Sunday, January 1, 2012
வந்தாச்சு வந்தாச்சு.........
எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? நானும் எதோ கொஞ்சம் செளக்கியமா இருக்கேன். ஒரு மாசமா சம்சார சாகரத்துக்குள்ள ‘தத்தக்கா புத்தக்கா’னு நீச்சல் அடிச்சு போராடிண்டு இருக்கேன். அதுக்குள்ளையே எதுக்குடா கோந்தை அலுத்துக்கராய்?னு எல்லாரும் சமாதானம் சொல்ல ஆரம்பிச்சுடாதீங்கோ! நான் சும்மா லூலூவாயிக்கு தான் சொன்னேன். பிரம்மச்சாரியா ஊருக்கு போயிட்டு இப்ப பெரீய்ய்ய்ய குடும்ப இஸ்தனா திரும்பி வந்தாச்சு. கல்யாணத்துக்கு கிளம்பி கல்லிடைலேந்து மெட்ராஸ் வரர்துக்கு விஜய் ஹிட்டு படம் குடுக்கர்துக்கு போராடரமாதிரி போராடவேண்டியதா போச்சு. அடிச்ச மழையை பாத்துட்டு ‘ஓஓஓ! ஏதுடா இது! எல்லா ஆம்பளேளுக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் தானே புயல் சூறாவளி இடி மின்னல் எல்லாம் வரும், நம்ப கதைல கல்யாணத்துக்கு முன்னாடியே வரர்தே!’னு ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா போயிடுத்து.
‘நீனு சூப்பிஸ்தானுவா! நானு சம்பிஸ்தானு!’னு டயலாக் பேசிண்டே வேகமா வரும் ரயிலை ரிவர்ஸ்ல தள்ளர தெலுங்கு பட கதானாயகனாட்டாமா உம்மாச்சி 3 நாளைக்கு மழையை நிப்பாட்டி காப்பாத்தினார். கல்யாணத்துக்கு கிளம்பர்துக்கு முன்னாடியே ‘தக்குடு கோந்தைக்கு எங்களோட பரிபூரண ஆசிர்வாதங்கள்’னு சொல்லி லக்ஷம் கட்டி வராஹன் ‘நைஜீரியா’ மாமியோட தம்பி மூலமா மணியார்டர்ல வந்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஜானுவாசத்துல ஆரம்பிச்சி முகூர்த்தம் வரைக்கும் செட்டு செட்டா நம்ப ஆட்கள் வந்துண்டே இருந்தா. மஃப்டில வந்த மன்னார்குடி கிருஷ்ணராட்டமா நம்ப மைனர்வாள், என்னோட அனுகூலசத்ரு பாலாஜினு ஒரு பெரிய படையே வந்தது. அவுக்காத ஐடி கார்டும் சரைக்காத தாடியுமா நம்ப எல் கே வந்தார். நீங்க என்ன பில்டப்பு குடுத்தாலும் ஆபிஸ்ல ஆபிஸ் வேலைதான் பாக்கறேள்னு யாரும் நம்பமாட்டேங்கரா எல் கே!
கையை புடிச்சு இழுத்தையா??
ஜானுவாசம் அன்னிக்கி யாரோ ஒரு மாமி மைக்கை பிடிச்சுண்டு பாடறேன் பேர்விழினு ப்ராணனை வாங்கிட்டா. வாதாபி கணபதிம் பாட்டை அக்குவேறு ஆணிவேறா பிச்சு எறிஞ்சுட்டா. மேடைலேந்து இறங்கி ஓடலாம் போல இருந்தது. பக்கத்துலேந்து என்னோட ஆத்துக்காரி 'பாடர்து எங்க பாட்டியோட அக்கா!'னு சொன்னதுக்கு அப்புறம் கப்சிப்னு ஆயிட்டேன். ‘இந்த வயசுலையும் பாட்டி என்னமா பாடரா! அப்பிடியே எழையர்தே தொண்டை! ஹம்சத்வனிக்கு இப்படி ஒரு த்வனி இருக்குனு இன்னிக்கிதான் தெரியர்து!’னு சொல்லி வச்சேன். என்ன இருந்தாலும் நாம எல்லாம் மனமோஹனசிங்கு வம்சமாச்சே. கல்யாணத்துக்கு முந்தின நாளும் சரி கல்யாணத்தன்னிக்கும் சரி காத்தால குடிச்ச ஒரு லோட்டா காபி மட்டும் தான். எட்டரைக்கு டாண்னு 7 இட்லி இல்லைனா 4 தோசையை உள்ள தள்ளியே பழகிட்டதால கண்ணு சொருக ஆரம்பிச்சுடுத்து. இதுக்கு நடுல யாரோ ஒரு ரோஸ் கலர் புடவை கட்டின மாமி எங்க பக்கத்துல வந்து ‘அந்த ரவாதோசையும் கெட்டிசட்னியும் நாக்குலையே நிக்கர்து!’னு உசுப்பேத்திண்டு இருந்தா. ‘உங்களுக்கு நாக்குல நிக்கர்து எனக்கு நாக்கு தள்ளர்து!’னு மொனகினேன். என்னோட மாமனார் சரவணபவன் ஹோட்டல் மாதிரி எல்லா ஐட்டத்தையும் மெனுல போட்டுருக்கார்.
கல்யாணத்துக்கு தோஹாலேந்து கோல்ட் ப்ரேம் கண்ணாடி போட்டுண்டு கருங்குளம் மாமி அவாளோட பொண்ணரசியோட வந்து இருந்தா. வீரவனல்லூர் மாமா மெட்ராஸ்ல இருக்கும் அவரோட பாஸை(அதான் அவாத்து மாமியை) அனுப்பி வச்சுருந்தார். கரெக்டா மாலைமாத்தி ஊஞ்சல் ஆடும்போது நம்ப வல்லிம்மா நடையும் ஓட்டமுமா வந்தா. மாலைமாத்து போது தூக்கர்துக்கு என்னோட தோஸ்த் ஒருத்தனை வரசொல்லீருந்தேன். எல் ஐ சி கட்டிடத்துக்கு பாண்ட் சட்டை போட்ட மாதிரி இருப்பான். தி நகர்ல அவன் தூக்கின உடனே தாம்பரம் ஸ்டேஷன்ல நிக்கர ரயில் எல்லாம் எனக்கு தெரிஞ்சதுன்னா பாத்துக்கோங்கோ. மேடைல உக்காசுண்டு இருக்கும் போது யாரோ ஒரு அக்கா மேடைக்கு கீழ வந்து நின்னுண்டு என்னையே பாத்துண்டு இருந்தா. யாருன்னே எனக்கு மனசுல ஆகலை. கடைசில பாத்தா அது நம்ப சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்கா. தொப்பி & எம் ஜீ ஆர் கண்ணாடியோட வந்து இருந்தா அடையாளம் தெரியும், திடீர்னு குலவிளக்கு ஸ்னேகா மாதிரி வந்தா எப்பிடி தெரியும். எக்ஸ்ட்ராவா ரெண்டு மாலை மட்டும் கைல இருந்திருந்தா அவாளையும் அவாத்துக்காரரையும் மனைல உக்கார வச்சுடலாம். அப்பிடி இருந்தா ரெண்டு பேரும். அக்காவோட ஆல் இண்டியா சமையலை சாப்பிட்டதுக்கு அப்புறமும் அவர் பாக்கர்துக்கு ரன்பீர்கபூர் மாதிரிதான் இருக்கார். ‘அடுத்த வாரம் ஜில் ஜில் குல் குல்னு ஒரு குஜராத்தி ஸ்வீட் பண்ணபோறேன் தக்குடு!’னு அக்கா வாஞ்சையா சொல்லும்போது அத்திம்பேர் முகத்தை பாக்கவே பாவமா இருந்தது. அவா இந்தபக்கம் நகர்ந்து போகர்துக்குள்ளையே ஒரு மாமி வந்து “எங்காத்து அகல்யாவுக்கு அந்த பையனோட ஜாதகம் வாங்கி தருவையா?”னு கெஞ்சிண்டு இருந்தா. ‘அந்த பையனோட ஆத்துக்காரிட்டையே வாங்கிக்கோங்கோ!’னு சொன்னதுக்கு அப்புறம் தான் அடங்கினா. ‘குலவிளக்கே குத்துவிளக்கு தருகிறதே!’னு சொல்லும்படியா அக்காவும் ‘பாங்க்’ மாமியும் சேர்ந்து வெள்ளி விளக்கு தந்தா.
கனடாலேந்து என்னோட பாசமலர் இட்லி மாமி அனுப்பி வச்ச மலர்கொத்து ரொம்ப அழகா இருந்தது. ரிச்மெண்ட் அக்கா அனுப்பி வச்ச லக்ஷம் கட்டி வராஹன் வல்லிம்மா கையால கிடைச்சது. உம்மாச்சி ப்ளாக்ல நிறையா எழுதர்துக்கு வாக்கா ரெண்டு புஸ்தகத்தை தானைதலைவி அக்காவும் அவாத்து மாமாவும் தந்தா. மாங்கல்ய தாரணம் ஆனதுக்கு அப்புறம் ஆசீர்வாதம் பண்ணர்துக்குன்னே நம்ப திவாண்ணா,மதுரையம்பதி அண்ணா, தி ரா ச மாமா எல்லாரும் வந்து இருந்தா. இதுக்கு நடுல ரெண்டு மூனு மாமா மாமிகள் எல்லாம் வந்து கையை பிடிச்சுண்டு ‘கோந்தை! உன்னோட ப்ளாக் படிப்போம், இது வரைக்கும் கமண்ட் போட்டதில்லை’னு சொல்லிண்டு ஓசி பேப்பர் வாசிக்கரவா வந்து ஆசிர்வாதம் பண்ணினா. “என்ன இருந்தாலும் உங்க அண்ணா வராம இருந்து இருக்க கூடாது! முக்கியமான கட்டத்தை விட்டு குடுப்பாளோ!”னு ஆளாளுக்கு ஆனை பூனை அக்ஷதை!னு ஒரு அபிப்ராயம் சொல்லிண்டு இருந்தா. எனக்கு எங்க அண்ணாவை தெரியும். அவன் எங்க இருந்தாலும் நான் செளக்கியமா இருக்கனும்னு தான் பிரார்த்தனை பண்ணிப்பான். ‘அவன் பக்கத்துல இருந்து நடத்தர்துக்கு எனக்கு பாக்யம் இல்லை’னு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டேன். எல்லாம் முடிஞ்சு அடுத்த நாளே கல்லிடை போயாச்சு. ஊர் மனுஷாளுக்காக அங்க ஒரு ரிஷப்ஷன். ரிஷப்ஷனுக்கு வந்தவா எல்லாரும் போண்டாவையும் சேமியா பாத்தையும் திண்ணுட்டு போனா பரவால்லை, அவாத்து வைக்கோல்போர்ல கொளுத்தினதை எல்லாம் என்னோட தங்கமணிட்ட சொல்லி மானத்தை வாங்கிட்டா. சொல்லர்து எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில என்னோட கன்னத்தை கிள்ளி ‘எங்காத்து பிள்ளை மாதிரி’னு மாமிகள் ஒரு பிட்டையும் சொருகிட்டு போனா.
திருகார்த்திகை அன்னிக்கி ஒரு தம்பதிகள் இன்டிகா கார்ல வந்து ‘இங்க தக்குடுவோட ஆம் எங்க இருக்கு?’னு கேட்டா. ஆத்துக்குள்ள கூட்டிண்டு போய் ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தோம். அவாளும் ஓசிபேப்பர் படிக்கரவா சங்கத்தை சேர்ந்தவாளாம். ‘உனக்கு ஒரு கிஃப்டுமே வாங்கிண்டு வரலையே தக்குடு!’னு வருத்தப்பட்டுண்டா. எனக்கென்னவோ அந்த தம்பதிகளை பாத்ததே கிஃப்ட் மாதிரிதான்னு தோனித்து. அதுக்கு அப்புறம் கள்ளழகர் மாதிரி ஆயிடுத்து நம்ப நிலைமை. அவர் ஒரு ஆத்துல தான் இறங்கினார், நான் ஒவ்வொரு ஆத்துலையா இறங்கிண்டு இருந்தேன். ஜே பி நகர் மாமியாத்துல பூரணகும்பம் மட்டும் தான் குடுக்கலை. அப்பிடி ஒரு கவனிப்பு. என்னோட கல்யாண ஆல்பத்தை அவாத்து போட்டோ ப்ரேம்ல போட்டு பாத்துண்டு இருக்கா. அவாத்து மாமா சரியான பொசுக்கல் பாண்டியன். ‘நன்னா இருக்கு!’னு வாய்லேந்து வந்துடவே வந்துடாது. மாமிக்கு நான் ப்ளாக்ல போய் ஏடாகூடமா எதுவும் எழுதிடகூடாதே!னு அந்த கவலை ஒரு பக்கம். ரொம்ப நன்னா கவனிச்சு அனுப்பி வச்சா.
மெட்ராஸ்ல வந்து ஒரு வாரமா சித்தப்பா பெரியப்பா மாமா மாமி ஆத்துல மண்டகப்படி மாதிரி சாப்பிட்டு முடிச்சு, மாமியாரோட ஒன்னு விட்ட ஓர்படி பண்ணின பருப்பு பொடியையும் வாங்கிண்டு தப்பிச்சோம் பொழச்சோம்!னு தோஹாவுக்கு ஓடியே வந்தாச்சு. "கவலைபடாதீங்கோ! உங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தரேன்!"னு என்னோட தங்கமணி சொல்லி இருக்கா:) மேல்கொண்டு அடி உதை எதுவும் விழாம குலதெய்வம் பெருவேம்புடையார் தான் காப்பாத்தனும்.
Labels:
கல்யாணம் தங்கமணி டூரிங்
Subscribe to:
Post Comments (Atom)
58 comments:
puthusa ottu pattailam vanthirukku... new year wishes to you and your superior(your wife)
தக்குடு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நேரடியா கலயாண வைபவத்தை பாக்கிற மாதிரியே
வர்ணனை இருந்தது ரொம்ப சந்தோஷம்
தம்பதிகள் நீங்க ரெண்டு பேரும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டிக்கிறேன்
தங்கள் இருவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 3
Etho nammalaiyum kandu kittathukku nanningov;)
wishes for a very happy new year,!!
இத்தனை நாளா தக்குடு பதிவு வரலையேன்னு ஏக்கமா இருந்ததுடா அம்பி! கல்யாணத்துக்கு தான் வரலையே தவிர வந்திருந்த மன்னை மைனர் கிட்ட விஷயம் எல்லாம் ஜாரிச்சேன்... :)
இந்த பதிவு மூலம் வரலையேன்ற கவலையும் போயுடுத்து!
வாழ்த்துகள்... புத்தாண்டிற்கும் சேர்த்து!
ஆத்துக்காரியையும் அழைச்சிண்டு எஸ்கேப் ஆகிட்டியா...!? :)))))
அத்திம்பேர் இன்னிக்கு கூட கேட்டார்,"இந்த பய தக்குடுவ இன்னும் காணோமே..? ஊருக்கு போயிருப்பானோ? இனிமே ப்ளோக்ல எழுத அவனுக்கு டைம் இருக்குமோ என்னவோ!?" :)))
புத்தாண்டு வாழ்த்துக்கள் தக்குடு
//வலைபடாதீங்கோ! உங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தரேன்!"னு என்னோட தங்கமணி சொல்லி இருக்கா:) ///
எல்லார் வீட்டுலயும் சொல்ற ஒரே டயலாக்கு ஹம்ம் மனசை தேத்திக்கோங்க தக்குடு!
2012 நல்லா ஜம்முன்னு ஆரம்பிக்கட்டும் தை மாசம் தோஹாவுல ஜாம் ஜாம்ன்னு செட்டில் ஆகுங்க ! :)))
ம்... நகைச்சுவை ததும்ப கல்யாண வைபவத்தை அழகாச் சொல்லியிருக்காய் அம்பி! படிச்சுட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன். சரிசரி... எல்லார் ஆத்துலயும் ‘தங்கமணி’கள் ஆரம்பத்துல சொல்ற டயலாக் உங்காத்துலயும் வந்துடுத்து போலருக்கு... உங்களோட தாம்பத்ய வாழ்க்கைக்கும், பிறந்துட்ட புத்தாண்டு உங்களுக்கு எல்லா வளங்களையும் நலங்களையும் தரணும்னும் வாழ்த்தறேன்!
பேஷ், பேஷ் :)
"கவலைபடாதீங்கோ! உங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தரேன்!"னு என்னோட தங்கமணி சொல்லி இருக்கா:) மேல்கொண்டு அடி உதை எதுவும் விழாம குலதெய்வம் பெருவேம்புடையார் தான் காப்பாத்தனும்.
புத்தாண்டு உங்களுக்கு எல்லா வளங்களையும் நலங்களையும் தர வாழ்த்துகள்..!
தக்குடு
கல்யாண ரிப்போர்ட் LK , தானைத்தலைவி இவாளோட பதிவுல பார்த்தேன். ரொம்ப சந்தோஷம் தக்குடு. ஊர்ல எல்லோரும் சௌக்கியமா?
க்ருஹஸ்தன் ஆயாச்சு, இனிமேலாவது வாலை சுருட்டி வைச்சுக்கோ :)
உங்க ரெண்டு பேருக்கும் இந்த வருஷம் அமோகமா இருக்கட்டும்.
///மேடைலேந்து இறங்கி ஓடலாம் போல இருந்தது. பக்கத்துலேந்து என்னோட ஆத்துக்காரி 'பாடர்து எங்க பாட்டியோட அக்கா!'னு சொன்னதுக்கு அப்புறம் கப்சிப்னு ஆயிட்டேன். ‘//
கப்சிப்னு ஆயிட்டேன்.//
கப்சிப்னு ஆயிட்டேன்.//
இதை இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன் .
ஹா ஹா ஹா .
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் திருமதி தக்குடுand தக்குடு
Welcome back Thakkudu!!
புத்தம் புதிய குடும்பஸ்தருக்கு மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!
பத்திரமாத் திரும்பி வந்தாச்சு போல!!!! அப்படித்தான் கப்சிப்ன்னு இருக்கணும். முதநாளே அதுவும் மேடையிலேயே மொத்து வாங்குனா நல்லவா இருக்கும்?
உங்க ரெண்டுபேருக்கும் மனமார்ந்த ஆசிகளும் அன்பும். நல்லா இருங்கோ!
HAPPY NEW YEAR AND
WISH YOU HAPPY MARRIED LIFE.
கலக்கரிங்களே தக்குடு, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்க Style of Blogging எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நானும் blogging start பண்ணிருக்கேன். உங்க feedback குடுங்க
http://sathish-chennai.blogspot.com/2012/01/blog-post.html
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். HAPPY MARRIED LIFE. .என்ஜாய்
ஆஹா.. தக்குடு ரிட்டர்ன்ஸ் :-))
தம்பதியர் எல்லா வளங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகள்.
புத்தாண்டு வாழ்த்துக்களோடு புதுவாழ்க்கை வாழ்த்துக்களும் தக்குடு....
ஜானுவாசம் பாட்டுக் கச்சேரியில் எல்லார் காதும் அதிர்ந்தது. பாவம் பெங்களூர் பாலாஜி கோந்தே பயந்துட்டார். எல்.கேவுக்கு நெஞ்சுரம் ஜாஸ்தி. பாட்டைக் கேட்டு பயப்படாமல் தெகிரியமாக ரசித்தார். தி.ரா.ச மாமா மேடைக்கு கீழ மாப்பிள்ளை மாதிரி நின்னு போஸ் கொடுத்து மக்களை கவர்ந்தார். :-)
வாழ்த்துகள் தக்குடு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா
30 ஆம் தேதியன்னிக்கி வரேன்னு சொல்லிட்டு வராம ஏமாத்திட்டுப் போனது இரண்டு பேர். ஒன்னு "தனே" புயல் இன்னோன்னு தக்க்டு தம்ப்தியினர்.மாமா 4 மணிக்கு வரென் ரெடியா இருங்கோன்னு பயமுறுத்திட்டு மாமா ஒரே மழை இவளுக்கு வேறே ஒரே ஜலதோஷம் பெட்ஷிடாலே நானே தொடைச்சு மூக்கே காணாம பொயிடுத்துன்னு சாக்கிலே நல்லவனுக்கு அடையாளம் சொல்லாம போறதுன்னு தோஹா போய்சேர்ந்தாச்சு . இனிமே நீ என்ன வேணா சொல்லலாம். ஜமாய் ராஜா.நமக்கு ஏன் பொல்லாப்பு .ஜெய்ச்ரிராம்.
Puthandu Valthikkal.
புது வாழ்க்கை & புத்தாண்டு வாழ்த்துகள்.
//"கவலைபடாதீங்கோ! உங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தரேன்!"னு என்னோட தங்கமணி சொல்லி இருக்கா//
ம்ம்... தங்கமணி ரொம்ப அப்பாவியா தெரியறாப்லயே... சரி, சரி, ஆரம்பத்துல நாங்களும் அப்படித்தானே சொல்லிகிட்டோம்.. உங்க தங்க்ஸும் போகப்போகத் தெளிவாய்டுவாங்க!! :-))))
தோஹாக்கு தங்கமணியும் வந்தாச்சா? அங்க ஃபேமிலி விஸா கிடைக்கறது ரொம்ப கஷ்டம், லேட்டாகும்னு சொன்னாங்களே?
Happy new year thakkudu. Hope you arte enjoying life as ever.
Very nice. Wish you both a Happy & Looooong Married life. Wish you both a Wonderful 2012
Shobha
Best wishes for a long and happy married life, Thakkudu!
:))))) ஆஹா..!
//குலதெய்வம் பெருவேம்புடையார் தான் காப்பாத்தனும்.//காத்தருள்வார்!
அன்பு பெருகி ஆனந்தம் நிலைக்க இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தக்குடு தம்பதிகளுக்கு!
தக்குடு நீ இவ்வளவு அப்பாவியா..எல்லா தங்கமணியும் சொல்றது தான் இது..
பாவம் உன்ன நினைச்சா பாவமாயிருக்கு...
ஹூம் விதி யாரைத் தான் விட்டது?
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.
எங்களது மனப்பூர்வ வாழ்த்துகள்.
Very Nice Thakkudu! Congrats again! Have a long Happy Married Life!
புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை, நான் படித்து ரசிப்பது மட்டும் இல்லாமல், என் மனைவிக்கும் வாசித்துக் காட்டுவேன். (என்னுடைய மனைவி, எங்கள் ப்ளாக் படிக்க மாட்டார். ஆனால் தக்குடு பதிவுகளை கேட்டு சந்தோஷமாக சிரிப்பார்.)
தக்ஸ்- ஜமாய்ச்சுட்டேடா கோந்தே. பால்பாயஸத்துல ஊறின முந்திரியாட்டமா நகைச்சுவைலயும் ஸ்லாங்குலயும் ஒன்ன ஒத்தரும் அடிச்சுக்கமுடியாது.பார்யாளோட சௌக்யமா அரபு தேசத்துல ஜீவனம் பண்ண ஆசீர்வாதங்கள் ஆயிரங் கட்டி வராஹனோட.
வாழ்த்துக்கள்...
வருக, வருக! உங்கள் ஆத்துக்காரிக்கு ஸ்பெஷல் பாராட்டு - உங்கள் நகைச்சுவையை மெருகேற்றி திரும்பவும் பதிவேற்ற விட்டதற்கு! இருவருக்கும் மீண்டும் அனேக ஆஸீர்வாதங்கள் மற்றும் புது வருஷ வாழ்த்துக்கள்!
நான் ‘அக்கா’ வாக இல்லாததால் என்னால் சென்னையிலிருந்தும் கல்யாண சாப்பாடு, ரவா தோசை, கெட்டி சட்னி சாப்பிட முடியவில்லை (அண்ணாக்களுக்கெல்லாம் ஹால் அட்ரஸ் தெரிந்தால் தானே!) ஏதோ என்னால் ஆன் உபகாரம், உங்கள் மாமனாருக்கு சாப்பாட்டு செலவு கொஞ்ஜம் குறைந்தது!
பாட்டி பாட்டை பாராட்டியதை ’புரிந்து’கொண்டு (நீங்கள் பட்ட பாட்டை புரிந்துகொள்ளாமல்), ஆத்துக்காரி கையால் நெஞ்ஜில் செல்ல குத்துக்கள் விழ வில்லையா! (இல்லேன்னா, இப்ப கிடைத்திருக்கும்!)
பக்கத்தில ஆளை வச்சுண்டே வரவாள்ள ஸ்னேஹாவை பார்க்கிறதா கண்ணு? (கண்ணு பத்திரம்!)
யாரோ சொன்னான்னு பயப்படாதீங்கோ, ஃபேமிலி விசா சீக்கிரம் கிடைத்துவிடும்!
ஒரு கிஃப்ட்டும் வாங்கி வராத (மறந்த / கைவராத) விருந்தாளிகிட்ட பணமாவும் ஓதிவிடலாம்னு சொல்லலையா!
கல்லிடை ஜேப்பிநகர் மாமி அப்படி கவனித்துக்கொண்டபின்னும், மாமாவுக்கு ‘பொசுக்கல் பாண்டியன்’ பட்டமா! உங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையாயிருக்கணும்!
//எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில என்னோட கன்னத்தை கிள்ளி ‘எங்காத்து பிள்ளை மாதிரி’னு மாமிகள் ஒரு பிட்டையும்../ உங்க பேரை ‘கல்லிடை கண்ணன்’னு வச்சிக்கலாமே!
//ரெண்டு மூனு மாமா மாமிகள் எல்லாம் வந்து கையை பிடிச்சுண்டு ‘கோந்தை! உன்னோட ப்ளாக் படிப்போம்..// இன்னுமா கோந்தை? ரொம்ப ஓவராயில்ல!
(ஃபிப்ரவரியில் ஒரு உபனயனத்துக்கு (துபாய் நண்பனின் பையனுக்கு) கல்லிடை போக உத்தேசம் - அந்த ஊரை முதல் தடவையா பார்க்கப் போறோம்).
சந்தோஷமான வாழ்க்கைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!
-ஜெகன்னாதன்
//"கவலைபடாதீங்கோ! உங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தரேன்!"னு என்னோட தங்கமணி சொல்லி இருக்கா:) //
நீ ஒரு மாதத்திலேயே பதிவுபக்கம் வந்ததிலேயே தெரியறது..
வாழ்த்துக்கள் ...
HAPPY NEW YEAR THAKKUDU !!! ASUSUAL VERY INTERESTING POST. SAY MY HO TO JAY!!
Wow.. Didn't realize that you were getting married. Now that you are hitched, have a wonderful wedded life. Of course your posts are fabulous
tkp, enna ezhudrukennu padikalai...no time....but photo va patthu kalyanam romba nanna achunu theriyardu...super kai porutham po...
congrats once again...
-vgr
இண்டிகா ல வந்தவா தோஹா ல ஒட்டகம் மேய்க்கற தக்குடு வீடு எங்க இருக்குன்னுதானே கேட்டா?
தக்குடுபாண்டி னு வெச்சதுக்கு குடுகுடுபாண்டி னு வெச்சிருக்கலாம்.
kalyana commentary by mappillai himself!!. we were able to feel all the fun by reading. enjoy maadi!! we wish you a very happy married life. and also a happy prosperous healthy, successful new year! sasikala sugavanam
we both felt very happy to see you and take part in the wedding.
"அவா இந்தபக்கம் நகர்ந்து போகர்துக்குள்ளையே ஒரு மாமி வந்து “எங்காத்து அகல்யாவுக்கு அந்த பையனோட ஜாதகம் வாங்கி தருவையா?”னு கெஞ்சிண்டு இருந்தா."
Btw, அந்த அகல்யா ஜாதகம் irunda vangi kodu, I don't have any objection, appadiyae, andha அகல்யா ANNA ஜாதகம் irunda adaiyayum kodhuka solupa.
Hope you both are settling down. Wish you both a very happy married life and many more yrs of togetherness with lot of wealth and good health.
@ எல் கே - உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
@ லக்ஷ்மி மாமி - நன்றி மேடம்
@ ரமணி சார் - நீங்க என்னோட எனர்ஜி பூஸ்டர் சார். உங்களோட வாழ்த்துக்கு ரொம்ப நன்றி
@ வல்லிம்மா - தாம்பூல பை வாங்கிக்காம ஓடினதையும் கண்டுண்டேன் :)
@ வெங்கட் அண்ணா - எனக்கும் எப்படா நம்ப கோஷ்டியோட பேசபோறோம்னு ஆயிடுத்து. ரொம்ப சந்தொஷம் அண்ணா! :)
@ தா.தலைவி அக்கா - அடுத்த விசிட்ல வரேன் ஓக்கேவா? :)
@ அப்பாஜி - நன்றி ஜி :)
@ ஆயிலு - நீர் சொன்னா சரிதான் ஓய்ய்ய் :)
@ கணேஷ் சார் - வாழ்த்துக்கு மகிழ்ச்சி சார்! :)
@ மதுரையம்பதி அண்ணா - :)
@ ராஜி மேடம் - நன்றி மேடம்!
@ கோபாலன் அண்ணா - நான் வாலை சுருட்டிண்டா ப்ளாக்கை யாரு எழுதுவா?? உங்களோட மொய் பணம் 1000 டாலர் இன்னும் வந்து சேரலை :P
@ தேவதை அக்கா - அதெல்லாம் கரெக்டா பம்மிடுவோம்! அப்புறம் யாரு அடி வாங்கர்து! :) உங்களுக்கும் ஹேப்பி ஹேப்பி நியூ இயர்! :)
@ கவினயாக்கா - சரிங்க மேடம் :)
@ துளசி ரீச்சர் - டீச்சரே ஆசிர்வாதம் பண்ணியாச்சு. இதுக்கு மேல என்ன வேணும்! :)
@ சிவா - நன்னிஹை!
@ சதிஷ் - ஒரு ஸ்டைலும் கிடையாது. திண்ணைல உக்காசுண்டு பேசர்துக்கு பதிலா ப்ளாக்கு அவ்வளவு தான் :)
@ செளம்யா மேடம் - உங்களுக்கும் மேடம்! :)
@ அமைதி அக்கா - ரொம்ப சந்தோஷம் பா! :)
@ துபாய் ராஜா - உங்களுக்கும் தான் அண்ணாச்சி! :)
@ மைனர்வாள் - தி ரா சா மாமா எப்போதுமே மாப்பிள்ளைதான். ஆத்து கவலை ஒன்னும் கிடையாது. எல்லாம் உமா மாமி பாத்துக்கரா. :)
@ குரு அண்ணா - ஆமாம்னா! :)
@ தி ரா சா மாமா - ஒரே புயல் மழை & என்னோட ஆத்துக்காரி வேற. நான் எதைனு சமாளிக்கமுடியும் சொல்லுங்கோ! அடுத்த தடவை வரோம். :)
@ ரெங்கா அண்ணா - ரைட்டு அண்ணா!
@ ஹுசைனம்மா - ராஜாவோட ஒட்டகத்தை மேய்க்கர்தால விசா தரேன்!னு சொல்லியிருக்கா. :)
@ 'பாங்க்' மாமி - ஆமா ஆமா எஞாய் பண்ணிண்டு இருக்கேன் :)
@ ஷோபா மாமி - ரொம்ப சந்தொஷம் பா! :)
@ மதி - நன்னிஹை!
@ மீனாக்கா - காரைகுடியின் வாழ்த்துக்கு மகிழ்ச்சி :)
@ ராமமூர்த்தி மாமா - என்ன பண்ணமுடியும் சொல்லுங்கோ! :)
@ அமுதா மேடம் - நன்னிஹை! :)
@ ரத்னவேல் ஐயா - நன்றி ஐயா!
@ சுந்தரபாண்டியபுரம் அக்கா - தாங்க் யூ!
@ கெளதமன் சார் - உங்காத்து மாமிக்கு என்னோட ஸ்பெஷல் நமஸ்காரத்தை சொல்லவும்! :)
@ சுந்தர் ஜி - ரொம்ப சந்தோஷம் ஜி! :)
@ கலானேசன் - நன்றி சார்!
@ ஜெகன்னாதன் சார் - ஹலோ ஹலோ, இங்க நான் மட்டும் தான் போஸ்ட் எழுதலாம். நீங்க ஒரு மினி போஸ்டே போட்டு இருக்கேளே! :)
@ ரமா மாமி - அதே தான் :)
@ வித்யா அக்கா - நன்னிஹை! :)
@ சுப்பாண்ணா - ரொம்ப சந்தோஷம் அண்ணா! :)
@ VGR - நீ பிசியா இருப்பைனு எனக்கும் தெரியும் :P
@ கீதா பாட்டி - போஸ்ட் பத்தி ஒன்னும் சொல்லாதவாளுக்கு செல்லாத ஓட்டு கூட போடமாட்டோம் :P
@ அனானி - நக்கலை ரசித்தேன் :)
@ சசி அக்கா - ரொம்ப சந்தோஷம் அக்கா :)
@ ஜெய்ஷ்ரி அக்கா - சந்தூர் அம்மா தான் கேள்விபட்டுருக்கேன் ஆனா சந்தூர் அப்பாவை அத்திம்பேர் ரூபத்துல தரிசனம் பண்ணினேன். கல்யாண ஆத்துக்கு எங்கையும் அவரை தனியா அனுப்பாதீங்கோ! உங்களோட நல்லதுக்கு சொல்லறேன்! :)
வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
" ஹலோ ஹலோ, இங்க நான் மட்டும் தான் போஸ்ட் எழுதலாம். நீங்க ஒரு மினி போஸ்டே போட்டு இருக்கேளே! :)" - இதைத் தான், இதைத் தான் நானும் சொன்னேன். ‘நான் அக்கா இல்லையே’ என்று! அப்பாவி அக்கா, பொற்கொடி அக்கா என்று மாஞ்ஜு மாஞ்ஜு பக்கம் பக்கமா எழுதினாலும் போடுவாய், எனக்கு மட்டும் வாயில் போட்டாய்! சரி சரி என்ன பண்ண, ஆணுக்கு ஆணே எதிரி! - ஜெ.
@ மோகன் சார் - வாழ்த்துக்கு நன்றி! :)
@ ஜெகன் அண்ணா - ஹா ஹா ஹா நன்னாவே காமெடி பண்ணறேள்! :P
Congrats,sirichi sirichi stomach paining..Happy married life..Pass my wishes to ur better half..
அம்பி தக்குடுவுக்கு அநேக நமஸ்காரம் .நான் போன ஆத்துலே உங்களைப் பத்தி சொன்னா.நேக்கு உடனே உங்களைப் பாக்கனும்னு தோணித்து.புது வருஷத்துல சகதர்மிணியோட நன்னா ஷேமமா இருக்கனும்.பெருமாளை சேவிக்கிறேன் .குஷியா இருங்கோ.புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்புடன்..
thakkudu,and his better half.
All the Best.
Kshemama nooru ayusu seerum sirappumaa vazhnthu
pathinaarum petru peru vaazhvu vaazhanum
ippadikku
dohavile paatha
subbu thatha
meenatchi paatti
Happy Married Life Thakkudu!!!!
Happy Married Life ...
அந்த மைக்கை பிடிச்சு பாடின மாமி உன்னால் first halfல பாதிக்கப்பட்ட மாமிகள்ல ஒருத்தரா இருப்பாங்களோ... கல்லிடைல கொஞ்சமா கலாட்டா பண்ணி இருக்கே நீ...:) அப்பாடா, பொக்கே பொக்கை ஆகாம வந்து சேந்ததா.. தேங்க்ஸ் பார் இன்பர்மேசன்...அண்ட் பெல்காம் டூ குடும்ப இஸ்தர்கள் கிளப் தக்குடு...:)
"தங்கமணி - பூரிகட்டை - கல்லிடை அடை டு காஞ்சிபுரம் இட்லி" மாதிரியான டேக்ஸ் எல்லாம் எதிர்ப்பாக்குறோம்...:)
புது அத்தியாத்திற்கும் புத்தாண்டுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!
Enna thakkudu sir, thiratti paal kindikittu irukkeengala, madama impress panna? Alaiye kanom!
அன்புள்ள தக்குடு அவர்களுக்கு,
ரொம்பவும் தாமதமாக வந்து வாழ்த்துச் சொல்லி இருக்கிறேன்.
இனிமையாக இல்லறம் (இத்தனை நேரம் அமைந்திருக்கும்!) நடத்த வாழ்த்துக்கள்.
பெங்களூருல இருக்கறதா எழுதி இருந்தீர்களே என் வலைத்தளத்தில்.
எங்கிருந்தாலும் வாழ்க!
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)