Thursday, April 12, 2012

கிச்சனும் கேசவனும்.........

அனைவருக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


பிரம்மச்சாரியா இருந்த வரைக்கும் வீட்டுக்கு அவ்வளவு பிரமாதமான முக்கியத்துவம் எதுவும் குடுக்காம ‘கட்டையை சாய்க்கர்த்துக்கு ஒரு திண்ணை இருந்தா போறாதா ஓய்ய்!’னு மேல்துண்டை திண்ணைல தட்டிண்டே தாச்சுக்கும் ‘முடுக்கு’ மூச்சா மாமா மன நிலைலதான் இருந்தேன். ஆனா இந்த க்ரகஸ்தன் வாழ்க்கை இருக்கே. ஒருமாதிரியான சுகமான அவஸ்தை. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த இடம் ‘மர்மதேசம்’ சீரியல்ல வந்த நவபாஷான லிங்க பெட்டி இருக்கும் குகைமாதிரி நல்ல காத்தோட்டமா(!!) வெளிச்சமா உள்ள இடம். போதாகுறைக்கு பாதிராத்திரி வரைக்கும் ஃபுட்பால் மேட்ச்சை பாத்துண்டு ‘ஆயாளு சவட்டிக் களைஞ்சு'னு கூப்பாடு போட்டுண்டு இருக்கும் ஒரு மலையாளி பார்ட்னரும் உண்டு. ‘ஆயாவ எதுக்கு சவட்டி களையரா?’னு அரைதூக்கத்துல புலம்புவேன். அவனும் இல்லைனா ஒத்தமரத்து குரங்கு மாதிரினா இருக்கனும்னு நினைச்சு அவனை திட்டமாட்டேன். தங்கமணி வரபோராங்கனு முடிவானதுக்கு அப்புறம் வீடு தேடர படலம் ஆரம்பம் ஆச்சு.

தேடிப் பிடிச்ச வீட்ல உள்ள நுழைஞ்ச உடனே முதல் ரூம் சமையல்கட்டு தான். கல்யாணம் கழிஞ்சு வந்த தங்கமணி வரும்போது கையோட 'சமைத்துப் பார்!' 'அறுசுவை!' 'கலக்கல் சமையல்!'மாதிரியான தலைப்பு போட்ட புஸ்தகம் சகிதமா வந்தாங்க. ‘கலக்கல்’ சமையல்ல நித்தியம் வயிறு கலக்கிடாமே இருக்கனுமே நாராயணா!’னு மனசுக்குள்ள படபடப்பு வந்தாலும் சாயங்காலம் 5 மணிக்கு சுனாமியை பாக்கர்துக்கு மேக்கப் போட்டுண்டு போய் மெரினால நின்ன பொம்ணாட்டிகள் மாதிரி மனசை திடப்படுத்திண்டேன். தங்கமணி கிட்ட போய் மெதுவா 'இந்த ‘கலக்கல் சமையல்’ ‘சமைத்துப்பார்’ ஐயிட்டத்தை உங்க அப்பாக்கு தம்பிக்கு எல்லாம் ட்ரை பண்ணி பாத்துருக்கேளா?'னு மெதுவா கேட்டேன். ‘இல்லை நீங்க தான் பர்ஸ்ட்’னு பல்லெல்லாம் வாயா பதில் வந்தது. ‘அதானே கேட்டேன்! ஆத்துக்காரருக்கு கலக்கிண்டு போனா பரவாயில்லை அப்பாவும் அம்பியும் செளக்கியமா இருக்கனும் இல்லையா?’னு நான் கேட்டதை மேடம் காதுலையே வாங்கலையே!



நம்பாத்து கிச்சன்!

வந்து ரெண்டாவது நாள் சப்பாத்தி பண்ணினா பாருங்கோ!!. பில்டிங்கே ஆத்து வாசல்ல வந்து நின்னுடுத்து. ‘பாத்தேளா! என்னோட சப்பாத்தி எப்பிடி எல்லாரையும் சுண்டி இழுத்துண்டு வந்துடுத்து பாருங்கோ!’னு சொல்றமாதிரி ஒரு பெருமித பார்வை தங்கமணி கிட்ட இருந்து. நான் என்னதோ ஏதோ!னு பயந்து போய் ரேளில வந்து பாத்தா ஒரே புகைமண்டலம். ஆத்துல எல்லா கதவையும் தாள்போட்டுண்டு கணபதி ஹோமம் பண்ணின மாதிரி இருக்கு. அடுப்புக்கு நேர இருக்கும் சிம்மணியை போட்டுண்டு தான் சமைக்கனும்னு எங்காத்து அம்மணிக்கும் தெரியலை எனக்கும் தெரியலை. ஃபயர் அலாரம் அடிச்சு ஊரையும் நாட்டையும் கலக்கிடுத்து. அன்னீலேந்து எப்ப சமைக்க போனாலும் திருட்டு தம் அடிக்கறவா மாதிரி ‘புகை வருதா? புகை வருதா?’னு கிச்சன்லேந்து ரேளில இருக்கும் என்கிட்ட கேட்டுண்டே இருப்பா. பால் காய்ச்சினா கூட சிம்மணியை போட்டுண்டு தான் எல்லாம் நடக்கர்து.

ஒரு நாள் சாயங்காலம் டீ குடிச்சுண்டு இருக்கும் போது ‘நாளைக்கு உங்களுக்கு நான் வெஜிடபிள் புலாவ் பண்ணிதரட்டுமா?’னு ரொம்ப ஆசையா கேட்டா. ‘புலாவ் எல்லாம் கொஞ்சம் கஷ்டமான ஐயிட்டம் பட்டூ! நாம மெதுவா லெமன் சாதம், தேங்காய் சாதம்னு பஜனையை கொண்டுபோவோம்’னு ஆனமட்டும் கெஞ்சிபாத்தேன். ம்ம்ம்ம்! காதுலையே வாங்கலையே! அடுத்த நாள் மத்தியானம் தட்டுல புலாவ் ரெடியா இருந்தது. பகவானை பிரார்தனை பண்ணிண்டு சாப்பிட ஆரம்பிச்சேன். டெபிள் டென்னிஸ் அம்பயர் மாதிரி என்னையும் புலாவ் தட்டையும் மாத்தி மாத்தி மேடம் பாத்துண்டு இருந்தாங்க. நான் சலனம் இல்லாம சாப்பிடர்தை பாத்துண்டே ‘கொஞ்சம் குழஞ்சுருத்து இல்லையா?’னு மெதுவா ஆரம்பிச்சாங்க. ‘அடுத்த தடவை புலாவ் பண்ணும்போது சனிக்கிழமை பண்ணு! அப்பிடியே கொஞ்சம் மிளகு ஜீரகமும் பொடிச்சு போடு! பெருமாளுக்கு சனிக்கிழமை பொங்கல் நிவேத்யம் பண்ணினா ரொம்ப விஷேஷம்! ‘புலாவ்’ பொங்கல் பிரமாதமா இருக்கு!’னு சொன்னதுக்கு அப்புறம் யாருக்கோ போன் பண்ணி '2 டம்பளர் ஜலம் தானே விடனும் மாமி!'னு சந்தேகம் கேட்டுண்டு இருந்தா. யாரோ தஞ்சாவூர் மாமியாம். அவா கிட்ட போன்ல கேட்டே பண்ணினதுதான் இந்த புலாவ்வாம்.

இந்த விஜய் டிவி, சன் டிவில வரும் சமையல் நிகழ்ச்சியை பாத்தா எனக்கு மனசு பதற ஆரம்பிச்சுடும். 'கல்யாணத்துல உங்க பெரியம்மா பக்கத்துல சிவப்பா குள்ளமா ஒரு பொண்ணு நின்னுண்டு இருந்துதே அது யாரு?' ஆபிஸ்ல உன்னோட வேலை பாக்கர்தா சொல்லிண்டு கட்டுகுட்டுனு ஒரு நாயர் பொண் ரிசப்ஷென்ல வந்தாளே அவளோட பேர் என்ன நிம்மியா?'னு நானும் மாஞ்சு மாஞ்சு ' நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' சூர்யா மாதிரி கேள்விகேட்டாலும் அசராம ‘தனியாவை தனியாக மிக்சியில் அறைத்துக் கொள்ளவும்’லேந்து கரெக்டா பாலோ பண்ணுவா. நடுல எதாவது புரியாத சாமான் பேரையோ இல்லைனா கறிகாய் பெயரையோ அந்த சமையல் பொம்ணாட்டி சொன்னதுக்கு அப்புறம் நிலைமை என்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வரும். ‘அவள் சொல்லற கறிகாய்/ மாவு எல்லாம் அமெரிக்காலையோ இல்லைனா சிங்கப்பூர்லையோ தான் கிடைக்கும்’னு சமாளிக்கர்துக்குள்ள நாக்கு தள்ளி போகும்.

ஆரம்பத்துல சாம்பார் ரசமே பெரிய சாதனையா இருந்தது. இதுக்கு நடுல உப்பு/காரம் கூடியோ/குறைஞ்சோ போச்சுனா மறுபடியும் தேத்தி சமையல் பண்ண வைக்கர்துக்கு புரட்சித் தலைவி மாதிரி இட்லி கதை/சட்னி கதை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு. ‘என்னங்க இன்னிக்கு சாம்பாரா ரசமா?’னு கேக்கும் போது ‘நீ முதல்ல பண்ணுடா பட்டூ! அதுக்கு அப்புறம் அது சாம்பாரா ரசமா?னு நாம பொதுக்குழுவை கூட்டி முடிவு பண்ணலாம்’னு சொல்லுவேன். நான் சமையல் பண்ணின போது பாத்திரத்தோட மேல்டாக்குல தெளிவா எடுத்தா அது ரசம். கொஞ்சம் கலக்கி எடுத்தா அது சாம்பார்னு ஒரு கொள்கை உறுதியோட இருந்தேன். ‘கலக்கல்’ சமையல் கொஞ்சம் தெளிவாகி கலங்காத சமையல் ஆனதுக்கு அப்புறம் வெளில உள்ளவாளை விருந்துக்கு கூப்பிட்டா போதும்னு ரகசியதீர்மானம் போட்டு வச்சுருக்கோம்.

‘பழைய குருடி கதவை தொறடி’ கதையா ஒரு வாரமா 'உங்களுக்கு பன்னீர் டிக்கா மசாலா பண்ணி தரேன்’னு சொல்ல ஆரம்பிச்சு இருக்கா. ‘பன்னீர் டிக்காவும் வேண்டாம் சந்தன டப்பாவும் வேண்டாம்! நாலு வாய் தச்சு மம்முவும் சாம்பார் மம்முவும் போட்டாலே நான் திருப்தி ஆயிடுவேன்’னு நானும் எவ்வளவோ கதறியாச்சு இருந்தாலும் இந்த உலகம் எப்போதுமே சாதுக்களை தான் சோதிச்சு பாக்கர்து. ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் இந்த தஞ்சாவூர் மாமி கைல மாட்டாமையா போவா அப்போ இருக்கு தீபாவளி!

55 comments:

Sriram Doha said...

தக்குடு கஷ்ட்டபட்ட கட்டுரைக்கு முதல் comment போடறதுல இருக்கற சந்தோஷமே தனி.

Sriram Doha said...

தக்குடு! வரும் நந்தன ஆண்டு உங்களுக்கு நந்தா வனமாக இருக்க அடியேனின் வாழ்த்துக்கள். ஒம்ம ஆத்துக்காரிக்கு சிறப்பு வாழ்த்துக்கள். (பூனைக்கு மணி கட்டியமைக்கு !!).

Priya Suresh said...

Lolz, pattu maamiyoda samaiyal'la nanna enjoy pannuringa poley irruke, besh besh jamaingoo..Welldone Maami,ippadi than aathukarara paadai paduthanam..vetri nichayam..

lata raja said...

aiyO paavam...idhu unakku illa un pattoovukku....unakku samchchu pottu jeyikkaradhukkulla naakku thallidum! Aamaam, pusthagam edhukku adhaan, ella akka, maami blog-um irukkae!

Subhashini said...

எலெய் தக்குடு அண்ணாவுக்கு சமைச்சு போட்ட மாதிரி பேசாம ஆத்துக்காரிக்கும் சமைச்சு போட்டுடு...........
அன்புடன்
சுபா

இராஜராஜேஸ்வரி said...

நீ முதல்ல பண்ணுடா பட்டூ! அதுக்கு அப்புறம் அது சாம்பாரா ரசமா?னு நாம பொதுக்குழுவை கூட்டி முடிவு பண்ணலாம்’னு சொல்லுவேன்.

விரைவில் தீபாவளி கொண்டாட வாழ்த்துகள்..

பால கணேஷ் said...

வீட்டுல கணபதி ஹோமம் பண்ணின மாதிரி புகையா? புலவ் பண்ணி பொங்கலானதும், போன்ல கேட்டுண்டே சமைக்கறதும்... என் வீட்லயும் இப்படி ஒரு விஷயம் முன்ன நடந்ததை ஞாபகப்படுத்திடுத்து! அதெல்லாம் சரி... இந்தப் பதிவை தங்கமணி கிட்ட காட்டுவேளா, மாட்டேளா?

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

Arputham thakkudu, Ethuku ungathu mami ISD selavu pannindu iruka, athan nanga ithnai paer enga aathukararai padutha prepare pannadu ellam Photo eduthu blog-le podarome, athai partha samaika sollalamonno!!!! Atleast ISD Selavu micham aagume!!!!

sriram said...

கொய்யால, இன்னிக்கு வீட்ல இருக்குடி ஒனக்கு கச்சேரி..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

GEETHA ACHAL said...

ரொம்ப கொடுத்து வச்சவங்க தக்குடு நீங்க...நான் எல்லாம் கல்யாணம் ஆன புதிதில் இவரை தான் சமைத்து காட்ட சொல்லி கற்று கொண்டேன்..

சொன்னா நம்ப மாட்டிங்க...எலுமிச்சை சாதம் கூட எனக்கு செய்ய தெரியாத காலம் அது...இப்பொழுது நினைக்கும் பொழுது கூட சிரிப்பாக வருது....

அந்த சிரமம் எல்லாம் உங்க மனைவி உங்களுக்கு வைக்காமல் புத்தகம் எல்லாம் வாங்கி கொண்டு வந்து சமைத்து சூப்பராக செய்து கொடுக்கும் பொழுது இப்படி சொல்வது உங்களுக்கு இது ஒவராக தெரியவில்லையா...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எத்தன பேர கலாய்ச்சு இருப்பே... அனுபவி தக்குடு அனுபவி...;) Way to go Mrs. Thakkudu...don't give up...;)

Madhuram said...

Engala ellam (food bloggers) eppadi kindal panna? Pattu supera samaikka arambichu, food blog start panni, pudhusu pudhusa samaichu unnai innum paadaai padhutha vaazhthukkal.

Madhuram said...

Appavi eppadi namma rendu peru thoughtsum ore madhiri irundhirukku. We both have been typing the comment at the same time.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

@ Madhuram - Great women think at a time...;))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

@மிசஸ் தக்குடு - உங்களுக்கு ஒரு டிப். சாதம் ரெம்ப கொழஞ்சுட்டா "நன்னா குழைய வெந்து சாப்பிட்டா தான் நல்லதுனு எங்க பாட்டி சொல்லி இருக்கா, அதான் இப்படி செஞ்சேன்"னு சொல்லிடுங்க. அதே கொஞ்சம் விதையா ஆய்டுசுன்னா "ரெம்ப வெந்தா சத்தெல்லாம் போய்டும்னு குமுதத்துல படிச்சேன்... அதான்"னு சொல்லுங்க. திஸ் வில் வொர்க்...;))

ஆயில்யன் said...

//
நம்பாத்து கிச்சன்!//

ரொம்ப சுத்தமாஆஆஆஆஆ இருக்கே தொடைச்சு வைச்சிருக்கேளா? :)))

ஆயில்யன் said...

///யாரோ தஞ்சாவூர் மாமியாம். அவா கிட்ட போன்ல கேட்டே பண்ணினதுதான் இந்த புலாவ்வாம். //
யோவ்வ்வ்வ்வ் என்ன ரொம்பத்தான் நக்கலாப்போச்சு தஞ்சாவூர் மாமி பொங்கலுக்குத்தான் ரெசிப்பி கொடுத்திருப்பாரு உங்காத்து மாமி உம்மகிட்ட பேருலயாச்சும் ஒரு டிபரெண்ட் காமிப்போம்ன்னு புலாவ்ன்னு ஒரு டிபரெண்ட் காமிச்சிருக்காரு அவ்ளோதான் ச்சும்மா சோழமண்டலத்தை நொட்டை நொள்ளை சொன்னீரு அப்புறம் இருக்குடியோவ்வ்வ்வ்வ்....! :)

ஆயில்யன் said...

அடப்பாவிமக்கா நல்லவேளை என்னிய பலி கெடாவாக்க நினைச்சிறேய்ய்யா #மீதஎஸ்கேப்ப்ப்ப்ப்

Jeyashris Kitchen said...

super post thakkudu. seekeram unga athu pattu oru blog arambikka ella food bloggers sarbaga valthukal. Btw, is she reading ur post?

குறையொன்றுமில்லை. said...

கிச்சனபாத்தா அதில் சமையல் எல்லாம் பண்ரது போலவே இல்லியா எடுப்புதானா?

வல்லிசிம்ஹன் said...

Fantastic. hubby ippadiththaan irukkanum.
HAPPY NEWYEAR GREETINGS MR AND MRS .THAKKUDU.

ஸ்ரீராம். said...

திருட்டு தம் அடிக்கறவங்க மாதிரி, வெஜ் புலாவ், தஞ்சாவூர் மாமி....ஹா...ஹா...தங்கமணி இதைப் படிச்சாங்களா இல்லையா....

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

தக்குடு கண்ணா, எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதை.... நிறைய விஷயங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கும்....

பரிசோதனை எலியே நம்ம வர்க்கம் தான்! நானும் அனுபவிச்சு இருக்கேனே கண்ணா.... :)

பத்து வருடம் ஆனாலும் இப்படி திடீர்னு புதுசா எதையாவது பண்ண ஆரம்பிச்சாங்கன்னா கொஞ்சம் நடுக்கத்துடன் தான் இருப்பேன்... :)

உங்களுக்கு மண்டகபடி இருக்கோ இல்லையோ எனக்கு இருக்கு! இப்பதான் வந்து என்ன டைப் பண்றேன்னு பார்த்துட்டு இருக்காங்க! அப்புறம் வரேன்.... :)))

தி. ரா. ச.(T.R.C.) said...

Ithai Ithai ithaithann naan etirpaarthen:)

Anonymous said...

Super post thakkudu, Enga ellarum eppadi kalicha, :) will she read this post.


Vidhya

Kavinaya said...

தக்குடுவுக்கு ஆனாலும் தைர்யம் ஜாஸ்தி! தங்கமணி இதைப் படிச்சா புலாவ் பொங்கல் கூட கெடைக்காது தெரியுமோ? :)

தக்குடு தம்பதிக்கு இனிய தலை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

தாங்கள் படுகிற பாடு எப்படியோ
பதிவு ரொம்ப சுவாரஸ்யம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

very humourous as always! one story goes like this: a newly married woman served punnakku instead of food totally forgetting what she was serving! the husband said " besh besh saappadu inniku romba nanna irukku!nnu" ellam kaadhal paduthum paadu! pudhu mappilai nna appadi irukka vendamo? atleast learn frm now onwards!!! edhu eppadiyo nalla post padicha anubavam kitty:)))sasikala sugavanam.

R. Jagannathan said...

/எப்பப் பாரு சாப்பாடு இல்லைனா பந்தி. இந்த தக்குடு சரியான சாப்பாட்டு ராமனா இருப்பான் போலருக்கே!/ இன்னுமா சந்தேகம்! சிரிச்சுண்டே கலாய்ச்சா ஆத்துமாமிக்கு ஊமைக் குசும்புகூடத் தெரியாம போய்டுமா! சரி, சரி பொங்கல்-புலவுக்கு அப்புறம் எந்த ஹோட்டலுக்குப் போனீர்கள்?!

/சுனாமியை பாக்கர்துக்கு மேக்கப் போட்டுண்டு போய் மெரினால நின்ன பொம்ணாட்டிகள் மாதிரி / என்ன டைம்லி கம்பேரிசன்!

/ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் இந்த தஞ்சாவூர் மாமி கைல மாட்டாமையா போவா அப்போ இருக்கு!/ என்ன பண்ணுவீங்க? ஆத்துக்காரி சமைச்சதை அவாளை சாப்பிட வைப்பீரா? நடத்தும், நடத்தும்!

புத்தாண்டில் நன்றாகச் சமைத்து தங்கமணிக்கும் போட்டு நீரும் நன்கு சாப்பிட்டு சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வாழ்த்துக்கள்!

-ஜெ.

Alagar said...

super thakkudu. happy thali tamil new year.

SRINIVAS GOPALAN said...

தக்குடு

புலாவோ பொங்கலோ - சாப்பிட ஒரு வஸ்து மாமி போடறா இல்லையோ? சந்தோஷப்பட்டுக்கோ. ரொம்ப நாக்கை காமிக்காதே. :)

வேற என்ன விசேஷம் உங்காத்துலே?

சுபத்ரா said...
This comment has been removed by the author.
சுபத்ரா said...

Great Style of Writing :-)

Mahi said...

தக்குடு தம்பதியினருக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :)

தக்குடு,சமையல் மாமிகளுக்குன்னு ஸ்பெஷல் பதிவு போட்டப்புறம்தானே "தக்குடு ப்ளாக்" பிரபலமாச்சு? அதெல்லாம் மறந்துருமா எங்களுக்கு?! :)

தங்கமணியின் சமையலை ரசித்து ருசிக்க வாழ்த்துக்கள்! பன்னீர் பட்டர் மசாலா செய்தாச்சா? ;)

ADHI VENKAT said...

நிறைய இடத்துல சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை. பாவம். உங்க ஆத்துக்காரி தான். நீங்க நன்னாயிருக்குன்னு சொல்ல வேண்டாமோ.....:)

தமிழ் புத்தாண்டில் இதுபோல் பல ரெசிபிக்களை உங்க ஆத்துக்காரி பண்ணி நீங்க அதை ருசிக்க வாழ்த்துகள்......:)))

viji said...

Thakkudu,
Kalyanathukku munneya samayal kathukkoonnu ethanaithadavai chonen ketaya?

Many more Happy returns of the pulav pongal.

viji said...

By the by ungathu kitchen athenna apadi kaliya kedakku?

RVS said...

எதாவது ஒரு ரூபத்தில உதவும் தஞ்சாவூர்க்காராளை இடிக்காட்டா உனக்கு தூக்கம் வராதா? இந்தப் பதிவுக்கு அப்புறமும் ரேளில உட்கார வச்சு உனக்கு போஜனம் கிடைச்சா அதுதான் இந்த உலகத்திலேயே பெரிய அதிசயம்! :-)

குரு said...

சூப்பர் தக்குடு ரொம்ப தங்கமணியை வாராதேள் அப்புறம் ஒண்ணுமே கிடைக்காது ஜாக்கிரதை வேற என்ன விஷேசம்

Anonymous said...

Thamizh puthaandu Vazhthukal.Enjoyed reading ur blog,hope mrs,Thakkudu is not reading thisone?!!Seems she really wants to learn and tryout new dishes.Best wishes to both you.A small advise to Jayshree,in PepsiUma style"try,try and keep trying,better luck next time or till thakkdu surrenders!":)
Vidya akka,Bangalore.

துளசி கோபால் said...

உரலுக்குள்ளே தலையைக் கொடுத்தாச்சு, இனி ஐயோன்னா அம்மான்னா முடியுமோ?

அருமையான பதிவுகளுக்கு ஐடியாக் கிடைக்கறதே!எஞ்சாய் தக்குடு:-))))))

தக்குடு said...

@ இட்லி மாமி - 'Great aunties think at a same time!'னு நம்ப 'எவர்யூத்' பாஸ்டன் நாட்டாமை சொல்ல சொன்னார். :PP

சுசி said...

எங்களை மாதிரி தஞ்சாவூர் காரா, தாய்குலங்கள் எல்லோரையும் கிண்டல் பண்ணினதோட பலன் தான் இன்னிக்கு நீ கூழ், கஞ்சின்னு சாப்டுண்டு இருக்க. இனிமேயும் நீ திருந்தல அப்புறம் அரிசி, பருப்பு எல்லாதையும் "அப்படியே சாப்பிட" வேண்டியது தான் சொல்லிட்டேன்.

Anonymous said...

Had a hearty laugh.. thanks:)

சுசி said...

தம்பி !, அந்த மாமி தீபாவளி கொண்டாடறது இருக்கட்டும், இப்போ நீ தினமும் சங்கராந்தி (பொங்கல்) ஆருத்ரா தர்ஷனம் (களி) ன்னு கொண்டாடிண்டிருக்கியே அத சொல்லு.

Anonymous said...

Idhellaam pesarthuku munnaadi koncham nambala pathiyum yosikanum... :p

1. Chapaathi maavu uppu illaama yaaru paa pesanjadhu

2. Horlicks ku paal vittutu, mela Horlicks powder a bulkaa yaaru paa potadhu

Thangamani samayal a kindal panrathuku munnaadi idhellaam koncham yoschi paakanum..

On another note, if you keep encouraging her experiments, she will become one among the best cooks..don't worry :-)

--Anna and Manni

ஹுஸைனம்மா said...

முற்பகல் செய்யின்.. இன்னும் ”பிற்பகல்” ஆரம்பிக்கவேயில்லியே, அதுக்குள்ள இப்பிடி பதிவா... பொறும.. பொறும...
(பொறுமினாலும் உறுமினாலும், பொறுமையாய் இருந்துதானாக வேண்டும்)

ஆமா, கிச்சன் சுத்தமா இருக்கணும்தான், ஆனாலும் இவ்ளோ “சுத்த்த்தமாவா”????? ”பொங்கல்-புலாவ்” சாப்பிட்டவேகத்துல “காலி” பண்ணிட்டீங்களோ - கிச்சனை? :-))))

CS. Mohan Kumar said...

தக்குடு இன்னிக்கு தான் உங்க ப்ளாக் பக்கம் வந்தேன். அசத்தலா இருக்கு பதிவுகள் மட்டுமல்ல. காமன்டுகளும் கூட தான். செமையா என்ஜாய் பண்ண ஒரு ப்ளாக் உங்களுது

கிச்சனில் பாத்திரம் இல்லைங்கறது கூட பரவாயில்லை. அடுப்பு கூட இல்லியே பிரதர். அப்ப பதிவு முழுக்கவே கற்பனையா?

sury siva said...

தக்குடுவுக்கு என்ன தஞ்சாவூர் புலாவ் தானே வேணும் .
இதோ ! எங்காத்து மாமியும் தஞ்சாவூர் தான்.
அங்கே அடுத்த மாசம் 12ம் தேதி வரும்போது செஞ்சுண்டு வரோம்.
இதுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது. கல்யாணம் முடிஞ்ச கையோட‌
இதச்சமை அதச்சமை என்றால் அந்தப்பொண் என்ன செய்யும் பாவம். !!

அது சரி !! உம்மாச்சி காப்பாத்து தளத்திலே போஸ்டிங் எதுவுமே போடலியே !!
உம்மாச்சியை மறந்துட்டேளா !! இல்ல
உம்மாச்சிய மாத்திட்டேளா !!

சுப்பு தாத்தா.

மிருணா said...

Hearty wishes for many more pongal pulavs :)

vgr said...

hehe...mami ida padikala? apram pacha thanni kooda kedaikada poida porudu...:)

சுசி said...

Dear all,

ungalukkellam oru vishamyam purinjutha..? avaathu maami nannaa samikka kathukara varaikkum yaaraiyum aathukku koopuda porathillaiyaam.

appadinnaa yenna artham...!? avaathu maami yeppo naana samaikka kathuppa...!?

athanaala dogha vazh perumakkale neenga yellorum verumna thootham kuduthaa kooda poorumnnu sollitu avaathukku padai yeduthudungo!

Vetirmagal said...

இந்த மாதிரி அழகான கிச்சன் இருந்தால் யாருக்குதான் சமைக்கு ஆசை வராது?

க்ளீன் பண்றது யாரு? நன்னா சுத்தமான வேலை.

மங்களூர் சிவா said...

haa haa
enjoyed the post.

தக்குடு said...

@ All - கமண்ட் போட்ட எல்லாருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்! தனி தனியா பதில் விரைவில்...:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)