Wednesday, August 4, 2010

டொட்டடைய்ய்ய்ய்ய்ங்........

என்னடா இது? நம்ப தக்குடுதான் வெள்ளிக்கிழமை ராமசாமியாச்சே, அதிசயமா ஒரு நாள் முன்னாடியே போஸ்ட் போட்ருக்கே?னு யோசனையோட படிக்க வந்த எல்லாருக்கும் ஒரு சலாம்குலாமு!

வளைகுடா நாடுகள் எல்லாத்துலையுமே ஜூன் மாசத்துல ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா செப்டம்பர் வரைக்கும் பொட்டியை தூக்கிண்டு எல்லாரும் கிளம்பிடுவா.

எங்க ஆபிஸ்லதான் எல்லாம் லோக்கல் ஷேக்குதானே, அவா எல்லாரும் அவாளோட பொண்டாட்டிகள் எல்லாரையும் கூட்டிண்டு ஐரோப்பா, சிங்கப்பூர்னு கிளம்பிட்டா. எனக்கு இந்த வக்கேஷன் எல்லாம் பழக்கம் இல்லை. பெங்களூர்ல இருக்கும் போது வருஷத்துக்கு மொத்தமே 10 நாள்தான் லீவு எடுப்பேன். அதுவும் எங்க ஊர் வினாயகர் சதுர்த்திக்காகதான்(ஆமாம் எங்க ஊர்ல 10 நாள் உத்ஸவம் தொப்பையப்பருக்கு).

இங்க லீவும் ' நான் முந்தினா நேக்கு!' நீ முந்தினா நோக்கு!னு யாரு சீக்கரமே அப்ளே பண்ணராளோ அவாளுக்குதான் கிட்டும். நான் அதை பத்தி எல்லாம் யோசிக்காம ஆணியை பிடிங்குண்டு இருந்தேன். பொறுத்து பொறுத்து பாத்த எங்க ஷேக்கு மேனேஜர் என்னை கூப்பிட்டு அனுப்பினார். போய் பார்த்தா, ‘ஆளே இல்லாத ஊர்ல யாருக்குடா டீ ஆத்திண்டு இருக்க?’னு என்கிட்ட கேட்டார். மொதல்ல போய் லீவுக்கு அப்ளே பண்ணர வழியை பாரு!னு சொன்னார்.

அப்ளிக்கேஷன் பார்ம் அரபில இருந்தது. நமக்கு என்ன கவலை, நம்ம கைலதான் சூடான் சிங்கம் இருக்காரே! எல்லா விபரமும் அவர் நிரப்பிட்டார், தக்குடு!னு ஒரு கையெழுத்து மட்டும் தான் நான் போட்டேன். 20 நாள் தான் நான் கேட்டேன். 20 நாள்ல நாக்கு கூட வழிக்க முடியாது! 30 நாள் வெச்சுக்கோ! என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!னு ஜனகராஜ் மாதிரி அள்ளிக் குடுத்தார் அந்த வள்ளல்...:) ‘கரகாட்டக்காரன்’ கனகாவுக்கு லெட்டர் குடுத்தவனுக்கு ‘தங்கப்பதுமை’ தமன்னாவே பிக்கப் ஆன மாதிரி ஆயிடுத்து தக்குடுவுக்கு.





அதோ! இதோ!னு அந்த நாளும் வந்தாச்சு, ஆமாம் பொட்டியை தூக்கிண்டு தக்குடு கிளம்பியாச்சு. செப்டம்பர் 15 வரைக்கும் நம்ப ப்ளாக்குக்கும் விடுமுறை (எல்லாரும் நிம்மதியா இருக்கலாம்).

ஆப்பக்காரி அன்னம்மா பொண்ணு, ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு! எல்லாரும் செளக்கியமா?னு ஊர்ல கேட்டுட்டு வந்து சொல்றேன். ஒரு வாரம் பெங்களூர்ல டேரா, அதுக்கு அப்புறம் கல்லிடை சிட்டிதான்.

ஊர்லேந்து வரும் போது என்ன வாங்கிண்டு வரனும்?னு கேட்டதுக்கு, (எங்க அம்மா மாதிரி) ' நீ பத்ரமா போய்ட்டு வந்தாளே போதும் மகனே! அதுதான் வேணும்!'னு சொல்லி புல்லரிக்க வச்ச என்னோட தோஸ்த் ‘துபாய்’ செளம்யாவுக்கு ஒரு ஸ்பெஷல் சலாம்.

நான் திரும்பி வரவரைக்கும் புதுசா யாராவது நம்ப கடைக்கு வந்தா, வலது பக்கம் நம்பளோட ‘அமரகாவியங்கள்’ எல்லாம் இருக்கு. படிச்சுண்டு இருக்கவும்....:)



ஊருக்கு போகப்போர தக்குடுகோந்தையோட முகத்தில் என்ன ஒரு ஆனந்தம் பாத்தேளா?...:))

தக்குடு திரும்பி வரும் வரைக்கும் என்னோட ப்ளாக்கை பத்ரமா பாத்துக்கும் பொறுப்பை ‘சியாட்டில் சிங்காரி’ கிட்டயும், இட்லி மாமி கிட்டயும் ஒப்படைக்கிறேன் (யாருப்பா அங்க? திருடன் கைலயே சாவி!னு நக்கல் அடிக்கர்து?).

34 comments:

எல் கே said...

bon voyage. safe journey.. have nice time with family

திவாண்ணா said...

mmmmmm!
வெல்கம் ஹோம்!
சென்னையிலே சந்திப்போமா?

ஆயில்யன் said...

அந்தா நிக்கிதுல்ல அந்த பொண்ணு மாதிரி ஒண்ணு தக்குடுவுக்கு தொங்கட்டான் ஆக்கிட்டு வர்றனும்ன்னு நான் உம்மாச்சியை கும்பிட்டுக்கிடறேன்! :)

ஷைலஜா said...

ganssssssss

welcome!

பெங்களூர்ல ஆரத்திகரச்சி வரவேற்கறேன்!
வா வா!!(தமன்னா படம் சூப்பர்! குழந்தை படம் கொள்ளை அழகு!)

Anonymous said...

happy journey thakkudu ..பத்ரமா போயிட்டு வாங்க ..

Chitra said...

‘கரகாட்டக்காரன்’ கனகாவுக்கு லெட்டர் குடுத்தவனுக்கு ‘தங்கப்பதுமை’ தமன்னாவே பிக்கப் ஆன மாதிரி ஆயிடுத்து தக்குடுவுக்கு.

.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி....
Enjoy your holidays!

ஜில்தண்ணி said...

தமன்னா தக்குடுபாண்டி :) பேஷா இருக்கே

ஓய் தமன்னாவையும் சேர்த்து ஊருக்கு கூட்டிட்டு போயிருக்கேளா :)

அப்பாடா சன் டீவில இனி தமன்னா வர மாட்டாங்கல்ல :)

ஜாலியா போயிட்டு வாங்கோ :)

Sowmya said...

Haha...So sweet...:D Aamaa...kanaga ku enna korachalnen...Kallidai la aathangarai ya kettathaga sollavum...!

Happy vacation :)

BalajiVenkat said...

Bon voyage....

Jeyashris Kitchen said...

குழந்தை படம் எல்லாம் டூ மச் தக்குடு. கல்லிடை சிட்டி யா ? நீ சிட்டி ய பர்த்தடே இல்லையா?
Enjoy ur trip ,miss ur humourous posts.

மெளலி (மதுரையம்பதி) said...

வருக...வருக...

lata raja said...

Happy vacation thakkudu...idhukku thamannavaiyellaam engalukku kaata vaendaama irundhudhu. Appa ammakku samththu paiyyanaa irundhuttu leave enjoy pannittu vaango:)

GEETHA ACHAL said...

//செப்டம்பர் 15 வரைக்கும் நம்ப ப்ளாக்குக்கும் விடுமுறை (எல்லாரும் நிம்மதியா இருக்கலாம்).//ஐ...ஜாலி...ரொம்ப சந்தோசம் தக்குடு...சரி..சரி...சீக்கிரம் போய்விட்டு வாங்க...

Kavinaya said...

நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாப்பா கோந்தே :)

ரிஷபன் said...

குத்தாலத்துல எண்ணைக் குளியல் போட்டாப்ல இருக்கு.. பதிவு முழுக்க படிச்சு முடிக்கறப்ப.. செம கல கல

அது ஒரு கனாக் காலம் said...

வழக்கமா பத்துநாள் போதும்னா... இப்போ முப்பது நாள் !!!!!!!.. ஏதோ இடிக்குதே ... குண்டலம் போட்டுண்டு , மடிசார் உடுத்திண்டு ...ஏதோ போட்டோ / கீட்டோ காமிச்சுட்டாளா?????

என்ஜாய் ....

பத்மநாபன் said...

//‘தங்கப்பதுமை’ தமன்னாவே பிக்கப் ஆன மாதிரி ஆயிடுத்து// பூடகமா சொல்லவேண்டியத சொல்லியாச்சு.மீதி பாக்கவேண்டியதை பார்த்துப்பாங்க.

அம்பையில் டுபுக்கார், கல்லிடையில் தக்குடார்.நெல்லை கலகலக்கபோகுது.

இனிய விடுமுறைக்கு வாழ்த்துக்கள்.

நடுவிலும் வரலாம் ( வேற வேலை இல்லை அப்படின்னு சொல்றது காதுல விழுகுது )
ஆமா ஆமா வேல நிறைய இருக்கு அதுக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... சூப்பர் போஸ்ட்...
ஆனா ஒரு டவுட் உவமை சொல்றதெல்லாம் கூட எப்படி இப்படி (கனகா தமன்னா...) ஸ்பெஷல் ட்ரைனிங் எதுனா எடுத்து இருக்கீங்களோ... ஹா ஹா ஹா...

அன்னமா பொண்ணு மாணிக்கம் பொண்ணு எல்லாரையும் கேட்டதா சொல்லுவும்... (என்ன கேட்டதானு 1947 மொக்கைய கேட்டா அப்புறம் டென்ஷன் ஆய்டுவேன்...)

//ஊருக்கு போகப்போர தக்குடுகோந்தையோட முகத்தில் என்ன ஒரு ஆனந்தம் பாத்தேளா?...:))//
இந்த விசயம் இந்த Photoல இருக்கற கொழந்தையோட அம்மா அப்பாவுக்கு தெரியுமா...

//(யாருப்பா அங்க? திருடன் கைலயே சாவி!னு நக்கல் அடிக்கர்து?).//
பருப்பு பொடி / புளி காய்ச்சல் எல்லாம் கஸ்டம்ஸ்காரன் புடிச்சுக்க போறான் பாரு... ஹா ஹா ஹா

இருந்தாலும் என்னையும் நம்பி உங்க மில்லியன் டாலர் ப்ளாக்ஐ ஒப்படைச்சுட்டு போறது...ம்ம்ம்... ஆனந்த கண்ணீர்... ம்ம்ம்... ஒகே மீ எஸ்கேப்

Happy Journey... Happy Vacation...

தெய்வசுகந்தி said...

Have a safe trip!!!!!!!!!!

vgr said...

Bye!!!!

Krishnaveni said...

Nice post, Happy Journey, have nice time with family and friends

sriram said...

தனியா போயி ரெண்டா திரும்ப வர்ற வழியப் பாரு (ரொம்ப அட்வான்சா மூணா வந்திடாதே)..
ஒரு ரெங்கா விடற ஜொள்ளே தாங்காது, மூணு ரெங்காக்கள் ஒரே நேரத்தில பெண்களூர்ல சங்கமிக்கப் போறீங்க - என்ன ஆகுமோ?? பெண்களூர்ல வெள்ளம் வரப் போகுது - அங்க இருக்கறவங்க பாதுகாப்பான எடத்துக்கு போயிடுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Jyo said...

happy holidays...enjoy...

அருண் பிரசாத் said...

tata

Jayashree said...

HAPPY HOLIDAYS!

Matangi Mawley said...

happy journey thakkudu sir! :) oor vambellaam thirumbi vanthapram post ezhuthungo!

enjoy your vacation!

Vijay said...

அட ஊருக்கு போயாச்சா? சரி சரி... என்சாய். வந்தப்புறம் வச்சிக்கலாம் கச்சேரிய... நாட்டாமெ தீர்ப்பு சொல்லிடாரு... ஞாபகம் வச்சிக்கோ ஆமா... 2 ஓகே...3 நாட் ஒகே... ம்ம்ம்....

Jaishree Iyer said...

Happy Journey!have nice time with family and friends :) Enjoy!!

Menaga Sathia said...

happy vacation..enjoy thakudu...

Shobha said...

எது? இந்த அம்பைக்குப் போற வழியிலே வாய்க்காலுக்கு இந்தப் பக்கமா ஒரே ஒரு தெரு இருக்குமே , அதுவா கல்லிடை சிட்டி ?

என்னவோ நீ சொன்னா சரி :). என்சாய்.
ஷோபா

Porkodi (பொற்கொடி) said...

பாஸ்டனை வரிக்கு வரி வழிமொழிந்து விட்டு, உங்க ப்லாக் சாவியை தூக்கி கூவத்தில வீசிப்புட்டு இடத்தை காலி பண்ணுறேன்! :P

Anonymous said...

Dear Thakkudu, uurukku poyttu bathramaa vaango, i will take care of your blog.Already i am reading ur old post only..:( try to post one(atleast) article from ur native also.pleeeeeeeees!. Me and my mom missing ur blog very much...:( athanaalathaan cmmtey poodalai ithu varaikkumcheekram thirumbi vango sariyaa!!...:) happy vacation.

Ranjani Iyer

Anonymous said...

have a nice time...

தக்குடு said...

@ திவா அண்ணா,ஆயில்யன், சந்தியா மேடம், சித்ரா அக்கா, பாலாஜி, மதுரையம்பதி அண்ணா, கீதா அக்கா, கவினயா அக்கா, ரிஷபன் சார், பத்பனாபன் சார், அடப்பாவி அக்கா, சுகந்தி அக்கா, கிருஷ்ணவேனி அக்கா, பாஸ்டன் நாட்டாமை, ஜோஜோ,அருண், ஜெய்ஷ்ரீ மேடம்,மேனகா அக்கா,பாரதி, VGR - நன்னிஹை!!

@ ஷைலஜா அக்கா - உங்க சாப்பாடு கண்ணைகட்டிடுத்து...:)

@ ஜில்தண்ணி - :))

@ செளம்யா அக்கா - கனகா நன்னாதான் இருப்பா, ஆதங்கரையும் உங்களை ரொம்ப ஜாரிச்சது...:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - :))

@ லதா மேடம் - தக்குடு எப்போதுமே சமத்துதானே!!..:)

@ கனா காலம் - :))

@ மாதங்கி - கட்டாயமா சொல்லரேன்..:)

@ விஜய் அண்ணா - :))

@ ஷோபா அக்கா - 18 தெரு உள்ள ஒரு மா நகரத்தை சின்ன தெருனு சொல்லிட்டேளே...:))

@ கேடி - :))

@ ரஞ்ஜனி - :))

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)