Friday, May 28, 2010

விருது பாண்டியர்கள்

தக்குடுவுக்கு 2 விருது கிடைச்சிருக்கு! விருதை தந்தவர்கள் LK & பிரசன்னா Award 1 Award 2 . இங்க வந்துட்டு மனசு விட்டு ஒரு தடவையாவது சிரிச்சுருக்கமாட்டேளா? அதுதான் உண்மையான விருது தக்குடுவுக்கு. கிடைத்த இரண்டு விருதுகளையும் இங்கு வந்து சிரித்து விட்டுச் செல்லும் நண்பர்களுக்கும், தங்களின் நேர்மையான கருத்துகள் மூலம் என்னை திருத்திக்கொள்ள உதவும் பாஸ்டன் அண்ணா & Life is beautiful அக்கா போன்ற நல்லவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.




வந்த விருதை ஒரு 6 பேருக்கு குடுக்கனும்னு ஆசைபடுகிறேன். விருது எல்லாம் தரும் போது வாங்குபவருடைய சிறப்புகள் எல்லாம் கொஞ்சம் சொல்லிட்டு அப்புறம் குடுக்கர்துதான் அழகு. சும்மா கதவை தட்டி சார் போஸ்டு! மாதிரி குடுக்க கூடாது. திருனெல்வேலி பக்கமெல்லாம் நாம எவ்ளோ பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பெரிய வித்வான்களுக்கு நாமே நேரடியா மாலையோ/சால்வையோ எல்லாம் போட முடியாது, அந்த வித்வானுக்கு சமமான/உயர்வான வித்வத் உள்ள ஒருத்தர்தான் மரியாதை செய்யமுடியும். அதேபோல் இந்த விருதையும் வயது&அறிவு முதிர்ச்சி உடைய மரியாதைக்கு உரிய திவா அண்ணா தனது பொற்கரங்களால் வழங்கி கெளரவம் செய்வார். விருது வாங்கின வித்வான்களோட விருது,சால்வை மற்றும் பொற்கிழி எல்லாத்தையும் மேடைலேந்து அவா உக்காசுண்டு இருக்கர இடத்துக்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமே தக்குடுவோட வேலை..:) விருது பெறும் அனைவருக்கும் தக்குடு செலவில் அரைகிலோ தோஹா தங்கம் பொற்கிழியாக வழங்கப்படுகிறது...;)




திருமதி.வல்லிசிம்ஹன்

வல்லியம்மா! என்று பதிவுலகில் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இந்த அம்மையாரை விரும்பாதவரே இல்லை!னு சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த திரட்டிப்பால் கூட சில சமயம் திகட்டிப் போகலாம், ஆனால் இந்த அம்மாவோட தித்திப்பான அன்பும், பரிவும் மிக்க பதிவுகள் திகட்டாத தெள்ளமுதேளோரெம்பாவாய்! எல்லாரும் நல்லா இருக்கனும்!னு இவாளோட பதிவுகள்ல வார்த்தைகளா மட்டும் இல்லாமல் மனதாலும் வாழ்த்தக்கூடிய அற்புதமான ஒரு பெண்மணி & பெண்களில் மணி! குறை என்பதே கண்ணுக்கு தெரியாமல் எல்லாவற்றையும் நிறைவாகவே பார்க்கும் நம்ப வல்லியம்மா எப்போதும் நிறைவான வாழ்வே வாழனும்னு கல்லிடை ஆதிவராகப் பெருமாளை நான் சேவிச்சுக்கறேன். ‘யதார்த்தம் கூடிய பாசம்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திரு.மதுரையம்பதி அவர்கள்

அம்பிகையை பற்றி அணு அணுவாக அலசி ஆராயக்கூடிய அற்புதமான ஒரு சாக்தர். பெங்களூர்வாசியான இந்த மதுரைக்காரர் பதிவுக்குள்ள நாம போனோம்னா நம்மையும் அறியாம அம்பாள் சம்பந்தமா நிறைய விஷயங்களை அறியலாம். இவருடைய செளந்தர்யலஹரி பதிவுகள் ஒவ்வொன்னும் அற்புதமான ஒரு அனுபவத்தை நமக்கு தரும். கொஞ்சம் கூட விளம்பர மோஹமே இல்லாமல் ஆத்மார்த்தமா எழுதக்கூடிய மிகச்சிலரில் இவரும் ஒருவர். இவருக்கு எல்லா ஸ்ரேயஸும் வாரி வழங்கவேண்டும் என்று பச்சைகிளியை கையில் பிடிக்கும் செல்லக்கிளியாம் மீனாட்சியையும் அவளின் ஆத்துக்காரரையும் பணிந்து துதிக்கிறேன். ‘அருள் மணக்கும் ஆன்மீகம்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருமதி. ஷைலஜா அவர்கள்

'குழல் இனிது யாழ் இனிது என்பர் ஷைலஜாவின்
குரலை கேளாதோர்'
Shy + Lajjaa இங்கிலீஷ் & சமஸ்க்ருதம் என இரண்டு மொழியில் அர்த்தம் பார்த்தாலும் நாணம் எனும் அர்த்தம் வரும்படியான ஒரு பெயரை உடைய இந்த பெண்மணி ஒரு பன்முக படைப்பாளி. சிறுகதை, நாவல் என்று எல்லா பிரிவிலும் முத்திரை பதித்துக்கொண்டிருப்பவர். பக்கத்தாத்து மாமாவோட பையன் கல்யாணத்து ஜானுவாச போட்டோல நாம இருக்கர மாதிரி இந்த அக்கா ஜெயகாந்தன், இந்திரா செளந்தர்ராஜன் மாதிரியான பெரிய படைபாளிகளோடு ஒரே மேடையில் அமரும் வல்லமை உடையவர். இவருடைய வீட்டுக்கு நாம போனோம்னா அவருடைய தங்கக்கரங்களால் செய்த சூடான தூள் பக்கோடாவும், காசி ஹல்வாவும் நமக்கு கிட்டும். உங்களுக்கு யோகம் இருந்தா மதுரமான குரலில் ஒரு பாட்டும் கிட்டும். ‘பன்முக படைப்புகள்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருவாளர் VGR அவர்கள்

என்னடா இது எதோ பெரிய MGR மாதிரி பேரு இருக்கே?னு போய் எட்டிப்பார்த்து நான் தேடிப்பிடித்த ஒரு நல்ல பதிவர். யாருக்கும் அவ்வளவாக பரிச்சயம் இருக்க வாய்ப்பு இல்லை. இவர் இங்கிலிபீஸில் மட்டுமே எழுதுவார் அதுவும் துரைமார்கள் பாணியில் இருக்கும். முழுவதும் இங்கிலிபீஸ்ல இருக்கும் அந்த வலைபூவில் முத்து முத்தா தமிழ்ல கமண்ட் போட்டு தக்குடு வேடிக்கை பார்க்கும்....:)இருந்தாலும் எனக்கு ‘தாம்பரம் பொண்கள்’ பதிவு மூலம் பரிச்சயமாகி, இவருடைய ‘A question’ பதிவு ஆத்ம விசாரம் போல ஆழமாக சிந்திக்க வைத்த ஒன்று. இவரோட The Lonesome house கதையை படிச்சுடனும்னு நானும் முயற்சி பண்ணித்தான் பாக்கறேன், ஆனால் வேலை பளுவின் காரணமாய் இயலவில்லை..;( 'வித்தியாசமான சிந்தனையாளர்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது

திரு. அண்ணாமலையான் அவர்கள்

'மலை வாத்தியார்'னு பிரியத்தோடு இவரை தக்குடு அழைப்பதுண்டு. விவேகானந்தர் மாதிரி கையை கட்டிக்கொண்டு போஸ் குடுக்கும் இவருடைய பதிவுகள் எதாவது ஒரு முக்கியமான சமுதாய பிரச்சனை தொடர்பாக ஆராயும் நோக்கில் இருக்கும். இவர் ஒரு பதிவுல போடர விஷயம் மட்டும் தக்குடு மாதிரி கத்துக்குட்டிகள் கைல இருந்ததுன்னா 6 பதிவு போட்டுடலாம். நித்தியமும் எதாவது ஒரு மொக்கை போடுபவர்களுக்கு நடுவில் வருஷத்துக்கு மொத்தத்துல 6 பதிவு இவர் போட்டார்னா அதிசயம்தான். ஆனால் இவர் பதிவு போட்டு 4 மாதங்களுக்கு தொடர்ந்து கமண்ட் விழுந்து கொண்டே இருக்கும். சமீபகாலங்களாக ஆளையே காணும், அனேகமா உண்ணாமலையம்மன் சமேதராக வந்து காட்சியளிக்கப் போறாரோ என்னவோ?..:) 'சிறந்த சமுதாய சிந்தனையாளர்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருமதி.மதுரம் அவர்கள்

பெயருக்கு ஏற்ற மாதிரியே நல்ல நகைச்சுவை உணர்வு இவருக்கு உண்டு. 'உடம்பை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே' என்னும் திருமூலர் வாக்குப்படி உடம்பை நல்ல முறையில் வைத்துக் கொள்ளும் அருமையான சைவ உணவு பதார்த்தங்களை செய்து அதை போட்டோவுடன் போட்டு என்னை போன்ற சிறுகுழந்தைகளின் நாவில் எச்சில் ஊறச்செய்பவர். சைவ உணவுவைகைகள் மட்டுமே செய்து வருவது பாராட்டுதலுக்கு உரிய ஒரு விஷயம். 'சமையல் கலை திறன்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

முக்கியக் குறிப்பு - இன்னோரு விஷயத்தையும் இந்த சமயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம், உண்மையான ஆசிரியரின் குணாதிசியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம்தான் தக்குடு! எல்லா மனுஷாளையும் சந்தோஷப்படுத்தி பாக்கர்துக்காக ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஒரு கானல் நீர். இங்கு பதியப்படும் செய்திகள் ஹாஸ்யத்தின் பொருட்டுமட்டுமே, எனவே படித்து/சிரித்துவிட்டு( நன்றாக இருந்தால் மட்டும்)அதை மறந்துவிடவும். இதை அடிப்படையாக கொண்டு ஆசிரியரின் உண்மையான உடன்பிறப்பிடம் கேள்விகள் எல்லாம் கேட்டு அவனுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம். உண்மையான ஆசிரியருக்கு தெரிந்தது மட்டுமே எழுத வேண்டும் என்றால் Breakeven point in investment, Portfolio management, Institutional investors, Revised international accounting standard, Project inspection போன்றவை மட்டுமே எழுத முடியும்...:) மறுபடியும் சொல்கிறேன் தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம் & முற்றிலும் நிஜ ஆசிரியருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஸ்ருஷ்டிப்பு.

39 comments:

ஆயில்யன் said...

கற்பனை கதாபாத்திரம் - ஒ.கே டன்
இனி எல்லாமே ஒ.கே ஆயிடுச்சுல்ல அதுக்குத்தானே இந்த பிட்டு :)

ஆயில்யன் said...

ஷைலஜா அக்கா :) பாவம் வெக்கப்பட்டுக்கிட்டு வந்து படிக்காமலே போகப்போறாங்க :)))))

எம்.எம்.அப்துல்லா said...

Breakeven point in investment, Portfolio management, Institutional investors, Revised international accounting standard, Project inspection போன்றவை மட்டுமே எழுத முடியும்...:

//


அட! நீங்களும் என்னைய மாதிரி கணக்கபிள்ளை உத்யோகஸ்தரா?!?!?

நீங்க சி.எஃப்.ஏ வா??

SathyaSridhar said...

Vaanga Vaanga Finance Manager ae ungalukku ullaum kanakku apram ipdi migap periya comedy olinjuttu irukaratha veli kondu vanthu ellaraium sirikka vekarathukku nandri paa.

மதுரையம்பதி said...

அட, எனக்கு அரைக்கிலோ தங்கமா....ரொம்ப...ரொம்ப நல்லவரு நீங்க.. :-)

ஏதோ வல்லியம்மா, திவாண்ணா, ஷைலஸக்கா போன்ற பெரியவர்களுக்கிடையில் ஒரு ஓரமா இருக்க குடுத்து வச்சுருக்கணும்....நன்றி தம்பியாரே!

// ஆசிரியரின் உண்மையான உடன்பிறப்பிடம் கேள்விகள் எல்லாம் கேட்டு அவனுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம்//

ஹிஹிஹி...இதெல்லாம் வேற நடக்கிறதா...அடப்பாவமே!...உங்களை நேரில் பார்க்காதவர்கள் கேட்கத்தான் செய்வார்கள் தக்குடு.. :-)

ஷைலஜா said...

கண்ஸ் என்னும் தக்குடுவே! பொற்கிழியைவிட உன்னோட தங்கமான மனசு எனக்கு எப்போவும் இருக்கே அதுபோதும்! அன்பின்மிகுதியால் என்னைப்பற்றி ஏதேதோ சொல்லி விட்டாய்! சராசரிப்பெண்ணான எனக்கு உன்னைமாதிரி நலல் உள்ளங்களின் நட்பும் அன்பும் இருக்கிறபோது அதைவிட வேற பரிசு என்ன வேண்டும்? நன்றி எல்லாத்துக்கும்!

எல் கே said...

viruthu pettravargalukkum, viruthu kodutta unakum vaalthukkal.

enpa annathakitta ethavathu ekkkasaakkam kettutangala

Geetha Sambasivam said...

விருது கொடுக்கிறவரும் வாங்கிக்கறவங்களும் ரொம்பப் பெரியவங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள். மதுரம் என்பவரைத் தெரியாது. மத்தவங்களைத் தெரியும். எல்லாருக்கும் மீண்டும் வாழ்த்துகள். அவங்க தகுதிக்கு இதெல்லாம் ஜுஜுபி!

Life is beautiful !!! said...

Congratulations Thakkudu :). Kalakara po :). Samarpanam ellam senchu kizha kattainganu sollama solriya :(. Keep it up. Comedy track mattum ezhuthama, kadhaiyoda serthu comedy ezhuthu hehe....etho ennala mudinchathu :D

mightymaverick said...

//ஆனால் வேலை பலுவின் காரணமாய் இயலவில்லை//



அது பலு இல்லப்பா... பளு... நீயும் பின்நவீனத்துவமாக எழுத ஆரம்பிச்சிட்டியோ?



//ஆனால் இவர் பதிவு போட்டு 4 மாதங்களுக்கு தொடர்ந்து கமண்ட் விழுந்து கொண்டே இருக்கும்.//



நானும் மாசத்துக்கு ரெண்டு பதிவாவது போடுறேன்... மக்கள் எட்டிக்கூட பாக்க மாட்டேங்கிறாங்க... தமிழ் தெரிந்த நண்பர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன்... சரி பண்ணனும்...



//அவருடைய தங்கக்கரங்களால் செய்த சூடான தூள் பக்கோடாவும், காசி ஹல்வாவும் நமக்கு கிட்டும். //



கடவுளுக்கு ஒரு பார்சல்...



//தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம், உண்மையான ஆசிரியரின் குணாதிசியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம்தான் தக்குடு!//



முடியல... அண்ணனும் தம்பியும் இப்படி சொல்லி சொல்லியே ரணகளப்படுத்துறீங்கடா...



//உண்மையான ஆசிரியருக்கு தெரிந்தது மட்டுமே எழுத வேண்டும் என்றால் Breakeven point in investment, Portfolio management, Institutional investors, Revised international accounting standard, Project inspection போன்றவை மட்டுமே எழுத முடியும்...:)//





அது சரி தான்... நான் எல்லாம் எழுதணும்னா mother board, RAM, DVD, SDLC - ன்னு தான் எழுதணும்...

Anonymous said...

விருது பெற்ற மௌலி ,சைலஜா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மத்தவாளுக்கு கணக்குப் பிள்ளை, பொட்டி தட்டுறதுன்னு, நன்னா ஒரு தனித்துவம் இருக்கு. நான் கணக்குப் பிள்ளையா இருந்து பொட்டி தட்டுற வேலைக்கு மாறியாச்சு. ஒரு பக்கமும் சரியா வேலை செய்யல.

தக்குடு பதிவப் படிக்கிற காரியத்த மட்டும் சரியா பண்ணிடறேன்.

உங்க பதிவுகளுக்கு மிக்க நன்னி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice post. Congrats to you and everyone else got the awards too

Prasanna said...

Nice intros :) Congrats to every one..!

Chitra said...

தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம் & முற்றிலும் நிஜ ஆசிரியருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஸ்ருஷ்டிப்பு.


...... நல்லா தெளிவு படுத்ஹ்டி சொல்லிட்டீங்க மக்கா ...... இல்லைனா........ ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...


விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

vgr said...

First of all i would like convey my sincere Thanks to TKP (acronym for Thakkudupandi) for being so nice :)

My Congratulations to the Awardee Sirs & Mams - Vallisimhan, madurayambadi, Shylaja, Annamalayan & Maduram.


As TKP rightly pointed, we have been known to each other for only a little while now. But i must say, its been an absolute pleasure reading his blog posts, the comments section and all.

I have also found and read few good blogs from the commenters on his posts.

It has been very good to come here every week reading and knowing things from all you.

I have always asked TKP why is that the number of readers on his posts are large in numbers. He says that his readers enjoy and love Tamil a lot. I too would love to write in Tamil, as i have always had an affinity towards the language. But the fear of writing Tamil Fonts and an English Key board has always stopped me. But again, i also chose to write in English, just for the simple reason of inviting a broader audience. Why am i saying this? Well, i would like to humbly invite you all to come and read my posts without minding the language.

It is said that "There is always a pleasure in giving". Thakkudu'vin paranda manathai adarkaga paratugiren. Ennaiyum thangal kuzhuvil serthu kondamaiku mikka nandri.

As far the post is concerned, excellent write-up. Very well compiled with a mind blowing combination of words.

Thanks again!!

வல்லிசிம்ஹன் said...

தக்குடு என்கிற கணேஷ் என்கிற நல்ல குழந்தைக்கு எங்கள் அன்பும் ஆசீர்வாதங்களும்.
ஷைலஜா சொல்கிற மாதிரி இப்படி இமயமலைச் சிகரத்துல வச்சுட்டா குளிர் ஜாஸ்தியாயிடும்ம்மா:)
அப்புறம் ஸ்டாண்டர்ட் கம்மி பண்ணவே முடியாது.:)
ரொம்ப நன்றி இந்தத் தங்கத்துக்கு. வயசான காலத்துக்கு ரொம்பப் பிரயோஜனப்படும்.
இவ்வளவு நல்ல பிள்ளைக்கு ஏற்ற துணைவி வாய்த்து ரெண்டு பேருமா பதிவுகள் போடவும்

Anonymous said...

Dear Thakkudu, first congrats for your 2 awards, u deserve for that and congrats for the other people those who are getting now. neenga school& college days'la neraiyaa functions nadaththi irukkeloo?? ungalooda approachlaiyee(asking a elder to present the award) athu roombaa alaka theriyarthu, kurumbuthanam irunthaalum yella elder peopletaiyum nalla name irukku poolarukkey?..:P bakkoda & halwavukku naisaa reserve panninda samarthiyam thakkudu touch..:) nice narration and magical word combination with bavyam..:) so this week kadhai illaiyaa?..:( oru post thaaney neenga pooduveel!!..:(

ur fan,
Ranjani Iyer

Jaishree Iyer said...

Congrats for your Awards!

ஜில்தண்ணி said...

ஹலோ தக்குடு
தங்களுக்கு அவார்டு கொடுத்து ரொம்ப நாளாச்சி
வருவீங்கன்னு பாத்தேன்
வந்து எடுத்துக்கொள்ளுங்கள்
http://jillthanni.blogspot.com/2010/05/blog-post_23.html

தற்போது விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஐயப்பன் said...
This comment has been removed by the author.
ஐயப்பன் said...

நான் இல்லைன்னு சொன்ன நீ நம்ப போறதில்ல, என் தேடல் மிஸ் ஆயிடும்.

உன் பட்டமும் போயிடும். உண்மை ஒருநாள் உனக்கே புரியும்.

Jeyashris Kitchen said...

u really deserve the award for ur writing.and athuenna thanaddakam"i am like a mirage".
the persons u have passed the awards are true deservers for the award.

sury siva said...

தக்குடு !
தகறாரு ஏதும் பண்ணாம
தங்கம் எனக்கு சரிபாதி
வெட்டிடு !!

இல்லேன்னா ?
வேண்டாம்......இப்ப சொல்ல மாட்டேன்.
நீ தங்கம் இல்ல...
கொடுத்துடு தக்குடு கண்ணா !!

மீ. பா.

geetha santhanam said...

மதுரையம்பதி போன்ற வித்தியாசமான, நல்ல வலைப் பூவைப் பற்றி உங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன். நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். விருது பெற்ற மற்ற வலைப்பூக்களையும் சென்று பார்க்கிறேன். கீதா

Menaga Sathia said...

congrats to all!!

Swathi said...

Nice post, congrats to all.

அண்ணாமலையான் said...

மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்....

பத்மநாபன் said...

தக்குடு.....இன்னைக்குத்தான் பொட்டி இருக்கற இடம் கரக்கிட்டா தெரிஞ்சுது....வாழ்த்து வாழ்த்து வாழ்த்து ..எல்லாத்துக்கும்...
இப்ப நேரா உம்மாச்சி தரிசனத்திற்க்கும்...புளியோ..தச்சுமம்முக்கும் போய்ட்டே இருக்கேன்.....அங்க பாப்போம்..

Kavinaya said...

விருது வழங்கியவருக்கும் பெற்றுக் கொண்ட பெரியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

Sushma Mallya said...

Hi,congrats on your awards and thanks a lot for your lovely comments..

கோமதி அரசு said...

திவா அண்ணா மூலம் விருது வழங்கிய உங்களுக்கும்,விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வழங்கப் பட்ட பிரிவுகள் அருமை.(பட்டத்தின் தலைப்பு அருமை)

தக்குடு said...

@ ஆயில்யன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!!

@ அப்துல்லா - தக்குடு ஒரு சாதாரண ஒட்டகம் மேய்க்கும் பையன்...;)

@ சத்யா அக்கா - சந்தோஷம்பா!!..:)

@ ம'பதி அண்ணா - சந்தோஷமா இருக்குமே இப்போ??...;))

@ ஷைலஜா அக்கா - :)))

@ LK - நன்னிஹை..:)

@ கீதா பாட்டி - நீங்க சொன்னா கரெக்டுதான்...;)

@ மஞ்சு அக்கா - நன்னிஹை! யாரு சொன்னா நீங்க கிழடுனு?? கதை எல்லாம் ரொம்ப கஷ்டம் அக்கா, நமக்கு காமடி ட்ராக்தான் சரி...;)

@ வித்யாசமான கடவுள் - அவனை மாதிரி மழுப்ப எல்லாம் மாட்டேன், சரி பண்ணியாச்சு!!...;))

@ பரவஸ்து அண்ணா - ரொம்ப சந்தோஷம் அண்ணா!!..:)

தக்குடு said...

@ அடப்பாவி தங்க்ஸ் - நன்னிஹை!!...;)

@ பிரசன்னா - நன்னிஹை...:)

@ சித்ரா அக்கா - பின்ன உஷாரா இருக்கனுமே! பின்னாடி வரலாறு பேசும்...;)

@ - யோவ், அமெரிக்கால ஒபாமாவுக்கே நீர்தான் இங்கிலிபீஸ்ல தேர்தலுக்கு பிரசாரம் பண்ணினேளோனு ஆச்சர்யமா இருக்குய்யா! மைக்கை புடிச்சு பின்னி பெடல் எடுத்துட்டு நைசா ஒரு போஸ்டரும் ஒட்டிலேளே!!..:))

@ வல்லியம்மா - உங்களை மாதிரி நல்லவாளோட ஆசிர்வாதம்தான் தக்குடுவோட சொத்து...;)

@ ரஞ்ஜனி - வாங்கோ ரஞ்ஜனி, யூ ஆர் ஆல்வேஸ் கரெக்ட்! மேடையில் வரவேற்புரை அன்ட் சாம்பார் வாளி(உணவு உபசரிப்பு) எப்போதும் நம்ம ராஜ்ஜியம்தான். பெரியவா கிட்ட எப்போதுமே ஒரு அன்பும் மரியாதையும் தக்குடுவுக்கு உண்டு. கதை அடுத்த வாரம் சரியாப்பா!!

@ ஜெய்ஷ்ரீ அம்மா - நன்னிஹை!!..:)

@ ஜில்தண்ணி - ரொம்ப நன்றி சார்!...;)

@ சபரினாதன் - யோவ் சுத்தமா ஒன்னும் புரியலை!!..;)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - ரொம்ப நன்னிஹை அக்கா! ஜெய்ஷ்ரீ என்னோட ஒரு ஆல் டைம் பேவரட் பெயர்..;)

@ சூரி மாமா - :)))

@ கீதா சந்தானம் - ரொம்ப சந்தோஷம் அக்கா!!..;)

@ மேனகா அக்கா - :))

@ ஸ்வாதி - டாங்க்ஸ்...;)

@ மலை வாத்தியார் - ரைட்டு வாத்தியாரே!!...;)

@ பத்பனாபன் - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!!,,,:)

@ கவினயா அக்கா - சந்தோஷம்பா!!..:)

@ sushma - Hey, thanks for your nice words and wishes.

@ கோமதி அக்கா - எல்லாம் உங்க ஆசிதான்..;)

Harini Nagarajan said...

Clap! Clap! Clap! viruthu vaangina anaivarukkum vaazhthukkal!

P.S. Late a comment potaalum latest a poduven! :P

Matangi Mawley said...

ivaa yaaroda blogumey naan munna pinna padichchathilla! unga karuththayaavathu avaala paththi padichchu therinjukkalaamnaa- kannukku pattathellaam 'therattipaal'um, 'thool pakkoda' vum thaan!

"all fictions have a fact as their base upon which fictions are built" ...

one doubt?

thakkudu yen eppopaaththaalum thanna kozhanda kozhanda-nu sollikkaraar? infact kozhandaikalukku thaan periyavaaloda ngyanam jaasthinu ennoda thought! baby geniuses cinema-la varaapla! :D

sriram said...

அஞ்சு நாள் vacation போனதால லேட் ஆஜர்..
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தக்குடு said...

@ ஹரிணி - வாங்க மேடம்! நீங்க எவ்ளோ வேகம்னு ஏற்கனவே எனக்கு தெரியும் அதனால் ஆச்சர்யம் இல்லை...;))

@ மாதங்கி - படிச்சு பாருங்கோ மேடம், ரொம்ப அழகா எழுதுவா எல்லாருமே,
//pattathellaam 'therattipaal'um, 'thool pakkoda' vum thaan//இந்தியா வரும் போது எனக்கு என்னவெல்லாம் யார்கையால எல்லாம் வேணுமோ அதை எல்லாம் இப்படி சொன்னாதானே உண்டு!...;)
//kozhanda-nu sollikkaraar?//தக்குடு எப்போதுமே எடுப்பார் கை குழந்தைதான்...;)

@ பாஸ்டன் நாட்டாமை - வாங்க நாட்டாமை! நீங்க வந்தாதான் திருப்தியா இருக்கு!!...:)

egglesscooking said...

Romba thanks (mookaiya a.k.a mokka) pandi. Sorry romba lata vandhutten. Ippa dhaan konjam konjama veetula settle aayindirukku. Thodar kadhai sema speedla pogudhu polairukku? I'll come back to that in leisure.

தக்குடு said...

thks maduram akka!....:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)