எலெக்ஷன் சமயம் மட்டும் தொகுதியை எட்டிப் பார்க்கும் எம் பி கதை ஆயிடுத்து நம்ப கதை. 'பிள்ளையை பெத்துப்பாரு பாம்பெர்ஸை போட்டுப்பாரு"னு சும்மாவா சொல்லிவச்சுருக்கா. ரொம்ப பிஸியோ பிஸி! நானும் கொஞ்சம் ஃப்ரீ ஆனதுக்கு அப்புறம் எழுதலாம் எழுதலாம்னு தள்ளிண்டே இருக்கேன். தமிழக பி ஜே பி-யோட தொகுதி உடன்பாடு மாதிரி முடிவுதெரியாம போயிண்டே இருக்கு. கடைசி நாள்ல வந்து வேட்புமனு தாக்கல் பண்ணற மாதிரி ஒரு வழியா வந்தாச்சு அதனால பெரிய மனசு பண்ணி எல்லாரும் மன்னிச்சுக்கோங்கோ.
கல்யாணம் கழிஞ்சதும் மராத்தான் ரேஸ் உண்டுனு நான் நினைச்சு கூட பாக்கலை. தமிழ் நாடு கேரளா கர்னாடகானு பெர்மிட் வாங்கின லாரியாட்டமா சுத்தி சுத்தி வந்துண்டு இருந்தோம். என்னோட டூர் ப்ளானை பாத்துட்டு தங்கமணிக்கு உள்ளூர கோபமும் எரிச்சலுமா இருந்தாலும் கூட்டணி தர்மத்துக்காக பொறுமையா வந்தா. எல்லா ஊர் தண்ணியையும் குடிச்சுட்டு நல்ல குளிர்ல தோஹாவுக்கு வந்தா இங்கையும் குளிர்காலம். வந்த இரண்டாவது நாள் நெஞ்செல்லாம் கபம் கட்டிண்டு மிமிக்கிரி ஆர்டிஸ்ட் மாதிரி குரல் மாறிண்டு இருந்தது. இந்தியால இருந்த தங்கமணி கிட்ட விஷயத்தை சொன்னா கவலைபடுவானு சொல்லாம போன்ல “ஓ! எனக்கென்ன குத்துக்கல்லாட்டமா செளக்கியமா இருக்கேன்!”னு புளுகிட்டேன்.
அடுத்த நாள் காத்தால கைகால் நடுங்க ஆரம்பிச்சதால காரோட்ட முடியலை. பக்கத்துல இருந்த ஒரு தெரிஞ்சவாளுக்கு போன் பண்ணி ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போகமுடியுமா?னு ஜாரிச்சேன். அவாளும் வந்து பக்கத்துல இருக்கும் ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டுபோனா. அந்த ஆஸ்பத்திரி நம்ப ஊர்ல எல்லாருக்கும் ரொம்ப பரிச்சியமான ஒரு ஆஸ்பத்திரிதான். முன்னாள் அமைச்சர்களை சி பி ஐ விசாரிக்கவருதுன்னு கேள்விப்பட்டா உடனே போய் படுத்துக்கர இடம், நம்ப ஊர்ல எல்லா பக்கமும் இருக்கும் போட்டோ ஸ்டூடியோவுக்கும் இவாளோட பேர்தான், உள்ள நுழைஞ்சாலே தீவட்டிகொள்ளைதான்னு சொல்லாமசொல்ற மாதிரி ஒரு நர்ஸ் கைல தீவட்டி/ஜோதி ஏந்தின மாதிரி லோகோ இருக்கும். ரிஷப்ஷன்ல மலையாளிங்கிலிஷ் பேசும் ஒரு ஓமணக்குட்டி தான் உக்காசுண்டு இருந்தா. நான் புதுசா வந்துருக்கர்தால 'ஒரு ஓஃபர் உண்டு'னு பேச ஆரம்பிச்சது. நான் பாக்கர்துக்கு கொஞ்சம் மலையாளத்தான் மாதிரி இருக்கர்தை வெச்சுண்டு, ஏசியானெட்டை ஓன் பண்ணினமாதிரி வேகமா மலையாளத்துல “ஈ ஓஃபர் எடுத்தா மூனு திவசம் ஃப்ரீ கன்சல்டிங் கிட்டும்!”னு ஆரம்பிச்சா. கூட்டிண்டு வந்த என்னோட ப்ரெண்டுக்கு ஒரே குழப்பமா ஆயிடுத்து. “கடங்காரி! உள்ள நுழையும் போதே திவசம்/மாசியம்/செளண்டினு அபசகுனமா பேசராளே?னு யோசிக்கரமாதிரி இருந்தது. “இவா ஆஸ்பத்திரில வச்சு நாம போய்சேர்ந்தா மூனு வருஷத்துக்கு ப்ரீயா திவசம் போடுவாளாம்”னு மெதுவா நக்கல் அடிச்சேன். செல்போன் ரீசார்ஜ் கடைல வேலைபாக்கரவா மாதிரி மறுபடியும் விடாம அடுத்த ஓஃபர் பத்தி சொல்ல ஆரம்பிச்சா. “அம்மா மலையாளபகவதி! திவசமெல்லாம் தாமிரபரணி நதிகரைல நாங்க எங்காத்து வாத்தியாரை வச்சு போட்டுக்கறோம் நீ எனக்கு ஒரு அப்பாயிண்மெண்ட் மட்டும் போடு!”னு சொன்னதுக்கு அப்புறம் வேற வழியில்லாம டோக்கன் குடுத்தா.
தீவட்டி கொள்ளை
எண்ணெய் சட்டிலேந்து எம்பி குதிச்சு வெண்ணீர் பானைல விழுந்த கதையா அங்க ஒரு டாக்டர் இருந்தார். எனக்கு முன்னாடி வந்து பாத்துட்டு போனவரை பத்தி விலாவாரியா சொல்லிட்டு “பாவம் பொழைக்கர்தே கஷ்டம்”னு முடிச்சார். நாக்கை நீட்டு! மூக்கை காட்டு!னு சொல்லிட்டு ஒரு எக்ஸ்ரே எடுத்துண்டு வந்துடுங்கோ!னு அனுப்பினார். “பர்ஸ்ட் நைட் ரூம்ல மூனு பேர் எங்கையும் கேள்விபட்டதில்லை கேட்டையா?”னு புலம்பும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ கமலாட்டமா “காய்ச்சல்/ஜலதோஷத்துக்கு எக்ஸ்ரே இங்கதான் முதல் முதலா கேள்விபடறேன்”னு பொலம்பிண்டே போய் எடுத்தேன். எதிர்பாத்தமாதிரியே ரிப்போர்ட்ல ஒன்னும் வரலை ஆனா பலசரக்கு சாமான் லிஸ்ட் மாதிரி ஒரு 8 மருத்து எழுதினார். வெளில வந்துட்டு எனக்கு அடுத்து உள்ள வரர்துக்கு காத்துண்டு இருந்தவர் கிட்ட “எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் காய்ச்சல்/ஜலதோஷம், அதனால எக்ஸ்ரே எடுத்து மருந்து வாங்கபோயிண்டு இருக்கேன்”னு சொல்லிட்டு வந்தேன். ‘எப்பிடியிருந்தாலும் உள்ள போனா டாக்டர் சொல்லபோறார் அதான் நானே சொல்லிட்டேன்.
சமீபத்துல ரெண்டு மாசம் முன்னாடி வேற ஒரு ஆஸ்பத்திரில தலைவலிக்கு செக்பண்ணினா ப்ளெட்ல சுகர்/பிரஷர் எல்லாத்தையும் செக் பண்ணனும்னு சொல்லி எழுதிட்டா. சாம்பிள் எடுக்கரதுக்கு உள்ள போன உடனே ஒரு தடியன் பெரிய்ய்ய்ய சிரிஞ்சை எடுத்துண்டு வந்தான். 'ஆள்காட்டி விரல்ல குண்டூசியை குத்தி ஈஷிண்டு போவாளே அது இல்லையா'னு கேட்டேன். 'அதெல்லாம் காணாது'னு சொல்லிண்டே நரம்பை தேட ஆரம்பிச்சுட்டான். 'ஒரு நிமிஷம் என்னோட தங்கமணியை உள்ள வரசொல்லுங்கோ அவளோட கையை பிடிச்சுக்கனும்'னு நான் சொல்லவும் வினோதமான பிராணியை பாக்கரமாதிரி பாத்துட்டு 'சாம்பிள்தான் எடுக்கபோறேன் ஆப்ரேஷன் எல்லாம் பண்ணலை'னு சொல்லிண்டே ‘நசக்’னு குத்தி கால் லிட்டர் ரத்தம் எடுத்துட்டான். எனக்கு தலையை சுத்திண்டு மயக்கம் வந்து டாக்டர் நர்ஸ்னு ஒரே களோபரம் ஆயிடுத்து. அடுத்த நாள் டாக்டர் ரிசல்டை பாத்துண்டே “கொஞ்சம் கொழுப்பு இருக்கே”னு கேட்டபோது “கொஞ்ச கொழுப்பா இருக்கு உடம்பெல்லாம் கொழுப்புதான்”னு சொல்லற மாதிரி தங்கமணிக்கு நக்கல் சிரிப்பு. ‘ஒரு மண்டலம் மாத்திரை போட்டுண்டு வந்து மறுபடியும் ப்ளெட்டெஸ்ட் எடுங்கோ’னு சொன்னார். இந்த தடவை டெஸ்ட் எடுக்கும் போது தங்கமணி பக்கத்துலேயே நின்னுண்டா & தாகசாந்திக்கு ஜூஸ் தயாரா இருந்தது. சொல்லமறந்துட்டேனே! இந்த தடவை வலிக்காம அழகா சாம்பிள் எடுத்தது ஒரு ஓமணக்குட்டி நர்ஸ். “ஆத்துக்காரி பக்கத்துல இருந்தா தெம்பா இருக்கேளே?”னு போனதடவை இரத்தம் எடுத்த தடியன் கேட்டதும் தங்கமணிக்கு கொஞ்சம் பெருமிதம்.
தங்கமணி கையை பிடிச்சுக்கர்து & மணிபர்ஸ்ல தங்கமணி போட்டோ வெச்சுக்கர்துல ஒரு சூட்சுமம் இருக்கு தெரியுமோ! வாழ்க்கைல ஒரு கட்டத்துல நாம நினைச்சு பாக்கமுடியாத அளவுக்கு பெரிய கஷ்டமோ இல்லைனா சோதனையோ வரும்போது மணிபர்ஸை திறந்து உங்க தங்கமணியை பாத்துண்டேள்னா மனசுல ஒரு புது தெம்பும் புத்துணர்ச்சியும் வரும். அந்த உத்வேகத்தோட எந்த பிரச்சனையையும் சமாளிச்சுடலாம். எனக்கு தெரிஞ்ச ஒரு மாமா இதை ஏடாகூடமா அவாத்து மாமிட்ட சொல்லி அடி வாங்கியிருக்கார். “போன வருஷம் ஒரு பெரிய பிரச்சனை வந்த போது பர்ஸை திறந்து உன்னோட போட்டோவை பாத்தேன்! கண்ணெல்லாம் ஜலம் கட்டிண்டு ‘இந்த பிரச்சனையையே வாழ்க்கைலை சமாளிச்சுண்டு இருக்கோமே இதை விடவா ஒரு பெரிய பிரச்சனை வந்துடபோகர்து’னு நினைக்கவும் மனசு அப்பிடியே லேசாயிடுத்து”னு உளறினா அந்த மாமி சும்மாவிடுவாளா!
அத்வைதா தோஹாவுக்கு வந்ததுலேந்து தடுப்பூசி போடர்துக்கு ஒரு தடவை கூட உள்ள போகர்தே இல்லை. எல்லாம் அம்மாதான் பாத்துக்கரா. நமக்கெல்லாம் உள்ள போனா மனசு தாங்காது. அதுலையும் இந்த ஊர்ல டாக்டர் ஊசி போடமாட்டார் ஊசி போடர்துக்கு தனி ரூம்ல ஒரு கம்பவுண்டர் இருப்பார். போன தடவை வேற ஒரு குழந்தைக்கு ஊசிபோடர்துக்கு அவர் ஊசியை கைல பிடிச்சுருந்த ஸ்டைலை பாத்தா திருனவேலி ஆண்டி நாடார் பாத்திரகடைல அண்டா/குண்டால பேர் எழுதர ஆசாரியாட்டமா இருந்தார். நமக்கு பிடிக்கர்தோ இல்லையோ நித்தியம் கரெக்டா சாப்பிடும் போது வரும் கக்கூஸ் க்ளீனிங் விளம்பரம் கண்ணுல படற மாதிரி சகிச்சுக்கதான் வேண்டியிருக்கு. இவாளோட கூத்தை பாக்கும் போது எங்க ஊர்ல முப்பது ரூபாய்க்கு வைத்தியம் பாக்கும் எங்க டாக்டர் உம்மாச்சியா கண்ணுக்கு தெரியரார்.

24 comments:
ஜல்ப்பு மேட்டர இப்பிடி அப்பிடின்னு சில்பான்ஸ் பண்ணி படா டமாஸா சொல்லிகிற வாத்யாரே
சிரிச்சு வாயிற்று வலி வந்தால் ஸ்கேன் எடுக்கச் சொல்வாங்களா தக்குடு? ஸாரி, நீங்க உங்க கஷ்டத்தைச் சொல்றீங்க... நான் சிரிச்சுட்டேன்...(இதுவும் மை.ம.கா டயலாக்தான்)
சிரிச்சு மாளலை தக்குடு.... அதுவும் அந்த ஊசி போடும் விஷயம் எனது நெய்வேலி நினைவுகளை கிளறிவிட்டது! :))))
இப்போ உடம்பு தேவலையா?
Unga postaa padichale nekku kavala ellam panja paaranthu poyduthu pongoo.. Sirichi sirichi vaai valikuthu Thakkudu..
//'பிள்ளையை பெத்துப்பாரு பாம்பெர்ஸை போட்டுப்பாரு" // பழமொழி நன்னாயிருக்கே... அனுபவம் பேசறது....:))
//நமக்கு பிடிக்கர்தோ இல்லையோ நித்தியம் கரெக்டா சாப்பிடும் போது வரும் கக்கூஸ் க்ளீனிங் விளம்பரம் கண்ணுல படற மாதிரி சகிச்சுக்கதான் வேண்டியிருக்கு.//.....நிஜம் நிஜம்..:)))
சிரிச்சு மாளலை. உங்க பிரச்சனையை சொல்ல வந்தா நாங்க இங்க சிரிச்சுக்க வேண்டியதா இருக்கு. சாரி!
விஸ்வரூபம் தக்குடு! ஆஸம்!
வா...வா! சௌக்கியமா? அந்த ஆஸ்புத்திரி அப்போ லோவா இருந்து இப்போ ஹையா இருக்கிற ஆஸ்புத்திரி தானே. அவா உங்க ஊர்லயும் ஒரு பிரான்ச் ஆரம்பிச்சிட்டாளா? இந்த அப்பாக்களுக்கெல்லாம் வேறும்ன்ன வாய்தான் அம்மாக்கள் தான் பாப்பாக்கு ஊசி போடறத்துக்கெல்லாம் தாங்கிண்டு போகணும். அப்படி தாங்கிண்டாலும் “அவளுக்கு கல்லு மனசு”ன்னு கமெண்ட் வேற அடிப்பேளே. சரி,சரி உடம்பை பார்த்துக்கோ.
நமக்கு பிடிக்கர்தோ இல்லையோ நித்தியம் கரெக்டா சாப்பிடும் போது வரும் கக்கூஸ் க்ளீனிங் விளம்பரம் கண்ணுல படற மாதிரி சகிச்சுக்கதான் வேண்டியிருக்கு.//
அதான் ஒரு கையில ரிமோட்டோட தான் நான் சாப்பிடவே ஆரம்பிக்கிறது.
//இவா ஆஸ்பத்திரில வச்சு நாம போய்சேர்ந்தா மூனு வருஷத்துக்கு ப்ரீயா திவசம் போடுவாளாம்//
//“பர்ஸ்ட் நைட் ரூம்ல மூனு பேர் எங்கையும் கேள்விபட்டதில்லை கேட்டையா?”னு புலம்பும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ கமலாட்டமா “காய்ச்சல்/ஜலதோஷத்துக்கு எக்ஸ்ரே இங்கதான் முதல் முதலா கேள்விபடறேன்”//
//‘நசக்’னு குத்தி கால் லிட்டர் ரத்தம் எடுத்துட்டான்//
//அவர் ஊசியை கைல பிடிச்சுருந்த ஸ்டைலை பாத்தா திருனவேலி ஆண்டி நாடார் பாத்திரகடைல அண்டா/குண்டால பேர் எழுதர ஆசாரியாட்டமா இருந்தார்//
இனிமே இந்த பக்கமே வரப்போறதில்ல :D
சிரிச்சு சிரிச்சு வயித்த வலில அந்த ஆஸ்பத்திரிக்கே என்னை அனுப்புற உங்க சதி எனக்கு தெரிஞ்சுடுத்து ....ஹுக்கும் ;/
vazhakkampol ore thamash
Kalakal da.. :))
Kalakal da.. :))
ஹைய்யோ:-)))))
தக்குடு ஃபார்முக்கு வந்தாச்சு. ஜமாய் ராஜா ஜமாய்.
நானும் இன்னிக்குத்தான் ஒரு ஆஸ்பத்ரி பதிவு போட்டேன் காலம்பர.
நமக்கு பிடிக்கர்தோ இல்லையோ சகிச்சுக்கதான் வேண்டியிருக்கு
சகிப்புத்தன்மையில்தான் உலகமே சுத்துதோ..!!
இந்த மாதிரி ஹாஸ்பிடல்ஸ்க்கு போய் பழகிட்டியோ போச் ! அப்புறம் உனக்கும் அது பழகிடும்.அவாளுக்கும் நம்ம பணம் பழகிடும். கைவைத்தியம் தான் பெஸ்ட்.
தடுமனுக்கும் தலைவலிக்கும் சொத்தை எழுதிவைக்கணும்தன் சொல்லுவா அந்த ஊரில. கால்சுளுக்குக்கே 400 திரம் வாங்கின கொடுமைக்கார டாக்டரை அங்கே பார்த்திருக்கிறேன். இப்ப உடம்பு சரியாயிடுத்தா.
// இந்த தடவை வலிக்காம அழகா சாம்பிள் எடுத்தது ஒரு ஓமணக்குட்டி நர்ஸ். //
ஐய்ய்ய.... இதை நாங்க நம்பணுமாக்கும்? அந்த ஓ.குட்டி நர்ஸ் எடுத்ததாலயே தக்குடுவுக்கு வலியே தெரியாமப் போயிருக்கும் :)
இப்போ சரியாயிடுச்சா தக்குடு கோந்தைக்கு?
Happy to see your post. Hope you are ok now. Athvaida (what's the correct spelling?) is a nice name :-)
superb Thakkudu! ரசிச்சுப் படிச்சேன்! இந்த மாதிரி போஸ்ட்டுக்காகவே இன்னும் ரெண்டுதடவை நீ அந்த தீவட்டிக் கொள்ளைக்கார ஆஸ்பத்திரிக்குப் போக மாட்டியான்னு இருக்குப்பா! ’சோஒ’ரி! :-)
வழக்கம் போல ஸூபர் காமெடீ தக்குடு. ஒரு முறை ப்லட் டெஸ்ட்-க்கு சென்னையில் உள்ள ஹாஸ்பிடல் சென்றிருந்தேன். அந்த நர்ஸ், நாலு குட்டி குட்டி ட்யூப்-களில் ரத்தம் எடுக்க, நான் "மேடம், நான் Donation-கு வரல" என்று நான் வழியில் கத்த , "இது sample தாங்க. ப்லட் டெஸ்ட்-கு தான் எடுக்குறோம்" என்று அவர் சொல்ல, சுற்றி உள்ளோர் அனைவரும் சிரிக்க வேண்டியத்தாய் போயிற்று.
அத்வைத்தா-க்கு என் வாழ்த்துக்கள். Happy Fathering!
:)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)
//திருனவேலி ஆண்டி நாடார் பாத்திரகடைல அண்டா/குண்டால பேர் எழுதர ஆசாரியாட்டமா இருந்தார்//
:))))))))))
//இவாளோட கூத்தை பாக்கும் போது எங்க ஊர்ல முப்பது ரூபாய்க்கு வைத்தியம் பாக்கும் எங்க டாக்டர் உம்மாச்சியா கண்ணுக்கு தெரியரார்//
கரெக்டு தக்குடு... நம்ம முத்துக்குமார் டாக்டரோட பொறுமையும், பெருமையும் எப்பவுமே மறக்க முடியாது....
@ மாது - நன்றி சார் :)
@ sriram அண்ணா - அது தெரிஞ்சதுதானே! :)
@ டில்லி அண்ணா - இப்போ உடம்பு பரவாயில்லை அண்ணா :)
@ ப்ரியா மேடம் - :)
@ ஆதி - சந்தோஷமா இருந்தா சரிதான் :)
@ அனன்யாக்கா - தங்க்யூ :)
@ தா. தலைவி - எல்லா ஆத்துலையும் இதுதான் கதை
@ அமுதா மேடம் - மாத்தர சானல்லையும் அதே தான் வருது :(
@ மாலா மேடம் - :)
@ பேங்க் மாமி - நன்றி :)
@ டுபுக்கு அண்ணாச்சி - மோதிரக் கையால் சபாஷ் :)
@ துளசி டீச்சர் - உலகம் சுற்றும் வாலிபிக்கு நல்வரவு :)
@ ராஜி மேடம் - அதே அதே
@ வல்லிம்மா - கரெக்டா சொன்னேள்! செளக்கியமா அம்மா!
@ கவினயா அக்கா - இப்ப கொஞ்சம் தேவலை
@ அம்மா - Adhvaitha :)
@ கோபிகா அக்கா - தங்க்யூ அக்கா :)
@ சுப்பு சார் - :)
@ தனபாலன் சார் - ரொம்ப சந்தோஷம் :)
@ துபாய் ராஜா - அண்ணாச்சி செளக்கியமா?
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)