புதுசா வந்திருக்கேளா? நோ ப்ராப்ளம் இதோ Part 1 உங்களுக்காக..;)
அங்க இருந்த பெரிய மணியை டைண்! டைண்!னு யாரோ அடிச்சா, இசை வந்த திசை பார்த்து திரும்பினேன். அங்க பார்த்தா அழகான கேடயத்துல ஸ்வாமியையும் தாயாரையும் வச்சு எழப்பண்ணி கொண்டுவந்துண்டு இருந்தா!னு வரதாச்சாரி சொன்னார்.
அப்பா! கேடயம்னா என்னது? என்ன விஷேஷம் அன்னிக்கு?னு வரதாச்சாரி முடிக்கர்துக்குள்ள நம்ப வைஷூ சந்தேகம் கேட்டுது.
லவ்ஸ்டோரிக்கு நடுல இதெல்லாம் உங்களாலதான் சொல்லமுடியும்!னு விஜி மாமி பெருமைபட்டுக்கொண்டாள்.
இருடி கோந்தை! அவசரபடாம கேக்கனும், எனக்கும் ஸ்வாமியை எதுக்கு எழபண்ணறானு தெரியாததால வேற வழி இல்லாம ஒரு மாமிட்ட கேட்டேன்!னு வரதாச்சாரி தொடர்ந்தார்.
அன்னிக்குதான் வசந்தோத்ஸவம்!னு அந்த மாமி சொன்னா. உன்னோட கேடயம் கேள்விக்கு பதில் சொல்லறேன் மொதல்ல. கேடயம்ங்கர்து ஸ்வாமியை எழப்பண்ணர்துக்கு உபயோகபடுத்தர ஒரு குட்டி சப்பரம் மாதிரி, விஸ்தாரமா எல்லாம் எடம் இருக்காது. ஸ்வாமியும் தாயாரும் மட்டும்தான் அதுல அமர்த்த முடியும்.
அப்போ! திருப்பதி பெருமாள் வாகனம் மாதிரி 4 ஐயங்கார் மாமா எல்லாம் சைடுல உக்காரமுடியாது இல்லையா?னு வைஷு தொடர்ந்தாள்.
ஆமாம், அப்புறம் அந்த கேடயத்தை நன்னா ‘ஜிங்கு’னு இருக்கும் 6 பேர்தான் தூக்கிண்டு வருவா. வஸந்தோத்ஸவம் 10 நாள் நடக்கும். பத்து நாளும் ஸ்வாமிக்கு ஹாலிடே மாதிரிதான். உற்சவர் தாயார் ஸஹிதமா வசந்த மண்டபத்துலதான் சேவைசாதிப்பார். ஸ்வர்ணகவசம்,வெள்ளிகவசம் எல்லாம் போட்டுக்க மாட்டார். இப்போ இருக்கும் கம்பெனிகளோட வெள்ளிக்கிழமை காஷுவல் ட்ரெஸ் மாதிரி ரொம்ப சிம்பிளா இருப்பார். இதை பத்தி திருப்பாவைல கூட ஆண்டாள் சொல்லிரிருக்காளே தெரியுமா நோக்கு?னு வைஷுவை கேட்டார் வரதாச்சாரி.
எந்த பாசுரத்துல வருதுப்பா?னு அவசரமா கேட்டாள் வைஷ்ணவி.
'ஓங்கி உலகளந்த உத்தமன் bare body!'நு வருது பாத்தியா!னு சொல்லிட்டு விஜி மாமியை பார்த்து கண்ணை சிமிட்டினார் மாமா.
இந்த வக்கில்களே இப்படித்தான்! எதாவது சாதுர்யமா சொல்லி நம்மை சொக்கவச்சுருவா!னு தன்னை அறியாமல் மாமாவை பற்றி விஜிமாமி உருகினாள்.
அப்பா! இப்போ தெரியர்து! நம்ப கோமளா மாமியை எப்பிடி கைபிடிச்சேள்னு! என்று வைஷு கொக்கரித்தாள்.
அதுமட்டும் இல்லாம நித்யம் திருமஞ்சன கைங்கர்யம் ஸ்வாமிக்கு ஆனதுக்கு அப்பரம் ஒரு உருண்டை சைஸ் உள்ள நன்னா அறைச்ச சந்தனத்தை குளுர்ச்சிக்காக ஸ்வாமியோட திருமார்புள சாத்திடுவா!னு வரதாச்சாரி தொடர்ந்தார்.
பெருமாளோட ஹ்ருதயகமலத்துலதான் குளுர்ச்சியே உருவான மஹாலெக்ஷ்மி தாயார் இருக்காளேப்பா! அதை விடவா அந்த சந்தனம் குளுர்ச்சியை தரபோர்து பெருமாளுக்கு!னு ஸ்ரீவத்சன் கேள்வி கேட்டு தான் வரதாச்சாரி பரம்பரை என்பதை நிரூபித்தான்.
சரிதான்டா கோந்தை! அந்த சந்தனம் அடுத்த நாள் காத்தால மண்டகப்படிகாராளுக்கு பிரசாதமா குடுப்பா,பெருமாள் & தாயாரோட பிரஸாதமா அதை அவாளும் ஆசையோட ஸ்வீகரிச்சுப்பா!னு வரதாச்சாரி சொன்னார்.
சாயங்காலம்தான் ரொம்ப நன்னா இருக்கும். வஸந்த மண்டபத்துக்கு எதிர்ல இருக்கும் ஒரு தோட்டம் மாதிரியான ப்ருந்தாவனத்தை ஸ்வாமி தாயார் சகிதமா 10 தடவை சுத்தி வருவார். முதல் இரண்டு தடவை ஸ்வாமி பிரதக்ஷிணம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் பிரபந்த கோஷ்டிகாரா ஸ்வாமிக்கு பிரபந்தம் சாதிச்சு சந்தோஷபடுவா. திருனெல்வேலி வேதமும் சங்கீதமும் நன்னா தழச்சு இருக்கும் ஊர் அதனால அடுத்த 2 பிரதக்ஷிணம் கழிஞ்சு வேதபாராயணமும்,பஜனையும்,ஒரு பாட்டும்,சங்கனாதமும் அதை தொடர்ந்து கடோசில நாதஸ்வரத்துல ஒரு ராகத்தோட முடியும்.
னு சொல்லிட்டு வரதாச்சாரி மேலும் தொடர்ந்தார்.
இந்த உத்ஸவத்துக்கு நடுவுல சம்பந்தமே இல்லாத ஒரு முகத்தை நான் பார்த்தேன். அந்த பொண்ணோட மூக்கை பாத்தோனையே அது ஸ்ரீரங்கத்து தேவதைனு எனக்கு புரிஞ்சுடுத்து!னு பொடி வச்சார் மாமா.
மூக்கை பார்த்து எப்பிடி நாம முடிவு பண்ணமுடியும்!னு வைஷு கேட்டாள்.
ஈஸியா பண்ணளாம்டி கோந்தை! ஸாமுத்ரிகா லக்ஷணவிஷேஷப்படி மூக்கையும் முழியையும் வச்சே அவா எப்பிடிபட்டவானு சொல்லிடலாம், அதுலையும் நம்ப ஐயங்கார்கள்ல மூக்கை வச்சே அவா எந்த ஊர் ஐயங்கார்னு சொல்லிடலாம்!னு பெரிய ஆராச்சியாளர் மாதிரி மாமா அள்ளிவிட்டார்.
ஸ்ரீரங்கத்துகாராளுக்கு மூக்கு எப்பிடி இருக்கும்?னு விஜி மாமி எதோ சம்பூர்ணராமாயணம் மண்டோதரி மாதிரி மாமாட்ட கேட்டாள்.
ஸ்ரீரங்கத்து பொண்களுக்கு மூக்கு நன்னா தீர்க்கமா இருக்கும், நான்குனேரி பக்கமா இருந்தா கொஞ்சம் மூக்கு சின்னதா இருக்கும், திருக்கணங்குடி பொண்களா இருந்தா அவாளோட மூக்கு பளபளப்பா இருக்கும், திருக்கோஷ்டியூர் பொண்களுக்கு மூக்கு நார்மலா இருக்கும்!னு மாமா டேட்டாபேஸ்லேந்து எடுத்து விட்டார்.
அப்பா, நீங்க அட்வகேட்டா இல்லைனா ENT specialistஆ!னு ஸ்ரீவத்சன் நக்கல் அடித்தான்.
இதெல்லாம் ஜென்ரல்னாலேட்ஜ்ரா கண்ணா! இவ்ளோ தெரிஞ்சுருந்தாலும் மனசுல விகல்பம் கிடையாதுடா கோந்தை!னு சொன்னார் வரதாச்சாரி.
சரி சரி! அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?னு வைஷூ கரெக்டா பாய்ன்டை பிடிச்சா.
இந்தகாலத்து பொண்கள் மாதிரி கண்ணுக்கு தெரியாத இல்லைனா பாம்பு/பல்லி பொட்டு எல்லாம் வச்சுக்காம அழகா எல்லாரும் ஸ்ரீசூர்ணம் இட்டுண்டு இருப்பா, அந்த பொண்ணும் அழகா மஹாலக்ஷ்மியாட்டம் ஸ்ரீசூர்ணத்தோட பளிச்னு இருந்தா. கல்யாணம் ஆகலைங்கர்துக்கு அடையாளமா ஸ்ரீசூர்ணம் சின்னதா இருந்தது.
பெருமாளுக்கு அந்த பக்கம் வந்துண்டு இருந்தா அந்த பொண்ணு, எனக்கு திருப்பி பாக்கனும்னு ஆவல் எல்லாம் ஒன்னும் இல்லாட்டாலும், எங்கையோ பாத்த மாதிரி இருந்ததால 2 -3 தடவை பாத்தேன்! மாமா சமாளிச்சார்.
அப்போ 20-30 தடவை பாத்துருக்கேள்னு அர்த்தம் இல்லையாப்பா?னு ஸ்ரீவத்சன் சிரிச்சுண்டே தொடர்ந்தான்.
இதுக்கு நடுல பெருமாள் குறுக்க குறுக்க வந்து அந்த பொண்ணை மறைச்சுண்டே இருந்தார். வேற யாராவதா இருந்தா, செத்தே தள்ளிக்கோங்கோ!னு விலக்கி விடலாம், பெருமாளை என்ன பண்ணமுடியும்?னு நான் யோசிசுண்டு இருக்கும்போது ஒரு மாமா என்னோட கைல ஒரு வெண்சாமரத்தை குடுத்து, ‘ஸ்வாமிக்கு வீசிண்டே வாடா அம்பி!’னு சொல்லி அந்த பொண்ணுக்கு பக்கத்துல ஒரு இடத்தையும் காட்டினார். அந்த மாமா என்னோட கண்ணுக்கு பெருமாளாவே தெரிஞ்சார். ‘பெருமாள்!! யூ ஆர் ரியலி கிரேட்!’னு பெருமாளை சிலாகிச்சுண்டு (அந்த பொண்ணை பாத்துண்டே)சாமரமும் வீசிண்டு வந்தேன்!னு மாமா விவரித்தார்.
சாமரம் பெருமாளுக்கு போட்டேளா? இல்லைனா பெருமாளுக்கும் போட்டேளா?னு வைஷுகுட்டி மாமாவின் வாயை பிடிங்கினாள்.
இப்படியே ஒரு வாரமா நித்யம் சாமர கைங்கர்யம் பண்ணின்டே நாச்சியாரையும் பாத்துண்டே இருந்தேன். ஆனால் அந்த பொண்ணு என்னை பாத்ததாவே தெரியலை!னு மாமா குறைபட்டுக்கொண்டார்.
அச்சச்சோ! அப்ப அந்த பொம்ணாட்டி ஒரு தடவை கூட உங்களை திரும்பி பாக்கலையாப்பா?னு வைஷு வருத்தப்பட்டாள்.
அவளுக்கு அன்பே வா! எம்ஜியார் பிடிக்காதோ என்னவோ?னு விஜி மாமி சமயம் பாத்து காலைவாரினாள்.
போடி அசடு! இந்த பொம்ணாட்டிகள் நம்பளை எதேசையா கூட பாக்காத மாதிரி காட்டிண்டானா நம்மை மட்டும்தான் கவனிச்சுண்டு வரானு அர்த்தம்!னு வரதாச்சாரி உற்சாகமா தொடர்ந்தார். இந்த வரதாச்சாரியோட யூகம் சோடை போகலை, ஒரு நாள் மெதுவா என்னை பாத்து ரேஷன் basis-ல சிரிச்சா!னு தனது வெற்றியின் முதல் அறிகுறியை விவரித்தார் மாமா.
7-வது நாள் உத்ஸவத்து அன்னிக்கு சாயங்காலம்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது...........(தொடரும்)
(குறிப்பு - வார்த்தைகள் எதுவும் புரியலைனா கமண்ட்ல வந்து கேளுங்கோ தக்குடு அல்லது தெரிஞ்ச யாராவது உங்களுக்கு பதில் சொல்லுவா சரியா!!..;) )
49 comments:
ஐ தி ஃபர்ஸ்டு!!!
ஸ்ரீரங்கத்து பொண்களுக்கு மூக்கு நன்னா தீர்க்கமா இருக்கும், நான்குனேரி பக்கமா இருந்தா கொஞ்சம் மூக்கு சின்னதா இருக்கும், திருக்கணங்குடி பொண்களா இருந்தா அவாளோட மூக்கு பளபளப்பா இருக்கும், திருக்கோஷ்டியூர் பொண்களுக்கு மூக்கு நார்மலா இருக்கும்!னு மாமா டேட்டாபேஸ்லேந்து எடுத்து விட்டார்.
அப்பா, நீங்க அட்வகேட்டா இல்லைனா ENT specialistஆ!னு ஸ்ரீவத்சன் நக்கல் அடித்தான்.
இதெல்லாம் ஜென்ரல்னாலேட்ஜ்ரா கண்ணா! இவ்ளோ தெரிஞ்சுருந்தாலும் மனசுல விகல்பம் கிடையாதுடா கோந்தை!னு சொன்னார் வரதாசாரி.
....... இதுக்கு தனியா வேற டிகிரி கொடுக்கிறாங்களா? ஹா,ஹா,ஹா,ஹா...
ne account splista illa ENT specialista
//ஒரு உருண்டை சைஸ் //
ஏம்ப்பா..தக்குடு இப்படியும் ஒரு சைஸா?????????????
//சாமரம் பெருமாளுக்கு போட்டேளா? இல்லைனா பெருமாளுக்கும் போட்டேளா?// வைஷு பயங்கர சூட்டிகை! வித்தியாசமான லவ் ஸ்டோரி! அதுவும் அந்த மூக்கு சமாச்சரங்களை யாராவது மாமா மாமிக்கள் வேலிடேட் பண்ணுங்கோ கேட்டேளா?
யாருகிட்ட கேக்கறது ?? கீதா மாமி காணாம போய்ட்டாங்க ? சூரி மாமா இவன் சொல்றது சரின்னு சொல்லுவர்.
// இந்த பொம்ணாட்டிகள் நம்பளை எதேசையா கூட பாக்காத மாதிரி காட்டிண்டானா நம்மை மட்டும்தான் கவனிச்சுண்டு வரானு அர்த்தம்//
ஓ இப்படி வேற ஒன்னு இருக்கா தெரியாம போச்சே
Perumall varnanaiya vida maamigal pathi varnanai thaan romba irukku. Thakkuduvukku maamigal na romba pidikkumnu ninaikkiren
போன பதிவளவுக்கு ஹாஸ்யம் இல்லையே?....ஏதும் டிவி சீரியலுக்கு அனுப்பற எண்ணம் இருக்கோ? :-)...அப்படியாக இருப்பின் அழுகையை ஆரம்பிச்சுடுங்க...அப்பதான் கதை சீரியலுக்கு ஏற்கப்படும். :-)
//Perumall varnanaiya vida maamigal pathi varnanai thaan romba irukku.//
சுந்தரண்ணா, என்னதிது பெருமாள் வர்ணனை எல்லாம் தேடறீங்க?.... :-)
Enna Thakkudu interview la un HR sister ah paathathila irunthu oru maathiri athaan irukka,,,inga ore varnanai kavithaigal thool parakkuthe...
ம்ம்ம்ம் ஆயிரம் நுவான்ஸஸ் இருக்கும் போல இருக்கே!
அம்பி.... சத்யா அக்கா சொல்கிறதை நோட் இட் யுவர் ஆனர்!
//நீங்க அட்வகேட்டா இல்லைனா ENT specialistஆ!//கரெக்டாக தான் சொல்லியிருக்க ஸ்ரீ..
//இதுக்கு நடுல பெருமாள் குறுக்க குறுக்க வந்து அந்த பொண்ணை மறைச்சுண்டே இருந்தார். வேற யாராவதா இருந்தா, செத்தே தள்ளிக்கோங்கோ!னு விலக்கி விடலாம், பெருமாளை என்ன பண்ணமுடியும்?//இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லை...
ஆனாலும் சில சமயம் தோன தான் செய்யும்...என்னத செய்ய...
மிகவும் அழகாக உற்சவத்தினை பற்றி எழுதி இருக்கின்றிங்க...சூப்பப்ர்..
வாழ்த்துகள்...அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்து கொண்டுஇருக்கின்றேன்...
Nice space you have,first time here... Post is very interesting and humorous,nicely written :)
//பெருமாளோட ஹ்ருதயகமலத்துலதான் குளுர்ச்சியே உருவான மஹாலெக்ஷ்மி தாயார் இருக்காளேப்பா! அதை விடவா அந்த சந்தனம் குளுர்ச்சியை தரபோர்து பெருமாளுக்கு!னு//
அதானே!
//ஸ்ரீரங்கத்து பொண்களுக்கு மூக்கு நன்னா தீர்க்கமா இருக்கும், நான்குனேரி பக்கமா இருந்தா கொஞ்சம் மூக்கு சின்னதா இருக்கும், திருக்கணங்குடி பொண்களா இருந்தா அவாளோட மூக்கு பளபளப்பா இருக்கும், திருக்கோஷ்டியூர் பொண்களுக்கு மூக்கு நார்மலா இருக்கும்!னு மாமா டேட்டாபேஸ்லேந்து எடுத்து விட்டார்//
அடப்பாவி! இந்த சின்ன வயசில் இம்புட்டு பெரீய்ய டேட்டாபேஸா?? அது சரி... :)))
//ஸ்ரீரங்கத்து பொண்களுக்கு மூக்கு நன்னா தீர்க்கமா இருக்கும், நான்குனேரி பக்கமா இருந்தா கொஞ்சம் மூக்கு சின்னதா இருக்கும், திருக்கணங்குடி பொண்களா இருந்தா அவாளோட மூக்கு பளபளப்பா இருக்கும், திருக்கோஷ்டியூர் பொண்களுக்கு மூக்கு நார்மலா இருக்கும்!னு மாமா டேட்டாபேஸ்லேந்து எடுத்து விட்டார்.//
தகடு, இது உன்னோட டேட்டாபேஸ்ல இருந்து தான் வந்திருக்கும்னு எங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா இதை எல்லாம் அந்த மூணு பேர் படிக்கலைங்கிற தைரியத்துல தான் எழுதிறேன்னு யாருக்கும் தெரியாது... கவலைப்படாதே... சீக்கிரம் விவாஹப்ப்ராப்தி ரஸ்து (கூடிய சீக்கிரம் ஊருக்கு போய் பிட்ட போட்டு வைக்கிறேன்)...
//தக்குடு அல்லது தெரிஞ்ச யாராவது உங்களுக்கு பதில் சொல்லுவா சரியா//
தக்குடுவுக்கே இதுல பாதி தெரியாது... அதனால, கீதா பாட்டி, அனன்யா ஆண்டி, அடப்பாவி தங்கமணி, பாஸ்டன் நாட்டாமை எல்லாம் வந்து அவர்களுக்கு தெரிந்த பிட்டை போடுவாங்கன்னு சொல்லிட்டு தப்பிச்சுகிட்டியே கண்ணா... ஆனா பொற்கேடி மட்டும் கொஞ்ச நாளா உன்னோட பதிவு பக்கம் வரதில்லைன்னு நினைக்கிறேன்... வந்தால் கச்சேரி இன்னும் சிறப்பா களைகட்டும்...
http://3.bp.blogspot.com/_YXhBd2jSUy8/S-00fsQtM9I/AAAAAAAADBM/OG9-QsRpTQU/s1600/fly.gif
subbu thatha
tkp,
Quite a pleasant read(Light and happy to read). Very well written. That's the advantage we get in writing a story. If the same is made into serial, none is going to notice the nuances. Right ?
ENT, Nose samacaharam, Perumalu-kkkum veesinadu, vaganathula 4 per ukandukka mudiyadu, pambu pottu --- all are wonderful touches. Thoughtful!!!!
Let see what you have got for the next part ;)
Great Job!!!
Dear Thakkudu, yeppada neenga post pooduvelnu kaathundu iruntheen. That 'bare body' vishayam andal read panninaaley 'kiluk'nu siruchuduvaa, very nice. Mookku sambanthama yevloo vishayam therinjurukku ungalukku??..:)) still i am laughing.That temple function, appadiyee perumal kooda naangalum move pannara maathiriyee irukku. Nice one again..:)
Ranjani Iyer
Thakkudu,
Funny post as usual, Nice to read and laugh thinking every moments.
Intha post unga usual style la fun kalanthu ezhuthi irukkel! Very nicely written! :)
//That temple function, appadiyee perumal kooda naangalum move pannara maathiriyee irukku.//
Very true! apparam englishla comment potathukku mannikkavum yenna ennoda browserla some problem~ :)
ஆஜர்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கோந்தே...நன்னா கதை எழுத வர்றது..வாஷிங்டன்னில் திருமணம் படிச்ச த்ருப்தி கிடைக்கறது...மூக்குல மட்டுமே இவ்ளோவா??..!! Phd பண்ணலாம் போல இருக்கே... இது வாரத் தொடரா..? மறக்காம mail notificationஅனுப்பிடு பா..கதை படிச்சு ரொம்ப நாள் ஆறது...
Enjoyed it to the core :)
//போடி அசடு! இந்த பொம்ணாட்டிகள் நம்பளை எதேசையா கூட பாக்காத மாதிரி காட்டிண்டானா நம்மை மட்டும்தான் கவனிச்சுண்டு வரானு அர்த்தம்!//
மீனாட்சி பாட்டி.: ' ஏன்னா !! நேத்து ராத்திரி தூக்கத்துலே அப்படி உளர்றேள் !! ஏதாவது கெட்ட கனாவா ??"
சுப்பு தாத்தா: "தெரியலையே ! அந்த தக்குடு ப்ளாக்கை படிச்சுட்டு தூங்கினேனா !!அதே நினைப்புலே இருந்துட்டேன் போல இருக்கு.
ஐம்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் அப்படியே கனவுலே வ்ரது."
மீனாட்சி பாட்டி: எனக்கு நன்னாவே புரியறது. அந்த தக்குடுவை இத படிக்கச்சொல்லுங்கோ:
http://anmikam4dumbme.blogspot.com/2010/04/30.html
//Intha post unga usual style la fun kalanthu ezhuthi irukkel! Very nicely written! :)// correctu harini, naanum sollanumnu nenachundu irunthen, but santhoshathula maranthu poyduthu..:)'Thakkudu is back'nu label kudukkalaam..:)
Ranjani Iyer
//ஸ்ரீரங்கத்து பொண்களுக்கு மூக்கு நன்னா தீர்க்கமா இருக்கும், நான்குனேரி பக்கமா இருந்தா கொஞ்சம் மூக்கு சின்னதா இருக்கும், திருக்கணங்குடி பொண்களா இருந்தா அவாளோட மூக்கு பளபளப்பா இருக்கும், திருக்கோஷ்டியூர் பொண்களுக்கு மூக்கு நார்மலா இருக்கும்!னு மாமா டேட்டாபேஸ்லேந்து எடுத்து விட்டார்//
அடப்பாவி! இந்த சின்ன வயசில் இம்புட்டு பெரீய்ய டேட்டாபேஸா?? அது சரி... :)))
May 21, 2010 6:26 AM
L.K.said
//யாருகிட்ட கேக்கறது ?? கீதா மாமி காணாம போய்ட்டாங்க ? சூரி மாமா இவன் சொல்றது சரின்னு சொல்லுவர்//
தக்குடு அறிவில் சொக்கிடு=இல்லயேல்
மக்கு நீ என்பதை புரிந்திடு.
அடடா !! ஒரு அம்பத்தஞ்சு வருசம் முன்னாடி நீ ( தக்குடு)
புறந்திருக்கக்கூடாதோ ! உங்கிட்ட ட்ரைனிங் எடுத்துண்டப்பறம்
நான் பொண் பார்க்க ஆரம்பிச்சிருப்பேனே !!
சுப்பு தாத்தா.
//நான் பொண் பார்க்க ஆரம்பிச்சிருப்பேனே !!/
hahaha
தொடருங்க.. சீக்கிரமே..
haha enjoyed the post very much.so much impressed by ur tamil writing.Great job. very humourous too
உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும்
http://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_24.html
srirangaththu pengalikku mookku dheergamaa irukkum nu naan notice panninathey illaye! ippa yoshchu paakkarecchey neenga solrathu correct-nu thaan thonarathu!
sampoorna ramayanam mandothari upapanam- onnanglaas!
mega seriyal kanakka ipdi "annalum nokkinaar avalum nokkinaal'nu mudichchutteley.. aduththa thodachchi eppavo? aanaa sequence selection besh! vasanthothsavam sequence- romance-ku perfect fit! engooraairunthaa raappaththu veena ekaandam olikka.. background music-ukkum vasathiyaa irundurukkum!
enga oor vasanthothsavam gyabagam vanduduththu!
ennathaan unga oor perumaal casual dress la irunthaalum, enga ranganukku azhagaa, madhura kavi aazhvaar thottathlernthu thoduththu vantha oththa vaijeyanthi maala saaththiruppaa- athu onnuththeley avar jammunu minukkuvaar!
srirangaththu pengalukku mooku dheergamaa irumaannu naan gavanichchathey illaye? anna ippo yoshchu paakkarechchey neenga sonnathu serinnu thaan thonarathu!
sampoorna ramayanam mandotharu upamaanam- onnanglaas!
sequence selection perfect fit! vanthothsavam- very apt for romance...
enga ooraa irunthaa- raappaththu veena ekaantham olikka- background music-ukkum vazhi irunthurukkum!
//இசை வந்த திசைப் பார்த்து திரும்பினேன்,அங்கு பார்த்தா//(பாகம் 1)
//அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது//(பாகம் 2)
தொடர்கதைக்கு உள்ள விறு,விறுப்பு. அடுத்த வாரம் என்ன என்ற எதிர்பார்ப்பு, எல்லாம் நன்றாக இருக்கு.
மூக்கு ஆராய்ச்சி சூப்பர்..
Thakkudu koncham bc weekendla athan padika mudiyala. Ippo padichen. Unmaiya sollava, poi sollava? Unmaiye solrene.....nalla iruku aana superbnu solrathuku ille. Antha HR story mathiri oru involvement varamatenguthu padikumbothu. Onnu neenga ezhuthanume, publish pannanumengara aarvathula sareya time illathapo vegama ezhuthi irukanum. Aana romba nalla effort. Unga ageku intha alavu varnanaiyoda ezhuthrathu kashtamthan. Naan ore varthaila supernu soletu poidalam. Enaku athunala varaporathu onnum ille :). Aana nijama comment pannanumna mela sonnathuthan correct. Kadhaiya padikumbothu nama onri poidanum athu ithula nijama ille. Ungaluke irukangrathu santhegamthan enaku :). But continue ur good work. Ella padaipume supera irukrathu ille. Aana HR story mathiri silathu arumaiya amaiyum. Just do not stop writing. Continue it. You will reach heights. Take care thambudu :)
ஹா ஹா ஆராய்ச்சி செய்து சூப்பரா எழுதிருக்கிங்க....
@ அனன்யா அக்கா - :))
@ சித்ரா அக்கா - இதெல்லாம் நமளாதெரிஞ்சுக்கர விஷயம் அக்கா...;)
@ LK - :))
@ துளசி ரீச்சர் - :))
@ அனன்யா - ஆமாப்பா, யாராவது சரிபாத்து சொல்லுங்கோ!..:)
@ LK- //ஓ இப்படி வேற ஒன்னு இருக்கா தெரியாம போச்சே//தெரியாத மாதிரியே நீங்க நடிச்சா உங்க தங்கமணி நம்பிடுவாங்களா??..:)
@ பரவஸ்து அண்ணா - //Perumall varnanaiya vida maamigal pathi varnanai thaan romba irukku// அதான் பரவஸ்துவான பெருமாள் பூலோக வஸ்துவை மறைக்கர்துக்கு முயற்சி பண்ணரார், ஆனா மனுஷனோட மாயா அகந்தை அது பின்னாடியே போகர்து....:) (அப்பாடி! இனிமே இவர் எதுவும் கேக்க மாட்டார்)
@ ம'பதி அண்ணா - அதானே!!..;)
@ சத்யா அக்கா - இது வரதாச்சாரி மாமாவோட கவிதை, தக்குடுவோடுது இல்லை...;)
@ திவா அண்ணா - :)))
@ கீதா அக்கா - ரொம்ப சந்தோஷம்பா!!..;)
@ RAKS கிச்சன் - வருகைக்கு நன்னிஹை!!,,;)
@ கவினயா அக்கா - அக்கா அது வரதாச்சாரி மாமாவோட டேட்டாபேஸ்...;)
@ வித்யாசமான கடவுள் - :)) கரெக்டுப்பா..;((
@ சூரி சார் - :))
@ VGr - ரொம்ப தாங்க்ஸ் நண்பா! தங்களின் நேர்மையான கருத்துக்களுக்கு தக்குடுவின் நன்னி!!..;))
@ Ranjani iyer - ரொம்ப சந்தோஷம் ரஞ்ஜனி!!,,:) நீங்க மட்டும் தான் அந்த திருப்பாவை பாசுரத்தை ரசிச்சுருக்கேள், ஸ்பெஷல் தாங்க்ஸ் அதுக்கு..;)
@ சுவாதி - நன்னிஹை
@ ஹரிணி - நன்னிஹை!...;)) நீங்க எதுல வேணும்னாலும் கமண்டலாம்..;)
@ பாஸ்டன் அண்ணா - வந்து ஒரு அடென்டென்சை போட்டு பாசக்கார அண்ணா எங்க பாஸ்டன் அன்ணா!னு நிரூபிச்சுட்டேள். உங்களோட கமண்ட்தான் என்னை திருத்திக்கொள்ள உதவியது. என்னிக்கும் நீங்கதான் எங்க நாட்டாமை...;)
@ செளம்யா அக்கா - நிச்சயமா வரும் கவலையை விடுங்கோ! நம்ப ஊர் அக்காவுக்கு ஒரு கலர் உடைச்சு கொண்டுவாங்கப்பா!!..;)
@ சூரி சார் - ;)) தக்குடு அல்ரெடி அந்த ப்ளாக் படிசுண்டு இருக்கு!!..;)
@ ரஞ்ஜனி - சந்தோஷம்பா!!..;)
@ சூரி சார் - ஹா ஹா ஹா..;)
@ சுசி - நன்னிஹை!
@ ஜெய்ஷ்ரி அக்கா - ரொம்ப சந்தோஷம் அக்கா, ஆனா போட்டோல நீங்க சிரிக்க மாட்டெங்கறேளே??..:)
@ LK - விருதுக்கு நன்னிஹை!!
@ மாதங்கி மாவேலி - நீங்க சொன்னா கரெக்டாதான் இருக்கும்..;)) வருகைக்கு நன்னிஹை!
@ கோமதி - ரொம்ப சந்தோஷம்பா!!..;) கருதுக்கு நன்னிஹை!!..;)
@ அமுதா அக்கா - அட நம்ப டீச்சர்!..;))
@ Life is beautiful - உங்க கமண்ட் also very beautiful..;) உங்க கருத்தை நானும் முழு மனதுடன் ஏற்கிறேன். சமையல் மாதிரி சில சமயம்தான் நமக்கு வாய்க்கும்!!,,:) எழுத்து தேர்வு ரியல் லைப் நிகழ்ச்சி அதனால ஒரு வேளை சுவாரசியம் ஜாஸ்தியா இருந்திருக்கலாம். உங்களோட கமண்டை பாஸ்டன் சாரோடுது மாதிரியே சீரியசா எடுத்துண்டு சுவாரசியத்தை அதிகரிக்க முயற்சிக்கரேன் அக்கா!..;)தொடர்ந்து வந்து ரசிக்க வேண்டும்
@ மேனகா - வாங்க மேடம்! நன்னிஹை!!,,;)
//எந்த பாசுரத்துல வருதுப்பா?னு அவசரமா கேட்டாள் வைஷ்ணவி//
அட அட... இந்து வைஷு சரியான நச்சு நச்சு போல இருக்கே... கதை சொல்ல விடாம சும்மா கேள்வி கேட்டுண்டு... (தக்குடு நோ டென்ஷன் ப்ளீஸ்)
//'ஓங்கி உலகளந்த உத்தமன் bare body!'நு வருது பாத்தியா!னு//
முடியலைடா சாமி...இதை பாடின புண்ணியவதி மறுபிறவி எடுத்து வந்து உம்மாச்சி கண்ண குத்த தான் போறது... வெயிட் அண்ட் சி
//LK Said - ne account splista illa ENT specialista//
நூத்துல ஒரு கேள்வி...இல்ல இல்ல ஆயிரத்துல ஒரு கேள்வி....
இந்த database எல்லாம் பலமாத்தான் இருக்கு.... சத்தியமா சொல்றேன் மூக்கை பத்தி இப்படி ஒரு database நான் கேட்டதில்ல... ஏன்? இந்த உலகமே கேட்டு இருகாதுரா சாமி.....
(குறிப்பு - வார்த்தைகள் எதுவும் புரியலைனா கமண்ட்ல வந்து கேளுங்கோ தக்குடு அல்லது தெரிஞ்ச யாராவது உங்களுக்கு பதில் சொல்லுவா சரியா!!..;) )
இது வேறயா... கேக்காமயே எக்கசக்க detail , இதுல கேட்டுட்டு நாங்க ஆத்துக்கு போவேணாமா Brother
மத்தபடி கதை flow ரெம்ப நல்லா இருக்கு... அதுலயும் அந்த பெருமாள் சப்பர வர்ணனை ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்.... (தக்குடு பேசினபடி நான் கமெண்ட் போட்டுட்டேன்... அக்கௌன்ட்ல deposit ஆச்சா...உடனே தெரிய படுத்தவும்...LOL ....)
@ அடப்பாவி அக்கா - வைஷுவை ஒன்னும் சொல்லாதீங்கோ!!..:))
ஆயிரம் டாலர் உங்க அக்கவுண்டுக்கு அனுப்பி இருக்கேன் (பாங்க் ஆப் புருடா செக்)..:))
@ தலைவன் - வருகைக்கு நன்னிஹை!!,,:)
மூக்கு பளப்பளான்னு இருந்தா அதற்கு வெள்ளி மூக்கு குதிரை......மீனிங்.....கழுதை:)ன்னு பேரு.
இப்படிக்கு ஒரு திருக்குறுங்குடி:)
கதை அமர்க்களமாப் போகிறது. இப்படியெல்லாம் எழுத அம்பியின் தம்பிக்கு யார் வகுப்பெடுத்தான்னு தெரியலையே. இது எங்கியோ நடந்தமாதிரியே எனக்குத் தோணுகிறது. அப்புறமா விஜியும் கோமளமும் கும்பகோணத்துப் பெயர் இல்லையோ:) க்ரேட்கோயிங் தக்குடு!
@ valli amma - ha ha ha...;) neenga sonna correctaathaan irukkum..:)
//இப்படியெல்லாம் எழுத அம்பியின் தம்பிக்கு யார் வகுப்பெடுத்தான்னு தெரியலையே// yellam savakasha visheshamthaan...;)
//இது எங்கியோ நடந்தமாதிரியே எனக்குத் தோணுகிறது// ohoo!!..:)
//அப்புறமா விஜியும் கோமளமும் கும்பகோணத்துப் பெயர் இல்லையோ:) க்ரேட்கோயிங் தக்குடு!// hmm, thks amma..:)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)