Friday, June 4, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 3

ஏழாவது நாள் உத்ஸவத்து அன்னிக்கு சாயங்காலம்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. பெருமாளை எழப்பண்ணின்டு எல்லாரும் சுத்தி வந்துண்டு இருந்த போது கூட வந்துண்டு இருந்த ஒரு மாமி கூட்ட நெரிசல்ல அந்த பொண்ணை பிடிச்சு திடீர்னு தள்ள, அவள் அங்க இருந்த கல் தூண்ல முட்டப் பார்த்தா!னு மாமா விளக்கவும்.

ஓஓஓ! அவாளுக்கு ஒன்னும் ஆகலையே? நீங்க இதை பாத்துண்டு சும்மாவா இருந்தேள் அப்பா?னு வைஷு பரபரத்தாள்.(வைஷுவுக்கு பாவம் இளகின மனசு).

டக்கு!னு நான் அவளோட கையை பிடிச்சு அவளை நிறுத்தினான்,அழகாக சுதாரிச்சுண்டு அவள் மெதுவா Thank you!நு சொன்னா. நல்ல வேளை யாரும் பாக்கலை, பாத்துருந்தா அவ்ளோதான், கோவில் மண்டபத்துக்கு நடுல நிக்க வச்சு, 'கையை பிடிச்சு இழுத்தியா?'னு ஊர் பெரியவா விசாரிக்க ஆரம்பிச்சுருப்பா!

ஆனா இந்த விஷயத்துலேந்து அவள் நல்ல படிச்ச குழந்தைனு நேக்கு புரிஞ்சது. அவள் சொன்ன thank you!வே அதுக்கு ஆதாரம்னு மாமா தொடர்ந்தார்.
Thank you!வை வச்சு நாம எப்பிடி ஒரு முடிவுக்கு வர முடியும் அப்பா!னு கேள்வி கேட்டு அவன் இருப்பதை நிரூபித்தான் ஸ்ரீவத்ஸன்.

ஏன் கண்டுபிடிக்கமுடியாது? அழகா கண்டுபிடிக்கலாம், தொடர்ந்து உபயோகபடுத்தரவாளுக்குத்தான் thank you ல அந்த Q sound வரும், இல்லைனா இரண்டும் தனி தனி வார்த்தையா இருக்கும்!னு மாமா முடித்தார்.

மொத்த குடும்பமும் மாமாவை பிரமிப்போடு பாத்தது. ஒரு சாதாரண விஷயத்தை கூட கூர்மையா கவனிச்சு நீங்க ஒரு கிரிமினல் லாயர்!னு நிரூபிச்சுட்டேள் அப்பா!னு சொல்லின்டே மாமாவின் கழுத்தை வைஷூ கட்டிக் கொண்டாள்.

அதுக்கு அப்பரம் அவளும் அடிக்கடி நான் இருக்கேனா? இருக்கேனா?னு சரிபாத்துக்க ஆரம்பிச்சா.பெருமாளை இப்போ ஊஞ்சல்ல வச்சு அழகா ஆட்ட ஆரம்பிச்சா, அப்ப பாத்து ஒரு பல்லுசெட்டு மாமி அவாளோட கர்ண கொடூரமான குரல்ல பாட ஆரம்பிச்சுட்டா, நடுல சா! பா! சா! பா!னு ஆலாபனை வேற பண்ண ஆரம்பிச்சுட்டா, பெருமாளே வந்து நிறுத்தினாலும் நிறுத்த முடியாத படி கண்ணை மூடிண்டு கட்டத்தொண்டையும், நெட்ட தொண்டையுமா கந்தர்வ கானம்தான் போ!னு மாமா சிலாகித்தார். நானும் கண்ணை மூடிண்டு கிருஷ்ணா! ராமா!னு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். நடுல திடீர்னு அந்த மாமியோட குரல் ரொம்ப அழகா ஆன மாதிரி இருந்தது, என்னடா இது?னு ஆச்சர்யத்தோட கண்ணை திறந்த போது, அந்த பொண்ணு பாடிண்டு இருந்தா, (அந்த மாமிக்கு பாதில வரி மறந்து போய்டுத்து போலருக்கு) வசந்தா ராகத்துல அந்த பொண்ணு அழகா பாடினா, மாமி நன்னா கேட்டுக்கோங்கோ! இதுதான் வசந்தா!னு அந்த மாமியை கூப்டு சொல்லனும் போல இருந்தது நேக்கு. வசந்தா, சுருட்டி, குந்தளவராளி & யதுகுலகாம்போதி எல்லாமே என்னோட பிரியமான ராகங்கள், அதனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது!னு மாமா தொடர்ந்தார்.

அப்பரம் என்ன ஆச்சு?னு வைஷூ அவசரப்படுத்தினாள்.

அப்பரம் என்ன ஆயிருக்கும் பெருமாளுக்கு தீபாராதனை பண்ணி,துளசி தேர்த்தம் சாதிச்சு, சுண்டல் வினியோகம் பண்ணியிருப்பா, இவரும் ‘குணா’ல வர கமல் மாதிரி லெப்டும் ரைட்டுமா ஆடிண்டே சுண்டல் வாங்கர்துக்கு போய் வரிசைல நின்னு இருப்பார்!னு விஜி மாமி பழிப்பு காட்டினாள்.

பெளர்ணமிக்கு அடுத்த நாளே அமாவாசை வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!னு மாமா புதிர் போட்டார்.

அச்சச்சோ! என்ன ஆச்சுப்பா?னு வைஷூ விக்கித்துப்போனாள்.

அடுத்த நாளும் கோவிலுக்கு போனேன், பிரகாரம் முழுசா தேடினேன் அவளை காணும், சரி வசந்த மண்டபத்துல தீபாராதனை சேவிக்க போயிருப்பாளோனு நினைச்சுண்டு அங்க போனா அங்க அந்த பல்லுசெட்டு மாமிதான் பாடிண்டு(??!!) இருந்தா, என்னோட கருட பார்வைக்கு அவள் தட்டுப்படவே இல்லை. இருந்தாலும் நான் விடாம அவளை தேடினேன்.
கோந்தை வரது!னு எனக்கு பின்னாடிலேந்து ஒரு குரல், யாருன்னு திரும்பிப் பார்த்தா எங்க நரசு மாமாவாத்து மாமி, என்னடா கோந்தை! பெருமாளையும் தாயாரையும் தவிர வேற யாரையோ கோவில்ல தேடர மாதிரி இருக்கே?னு கரக்டா என்னை மடக்கிட்டா எங்க மாமி, நரசு மாமவுக்கே யோஜனை சொல்ற அளவுக்கு எங்க மாமிக்கு சாமர்த்தியம் உண்டு!னு வரது மாமா மேலும் தொடர்ந்தார்.

இதுக்குமேல எதுவும் மறைக்க முடியாதுனு எனக்கு தெரிஞ்சதால, எங்க மாமிட்ட எல்லாத்தையும் சொன்னேன். மாமி மூலமா விஷயம் எங்க நரசு மாமா காதுக்கு போச்சு.

அவாத்து ரேளில(hall) வச்சு என்னை கூப்டு மாமாவும் மாமியும் பேசினா. என்னடா வரது! மாமி எதோ சொல்ராளே! அதெல்லாம் உண்மையா?னு எங்க மாமாதான் பேச்சை ஆரம்பிச்சார். ஆமா மாமா! மாமி சொன்னது எல்லாம் உண்மைதான்!னு நான் சொன்னேன்.
அந்த பொண்னோட நாமதேயம் கூட நோக்கு தெரியாதுன்னு மாமி சொல்றாளேபா! பேரு கூட தெரியாமையா ஒரு வாரமா வட்டம் அடிச்சுண்டு இருக்கை நீ! யாரு என்ன ஏது?னு விவரம் தெரிஞ்சாதானேபா மேல் கொண்டு கேஸ்ல காய் நகர்த்த முடியும்!னு எங்க மாமா வக்கில் பாஷைல சொன்னார்.

சரி விடு! இன்னிக்கு போய் பெருமாளை சேவிச்சுட்டு, அந்த குழந்தை வந்தானா அவள்ட பேசு! அவளுக்கும் பூர்ண இஷ்டம் இருந்ததுன்னா அவாத்துகாராள்ட நானும் மாமியும் பேசரோம்!னு மாமா முடித்தார்.

சாயங்காலம் பெருமாள் கோவில் முழுசும் தேடினேன், அவளை தவிர எனக்கு தேவை இல்லாத எல்லாரும் கோவிலுக்கு வந்திருந்தா. எனக்கு நம்பிக்கையே போய்டுத்து!னு சுருதி இறங்கின குரலில் மாமா சொல்லவும்.

ச் ச் ச்!னு வைஷூ பரிதாபப்பட்டாள்.

இருந்தாலும் என்னோட வக்கில் புத்தி பல விதத்திலும் யோசிக்க ஆரம்பித்தது. தாயார் சன்னதி முன்னாடி வந்தபோதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. தாயார் சன்னதில இருந்த பட்டாசார்யார்ட அந்த பொண்ணு ரொம்ப பவ்யமா பேசினது ஞாபகத்துக்கு வந்தது. இருந்தாலும் திருனெல்வேலிக்காரா வாய்லேந்து ஒரு விஷயம் வாங்கர்து எவ்ளோ கஷ்டம்னு அன்னிக்குதான் எனக்கு தெரிஞ்சது.
மெதுவா அந்த மாமாட்ட பேச்சு குடுத்ததுல அந்த பொண்ணு ஸ்ரீரங்கத்துலேந்துதான் வந்துருக்குனு உறுதி ஆச்சு. ஜங்ஷன்ல இருக்கும் சன்னியாசி கிராமம் 'கனரா பாங்க்'சேஷாத்ரி மாமாவோட மருமாள்தான் அந்த பொண்ணுனு தெரிஞ்சதுக்கு அப்பரம்தான் நிம்மதியே வந்தது!னு மாமா சொன்னார்.

இதுல நிம்மதியாகர்துக்கு என்ன இருக்கு?னு விஜி மாமியும் தன்னை அறியாமல் சந்தேகம் கேட்டாள்.

ஏன்னா, சேஷாத்ரி மாமாவாத்து மாமியும் எங்க நரசு மாமாவாத்து மாமியும் திருப்பாவை கிளாஸ்ல பிரண்ட்ஸ்னு சொல்லி விட்டு வெற்றி பெருமிதத்தோடு வரது மாமா புன்னகை பூத்தார்.

பெருமாள் உங்களை கைவிடலைபா!னு வைஷு தன் சந்தோஷத்தை காட்டினாள்.

எங்க மாமி மூலமா விசாரிச்சதுல அந்த பொண்ணு காலேஜ் கடோசி வருஷம் படிக்கர்து, அவளோட பாட்டிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போனதாலதான் (என்கிட்ட கூட) சொல்லிக்காம கொள்ளிக்காம ஸ்ரீரங்கம் போக வேண்டியதா போய்டுத்துங்கர விவரம் எல்லாம் தெரிஞ்சது. அவளுக்கு ஒரு வரன் அமையர மாதிரி இருக்குங்கர இடி மாதிரியான தகவலும் தெரிஞ்சது.

மறுபடியும் நரசு மாமாவாத்து ரேளில வச்சு மந்த்ராலோசனை நடந்தது. எங்க நரசு மாமாதான் முதலில் பேச்சை ஆரம்பித்தார், டேய் வரது! அந்த பொண்ணுக்கு நிச்சயமா இஷ்டம் இருக்கானு மட்டும் உறுதி பண்ணுடா கோந்தை, மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்!னு தைரியம் சொன்னார். ஸ்ரீரங்கம் போகர்தை பத்தியெல்லாம் கவலை படாதே! அங்க என்னோட ஜூனியர் ' நாங்குனேரி' ஆராவமுதன் இருக்கான், என்னோட பேரை சொன்னா அவன் உனக்கு எல்லா சஹாயமும் பண்ணுவான். கேஸ் நம்ப பக்கம் ஸ்ட்ராங்கா இருந்தா எந்த கோர்ட்டுக்கு அந்த கேஸ் மாறினாலும் ஆஜர் ஆகர்துக்கு நாம தயங்க கூடாதுடா கோந்தை!னு எனக்கு புரியற பாஷைல சொன்னார்.

அந்த பொண்ணுக்கு அங்க வரன் ஏற்கனவே அவா பாத்து முடிவு பண்ணியிருந்தானா, நேத்திக்கு கிளம்பிப் போன ரயிலுக்கு நாம இன்னிக்கு டிக்கெட் எடுத்த மாதிரினா ஆயிரும்!னு அதுல உள்ள பாதகமான விஷயத்தை மாமி எடுத்து சொன்னா.

ரயில் கிளம்பிப்போனா என்னடி இப்போ? அடுத்த ஸ்டேஷன்ல விரட்டிப் போய் நம்ப இடத்தை நாம பிடிக்கர்து இல்லையா? முயற்சி செய்யாமையே கேஸ் தோத்ததா நாம எப்படி முடிவு பண்ண முடியும்னு மாமா பாய்ண்டை பிடித்தார்.

அந்த காலத்துலேயே உங்க நரசு மாமா ‘மின்னலே’ படத்துல வர மாதவன் மாதிரி யோசிச்சுருக்கார்!னு அந்த சமயத்துலையும் நம்ப வைஷூ ஜோக் அடித்தது.

மாமா மாமியின் பூர்ண ஆசிர்வாதங்களோட ஸ்ரீரங்கத்துக்கு பொட்டியை தூக்கிண்டு கிளம்பினேன்.அங்க போய் பார்த்த போதுதான் எனக்கு உண்மை விவரமே புரிந்தது!னு மாமா புள்ளி வைத்தார்.
தொடரும்....

30 comments:

எல் கே said...

ஹ்ம்ம் நல்ல விறுவிறுப்பு . கொஞ்சம் இடைவெளி(space formatting) கொடுத்து எழுத்து படிக்க கஷ்டமா இருக்கு

Anonymous said...

தக்குடு... TV தொடர் மாதிரி , சரியான இடத்துல தொடரும் போட்டுட்டார்...

துளசி கோபால் said...

ம்ம்ம்ம்ம்......அப்புறம்?????

mightymaverick said...

//அவ்ளோதான், கோவில் மண்டபத்துக்கு நடுல நிக்க வச்சு, 'கையை பிடிச்சு இழுத்தியா?'னு ஊர் பெரியவா விசாரிக்க ஆரம்பிச்சுருப்பா!//



நீயும் "என்ன! கைய புடிச்சு இழுத்தியா" ன்னு வடிவேல் மாதிரி கேள்வி கேப்பேன்னு தெரியும்... அதான் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி இருந்திருப்பா...


//மாமி நன்னா கேட்டுக்கோங்கோ! இதுதான் வசந்தா!னு அந்த மாமியை கூப்டு சொல்லனும் போல இருந்தது நேக்கு.//



சொல்லி இருந்தா அங்கேயே வச்சு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க... நீ ஒட்டகம் மேய்க்க போய் இருக்க முடியாது...


//அப்பரம் என்ன ஆயிருக்கும் பெருமாளுக்கு தீபாராதனை பண்ணி,துளசி தேர்த்தம் சாதிச்சு, சுண்டல் வினியோகம் பண்ணியிருப்பா, இவரும் ‘குணா’ல வர கமல் மாதிரி லெப்டும் ரைட்டுமா ஆடிண்டே சுண்டல் வாங்கர்துக்கு போய் வரிசைல நின்னு இருப்பார்!//


உங்க அண்ணனை பத்தி இதைவிட விளக்கமா யாராலும் எழுத முடியாது... ஆனா உன்னோட (சொந்த) கதையில எப்படி உங்க அண்ணனைப் பற்றி வருதுன்னு தான் புரியல...


//நரசு மாமவுக்கே யோஜனை சொல்ற அளவுக்கு எங்க மாமிக்கு சாமர்த்தியம் உண்டு!//



குடும்ப ரகசியத்தை எல்லாம் பொதுவுல இப்படி போட்டு உடைக்கக் கூடாது... நான் உங்க அண்ணன் குடும்ப ரகசியத்தை சொன்னேன்...


//அந்த பொண்னோட நாமதேயம் கூட நோக்கு தெரியாதுன்னு மாமி சொல்றாளேபா! பேரு கூட தெரியாமையா ஒரு வாரமா வட்டம் அடிச்சுண்டு இருக்கை நீ!//


நான் நம்ப மாட்டேன்... பார்த்த முதல் நாளே கண்டிப்பா முழு முதல் ஜாதகத்தையும் வாங்குற அண்ணன் தம்பின்னு எனக்கு தெரியும்...


//ரயில் கிளம்பிப்போனா என்னடி இப்போ? அடுத்த ஸ்டேஷன்ல விரட்டிப் போய் நம்ப இடத்தை நாம பிடிக்கர்து இல்லையா? முயற்சி செய்யாமையே கேஸ் தோத்ததா நாம எப்படி முடிவு பண்ண முடியும்னு மாமா பாய்ண்டை பிடித்தார்.//



Point noted your honor... தோஹவில இருந்தாலும் எங்கேயோ ஒரு தொடர்பு விட்டுப்போகலைன்னு சொல்ல வரீங்க... அதானே... முடிச்சுடலாம்...


//மாமா மாமியின் பூர்ண ஆசிவாதங்களோட ஸ்ரீரங்கத்துக்கு பொட்டியை தூக்கிண்டு கிளம்பினேன்.அங்க போய் பார்த்த போதுதான் எனக்கு உண்மை விவரமே புரிந்தது!னு மாமா புள்ளி வைத்தார்.//



எனக்கும் கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு... என்னப்பா, அந்தப்பக்கம் ஏதேனும் ஒரு ஊரிலே உன்னோட வைஷூவும் வேளை பாக்குறாப்புலேயோ? பத்த வைக்கிறேன்...

sriram said...

நல்ல பதிவு, நன்றி தக்குடு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஏன் கண்டுபிடிக்கமுடியாது? அழகா கண்டுபிடிக்கலாம், தொடர்ந்து உபயோகபடுத்தரவாளுக்குத்தான் thank you ல அந்த Q sound வரும், இல்லைனா இரண்டும் தனி தனி வார்த்தையா இருக்கும்!னு மாமா முடித்தார்//

மூக்கு ஆராய்ச்சி முடிஞ்சு இப்போ Q ஆராய்ச்சியா? நடத்து நடத்து...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இருந்தாலும் திருனெல்வேலிக்காரா வாய்லேந்து ஒரு விஷயம் வாங்கர்து எவ்ளோ கஷ்டம்னு அன்னிக்குதான் எனக்கு தெரிஞ்சது//

சுய வாக்குமூலத்திற்கு நன்றி...ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கதை நல்ல ஸ்வாரஸ்யமா போக தொடங்கி இருக்கு... நெஜமாவே எழுத்து நல்ல flow வருது இப்போ கதைக்கு ஏத்தாப்ல... if possible formatting மட்டும் கொஞ்சம் சரி பண்ணினா படிக்க நல்லா இருக்கும். சூப்பர்....

sury siva said...

" என்னன்னா ! தக்குடு பாண்டி ப்ளாக்கிற்கு பின்னூட்டம் போடறேளா ???? !!! "

" ஆமாண்டி, ஆமாம்.. அதுலே உனக்கென்ன? "

" எனக்கு ஒண்ணுமில்ல. அது போல உங்களுகும் ஓண்ணுமில்ல. எனக்கு என்னாமோ இது ஒரு கதை மாதிரி தோணல்லா. தக்குடு யாருக்கோ ஏதோ ஒரு கோட் மூலம் ஏதோ ஒரு விசயத்த கன்வே பண்ரா மாதிரி தோணறது !!"

"எப்படி சொல்றே ?"

// அந்த பொண்ணுக்கு நிச்சயமா இஷ்டம் இருக்கானு மட்டும் உறுதி பண்ணுடா கோந்தை, //

" இதுலே ஒரு மெஸேஜ் இருக்கு. புரியவாளுக்குத்தான் புரியும்."

மீ. பா.

V Mawley said...
This comment has been removed by the author.
Matangi Mawley said...

'கையை பிடிச்சு இழுத்தியா?'னு ஊர் பெரியவா விசாரிக்க ஆரம்பிச்சுருப்பா!---> பிரமாதம்! :D :D
அப்புறம் என்ன ஆச்சு??
அப்புறம் என்ன ஆச்சு??

தக்குடு said...

@ சூரி மாமா - மெசேஜும் இல்லை மசாஜும் இல்லை. இது முற்றிலும் கற்பனை கதையே! கதையாக பாவித்தே படிக்கவும்.

@ ALL readers - புரளிகளை கண்டு ஏமாறவேண்டாம். கதாசிரியருக்கும் கதையின் நிகழ்வுகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. (ஸ்ஸ்ஸ்ஸபா, மைக் புடிச்சு கத்த விடாதீங்கப்பா!!!)

vgr said...

tkp, What a Story man! Mega Serial thothuthu po :) Very good part this time.

"Kaya pudichu izhuthiya" -- Excellent excellent piece :)

Why Maami and Vatsu talks less? Maama and Vaishu gets all the Dialogues? Maami and Vatsu characters ku nalla nadigargal kedaikalayo? Kathukutti urupidigala? :)

Vazhga Maama & Maami :)

மதுரையம்பதி said...

திருநெல்வேலிக்காரங்க கிட்ட வார்த்தையை வாங்க முடியாதுன்னு உண்மையை எல்லாம் நடுநடுவில் சொல்லிவரும் தக்குடு...வாழ்க! வாழ்க! :-)

வல்லிசிம்ஹன் said...

அடடா,என்ன விவரமான கேஸ் ஸ்டடி நடந்திருக்கு இங்க!!ஆச்சரியம் தாங்கலை தக்குடு. கண்ணைச் சுத்திண்டு வரதே:)
இவ்வளாவு டீடெயில்டா ஒரு காதல் கதையை நான் படிச்சதில்லைப்பா இதுவரை.
.வெள்ளிக்கிழமை விகடனுக்காகக் காத்துக் கொண்டு இருப்பது போல வாரம் ஒரு எபிசோடா!!

பத்மநாபன் said...

//நேத்திக்கு கிளம்பிப் போன ரயிலுக்கு நாம இன்னிக்கு டிக்கெட் எடுத்த மாதிரினா ஆயிரும்!னு அதுல உள்ள பாதகமான விஷயத்தை மாமி எடுத்து சொன்னா.

ரயில் கிளம்பிப்போனா என்னடி இப்போ? அடுத்த ஸ்டேஷன்ல விரட்டிப் போய் நம்ப இடத்தை நாம பிடிக்கர்து இல்லையா?// ரயில வச்சு பெரிய வியுகம் செரி சிரிப்ப வர வெச்சுது தக்குடு...கடைசியில சஸ்பென்ஸ் பலமா இருக்கு..

Kavinaya said...

அனுபவப்பட்ட கதாசிரியர் மாதிரி என்ன ஒரு நடை... என்ன ஒரு சஸ்பென்ஸ்... நல்லாருக்கு தம்பீ :)

Anonymous said...

Dear Thakkudu, u r showing great improvement in your style of writing and in ur story also. That 'kaiyai pidichu iluththiya' part ...:). Train tckt vechu yevloo periyaa msg sollareel neenga....:) Reeli-na hall nu neenga sollithan theriyum, then i chkd with my amma,jst like that they saw ur article and ippo avaalukkum thakkuduna avloo istam,this weekend ungalooda old article yellam avaalum read pannapooraalaam...:)now full kudumbamum unga fan's thaan..:)

Ranjani Iyer

Jaishree Iyer said...

Your way of writing is amazing! Nice write up!

Anonymous said...

Hai, This is TLS from Sharjah. Thro' Ananya's Blog I just now read this story 3 parts at a time.

It's like swollowing few bowls of Thirukkannamudhu, Ghee Pongal, Puliyodhara & Kal Dosai with combination of Pulikkaichal!! (Remember I am in Sharjah).

Wow, Tamil Readers got yet another Humourous Writer. If I'm not exaggerating, the flow & speed are like that of reading after a long gap - 'Vedantham' with Iyengar family background. Keep it up in ensuing story parts. T.L. SUBRAMANIAM, SHARJAH, U.A.E.

Harini Nagarajan said...

neenga serial ezhuthalaam! correct aana edathula thodarum pottutele! :P

Sushma Mallya said...

Thanks for coming & giving your lovely comments, do try this soup whenever you have time and let me know...

mightymaverick said...

//(ஸ்ஸ்ஸ்ஸபா, மைக் புடிச்சு கத்த விடாதீங்கப்பா!!!)//



கவலை வேண்டாம்... மதுரை கோலி சோடா தொடர்ந்து சப்ளை செய்யப்படும்...


//" இதுலே ஒரு மெஸேஜ் இருக்கு. புரியவாளுக்குத்தான் புரியும்."//



சூரி சார்... எல்லாம் புரியத்தான் செய்யுது... ஆனா பத்த வைக்க சரியான நேரம் கிடைக்க மாட்டேங்குது...

Porkodi (பொற்கொடி) said...

oh, yen enaku readerle theriyave illai pudhu post?!

Porkodi (பொற்கொடி) said...

sari pazhaiya post ellam ukkandhu padikaren, ana adhuku enna return kidaikkum? :D

தக்குடு said...

@LK - பாய்ண்ட் நோட்டட்...:)

@ பரவஸ்து அண்ணா - வருகைக்கும் கமண்டுக்கும் நன்னிஹை..:)

@ துளசி டீச்சர் - :)))

@ வி.கடவுள் - யோவ், இது என்னோட அனுபவம் இல்லையப்பா! இது ஒரு கற்பனை கதை!!..:)

@ பாஸ்டன் நாட்டாமை - தங்கள் வரவு நல்வரவாகுக!!..:)

@ அடப்பாவி தங்க்ஸ் - ஆராய்ச்சிகள் தொடரும்....:)
சரிபண்ணிடலாம்! பாராட்டுக்கு நன்னிஹை

@ வி.மாவேலி - கமண்ட் போட முயற்சி செய்த மாவேலி சாருக்கு நன்னிஹை!..:)

@ மாதங்கி - இந்த வாரம் மிச்ச கதை தெரியும்..:)

தக்குடு said...

@ VGr - கரக்டு விஜி மாமி ஒரு டம்மி பீஸுதான்...:) நன்னிஹை!!..:)

@ ம'பதி அண்ணா - நீங்க சொல்லுலேள்னு எனக்குத் தெரியும்...:))

@ வல்லியம்மா - நன்னிஹை! எல்லாம் உங்ககிட்ட படிச்ச பாடம்தான்...;))

@ பத்பனாபன் சார் - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!..;)

@ கவினயா அக்கா - நன்னிஹை அக்கா!...:)

@ ரஞ்ஜனி - ரொம்ப சந்தோஷம்பா! உங்க அம்மாவை நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்கோ!..:)

@ ஜெய்ஷ்ரீ அம்மா - நன்னி ஹை!!..:)

@ சுப்ரமணியன் - நீங்கள் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி!..:)

@ ஹரினி - :))) கைவசம் அப்போ ஒரு தொழில் இருக்கு!!..:0

@ sushma - hey, thanks for your nice words. sure i will mail you.

@ வி.கடவுள் - :))

@ கேடி - வாங்க குட்டி சுஜாதா! நீங்க வரலைனா சபை களை கட்டாது..:) //return//ஒரு கப் திரட்டிபால் ஓக்கேவா??..:)

My days(Gops) said...

yappa thakkudu innum ethana naal puliodharai'la irukira maadhiri idea?

கோமதி அரசு said...

எனக்கும் உண்மை விபரம் புரிந்து விட்டது.

தக்குடு said...

@ gops - :)))

@ Gomathy akka - ohoo!!...:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)