Thursday, May 5, 2011

பாணி பூரி

சின்ன வயசுலேந்தே எனக்கு பெங்களூர்னா ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உண்டு. “யாம் அறிந்த மொழிகளிலே”னு கடையத்து மாப்பிள்ளை சொன்ன மாதிரி நமக்கு தெரிஞ்ச நகரங்கள்ல பெங்களூர் மாதிரி எதுவும் வராது. “தக்குடு! அது பெண்களூர்ங்கர்துனால தானே நோக்கு பிடிக்கும்?”னு சில மன்னார்குடிகாரா வலையை விரிக்க முயற்சி பண்ணலாம். ஆனா அது மட்டுமே காரணம் கிடையாது. எங்க தெருல கோடை விடுமுறைக்கு வரும் பெங்களூர்காராளோட "அங்க அப்பிடியே பாலும் தேனுமா கரைபுரண்டு ஓடர்து, குடிக்கர்துக்குதான் ஆளே இல்லை" மாதிரியான சம்பாஷனைகள் கூட ஒரு காரணமா இருக்கலாம்.

நான் போய் பெங்களூர்ல இறங்கின அன்னிக்கி வியாழக்கிழமை அதனால வெள்ளிக்கிழமை சாயங்காலம்தான் "வெளில போய் 4 கடை கன்னி எல்லாம் காட்டரேன்"னு சொல்லி எங்க அண்ணா கூட்டிண்டு போனான். நம்ப ஊர் மாதிரி வெள்ளிக்கிழமை இங்க கோவிலுக்கு எல்லா பயலும் படை எடுக்க மாட்டான். ஆனா சனிக்கிழமை எந்த கோவிலுக்கு உள்ளேயும் நுழைய கூட முடியாது. மூனு முக்கு தாண்டினா ஒரு அனுமார்கோவில் கட்டாயமா இருக்கும். சனிக்கிழமை அன்னிக்கி இந்த அனுமார் எல்லாம் சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன்,எக்ஸ்மேன் அலங்காரங்களில் 100 - 120 பூ மாலையுடன் காட்சி தருவார். எல்லா கோவில்லையும் பிரசாதம் கை நிறைய தருவா. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா நானும் எங்க அண்ணாவும் நாலு கோவிலுக்காவது கட்டாயமா போயிட்டு வருவோம்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கோவில் எல்லாம் ஈ ஆடும். ஸ்வாமியும் எதோ விசு படத்துல வரும் கதானாயகி மாதிரி ஒரே ஒரு முழம் மல்லி பூவும் ஒத்தை ரோஜாவும் வெச்சுண்டு ரொம்ப விஷ்ராந்தியா இருப்பார். எல்லா கூட்டமும் மால் பக்கத்துலையும், தியேட்டர்லையும் கும்மி அடிச்சுண்டு இருக்கும். ‘திருச்சந்தூரில் கடலோரத்தில்’ பாட்டுல வரும் டி.எம்.ஸ் & சீர்காழி மாதிரி நானும் எங்க அண்ணாச்சியும் மால்ல போய் நிப்போம். சப்பாத்தி பிகர்கள் கும்பலா கடந்து போகும் போதெல்லாம் " “நம்பியவர் வந்தாஆஆஆர்! நெஞ்சுருகி நின்றாஆஆஆர்"னு எல்லாம் முகத்துல உணர்ச்சி பெருக்கை காட்டமாட்டோம்.



நானும் அண்ணாச்சியும்....:)

எஸ்கலேட்டர் பக்கத்துல நாம நின்னுன்டு இருக்கும் போது 40 படி இருக்கும் ஒரு மாடிப்படில ஒரு கொய்யாப்பழ மூட்டையோட ஏறிண்டு இருக்கும் போது 35வது படில வச்சு மூட்டை கைலேந்து தவறி மூட்டையோட வாய் திறந்து மூட்டைல உள்ளது எல்லாம் வெளில வந்து படில குதிச்சு வந்த மாதிரி எதாவது ஒரு அமீர்கான் படத்தை பாத்துட்டு 4வது ப்ளோர்லேந்து திடீர்னு ஒரு சப்பாத்தி கோஷ்டி அச்சாஹை! குச்சாஹை!னு பேசிண்டே நம்மை தாண்டி போகும். அதுக்கு எல்லாம் நம்ப மனசு கிலேசமடையக்கூடாது.

ஆரம்பத்துல இவாளோட கன்னட பாஷை ஒரு எழவும் புரியாம இரட்டை மரியாதையோட(திருதிருனு தான் எப்போதும் சொல்றோமே) முழிச்சுண்டு இருந்தேன், தொடர்ந்து முயற்சி பண்ணினா நாமளும் நன்னா கன்னடா பேசலாம். ஒரு சமயத்துல கோவில்ல ரெண்டு பொம்ணாட்டிகளுக்கு நடுல நடந்த சண்டையை தீர்த்து வச்சு மத்யஸ்தம் பேசர அளவுக்கு கன்னட மொழில புலமை பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சுடுத்துன்னா பாத்துக்கோங்கோளேன்.( என்னோட ஜாதக ராசி, அங்க போயும் பொம்ணாட்டிகள் சண்டைலதான் மத்யஸ்தம்). தமிழ் நாட்டுலேந்து இங்க பொழப்புக்கு வந்த பலபேர் என்னவோ பொறந்ததுலேந்தே பாணிப்பூரி, பேல்பூரியோட ரெட்டைபுள்ளையா ஒட்டி பொறந்த மாதிரி பொலந்துகட்டுவா. சில பேர் காணாதுகண்ட மாதிரி மத்தியானம் 12 மணிக்கு எல்லாம் 'லபக் லபக்'னு பேல்பூரியை வி@#ரோ ஆபிஸ் வாசல்ல நொசிக்கிட்டு அப்புறம் ரெஸ்ட்ரூம்ல போய் ஒரு மணி நேரமா 'டமால் டுமீல்'னு வெடிவழிபாடு பண்ணிண்டு இருப்பா( 'I am in the middle of one important meeting'-நு ரெஸ்ட்ரூம்லேந்து செல் போன்ல பேசி காமெடி பண்ணுவா).

பாணிபூரி சாப்பிடர்துக்கு எல்லாம் ஒரு சம்பிரதாயம் இருக்கு. தத்தியாட்டமா ஒரு தட்டுல 6 பாணிபூரியை வெச்சு ஒரு கிண்ணத்துல ஜீரக ஜலத்தை வெச்சுண்டு சாப்டரவாளை பாத்தாக்க எனக்கு சிப்பு சிப்பா வரும். கோரமங்கலால(பெண்களூர்ல ரம்மியமான ஒரு பகுதியோட பேர்) நாங்க இருந்த போது ராத்ரி 8.30க்கு மேல ஒரு வடக்கத்திக்காரர் அவரோட பாணிபூரி கூடையை கொண்டு வந்து அவுப்பார். கிருஷ்ணரை சுத்தி நிக்கும் கோபிகாஸ்த்ரீகள் மாதிரி முக்கால் காலுக்கு டவுசர் போட்ட சப்பாத்தி பிகர்கள் சுத்தி நிக்க ஆரம்பிச்சுடுவா. “ஒரு குலாப்ஜாமூனே பாணிபூரி சாப்பிடுகிறதே! அடடா ஆச்சரியகுறி”னு சொல்லும்படியா ஆசை ஆசையா சாப்டுவா. காய்ஞ்ச இலைல பண்ணின ஒரு தொண்னையை எல்லார் கைலயும் குடுத்துட்டு ஜல்ஜீரால முக்கி முக்கி வட்டமா எல்லாருக்கும் "அம்மாவுக்கு ஒரு வாய்! அப்பாவுக்கு ஒரு வாய்! கோந்தைக்கு ஒரு வாய்!" மாதிரி தொண்னைல போடுவார். அந்த குட்டி பூரிக்கு உள்ள இருக்கும் ஜலம் வெளில சிந்தர்துக்கு முன்னாடி நம்ப வாய்ல போட்டுக்கனும். நானும் எங்க அண்ணாவும் எதிர் எதிர் திக்குல இரண்டு சப்பாத்திக்கு நடுல போய் ஜோதில ஐக்கியமாயிடுவோம். நாம கொஞ்சம் சாப்பிட தெரியாம சிரமபட்டாக்க “ஏ நயி! ஓ நயி!”னு சப்பாத்தி பொண்ணு அழகா நமக்கு சொல்லி தரும். அது சொல்லி தர அழகுக்கே ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு எப்பிடி சாப்பிடனும்ங்கர விஷயம் மறந்து போயிடும்னா பாத்துக்கோங்கோ...:)



சப்பாத்திகள் சொக்கி விழும் வஸ்து....:)

பந்தில ‘கிள்ளு’ பாயாசம் விட்டு தயிர் பச்சடி வரர்துக்குள்ள வழிச்சு நக்கும் நம்மோட அசகாய வேகத்தை எல்லாம் பாணிப்பூரி சாப்பிடும் போது காட்டினாக்க ஜல்ஜீரா மூக்குல போய் பொரையேரிண்டு அப்புறம் ‘அம்மா நினைச்சுக்கரா! ஆட்டுகுட்டி நினைச்சுக்கர்து!’னு சொல்லிண்டு நமக்கு நாமே தலையை தட்டிக்க வேண்டி இருக்கும். அதுக்காக மோர் விடும் போது ரசத்துக்கு சாதம் கேக்கும் படியா மெதுவா சாப்டாக்கா பாணிபூரிகாரருக்கு கணக்கு ஒலம்பிடும். இயல்பான வேகத்துல சாப்பிடனும் (தெரியலைனா பக்கத்துல நொசுக்கும் குலாப்ஜாமூனை பாத்துக்கலாம்).

கனவுகள் தொடரும்....:)

32 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Vadai only...micham appuram..:))

RVS said...

பதிவுக்கு எனக்கு முன்னாடி அப்பாவி துண்டைப் போட்டு இடத்தை பிடிச்சுட்டாங்க.

ரம்மியமான பகுதிக்கு கோரமங்கலான்னு எவன் பேர் வச்சான். சுத்த கிறுக்கனா இருப்பானுங்க போலருக்கே!
பாவம் உங்க அண்ணா!
மன்னார்குடிக்காராளைப் பற்றி இழுத்து ஏம்ப்பா வம்பு பண்றே! ;-))

பத்மநாபன் said...

பாணிப் பூரியை வச்சு செம ரூட் விட்டிருக்கே...தொடரும் கனவுகளில் பார்ப்போம் யார் மாட்டியிருக்காங்கன்னு....

பத்மநாபன் said...

//மன்னார்குடிக்காராளைப் பற்றி இழுத்து ஏம்ப்பா வம்பு பண்றே! //

அவாள்ளாம் பெண்களூர் போனா திரும்பியே வரமாட்டா....

Matangi Mawley said...

"விசு படத்துல வரும் கதானாயகி மாதிரி ஒரே ஒரு முழம் மல்லி பூவும் ஒத்தை ரோஜாவும் வெச்சுண்டு ரொம்ப விஷ்ராந்தியா இருப்பார்."...

"‘திருச்சந்தூரில் கடலோரத்தில்’ பாட்டுல வரும் டி.எம்.ஸ் & சீர்காழி மாதிரி நானும் எங்க அண்ணாச்சியும் மால்ல போய் நிப்போம்."...

ithu rendume--- ultimate!!!! :D ROFL.... :D

'penn'galoor vaasam- amoham, pongo! :)

kerala... karnataka... oru edam vidarathilla!

Semma comedy!

ஆயில்யன் said...

/சின்ன வயசுலேந்தே எனக்கு பெங்களூர்னா ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உண்டு//

ஒரு ஆர்வத்துல ஓடோடி வந்த நான் அவசரத்தில பெங்களூன்னு இருக்கறதை ஃபிகர்ன்னு படிச்சுட்டேன் பாஸ் மாப்பு!

ஆயில்யன் said...

//“நம்பியவர் வந்தாஆஆஆர்! நெஞ்சுருகி நின்றாஆஆஆர்"னு எல்லாம் முகத்துல உணர்ச்சி பெருக்கை காட்டமாட்டோம்.//

அச்சசச்சச்ச்சச்சோ! //காட்டமாட்டோம்// நீங்களும் உங்க அண்ணனுமா யப்பா டேய் உலக மகா நடிப்புடா சாமியோய்ய்ய்ய்ய்ய்
ஃபிகரை பார்த்த உணர்ச்சிப்பெருக்குல டிஎம் எஸ்ஸாக உங்க பிரதரும்,அண்ணே அளவா பர்ஃபெமான்ஸு கொடுன்னு சொல்ற கோவிந்த ராஜனா உம்மையும் பாக்குறோம்ய்யா!

lata raja said...

Thodarattum.....

ஷைலஜா said...

இப்போவாவது எஙக் ஊரைப்பத்தி எழுதத்தோணித்தே தக்குடு வரேன் முழுக்க படிச்சிட்டு:)

ஷைலஜா ஃப்ரம் பெங்களூர்!

vgr said...

nalla comdedy than po....

கிருஷ்ணரை சுத்தி நிக்கும் கோபிகாஸ்த்ரீகள் மாதிரி ...
“ஒரு குலாப்ஜாமூனே பாணிபூரி சாப்பிடுகிறதே! அடடா ஆச்சரியகுறி”னு...

idu rendum super...

also nee sonna reference edunu purialaye....

-vgr

இராஜராஜேஸ்வரி said...

அது சொல்லி தர அழகுக்கே ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு எப்பிடி சாப்பிடனும்ங்கர விஷயம் மறந்து போயிடும்னா பாத்துக்கோங்கோ...//
O.K.....O.K.....பாணி பூரி!!!

SRINIVAS GOPALAN said...

தக்குடு
பெங்களூர் என்கிற விருந்தாவனத்தில் நீ பண்ணின லீலைகளை இப்படி வரலாற்றில பதிந்து வைச்சிருக்கியே. இந்த குலாப்ஜாமூன், சப்பாத்தி எல்லாத்தையும் நாளைக்கு உனக்கு வரப் போற ஆத்துக்காரி படித்தால் ஏற்படற பின் விளைவுகள் பற்றி யோசித்தாயா? :)
நானும் ரவுடி தான் னு காட்ட இப்படி சீன் போடறியா. என்னவோ போ மாதவா!

Unknown said...

மீத பிர்ச்டு எனக்குதான் வடை
கொஞ்சம் late ஆய்ட்டு..

எதுக்கு மன்னார்குடிக்காராளைப் பற்றி இழுத்து ஏம்ப்பா வம்பு பண்றே! ; ,.....எதை கண்டித்து வெளி நடப்பு

திவாண்ணா said...

பதிவுக்கு பதிவு 'நான் கோந்தை நான் கோந்தை' ன்னு சொல்லிக்கரையே? எனக்கு ரொம்பவே சந்தேகமா இருக்கு! :-))))

வெங்கட் நாகராஜ் said...

பானிபூரி சாப்பிட்ட குலோப்ஜாமூன்! இது நன்னா இருக்கே! அதுல ஒரு பத்து உள்ள அனுப்புன பிறகு, இன்னும் சாப்பிடணுமேன்னு ஆசை இருந்தாலும்... சாப்பிடாம கொஞ்சம் புளித்தண்ணியை தொன்னையிலே வாங்கி குடிச்சுட்டு குலோப்ஜாமூன் முகமெல்லாம் அஷ்ட கோணலா ஆகும்போது மட்டும் பார்க்கக் கூடாது இல்லையா! தில்லியில தினம் தினம் பானிபூரி-குலோப்ஜாமூன் பார்த்துண்டுதானே இருக்கா நிறைய பேர்...

Porkodi (பொற்கொடி) said...

ஹாஹா. அந்த டி.எம்.எஸ் சீர்காழி போஸ் சான்சே இல்ல.. ஆமா, இது நடந்த காலகட்டம் என்ன 2007க்கு அப்புறமா?

Vasagan said...

\நாம கொஞ்சம் சாப்பிட தெரியாம சிரமபட்டாக்க “ஏ நயி! ஓ நயி!”னு சப்பாத்தி பொண்ணு அழகா நமக்கு சொல்லி தரும். \

குழந்தைன்னு நினைச்சு சொல்லிகொடுத்து இருக்கும்கள்.

(Mis)Chief Editor said...

பெங்களூரைப் பத்தி 'பட், பட்'-னு புட்டு வெச்சுட்டேள்! அதென்னமோ தெரிலை, நாம எல்லாரும் சப்பாத்தியைப் பாத்தாலும், சப்பையப் பாத்தாலும் 'தொபுகடீர்'னு விழுந்துர்றோம்! ஏன்னு தெரிலை...

நல்லா எழுதறேள், நகைச்சுவையா எழுதறேள், நாசுக்கா எழுதறேள், நயமா எழுதறேள்-னு நாள் முழுக்க நான் சொல்லிகிட்டே போலாம்...அண்ணா! ஆல் தி பெஸ்ட்!!

-பருப்பு ஆசிரியர்

Mahi said...

தக்குடு,கனவிலே ஒரே ஜொள்ளா ஓடறதே?! ;)

ஆகமொத்தம் வாரவாரம் சாட்டர்டே டின்னர் கோயில்லதானா? :)

Gopikaa said...

உங்க ஃபோடோவும் உங்க அண்ணன் ஃபோடோவும் சூப்பர். அட...அட...அட... பாணி பூரிக்கு யாரும் இவ்ளோ விளக்கம் கொடுக்க முடியாது-ங்க. தூள் கிளப்பிடீங்க போங்க!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//"வெளில போய் 4 கடை கன்னி எல்லாம் காட்டரேன்"னு சொல்லி//
அடப்பாவமே... :)))


//நானும் அண்ணாச்சியும்//
ஹா ஹா ஹா... நெனச்சேன்... சிரிச்சேன்...:)


//ஒரு சமயத்துல கோவில்ல ரெண்டு பொம்ணாட்டிகளுக்கு நடுல நடந்த சண்டையை தீர்த்து வச்சு மத்யஸ்தம் பேசர அளவுக்கு//
மறக்காம இதை extra curricular activities ல உன் பயோ-டேட்டால சேத்துடு....:))


//ஒரு குலாப்ஜாமூனே பாணிபூரி சாப்பிடுகிறதே//
கவித கவித...:)


//ஏ நயி! ஓ நயி!”னு சப்பாத்தி பொண்ணு அழகா நமக்கு சொல்லி தரும்//
பின்ன நீங்க பானி பூரி சாப்பிடவா போனீங்க... இதுக்கு தானே...:))

vidhas said...

ROMBHA NALLA ERUKUU THAKKDU, PANIPURIYA ORU GULABJAMOON SAPATARATHEY CUTE ;-) I AM IN A IMPORTANT MEETING LOL:-) , EPPADI THAKKDU , NADAKATIUM NADKATUM

தி. ரா. ச.(T.R.C.) said...

வெளில போய் 4 கடை கன்னி எல்லாம் காட்டரேன்"னு சொல்லி எங்க அண்ணா கூட்டிண்டு போனான்
ஆஹா எப்பேற்பட்ட உத்தமான அண்ணா உனக்கு.அண்ணா இன்னும் மாறவே இல்லை. அதுசரி நீ கடையைபாத்தியா இல்லை கன்னியை பாத்தியா அதைச்சொல்லு முதல்லே

தி. ரா. ச.(T.R.C.) said...

ஃதக்குடு இன்னிக்கி சயங்காலம் எனக்கு பொழிச்சலூர்லே கொஞ்சம் வேலை இருக்கு ஒருத்தரை பார்த்து கொஞ்சம் பேசனும். நான் போயிட்டு வந்து பேசறேன். மறந்துட்டேனே இப்பிடியே ஹாஸ்ய உணர்வோடயே இரு.அடக்கம் அமரருள் உய்க்கும்ன்னு அண்ணா மாதிரி அப்பிடியே காணாம போயிடப்பிடாது

geetha santhanam said...

பெண்களூரில் கடை 'கன்னி'யெல்லாம் நல்லா ரசித்திருக்கிறீர்களென்று தெரிகிறது.

fieryblaster said...

bangalore pathi ezhudaradu swarasyama than irukku. aanaal namba madras madiri varuma? Madras retains its flavour of culture. bangalore appadi illai. enge parthalum hindi um araidrayarum dhan. kanraviya irukku. eppo oorla settle aagalamnu dhan thondradu.

Kavinaya said...

:))) பாவம் ஒண்ணுமே தெரியாத கோந்தை!

குறையொன்றுமில்லை. said...

பந்தில ‘கிள்ளு’ பாயாசம் விட்டு தயிர் பச்சடி வரர்துக்குள்ள வழிச்சு நக்கும் நம்மோட அசகாய வேகத்தை எல்லாம் பாணிப்பூரி சாப்பிடும் போது காட்டினாக்க ஜல்ஜீரா மூக்குல போய் பொரையேரிண்டு அப்புறம் ‘அம்மா நினைச்சுக்கரா! ஆட்டுகுட்டி நினைச்சுக்கர்து!’னு சொல்லிண்டு நமக்கு நாமே தலையை தட்டிக்க வேண்டி இருக்கும். அதுக்காக மோர் விடும் போது ரசத்துக்கு சாதம் கேக்கும் படியா மெதுவா சாப்டாக்கா பாணிபூரிகாரருக்கு கணக்கு ஒலம்பிடும். இயல்பான வேகத்துல சாப்பிடனும் (தெரியலைனா பக்கத்துல நொசுக்கும் குலாப்ஜாமூனை பாத்துக்கலாம்).

அதானே தக்குடுவா கொக்கா?
ஆமா தக்குடு ஏன் எப்படி கொக்கை சம்பந்தப்படுத்தராங்க? உனக்குத்தெரியுமோ?

தக்குடு said...

@ இட்லி மாமி - :))

@ மைனர்வாள் - மன்னார்குடி சாம்பார்ல போடும் மசாலா மாதிரி, அதை போட்டாதான் மணம் வரும்..:)

@ பத்துஜி - பெண்களூர் வாழ்க்கை ஒரு பொற்காலம்..:)

@ மாதங்கி - கேரளா கர்னாடகானு பாரபட்சம் காட்டகூடாது இந்தியானு ஒத்துமையா இருக்கனும்..:)

@ ஆயிலு - கண் பார்வை umakku எல்லாம் 2 மாசத்துல சரி ஆகும்..:P

@ லதாஜி - :))

@ ஷைலஜா அக்கா - வாங்கோ! வாங்கோ!,,:)

@vgr - ஆபிஸ் வாசல்ல பேல்பூரி வாங்கி திண்ணவா யாரு தெரியுமோ??..:P

@ ராஜி அக்கா - :))

@ கோபால் அண்ணா - அதெல்லாம் ஒன்னும் ஆகாது அண்ணா! உம்மாச்சி காப்பாத்துவார்..:)

@ சிவா - :))

@ திவாண்ணா - :))

தக்குடு said...

வெங்கட் அண்ணா - பாத்துண்டு இருக்கேள்னு சொல்லுங்கோ!..:P

@ கொடிகுட்டி அக்கா - எல்லா காலகட்டத்துலையும் நாங்க இப்படிதான்..:)

@ வாசகன் - இல்லையா பின்ன!..:)

@ பருப்பு ஆசிரியர் - 2005லேந்து எழுதும் நீர்தான்வோய் எனக்கு அண்ணா..;)

@ மஹி - அதே! அதே!

@ கோபிகா அக்கா - வாங்க மேடம்..:)

@ இட்லி மாமி - அருமையான ரசிக்கும் உள்ளம் உங்களுக்கு..:)

@ வித்யா அக்கா - :))

@ TRC மாமா - கடைக்கு போனதால கன்னியையும் பாக்கவேண்டியதா போச்சு..:)

@ கீதா அக்கா - :))

@ blaster mami - ஆமாம் ஆமாம் சென்னை மாதிரி மண்டையை பொலக்கும் வெயில்,கசகசனு வேர்த்து வழியும் கண்றாவி சீதோஷணம் எல்லாம் பெங்களூர்ல கிட்டாது..:PP

@ கவினயா அக்கா - :))

கௌதமன் said...

கோரமங்களாவில் எந்த பிளாக், எந்த மெயின் / எந்த கிராஸ் என்று விவரம் கொடுங்க. ஒரு தபா போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுகின்றேன். பானி பூரி கடையைத்தான்.

Anonymous said...

பாணி பூரி பிடிக்கும். பட் வெளிய வாங்கி சாப்பிடுவதில்லை. வீட்லயே யாரும் செஞ்சு தந்தால் தான் இருக்கு. வந்த அண்ணி கண்ல உன்னோட புளொக் படாம பாத்துக்கோ ராசா. ஹி ஹி. இவ்வளவு ஜொள்ளுவிட்டேன்னு தெரிஞ்சா பின்னிடுவாங்கபின்னி.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)