Part 1 & Part 2
ஒரு வழியா பெண்களூர் போய் அக்காவோட வீட்டை அடைந்தோம்.
எங்களை பாத்த அதிர்ச்சில “அதுக்குள்ள ரெண்டு நாள் ஆயிடுத்தா! நாளும் பொழுதும் ஓடர்தே
தெரியலை”னு அக்காவோட ஆத்துக்காரர் ரொம்ப அளுத்துண்டார். மொத்தமா போகவர எவ்ளோ ஆச்சுனு
அக்கா சொன்னதை கேட்டு அவருக்கு ரெண்டு நிமிஷம் பேச்சு மூச்சே இல்லை. “ஹே தக்குடு! சகாயவிலைல
ரெண்டு நாள் டூரையும் முடிச்சுட்டு வந்துட்டேளேபா! மூனாவது தெரு தாண்டர்துக்குள்ள ரெண்டாயிரம்
ரூபாய் செலவளிக்கும் இந்த ஓட்டகை அக்காவை கூட வச்சுண்டு எப்பிடி இதல்லாம்”னு அவர் கேட்டு
முடிக்கர்த்துக்குள்ள, ‘பாய்ஸ் படத்துல வரும் பண்டாரம் செந்தில் மாதிரி போன இடத்துல எல்லாம் எந்த கோவில்ல
எத்தனை மணிக்கு உண்டகட்டி போடுவானு ஒரு பெரிய டேட்டாபேஸ் வச்சுருக்கான்! அந்தந்த இடத்துல
டாண் டாண்னு கூட்டிண்டு போய் சாப்பாட்டுக்கு உக்காத்திட்டான்!’னு அக்கா பதில் சொல்லிண்டு
இருந்தா. ‘மாமா சொல்ப்ப சாம்பார் ஹாக்கி!னு ரெண்டாம் தடவை கேட்டு வாங்கி வெட்டு வெட்டுனு
வெட்டிட்டிடு இங்க வந்து என் காலை வாரிவிடறேளே’னு நானும் கேட்டேன். ‘எது எப்பிடியோ
டைரக்டர் ஷங்கர் பட்ஜெட்ல செலவு செய்யும் உங்க அக்காவை விசு பட்ஜெட்ல கொண்டுவந்து என்னோட
பர்ஸை காப்பாத்தினாய்’னு அத்திம்பேர் முடிச்சு வச்சார்.
பெண்களூர்லேந்து கிளம்பி நேரா சென்னை வந்து அத்வைதா
& தங்கமணியை கூட்டிண்டு கல்லிடை நோக்கி புறப்பட்டேன். ரயில்ல போகும் போது சும்மா
இருக்காம தங்கமணி கிட்ட, " நானும் பாக்கறேன் ஒரு தடவை கூட சினிமால வரமாதிரி சின்னதா ஜீன்ஸ் டிராயர் & வெள்ளை
கலர் முண்டா பனியன் போட்டுண்டு மறக்காம கைல கிஃட்டார் வச்சுண்டு ஓ பேபி ஹோ பேபி!னு
பாடிண்டு ஒரு பொம்ணாட்டியும் வரமாட்டேங்கறாளே! வந்தா நானும் விழுப்புரம் ஜங்ஷன்ல இறங்கி
அவா கூட ஒரு டான்ஸ் ஆடுவேன் இல்லையா"னு கேட்டேன். ஓ அதுக்கென்ன தாராளமா ராத்திரி
விழுப்புரம் ஜங்ஷன்ல இறக்கிவிடறேன்,
தனியா ஆடிமுடிச்சுட்டு அடுத்த ரயிலை பிடிச்சு
ஊர் வந்து சேருங்கோ!னு தங்கமணி பதில் குடுத்தா. ஒரு வழியா கல்லிடை வந்து சேர்ந்தோம்.
கொஞ்ச நேரத்துக்குள்ள அத்வைதா அளி,ரேளி, நடை, தாள்வாரம், பட்டாசாலைனு எல்லா பக்கமும் ஓட்டம்(தவழ) பிடிக்க ஆரம்பிச்சா.
தக்குடு செளக்கியமா இருக்கியா? ஷேக்கு செளக்கியமா? ஒட்டகம் செளக்கியமா?னு தெருல இருக்கும் மாமா மாமிகள்
ஜாரிக்க ஆரம்பிச்சா. இந்த மாமா/மாமிகள் கிட்ட பதில் சொல்லும்போது ரொம்ப ஜாக்கிரதையா
இருக்கணும். இன்வெஸ்டிகேஷன் சைன்ஸ்ல எல்லாரும் பி ஹெச் டி பண்ணினவா. நாம என்னிக்கு
ஊருக்கு வந்தோம்னு நமக்கே ஞாபகம் இருக்காது ஆனா ரெக்கவரி software அப்டேடட் வெர்ஷன்
மாதிரி இவாளோட மனசுல எல்லாம் தேதி வாரியா ஞாபகம் இருக்கும். அதே மாதிரி உத்தியோகம் பத்தி யார்கிட்டையும் மூச்சு
விட கூடாது. எப்பிடி இருக்கைனு யாராவது கேட்டா சமத்துகுடம் மாதிரி ஓ! எனக்கென்ன ராஜாவா
இருக்கேன்னு உளறி வைக்காம எல்லா கேள்விக்கும்
'என்னத்த' கண்ணையா மாதிரியே பதில் சொன்னா நாம பொழச்சோம்.
தக்குடு என்ன லீவா? உத்தியோகம் எல்லாம் எப்பிடி போயிண்டு
இருக்கு?னு ஒரு மாமா மெதுவா ஆரம்பிச்சார்.
என்ன்னத்த லீவு மாமா! ஒன்னும் விஷேஷமா சொல்லும்படியா
இல்லை, பகவான் புண்ணியத்துல வண்டி ஓடிண்டு இருக்கு!
உன்னோட உத்தியோகம் என்னனு கொஞ்சம் சொல்லேன் கேப்போம்!
பிரமாதமா ஒன்னும் இல்லை,
அங்க இருக்கும் எண்ணை கிணத்துல நித்தியம் எத்தனை
பீப்பாய் எண்ணெய் எறைச்சானு கணக்கு எழுதர்து தான் நம்ப ஜோலி
ஓஹோ! அப்ப நீ லீவுல வந்துட்டைனா பீப்பாய் கணக்க
யாரு எழுதுவா? பதில் ஆள் இருக்குமா இல்லைனா ஷேக்குக்கு ஒரு மாச
சம்பாத்யம் நஷ்டம் ஆகாதோ?
(மனுஷாளுக்கு லோகத்துல என்னெல்லாம் கவலைடாப்பா!னு
மனசுக்குள்ள நினைச்சுண்டே) பதில் ஆள் எழுதுவா மாமா
அதெல்லாம் இருக்கட்டும் பீப்பாய் பீப்பாய்னு சொல்லறாளே!
உத்தேசமா ஒரு பீப்பாய்னா எவ்ளோ கொள்ளும்?
(அட ராமா)உத்தேசமானா ம் ம்... உங்காத்து கக்கூஸ்
வாளியால மூனு வாளி பிடிக்கும் மாமா! ஒரு நிமிஷம் இருங்கோ என் பொண்ணு அழற மாதிரி இருக்கு
வந்துடறேன்னு சொல்லி தப்பிச்சு வந்தேன்.
ரெண்டு நாள் கழிச்சு சாஸ்தா ப்ரீதி ஆரம்பம் ஆச்சு.
போன வருஷமே அங்க கூட்டிண்டு போகலைனு தங்கமணிக்கு ரொம்ப குறை. அதனால இந்த தடவை முந்தின
நாள் சாயங்காலமே கூட்டம் இல்லாத சமயமா ஒரு தடவை கூட்டிண்டு போனேன். உள்ள சன்னதில மாமிகள்
எல்லாம் மாக்கோலம் போட்டுண்டு இருந்தா. மாமாக்கள் எல்லாம் கறிகாய் நறுக்கிண்டு இருந்தா.
எல்லாரையும் பாத்துண்டே உள்ள போயிட்டு நாங்க வெளில வரும் போது 'ஸ்கை ப்ளூ' கலர்ல அம்பர்லா
சுடிதார் போட ஒரு பொண் சிரிச்ச முகமா வந்து ‘உங்களை எங்கையோ பாத்த ஞாபகமா இருக்கே!னு
பேச ஆரம்பிச்சா. எர்ணாகுளம் சாஸ்தா ப்ரீதிக்கு நீங்க வந்தேளோ?’னு அடுத்தடுத்து கேட்டு யோசிச்சுண்டு
இருந்தா. ‘இதுக்கு மேல இந்த படத்தை ஓடவிடக்கூடாது’னு முடிவு பண்ணின தங்கமணி ‘இந்தாங்கோ உங்க பொண்ணு உங்க கிட்ட வரணுமாம்’னு சொல்லிண்டே என்னோட கைல அத்வைதாவை குடுத்துட்டா. ‘ஓஓ உங்க பொண்ணா அண்ணா! ஸோ க்யூட்!’னு சொல்லிண்டே அந்த ஸ்கை ப்ளூ கலர் சுடிதார் நகர்ந்து போயிடுத்து. இந்த தங்கமணிகளே இப்படிதான் ஆத்துக்காரர் 2 நிமிஷம் சந்தோஷமா இருக்கர மாதிரி லைட்டா சந்தேகம் வந்தாகூட உடனே ஒரு லெக்ஷ்மி வெடியை அதுல கொளுத்தி போடர்தே வழக்கமா போச்சு, இத்தனைக்கும் ‘மக்களின் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி’னு நாம பயபக்தியா இருந்தாலும் நம்ப மேல நம்பிக்கையே வரமாட்டேங்கர்து. ம்ம்ம்ம்! என்னத்த சொல்ல நாம வாங்கின வரம் அப்பிடி. அந்த
பொண்ணு வாய் நிறைய அண்ணானு என்னை கூப்பிட்டதுல தங்கமணிக்கு பரமசந்தோஷம்.
கோலம் போட்டுண்டு இருந்த ஒரு மாமி என்னை பாத்துட்டு
‘ஏ தக்குடு! எப்பிடிடா இருக்கை! இதுதான் உன்னோட ஆத்துக்காரியா? பொண்ணுக்கு ஆயுஷ்ய ஹோமம்
ஆயாச்சா? எத்தனை நாள் லீவு? நீ துபாய்ல இருக்கையா? அமெரிக்கால இருக்கையா?’னு வரிசையா
அர்னாப் கோஸ்வாமியோட ஒன்னு விட்ட மாமி மாதிரி கேள்வியா கேட்டு தள்ளினா. நானும் ஜாக்கிரதையா
ரெண்டு வரில பதில் சொல்லிட்டு நழுவ பார்த்தேன். ‘ஏதுடா தக்குடு! வாயை திறந்தா மூடாம
பேசுவையே இப்ப என்னவோ மணிரத்னம் படத்துல வரவா வசனம் பேசர மாதிரி வார்த்தை வார்த்தையே
பேசரையே’னு மாமி மறுபடியும் ஆரம்பிச்சா. மாமி ! ‘கல்யாணம் ஆகர்துக்கு முன்னாடி எல்லார்மே
நரேந்திர மோடி தான், வாய்க்கு வந்தபடி என்ன வேணும்னாலும் பேசலாம் ஆனா கல்யாணம் ஆச்சுனா
ஒழுங்கா மரியாதையா மன்மோஹன் சிங்கா மாறிகணும் இல்லைனா சேதாரத்துக்கு கம்பேனி நிர்வாகம்
பொறுப்பாகாது’னு நான் சொல்லவும் ‘கரெக்டா சொன்னைடா’னு அவாத்து மாமா வந்து சப்போர்ட்
பண்ணினார்.
அடுத்த ரெண்டு நாள்ல ஆவணி அவிட்டம் வந்தது. தெருல
வச்சு ஆவணி அவிட்டம்னா அது ஒரு தனி குஷி தான். ‘சங்கு மார்க்’ லுங்கிகளுக்கு பேமண்ட்
இல்லாத பிராண்ட் அம்பாசிடரா இருந்த மாமாக்கள் எல்லாம் திடீர்னு பஞ்சகச்சத்தோட நிக்கர்தா
பாத்தா பயங்கர காமெடியா இருக்கும். அதுலையும் ஒரு மாமா சின்னகவுண்டர் படத்துல வர வசனம்
மாதிரி லுங்கியை இடுப்புல கட்டியிருந்தா லெவல்ல இருக்கார்னு அர்த்தம், தொடை தெரியர
அளவுக்கு மடிச்சு கட்டியிருந்தார்னா தீர்த்தம்(சரக்கு) உள்ள போயிருக்குனு அர்த்தம்.
இடுப்புல இருக்கும் லுங்கியை அவுத்து நெஞ்சுக்கு மேல ஓமணகுட்டி மாதிரி கட்டியிருந்தார்னா
முல்லைபெரியாறுல 142 அடியை ‘தண்ணி’ தாண்டியாச்சு! யாரும் பேச்சு குடுக்காம அவாத்து
மாமியை கூட்டிண்டு வரணும்னு அர்த்தம். அந்த மாமா ஆவணி அவிட்டம் அன்னிக்கு மட்டும் விபூதி’பட்டை’
போட்டுண்டு நிக்கர்து கண்கொள்ளா காட்சி.
எத்தனை வருஷம் ஆவணியாவிட்டம் பண்ணினாலும் சில
மாமாக்களுக்கு பஞ்ச கச்சம் கட்டும் போது உலகத்துல இருக்கர எல்லா சந்தேகமும் வரும்.
வலது பக்கம் முதல்லையா இல்லைனா இடது பக்கமானு சந்தேகத்துல கட்டி கடைசில அது எதோ பான்சி
ட்ரெஸ் காம்படீசன் மாதிரி ஆயிடும். இந்த வருஷம் அப்பிடி தான் ஆச்சு. மத்தியானம் மஹாசங்கல்பம்
முடிஞ்சு குளிச்சுட்டு ரெண்டு மாமா பக்கத்துல பக்கத்துல நின்னுண்டு வேஷ்டி மாத்திக்க
ஆரம்பிச்சா. ரெண்டு பேரோட வேஷ்டியும் ஒரே மாதிரி இருக்கும் ஒன்பதுக்கு அஞ்சு வேஷ்டி.
பிரிச்சு எடுக்கும் போது எப்பிடியோ கொஞ்சம் குழப்பம் ஆகியிருக்கு. ஒரு மாமாவோட பஞ்சகச்சம்
முட்டுக்கு மேல கேப்ஃரே டான்சர் மாதிரி வருது, இன்னொருத்தருக்கு சர்ச்ல கல்யாணம் பண்ணின
கல்யாணப்பொண்ணோட பின்பக்க வஸ்த்ரம் மாதிரி இவரோட அங்கவஸ்த்ரம் நீளமா இருக்கு. அப்புறம்
பாத்தா ஒருத்தர் கைல ரெண்டு 9 முழமும் இன்னொருத்தர் கைல 2 அஞ்சு முழமும் இருக்கு.
8 comments:
super
Good comedy. Enjoyed. :)
:-)))
பலான விளம்பரம் எல்லாம் வரதேப்பா, கொஞ்சம் கவனிக்கப்படாதோ? :-))
thangamani kuzhanthaiya un kitta kuduthathaala nee anna aagitta, illanna pickup aagi irukumeda thambi, nalla chance poche. kudumbasthangaratha othukaratha thavira unakku vera vazhi illa. :)
Hi,
Waiting for your new update, come soonnnnnnnnnnnnnnnnnnnn Thakkudu.
Rgds
Rajesh
So..is Kummachi and Thakkudu are one and the same as per Kadal payanangalil Suresh? interesting :)
//நானும் ஜாக்கிரதையா ரெண்டு வரில பதில் சொல்லிட்டு நழுவ பார்த்தேன். ‘ஏதுடா தக்குடு! வாயை திறந்தா மூடாம பேசுவையே இப்ப என்னவோ மணிரத்னம் படத்துல வரவா வசனம் பேசர மாதிரி வார்த்தை வார்த்தையே பேசரையே’னு மாமி மறுபடியும் ஆரம்பிச்சா. மாமி ! ‘கல்யாணம் ஆகர்துக்கு முன்னாடி எல்லார்மே நரேந்திர மோடி தான், வாய்க்கு வந்தபடி என்ன வேணும்னாலும் பேசலாம் ஆனா கல்யாணம் ஆச்சுனா ஒழுங்கா மரியாதையா மன்மோஹன் சிங்கா மாறிகணும் இல்லைனா சேதாரத்துக்கு கம்பேனி நிர்வாகம் பொறுப்பாகாது’னு நான் சொல்லவும் ‘கரெக்டா சொன்னைடா’னு அவாத்து மாமா வந்து சப்போர்ட் பண்ணினார். // அவா உன் ப்ராப்பர்ட்டீ டீடெய்ல்சை புடுங்கிடுவன்னு நீயா தானே ஒன் வேர்ட் ஆன்சர் குடுத்த அதுக்கு ஏன் தங்கமணியை மாட்டிவிடற. கல்யாணத்துக்கப்புறம் ஆம்பளைகள் என்ன பண்ணினாலும், பழி என்னமோ அவாத்து மாமிகள் தலையில தான் விழறது. :)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)