
Enblog commentla etho nakka paanina madri irrukae!!.

தக்குடு said...

//வல்லியம்மா சொன்ன ஸ்ரீரங்கத்துப் பெண்ணை எனக்கும் தெரியுமே :-) // then yenakkum theriyumeeyy!!!..:))

//வகுள பூஷண பாஸ்கரர்// யாரப்பா இது?....:) ungalukku theriyaamaiyaa irukkum..:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சில பொண்களை போகும் வழில பாத்ததுக்கு அப்பரம், அவசரப்பட்டு அந்த பொண்னை கமிட் பண்ணின்டோமோ?னு சந்தேகம் வர அளவுக்கு //
அடப்பாவி.... என்ன கொடுமை ரங்கா இது?

//சரியா நான் அந்த பொண்ணை பாக்கும்போது அரங்கனோட கோவில் மணி டைண்! டைண்!னு அடிச்சது,//
ஒரு தரம் மணி அடிச்சா சரி....யாரை பாத்தாலும் மணி அடிச்சா.... என்னமோ பிரச்சனைன்னு நெனைக்கிறேன்...ஹி ஹி ஹி

//இவர் இதுலதான் கெட்டிக்காரர்!னு சொல்லற மாதிரி அந்த சாமரத்தையும் என்னையும் பாத்துட்டு அந்த பொண்ணு ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சது//
ஒண்ணை ஒண்ணு மிஞ்சரதுடா சாமி...

//அந்த மாமாவுக்கு 'மஹாராஜா' மிக்ஸி மாதிரி மூனு பொண்ணு இருக்குங்கர விவரமே புடிபட்டது//
பெருமாளே..என்னா ஒரு comparision ?

//பய எங்க போனாலும் பொழச்சுப்பான்!ங்கர மாதிரி ஆராமுதன் அண்ணாவும் மண்ணியும் என்னை பாத்துண்டு இருந்தா//
இது வேணா கரெக்ட்

//வகுள பூஷண பாஸ்கரர்//
அது என்ன எதுனா பஸ் கம்பெனி பேரா? ஞானசூன்யம்னு எல்லாம் திட்ட கூடாது சொல்லிட்டேன்...

Chitra said...

நன்னா கதை போறது.... :-)

sriram said...

//Chitra said...
நன்னா கதை போறது.... :-) //

எங்க போறதுன்னு சொன்னா பின்னால போறதுக்கு வசதியா இருக்கும் :)

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்

நல்ல பதிவு நன்றி தக்குடு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கோமதி அரசு said...

கதை முடிந்து விட்டது என்று நினைத்தால் !

வத்சன் பாகம் 2 ஆரம்பிக்க போகிறதா?

Matangi Mawley said...

"அம்பி எதுல கெட்டிக்காரன்?னு அந்த மாமா என்னை பாத்து கேக்கும் போது கரக்டா அந்த பக்கமா ஒரு பட்டாச்சார்யார் கைல ஒரு பெரிய வெண்சாமரத்தை கொண்டு போனார்."... semma comedy!

ippadi thiduthiduppunu mudichchuttael story-ya.. naanum MR.Radha/Nambiyaar yaarayaavathu expect panninaen!

aduththathu enna aakum??

பத்மநாபன் said...

//மன்னார்குடிகாராளுக்கு ஸ்வாதீனமாவே பெருமாளோட தாஸபாவம் ஜாஸ்தினு!வசந்தா மண்ணியும் சொல்லிட்டு காலரை நிமிர்த்திக்கரமாதிரி புடவையை ஒரு தடவை சரிபண்ணின்டா!// சூட்டிகையான அப்சர்வேசன்

//'மஹாராஜா' மிக்ஸி மாதிரி மூனு பொண்ணு இருக்குங்கர விவரமே புடிபட்டது. விஜி கட்ட கடோசி மினி மிக்ஸ் ஜார்! // குபீர் சிரிப்பு பிட்டப்பு ...

// பய எங்க போனாலும் பொழச்சுப்பான்!ங்கர மாதிரி ஆராமுதன் அண்ணாவும் மண்ணியும் என்னை பாத்துண்டு இருந்தா! // அதுதான் மன்னார்குடிங்கரப்பவே புரிஞ்சிருக்கும் ...

கதையை சொல்லவச்சு எழுதற பாணி ஸுப்பர் தக்குடு ......

Ananya Mahadevan said...

//'மஹாராஜா' மிக்ஸி மாதிரி மூனு பொண்ணு இருக்குங்கர விவரமே புடிபட்டது. விஜி கட்ட கடோசி மினி மிக்ஸ் ஜார்!// தக்குடு நோக்கு வரப்போறது ப்ளெண்டர், ஜூஸ் எக்ஸ்ட்ராக்டராத்தான் இருக்கும் பார்த்துக்கோ.. நன்னா உன்னை துவம்சம் பண்ணி பிழியப்போறா.. :))))))

Jaishree Iyer said...

Kathai nalla porathu.. waiting for next part:) In bet enakku agraharathi irukkaramathri oru feeling varathu,nice write up! keepit up!

Anonymous said...

Dear Thakkudu,what a flow!! charactersai vechey charactersai intro pannara unga style simply super (esp deshikan paappa,mythili mami,ranganathan mama)secnd partla vantha samarathai 4th partla link panni neenga pannina cmdy is amazing. 3 girls irunthaa Maharaja mixi jaraa??..:P. Read pannumpoothey kadhaiyai neerla paakka mudiyarthunnu yenga ammavum sonnaa. avaathula solli kolanthaikku drusti suthi pooda sollu!nu yenga amma solla sonnaa...:)

Ranjani Iyer

Porkodi (பொற்கொடி) said...

எல்.கே, சின்னப்புள்ளத்தனமா பேசிக்கிட்டு! புளியோதரையும் தச்சு மம்மு எல்லாம் செய்வேன் தான், ஆனாலும் இன்னொருத்தர் செஞ்சு போட்டு உக்காந்து சாப்பிடற மாதிரி வருமா?

தக்குடு said...

@LK - ஆமாம் எஜமான்!!!..:)

@ TRC sir - ஒரு வழியா உலகம் சுத்திட்டு வந்தாச்சா மாமா!!..:))

@ துளசி டீச்சர் - ஆமாம் A சைடு சுப்ரபாதம் இல்லையா??..:)

@ வல்லி அம்மா - ஓஹோ அப்பிடி பேசுவாளோ??...:) பாராட்டுக்கு நன்னிஹை!!

@ ம'பதி அண்னா - ஸ்வாமி நம்மாள்வாருக்குதான் அப்படி ஒரு திவ்ய பட்டப்பெயர் உண்டு. வகுளம் - மகிழம், மகிழம்பூ வாட வாட வாசனை ஜாஸ்தியாகும், அதுபோல எல்லாரும் ஸம்சார சாகரத்தை தாண்டர்துக்கு திண்டாடிண்டு இருக்கும் போது, நம்மாழ்வார் மட்டும் பெருமாளோட பக்தினால அந்த சாகரத்தையே வத்தச் செய்துட்டாராம், அதானால அவருக்கு அப்படி ஒரு பெயர், ஸ்வாமியே 'இவர் நம் ஆழ்வாரோ!'னு சொன்ன பெருமையும் இவரை சேரும்...:)

@ கேடி - நீங்க நிஜமா சொல்றேளா இல்லை நக்கல் அடிக்கரேளானு தெரியலை...:) இருப்பினும் நன்னிஹை!!

@ LK - இடம் தெரியாம மோதரீங்க ...:)

@ VGr - வாங்க துரை!! ஆமாம் உங்காத்துல எல்லாரையும் படிக்க சொல்லுங்கோ!! ரொம்ப சந்தோஷம்பா!!..:)

@ ஹரிணி - மூக்கு மேட்டர் இன்னமுமா ஞாபகத்துல இருக்கு??...:)

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீ அக்கா - ரொம்ப சந்தோஷம்பா!!..:)

@ அடப்பாவி அக்கா - பரிட்சை பேப்பர் திருத்தும் வாத்தியார் மாதிரி வரி வரியா நோட் பண்ணரேளே??...:))

@ சித்ரா அக்கா - நன்னிஹை!!..:)

@ பாஸ்டன் நாட்டாமை - கதையை படிக்காம வெறும் கமண்டை மட்டும் படிச்சா எப்படி புரியும்??..:)

@ கோமதி மேடம் - ரொம்ப சந்தோஷம்பா!! ஒரு எபிசோட்தான் இன்னும்..:)

@ மாதங்கி மாலி - :))) என்ன ஆகும்?னு படிக்க வாங்கோ!!

@ பத்பனாபன் சார் - ரொம்ப சந்தோஷம் சார்!!...:))

@ 'பன்னீர் சோடா' அனன்யாக்கா - ஏன் இந்த கொலை வெறி??..:)

@ ஜெய்ஷ்ரீ அம்மா - எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்!!..:)

@ ரஞ்ஜனி - தங்களுடைய அன்புக்கு மிகவும் நன்னிஹை! இந்தியா வரும் போது உங்க அம்மா கையாலையே சுத்தி போட சொல்லுங்கோ!!..:)

@ கேடி - இந்த LK சொல்றதை எல்லாம் காதுல வாங்கிக்காதீங்கோ கேடி!

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)