Wednesday, November 23, 2011
டும் டும் டும்
i) 'வைதேகி மாமி! மாடிலேந்து வரும் போது பித்தளை குத்துப்போனியை கொண்டு வருவேளா?
அது ரொம்ப கனமா இருக்குமேடி பானு!
சரி விடுங்கோ! என்னோட புள்ளையை மட்டும் கொஞ்சம் தூக்கிண்டு வந்துடரேளா?
இல்லையில்லை நான் குத்துப்போனியவே கொண்டு வரேன், அப்பிடி ஒன்னும் அது கனம்னு சொல்ல முடியாது!
ii) 'ஏன்னா, எத்தனை தடவை பாத்ரூமுக்கு போயிட்டு போயிட்டு வருவேள்! காணாதுகண்ட மாதிரி உருளைகிழங்கு போண்டாவை திங்காதீங்கோ!னு சொன்னா காதுல வாங்கினாதானே!'
iii) 'கெளசல்யா மாமி! செளக்கியமா இருக்கேளா? பாத்து எவ்ளோ நாள் ஆச்சு?
மாறவேயில்லை 'சிக்'குனு அப்பிடியே இருக்கேளே? மாமி பாரு கோந்தை! டுடுடு டூ!
விஜயாவோட நாட்டுப்பொண் இல்லையோ நீ! கோந்தை எதுக்கு சிணுங்கிண்டு இருக்கான்? நீ எதுக்கு நைட்டியோட லாந்திண்டு இருக்கை?
மாமி! மாமி! ஒரு 5 நிமிஷம் குழந்தையை பிடிங்கோ! புடவை கட்டிண்டு வந்துடறேன்!
ஹுக்க்கும்! இதுக்குதான் மாமி! சாமி!னு சொல்லிண்டு வந்தாளா!
iv) 'வசந்தா மாமி, ஜானுவாசத்துலையே உங்க புடவைதான் பளிச்னு இருக்கு. காட்டன் சில்க்கா? விஜியோட கல்யாணத்து போது கட்டிண்ட புடவையும் காட்டன் சில்க் இல்லையோ? ஆனா அது அவ்ளோ சோபிதம் இல்லையே?
இருக்காதா பின்ன? இது எங்க அண்ணா புள்ளை கார்திக்கோட கல்யாணத்துக்கு கடைக்கே கூட்டிண்டு போய் மாட்சிங் ப்ளவுஸ் சகிதமா எங்கண்ணா வாங்கி தந்த புடவை. அது எங்க நாத்தனாரோட பொண் நிகிலா கல்யாணத்துக்கு ஆடிகழிவுல எடுத்த புடவை.
ஓஓ! உங்க நாத்தனாரே பின்னாடி நிக்கராளே!'
v) 'அருண் ஆய் போயாச்சாடா?
இன்னும் வரமாட்டேங்கர்துபா
எப்போதும் போகரமாதிரி போடா கண்ணா! லேட்டா போனா டிபன்ல அசோகா அல்வா காலியாயிடும்டா கோந்தை!
எனக்கு நம்பாத்துல போனாதான்பா வரும்!
உங்கம்மாவை மாதிரியே ஏட்டிக்கு போட்டி பேசாதே !இதுக்குனு பாம்பே போயாடா ஆய் போயிட்டு வரமுடியும்! போனவரைக்கும் போதும் வாடா கோந்தை!
அம்மா கேட்டா 'நன்னா போனேன்!' னு சொல்லனும் கேட்டையா!'
vi) 'கே கே நகர் அத்திம்பேர் எதுக்கு சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கார்?
ஜானுவாசம் முடிஞ்சாச்சு, சாப்பாடும் கடைசிபந்தி நடக்கர்து, மாடில தீர்த்தவாரி எதாவது இருந்தா ஓசில ப்ளூலேபிலை கவுத்தலாமேனு நெப்போலியன் மாதிரி படையெடுத்துண்டு இருக்கார்'.
vii) 'சாரதா! உன்னால ஹாண்ட் பேக்கை வச்சுக்கமுடியும்னா மட்டும் கொண்டுவந்தா போதும், சும்மா மினுக்கர்துக்கெல்லாம் கொண்டு வராதே!
இப்ப என்னாச்சுனு ஊரை கூட்டிண்டு இருக்கேள்!
'இந்தோ வந்துட்டேன்!'னு சொல்லிட்டு குடுத்துட்டு போய் 3 மணி நேரம் ஆகர்து. 'ஹாண்ட் பேக் மாமியை விட உங்களுக்கு தான் அம்சமா இருக்கு அங்கிள்!'னு எங்கக்கா புள்ளை நக்கல் அடிச்சுண்டு இருக்கான்!'
viii) 'ஏ வித்யா! கொஞ்சம் பக்கத்துல வாயேன்! நம்ப லோகா மாமி லோக்கல்லதானே இருக்கா?
ஆமாம் மன்னி, சிட்லபாக்கத்துல தான் இருக்கா, 'லோக்கல் லோகா' தானே அவளோட பட்டப்பேர். ஏது? என்ன விஷயம்?
ஒன்னுமில்லை, நாம மதுரை வரைக்கும் போகர்தால கட்டுசாதக்கூடை வாங்கிக்கரோம், அவளும் அவளோட புள்ளை உசரத்துக்கு ஒரு கேரியல்ல ஊறுகாய் முதற்கொண்டு விடாம வாங்கிக்கராளே அதான் கேட்டேன்!
அவாத்துக்காரருக்கும் ஒரு நாள் ரெஸ்ட் வேண்டாமா பாவம்!'
இந்த மாதிரி சம்பாஷனைகள் நடக்கும் ஒரு இடத்துக்கு போகபோறேன். யெஸ்! அதே தான்! டிசம்பர் ஒன்னாம் தேதி அடியேனுக்கு டும் டும் டும்! தக்குடுவோட ப்ளாக்குக்கு வந்துபோகும் நிறையா ஆட்கள்ல ஒரு சிலபேரை தான் நேர்ல பாத்துபேசியிருக்கேன். இருந்தாலும் இங்க வரவா எல்லாருமே 'ஏ தக்குடு! ஓய் தக்குடு! எலேய் தக்குடு!தக்குடு பாஸ்!'னு ரொம்ப உரிமையாவும் அன்போடையும் பாசமழை பொழியும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இந்த நல்ல விஷயத்தை சொல்லர்துல ரொம்ப மகிழ்ச்சி. உங்க எல்லாரோட அன்பும் ஆசிர்வாதமும் ஆதரவும் எப்போதும் தக்குடுவுக்கு வேணும். நக்கலும் நையாண்டியும் பண்ணிண்டு விளையாட்டுப் பிள்ளையா காலத்தை கழிச்சாச்சு. இப்ப திடீர்னு கல்யாணம்,குடும்பம்னு சொன்னா கொஞ்சம் பயமாதான் இருக்கு. இருந்தாலும் என்ன பண்ணமுடியும் அடுக்களையில் அடிவாங்கினாலும் அழாமல் சிரித்த முகமாய் வலம் வரும் அப்பாவி ரங்கமணிகள் சங்கத்துல ஒரு நாள் உறுப்பினர் ஆகியே தீரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
இத்தனை நாளா விண்டோ ஏர்கண்டிஷன் மாதிரி ஆத்துக்குள்ளையும் வெளிலயும் சூனா பானா வடிவேல் மாதிரி சவுண்ட் குடுத்துண்டு வளையவந்தாச்சு, இனிமே ‘ஸ்பிலிட்’ ஏசி மாதிரி வெளில மட்டும் சவுண்ட் குடுத்துண்டு ஆத்துக்குள்ள சத்தமே இல்லாம நல்லபிள்ளையா பேர் வாங்கணும். இதுவரைக்கும்
இப்படி இருந்த தக்குடு
டிசம்பருக்கு அப்புறம்
.......இப்படி ஆயிடுவான்!னு நிறையா பேர் மனப்பால்/மிளகுப்பால்/மசாலாப்பால் குடிச்சுண்டு இருக்கர்து நன்னாவே தெரியும். நானும் 'என்ன ஆகப்போகர்தோ?'னு ஆச்சர்யம் கலந்த திகிலோடதான் அடியெடுத்து வச்சுண்டு இருக்கேன். இனிமே வரக்கூடிய காலங்களில் 'தங்கமணி வச்ச சாம்பார்(?!), சாப்பாடும் பின்விளைவுகளும், தங்கமணி ஷாப்பிங்'னு வரிசையா போஸ்ட் போட முடியுமானு முயற்சி பண்ணிபாக்கலாம்.
குறிப்பு – "தேர்தல்ல போட்டியிட டிக்கெட் கிடைக்காதவாளுக்கு எல்லாம் நெஞ்சுல இடம் இருக்கு உடன்பிறப்பே!"னு சொல்லி டபாய்ச்சமாதிரி டபாய்க்காம தக்குடு போஸ்ட்ல கமண்ட் போட்டு படிக்கரவா,கமுக்கமா படிக்கரவா எல்லாரும் ஒழுங்கா மொய் பணத்தை ஏமாத்தாம அனுப்பி வைங்கோ! டாலர்,பவுண்ட்,ரியால்,யென்,தினார்,திர்ஹாம், நைஜீரியா கரன்சி எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். பாஸ்டன் நாட்டாமையோட வகை,கனடா அக்கா (ஸ்) வகைو ரிச்மெண்ட் அம்மாவோட வகை, நைஜீரியா மாமி வகை,தோஹா மாமா வகை,சிங்கப்பூர் அக்கா வகை,சியாட்டில் சிங்காரியோட வகை,லண்டன் அண்ணாச்சி வகைனு தத்தனியா சபைல வச்சு ஓதியிட்டு குடுக்க ஏற்பாடு பண்ணிடலாம்.
Labels:
அனுபவம் பயணம் தங்கமணி டிசம்பர்
Subscribe to:
Post Comments (Atom)
63 comments:
அடேடே... சிங்கம் சிக்கிருச்சா..? தாராளமா அன்பையும் (முடிஞ்சா மொய்ப்பணமும்) அனுப்பி கலக்கிடலாம். வாழ்த்துக்கள் ஐயா...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
இப்போ இருக்கிற சந்தோஷத்தோட
ஜாலி மூடோட என்னைக்கும் இருக்க
மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 1
திருமண வாழ்த்துகள் தக்குடு. மனமொத்த திருமண வாழ்க்கைக்கு எங்கள் வாழ்த்துகள்.
கால் கட்டு போட்டுக்கொள்ளும் தக்குடுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இனிமே வீட்ல எலி வெளியில புலி... :-))
WISH U A VERY HAPPY MARRIED LIFE, INTERSTING POST. MUDINCHA MOI ELUTHANUMANU YOSIPEN.
அவாத்துக்காரருக்கும் ஒரு நாள் ரெஸ்ட் வேண்டாமா பாவம்!'
சிங்கிளான சிங்கம் கால்கட்டுப்போட்டுக்கொள்ளும் சிறப்பான திருமணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தக்குடு வாழ்த்துகள் ! :)
சிங்கம் மாதிரி போயி,சிறுத்தையாக மாறி ரிடர்ன்ல மான்குட்டியாட்டாம் துள்ளிக்குதித்து வாரும் :)))
இனிமே ‘ஸ்பிலிட்’ ஏசி மாதிரி வெளில மட்டும் சவுண்ட் குடுத்துண்டு ஆத்துக்குள்ள சத்தமே இல்லாம நல்லபிள்ளையா பேர் வாங்கணும்.
send copy right fee of US$10000
:-)))
// தத்தனியா சபைல வச்சு ஓதியிட்டு குடுக்க ஏற்பாடு பண்ணிடலாம்.//
எல்லாரும் எங்க்கிட்டே அனுப்பிடுங்க. கமிஷன் கழிச்சுண்டு மீதி இருந்தா தக்குடுக்கு ஓதியிட்டு கொடுத்துடறேன்.
:-))))
ineemea thakkudu Tkm and tkp nu...2 baagama pikalam...AC example super:-)
மொய் பணம் எந்த கரென்சியா இருந்தாலும் TRCயை மேனேஜிங் ஏஜெண்டா அப்பாயிண்ட் பண்ணியாச்சி
தக்குடு சபையிலே விளக்கிச்சொல்லிடு.
Aaseervadham thakkudu;0 andha singham scene nijamaannu konja naal kazhichchu gnyaabagamaa kaetpaen seriya kOndhai?
Wish you a very happy married life thakkudu! Congrats :)
நன்னா ஷேமமா இருக்கிற 15 கூட 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழணும் தக்குடு கோந்தேய் ..:)
My Hearty blessings...
Wow!!! thakkudu, Advance Wishes!!! Unga Post Padichitu nanga evalo Santhoshama Sirikaromo, athai mathri unga Life-vum Santhoshama Iruka Manamaartha Vazhuthukal!!!!!
அட்வான்ஸ் வாழ்த்துகள் தம்பி
Advance vaazhuthukal thakkudu, enjoy every moment of ur bachelor life apparom ellame kanava poydum..lolz..
ஆஹா.. இனிய மண வாழ்க்கைக்கான மனம் நிறைஞ்ச வாழ்த்துகள் :-))
congrats and best wishes for a Happy Married life...
Wish u a happy married life. May GOD bless u with more and more prosperities and togetherness for a lifetime. AC example superb.
//பாஸ்டன் நாட்டாமையோட வகை,கனடா அக்கா (ஸ்) வகைو ரிச்மெண்ட் அம்மாவோட வகை, நைஜீரியா மாமி வகை,தோஹா மாமா வகை,சிங்கப்பூர் அக்கா வகை,சியாட்டில் சிங்காரியோட வகை,லண்டன் அண்ணாச்சி வகைனு தத்தனியா சபைல வச்சு ஓதியிட்டு குடுக்க ஏற்பாடு பண்ணிடலாம்.//
அப்ப ரொம்ப நல்லதா போச்சு! இந்தியன் ரூபாய் வேண்டாம்.
apart from jokes.
congrats and best wishes for a haapy married life.
லீவ் முடிஞ்சு வந்த உடனே உன்னோட தங்கமணிய எங்க எல்லோருக்கும் அறிமுகப்படுத்து.
வாழ்த்துக்கள்..
VAALTHUKKAL THAKKADU..
NALAM VAALA ENNALUM EN VAALTHUKKAL...
மனமார்ந்த வாழ்த்துக்கள் தக்குடு .
லண்டன் அக்கா மொய் பணத்தோட //முப்பது நாளில் சமையல் கற்றுக்கொள்வதெப்படி //புக்கையும் ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பிடறேன் .
மீண்டும் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் from தேவதை அக்கா .
அழகான அன்பான மனிவியோட இதே சந்தோஷம் பொங்க ஆயிரம் ஆண்டுகள் வாழ இனிய வாழ்த்துகள். கல்யாண சீன் பிரமாதம். அதுவும் அது வராத பிள்ளை;)))))
முக்கிய வேலை, ஒரு மாத லீவு என்று ஸ்க்ரோல் படித்ததுமே கெஸ் பண்ணேன்! அன்பார்ந்த வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும். உங்களுடைய இந்த சந்தோஷமான நகைச்சுவை குணத்தினால் உங்கள் மண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உங்கள் ‘தங்கமணி’ யும் இதே குணத்தோடு இருந்தால் இரட்டிப்பு சந்தோஷம்.
ஓதியிட ரொம்ப ஆசைதான். 3, 4 தடவையாக நைஜீரிய அரச பரம்பரை சொத்துக்கள் 5, 6 பில்லியன் வந்திருக்கு (என்ன கரன்ஸி என்று தெரியவில்லை!). அப்படியே உங்களுக்கு அனுப்பத் தயார், நீங்களோ, உங்கள் ஏஜண்ட்டோ பேக்கிங் செலவுக்கும் குரியர் செலவுக்கும் மட்டும் எனக்கு அனுப்பவும் (இந்திய ரூபாய் போதும்)!
மீண்டும் வாழ்த்துக்களுடன்,
-ஜெகன்னாதன்.
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.
மொய்ப்பணம் கொண்டு வந்து கொடுக்க கல்யாண மண்டபம் அட்ரஸ் தரலையே தக்குடு...
"Sikitanda mappilai" Valthukal enya nanbanuku.
டாலர்,பவுண்ட்,ரியால்,யென்,தினார்,திர்ஹாம், நைஜீரியா கரன்சி எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Appo Rupee-la kudutha vaanga matteenga...appadi dhaaney....appaada kaasu miccham! ;-)
Hearty Congratulations
அப்பாவி ரங்கமணிகள் சங்கத்துல தப்பி தவறி எங்காத்துகாரருக்கு வேணும்னாலும் போனா போறதுன்னு ஏதோ ஒரு நாள் ஒரு தரை டிக்கெட் தருவேன், உனக்கு சான்சே இல்ல...:)))) ஸ்ப்ளிட் ஏசி - ஹா ஹா ஹா... செம டைமிங்..;) இப்பவே "தங்கமணி"னு tag போட்டாச்...சூப்பர்...:))
மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு அண்ட் திருமதிக்கு
அன்புடன்,
கனடா அக்கா
பி.கு. - மொய் பணத்துக்கு பதிலா உன்னோட ரெசிபிபடி திரட்டு பால் செஞ்சு பழகலாம்னு இருக்கேன், அதை அனுப்பவா?...:))
சிங்கம் சிங்கிளா இல்லாம தம்பதியா நீடுழி வாழ வாழ்த்துகள் தக்குடு... :)
டிசம்பர் 1 - அட ஒரு பத்து நாள் கழித்து இருந்தால் கல்யாணத்துக்கு வந்திருப்பேன் தக்குடு - நானும் சென்னை வரேன்... வேற ஒரு சிங்கம் மாட்டப்போறது.. :)
வாழ்த்துக்கள் தக்குடு இண்டியன் கரன்சில்லாம் மொய்யா ஏத்துக்கமாட்டியோ?
Hey ...congrats thakkudu! Wish u a very happy married life!m
ஆஹா சிங்கம் சிக்கிருச்சு....மனமார்ந்த வாழ்த்துக்கள் தக்குடு....என்னுடைய மொய்ப்பணமா உங்க ரெசிபி திரட்டிப்பால் பார்சல் வரும்....
தக்குடு
உங்க ரெண்டு பேருக்கும் என்னோட ஆசீர்வாதங்கள். புகுந்தாத்துல நல்ல புள்ளயாண்டான்னு பேரு வாங்கணும். ஊர் பெயரை காப்பாத்தனும் சரியா?
10008 ரூபாய் ஓதியிடரதுக்கு அனுப்பிருக்கேன். :)
neranja ayusu arokiya aishwarya viruthiyoda nanna irruppa.
தக்குடு, ரூபாய் மட்டும் வேண்டாமாக்கும்!
பொண்டாட்டி, புள்ள குட்டிகளோட, எங்க செல்லப் பிள்ளை தக்குடு, பல்லாண்டு அமோகமா வாழ, அபிராமி அருளட்டும்!
என்ன டுபுக்கு சாரோட போஸ்டுக்கு வந்துட்டமான்னு ஒரே கொழப்பம்! அப்புறம் தான் புரிந்தது..........செம பில்ட் அப் போங்கோ! மனமார்ந்த திருமண வாழ்த்துகள்.
ஊரிலேர்ந்து வந்த பிறகு திரட்டுப்பால் உண்டோலியோ?கட்டு சாத கூடை திரட்டுப்பால் fulla எங்களுக்காக்கும். Jokes apart I wish you a wonderful married life.........your new fan,
REVOLVER RITA
"ரெங்கமணி" கிளப்பில் கட்டாய உறுப்பினராக சேர உடனே சந்தாவாக மொய் மதிப்பில் 25 % உடனே கீழ் கண்ட வங்கி கணக்கில் சேர்ப்பிக்குமாறு தங்களை எச்சரிக்கிறோம் (அதான்...பணிவாக கேட்டுக்கொள்கிறோம்).
இதை கல்யானத்திர்க்கப்புரம் தங்கமணி அனுமதிக்கமாட்டார் என்பதால் அட்வான்ஸ் ஆக செலுத்துமாறும் பணிக்கிறோம் (எல்லாம் அனுபவம் பாஸ்)
இல்லற வாழ்வில் இணையும் தங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கல்யாண சீர் பக்ஷனமாக எங்களுக்கு கீழ் கண்டவற்றை எதிர் பார்க்கிறோம் :-)
தங்களின் பெண் பார்த்த அனுபவம் [நன்னா கை முறுக்கு மாதிரி இருக்கணம் கேட்டோ ]
போன்-இல் கடலை வறுத்த அனுபவம் [திரட்டிப்பால் மாதிரி எப்படி பக்குவமா கிளரினேல்-நு தெரிஞ்சுக்கணும்]
உங்களை எல்லாரும் எப்படி கலாட்டா பண்ணினான்னு சென்சர் பண்ணாம ஒரு பதிவு [அதிரசம் மாதிரி இனிக்க இனிக்க]
பி. கு: இனிமே பதிவு போட லேட் ஆச்சுன்னா எல்லாம் "தங்கமணி" மேல பழி போடக்கூடாது. கண்ணை துடச்சுண்டாவது கடமை செய்யணும். வரலாறு முக்கியம் தக்குடு :P
மனமார்ந்த திருமண வாழ்த்துகள்.
enge nadakkirathu, eppa muhurtham, jaana vaasam eppo, kacheri yaaru, pon entha ooru, enna padippu, vela paakkiraala, ethanai seer varisai, oru detail kooda kaanome...!!!!
subbu thatha
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். சீரும் சிரி(ற)ப்புமாக எப்போதும் வாழ கடவுள் அருள் செய்வாராக.
thakkuduvai
UMMACHI KAAPPATHU.
MEENAKSHI PAATTI
hi thakkudu, thirumana naal kaanum iniya thambathiyarku manamaarntha nalvazhthukkal!!! abirami ammai padhikathula varaa maathiri sakala selvangalum petru padhinaaru perum petru vaazha naan vanangum lalithaambal anugrahikkattum! indha postla naan romba sirichadhu split ac example um, handbag maamiyai vida maamamu amsama porundhi irukkarthum thaan. cheers!sasisuga.
திருமண வாழ்த்துகள்
கண்ணாலம் கட்டிக்கப் போற தக்குடு தம்பிக்கு சென்னை அக்காவின் வாழ்த்துகள்.மொய்ப் பணம் 1001 அனுப்பிட்டேன்.கலெக்ட் பண்ணிக்கோங்கோ.TRC மாமா
வரலைன்னு சால்ஜாப்பு சொன்னாலும் சொல்வார்.கவனிச்சுடுங்கோ அவரை நன்னா. :-))
தக்குடு, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
vazhthukkal thambi
T.Thalaivi
Singam maapillaiya ready aayiduthaa? Yenga oorulirundu sema vaaltukkal pa Ambi...
Singam maapillaiya ready aayiduthaa? Yenga oorulirundu sema vaaltukkal pa Ambi... Ippadikku Thomson Jayaram from Bangalore...
தக்குடு தம்பிக்கு ...இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ...
மனமார்ந்த வாழ்த்துகள் !!!!
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் :)
இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க..
Congrats!! Srini. May Goddess Sharadamba and Gurunathar bless you with all health, wealth, peace and Happiness.
Hearty wishes for healthy married life...
-MCE
wish you happy married life.
Wish you a very Happy Married Life
WOWWWW!!!!! CONGRATS AND BEST WISHES THAKKUDU!!!! :)
Kalyaanathukku apram pala paer blogging frequency koranjudum.. hope that doesnt happen to u.. unga veettu samaachaaratha ellaam enga kitta share panneenga na, vaangura adi vali korayum :P
Neenga sonna moi list la, Leeds thambi vagaiyum saetthudungo!!!
By the way, AC matter super.. unmayaa-vae (AC) room poattu yosichadhu theriyaradhu!
Congratulations Thakkudu :)
வாழ்த்துக்கள்ப்பா..வாழ்கவளமுடன்..:)
hey hello Tkp,
many congratulations!!! ipo kalyanam ayachu nu nenakren....best wishes to u and ur wife for a wonderful married life...enjoy!!!!!!!!!!!!!!!!!
-vgr
Hearty congratulations :-) Inneram Rengamani gropula senthirupela ?
வாழ்த்தின எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!! :))
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)