Friday, May 14, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும்

திருவல்லிக்கேணியின் அழகான ஒரு தெருவில் இருக்கும் அந்த வீட்டின் கதவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் ஸ்வாமி கோதை நாச்சியார் சகிதமாக சிரித்த முகத்துடன் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார். அதை தாண்டி உள்ளே வருபவர்களுக்கு ஸ்ரீரங்கத்து ரெங்கனாதரும் தாயார் சகிதமாக ஹாலில் காட்சியளித்துக்கொண்டிருந்தார். இன்று அந்த வீட்டின் நிலைவாசலில் மாவிலை தோரணங்கள் பொலிவோடு காட்சி அளித்தது. வீட்டின் மூத்த வரதாச்சாரி மாமா பூஜை ரூமில் சாலிக்கிராம பூஜையை பூர்த்தி பண்ணிட்டு சக்கரத்தாழ்வார் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருந்தார். இனிமே உள்ள விஷயம் முழுவதும் நாம அவாத்துக்கே போய் பாக்கலாம்.

சரக்! சரக்!னு சத்தம் போடும் புது பட்டுப்புடவையை(ரெங்காசாரியில் வாங்கினது) அழகான ஐயங்கார்கட்டு கட்டிண்டு வந்த கோமளவல்லி மாமியை அவாத்து கடை குட்டி வைஷ்ணவி வழிமறித்தாள்.
யே கோமளா!கல்யாணப்பொண்ணு மாதிரி இருக்கைபோ! நோக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆச்சு!னு சொன்னா ஒருத்தரும் நம்ப மாட்டா! ஆனா கோமளா, பட்டுப்புடவையை விட உனக்கு கோராகாட்டந்தான் நன்னா இருக்கும்.
(வெட்கம் கலந்த குரலில்) போறுமே! அம்மாவை பேர் சொல்லி கூப்டதோடு இல்லாம ஜாதகப் பேரை சொல்லி கூப்பட்ரையா!!னு கோமளா மாமி பொய் கோவம் கொண்டாள். மாமிக்கு விஜி!னு கூப்டாதான் பிடிக்கும் கோமளா!னு அவாத்து மாமா மட்டும் தான் கூப்பட்லாம்.
டே வத்ஸூ! இங்க வந்து பாருடா நம்பாத்து கல்யாணப்பொண்ணை!னு வைஷூ ஹால்லேந்து கத்தினாள்.
அழகா ஸ்ரீவத்ஸன்னு இருக்கர உங்க அண்ணா பேரை எதோ கல்யாண பந்தில வெண்பொங்கலை களத்துல போட்டுண்டு 'மாமா கொஞ்சம் கொத்ஸு!'னு கூப்பட்ரமாதிரி கூப்பட்ரீயேடி கழுத!!னு விஜி மாமி செல்லமா கோவப்பட்டாள். இதுக்கு நடுவில் பூஜையை முடிக்கப்போறார்ங்கர்துக்கு அடையாளமா குஞ்சு ஆஞ்சனேயரை கைபிடியாக கொண்ட கைமணியை அடித்தார் அவாத்து மாமா. மொத்த குடும்பமும் கர்பூரஹாரத்தி பாக்கர்துக்கு பூஜை ரூம் முன்னாடி ஆஜர் ஆனது. விஜி மாமி 10 நிமிஷம் முன்னாடியே நன்னா மணக்க பச்சக்கர்பூரம் எல்லாம் போட்டு திருக்கண்ணமுது நிவைத்யத்தை ஒரு வெள்ளி பாத்ரத்தில் விட்டு இலை கிழிசலால் மூடி ரெங்கனாதர் படம் பக்கத்துல வச்சுட்டா. 'ராஜாதி ராஜாய' நீராஜன மந்த்ரம் முழங்க கர்ப்பூர ஹாரத்தியும் அதை தொடர்ந்து பல்லாண்டும் சாதிச்சார் மாமா.

ஹாரத்தியை எல்லாரும் ஒத்திண்டதுக்கு அப்பரம் ஸ்வாமி சேவிச்சுட்டு, அப்பரம் விஜி மாமி மாமாவை சேவிச்சா, யே பட்டூ!(சந்தோஷமான சில தருணங்களில் இப்படியும் கூப்டுவார்)வருஷத்துல இந்த ஒரு நாள்தாண்டி நீ பெரிய 'பதிவ்ரதா சிரோண்மணி' மாதிரி நேக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணரை!னு மாமியோட வாயை கிண்டினார்.
போறும்! போறும்! கல்யாணம் ஆன பொண்ணையும், ஆகப்போற புள்ளையாண்டானையும் வச்சுண்டு பேசர பேச்சா இது?னு நமஸ்காரம் பண்ணி எழுந்திருச்சுண்டே பதில் சொன்னாள். வரதாச்சாரியோட குடும்பத்துல ஒளிவு மறைவே கிடையாது, எல்லாருமே ஆத்துக்குள்ள பிரண்ட்ஸ் மாதிரிதான் பேசிப்பா, வைஷ்ணவியோட ஆத்துக்காரர் ரெங்கபாஷ்யம் அமெரிக்கால பாஸ்டன் சிட்டியில் சாப்ட்வேர்ல வேலை பார்க்கும் சாப்டான ஒரு பையன். குட்டி ரெங்கபாஷ்யம் இன்னும் 3 மாசத்துல வெளில வந்துடுவார்ங்கர்துனால வைஷூ அம்மாவாத்துக்கு வந்துருக்கா.
அப்பா! அப்பா! உங்களோட ஓல்ட் லவ்ஸ்டோரியை ஒரு தடவை சொல்லுங்கோளேன்!னு வைஷூ ஆரம்பிக்க, ஸ்ரீவத்சனும் ஜோதியில் ஐக்யமானான். உங்களுக்கு வேற வேலையா இல்லையா?னு சிணுங்கிக்கொண்டே சுவாரசியமாகவும் ஹாஸ்யமாகவும் இட்டுக்கட்டி அழகாக கதை சொல்லும் அவாளோட ஆம்படையானோட லவ் ஸ்டோரியை கேக்கர்துக்கு விஜி மாமியும் தயாரானாள்.

ரவிசந்திரன்,பாலையா, நாகேஷ் நடிச்ச ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்கு அப்பரமா அவாத்து மாமா சொல்லும் அந்த ஓல்ட் லவ்ஸ்டோரிதான் ரொம்ப பிடிக்கும்.
ஹஹம்ம்!னு தொண்டையை சரி பண்ணிண்டு மாமா தன்னோட ஓல்ட் லவ்ஸ்டோரியை சொல்ல ஆரம்பிச்சார்.
அப்போ நான் அன்பே வா! எம்ஜியார் மாதிரி இருப்பேன் பாக்கர்துக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ல பி.ஏ, பி.ல் பண்ணிட்டு நெல்லை ஜங்கஷன்ல இருந்த சீனியர் கிரிமினல் லாயரான என்னோட தாயதிக்காரர் ஸ்ரீ முஷ்னம் நரசிம்மமூர்த்தி மாமாட்ட அஸிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணின்டு இருந்தேன். அவரோட பேருதான் எதோ மிருதங்கவித்வான் மாதிரி இருக்கே தவிர மஹாகெட்டிக்காரர்.சனிக்கிழமை தோறும் அங்க இருக்கும் ஜங்ஷன் வரதராஜபெருமாள் கோவிலுக்கு போவேன், பக்தியெல்லாம் ஒன்னும் கிடையாது, சனிக்கிழமை காத்தால அந்த ஸ்வாமிக்கு இலுப்பசட்டி தோசை வார்த்து நிவைத்யேம் பண்ணுவா, அங்க மட்டும்தான் அது உண்டு. திருனெல்வேலில இருக்கர்துனாலையோ என்னவோ அங்க இருக்கர ஸ்வாமிக்கு கூட நாக்கு 4 முழம். இப்படியே எல்லா சனிக்கிழமையும் தவறாம போய் அங்க இருக்கர ஸ்வாமீட்ட நல்ல பேரு வந்ததோ இல்லையோ, நிறையா மாமிகளுக்கு என்னை பிடிச்சு போச்சு! (விஜி மாமி முகத்தை வெட்டிக்கொண்டாள்).
ம்ம்ம்! அப்பரம் என்ன ஆச்சு?னு வைஷூ ஆர்வமா அவசரபடுத்தினா .
கதை சொல்றவாளுக்கு பெரிய பூஸ்டே அதை கேக்கரவா ஊமையாட்டம் இருக்காம கரக்டா இடைவெளி விட்டு ம்ம்ம்!சொல்லனும்(ப்ளாகா இருந்தா, ஒழுங்கா கமண்ட் போடனும்..:)), அதை வைஷூ கணகச்சிதமா செய்வாள்.

பட்டூ! கொஞ்சம் தேர்த்தம் கொண்டுவாமா!னு வரதாச்சாரி சொல்லிமுடிக்கர்துக்குள்ள குதிரை உசரத்துக்கு இருக்கும் ஒரு டம்ப்ளர் நிறைய தேர்த்தம் அவருடைய கையில் இருந்தது.க்ஹா!னு அதை குடிச்சுட்டு பாகவதர் மாதிரி கதையை தொடர்ந்தார்.
இப்படியே போய்ண்டிருந்த போது , ஒரு சனி கிழமை நரசு மாமாவாத்து மாமி கோவிலுக்கு வந்துட்டா! மாமிகள் பட்டாளத்துக்கு நடுல அங்க நான் பேசிண்டு இருந்ததையும் சிரிச்சுண்டே பாத்துட்டு போய்ட்டா, எனக்கு கொஞ்சம் பயம், மாமி ஒரு வேளை நம்மை பத்தி தப்பா எடுத்துண்டுருவாளோ?னு. ஆனா அந்த மாமிக்கு தங்கமான மனசு, அவாளே இரண்டு நாள்ல(மாமா இல்லாதபோது) அதை பத்தி பேச்சை ஆரம்பிச்சா.
கோந்தை வரதா! கோவில்ல நோக்கு பெரிய ரசிகைகள் பட்டாளமே இருக்கு போலருக்கு?(குசும்புக்கார வைஷு இப்போ அம்மாவோட முகத்தை பாத்தது). வரதா! சும்மா கல்யாணம் ஆன வயசான மாமிகள்ட பேசிண்டு இருந்தா ஒரு பிரயோஜனமும் கிடையாதுடா கோந்தை!னு ரொம்ப சாதாரணமா ஒரு பெரிய உண்மையை எனக்கு எங்க மாமி சொன்னா. அப்போதான் எனக்கு புரிஞ்சது, அட மூளை கெட்ட வரதா! எவ்ளோ நாளை பாழாக்கி இருக்கைடா!னு எனக்கு நானே சொல்லிண்டேன். அடுத்த சனிக்கிழமை வரதராஜர் கோவிலுக்கு போன போது மாமிகள் யார்டையும் ரொம்ப நேரம் எல்லாம் பேசலை, திடீர்னு தீபாராதனைக்காக அங்க இருந்த பெரிய மணியை டைண்! டைண்!னு யாரோ அடிச்சா, இசை வந்த திசை பார்த்து திரும்பினேன். அங்க பார்த்தா.............
(தொடரும்)

குறிப்பு - முதல் தடவை கதை முயற்சி பண்ணியிருக்கேன். அதனால குத்தம் எல்லாம் சொல்லக்கூடாது. கதை எழுதர்து எவ்ளோ கஷ்டமா இருக்கு! (த்ரில்லர் கதை எழுதின நம்ப கழக போர்வாள் 'சியாட்டில் சிங்காரி'க்கு சிலைதான் வைக்கனும். அடப்பாவி தங்ஸ்சையும் சேர்த்துதான். நம்ப ஹரிணி மேடம் கதையும் சூப்பரா இருந்தது.). கதை கேட்டவா எல்லாரும் ஒழுங்கு மரியாதையா வந்து கமண்ட் பொட்டில ம்ம்ம்!கொட்டிட்டு போங்கோ! இல்லைனா ராத்ரி ஸ்வப்னத்துல பெருமாள் வந்து சத்தம் போடுவார்...:)

69 comments:

Ananya Mahadevan said...

// ராகவா! சும்மா கல்யாணம் ஆன வயசான மாமிகள்ட பேசிண்டு இருந்தா ஒரு பிரயோஜனமும் கிடையாதுடா கோந்தை!னு ரொம்ப சாதாரணமா ஒரு பெரிய உண்மையை எனக்கு எங்க மாமி சொன்னா// இந்த டயலாக் எங்கியோ கேட்டாப்புல இருக்கே? சுய சரிதையெல்லாம் கதைங்கற பேர்ல எழுதிட்டா எங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னு நீ நினைச்சுண்டு இருக்கே? ஹய்யோ ஹய்யோ.

ஆயில்யன் said...

//திருனெல்வேலில இருக்கர்துனாலையோ என்னவோ அங்க இருக்கர ஸ்வாமிக்கு கூட நாக்கு 4 முழம்.//


:)))))))))))))))))))

கதை முயற்சியா கலக்குங்க பட் அப்பப்பா கதைக்கு நடுவில சந்தேகம் கேப்போம் பதில் ச்சொல்ல்ணும் :)

திவாண்ணா said...

ஏன்பா, நல்லாதானே இருந்தே? தோம் தகிக்கினதாம் ந்னு சொன்னப்பவே ஏதோ ஆயிடுத்துன்னு நினைச்சேன். மாட்டிண்டயா? பாவம். ஹும் விதி யாரை விட்டது. எழுது எழுது...

Raghav said...

வெயிட்டிங் ஃபார் புளியோதரை :).. இதயம் நல்லெண்ணெய்ல செஞ்சு தாங்கோ.. பேஷா இருக்கும்,.

SathyaSridhar said...

Hmmm hmmm yeppa ennama kathai ezhutirukkel muzhusum padichu mudichapram ore thookam thookama varuthu,,,nalla kathaa kalekshepam panittel...nalla maami maama puliyodarai poengo..

Vatsu kothsu nalla irukkae paa,,,

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீவில்லிபுத்தூர்ல ஆரம்பிச்சு, திருநெல்வேலிக்குப்
போய் இப்ப திருவல்லிக் கேணில கதா காலட்சேபமா. நல்லாவே இருக்கு,. தக்குடு
நிறைய விஷயங்களும் கிடைக்கிறது.
உ-ம் கோவில்ல கலயாணமாகாத காளைகள் மாமிகளோட பேசுவாங்கற விஷயம்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

கல்லிடை குறுச்சின்னாலே கதைவிடரது தெரிஞ்ச விஷ்யம்தானே. கதைலே பொருட் குற்றம் இருக்கலாம் ஆனா சொற்குற்றம் இருக்கக்கூடாது தக்குடு பாத்து எழுது.ஆரம்பம் அழகா இருக்கு. ம்ம்ம்ம் பார்க்கலாம்......வந்தாச்சு இன்னும் பங்காளியைக்காணோமே.என்னைச் சொன்னேன்

Raghav said...

//அங்க இருந்த பெரிய மணியை டைண்! டைண்!னு யாரோ அடிச்சா, இசை வந்த திசை பார்த்து திரும்பினேன். அங்க பார்த்தா.............//

அங்கதான் என் தங்கமணி.. அதாவது தங்கம் மாதிரி தகதகன்னு எனக்கு தங்கமணி ஆகப்போறவ நின்னுண்டுருந்தா.

Dr.N.Kannan said...

ரொம்ப நாளச்சு இப்படியொரு ethnic கதை கேட்டு. வலைப்பதிவு முழுவதும் துளசி கமழும் வாசனை. முன்னெல்லாம் தி.ஜானகிராமன், லா.ச.ரா எழுதிண்டிருந்தார். இப்ப எல்லாம் பொதுத்தமிழுக்கு மாறியாச்சு. இந்த வட்டார (ஜாதீய) வழக்கே இல்லாமோப் போயிடுமோன்னு பயம் வரச்சே, அம்பியாண்டான் வந்துருக்கான். நன்னா இருக்கு. மணியடிச்சது உன் கண்மணிதானே? யூகிக்க முடியறது! இல்ல, அது மாமியார்ன்னா கதை விவகாரமாகப் போகுதுன்னு அர்த்தம் :-))

துளசி கோபால் said...

ம் ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எங்காத்லே புளியோதரையை 'டைகர் பாம்'னு சொல்வா என் பொண்ணு. தச்சு பாம் & டைகர் பாம்.:-)))))

மதுரையம்பதி said...

//திருனெல்வேலில இருக்கர்துனாலையோ என்னவோ அங்க இருக்கர ஸ்வாமிக்கு கூட நாக்கு 4 முழம். //

உண்மை விளம்பியாகிட்டீங்களே தக்குடு !!!

திராச சார் கமெண்டையும் ஒத்துக்கோங்க...

மற்றபடி கதை அருமையா போறது...பேஷ், பேஷ்..:)

GEETHA ACHAL said...

நல்லா எழுதி கொண்டு இருக்கின்றிங்க...சூப்பர்ப்...வாழ்த்துகள்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கல் ஆரம்பம்.... நடத்துங்க நடத்துங்க...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஒரு சந்தேகம்... அந்த வைஷுவும் இந்த வைஷுவும் ஒண்ணா... இல்ல வேற வேறயா? ஒண்ணும் இல்ல... சும்மா கேட்டேன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அது சரி... புளியோதரையும் தச்சு மம்முவும் எல்லாம் எங்க? (நாங்க அப்பவியாக்கும்....)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அனன்யா சொன்னாப்ல கதைங்கற பேர்ல சுய சரிதை என்னத்துக்கு... என்னோட கதைனே சொல்லி இருக்கலாம்

vgr said...

ada paavi!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

mightymaverick said...
This comment has been removed by the author.
mightymaverick said...

@ அம்பி கண்ணா... தம்பி வைஷு,வைஷூன்னு நிறைய புலம்பறாண்டா... யாரு அந்த வைஷூன்னு விசாரி (திருவல்லிக்கேணியில இருக்காதா வேற சொல்லி இருக்கான் - தங்கமணி வீட்டுல சொல்லி விசாரிக்க சொல்லு...) அடுத்த சுபமுஹூர்த்தத்திலையே கல்யாணத்தை முடிச்சுடலாம்...

@திராச சார் - நானும் ஒரு வகையில பங்காளி தான்... வந்துட்டோமுல்ல... கவலைய விடுங்க... அழகா பத்த வச்சுடுவோம்...

Madhuram said...

Kadhai ezhudha aarambichirukkira muyarchikku ennoda vaazhthukkal.

Ennoda honest opinion ennenna, if this story of yours is the very first thing I'm reading in your blog I would be very much impressed. Aaana unnoda matha post ellam padichu romba romba rasichu (vizhundhu vizhundhu sirichadhala) idhula edho missing madhiri irukku. Kanakku, ezhuthu thervu, thiratti paal la irundha comedy style miss panren indha post la.

Maybe all those were personal experiences so comedy konjam thookala irundhadho ennavo and this being a story the characters have their own characteristics. I'm so glad that you are trying out other things as well. All the best.

Geetha Sambasivam said...

//ரொம்ப நாளச்சு இப்படியொரு ethnic கதை கேட்டு. வலைப்பதிவு முழுவதும் துளசி கமழும் வாசனை. முன்னெல்லாம் தி.ஜானகிராமன், லா.ச.ரா எழுதிண்டிருந்தார். இப்ப எல்லாம் பொதுத்தமிழுக்கு மாறியாச்சு. இந்த வட்டார (ஜாதீய) வழக்கே இல்லாமோப் போயிடுமோன்னு பயம் வரச்சே, அம்பியாண்டான் வந்துருக்கான். //
நன்னா இருக்கு//

சரியாப் போச்சு கண்ணன் சார், எங்கே பிடிச்சான் தக்குடு உங்களை??


@தக்குடு, க்ர்ர்ர்ர்ர்ர்ர் தக்குடு, என்னமோ பேத்திட்டுப் பெருமை வேறேயா உனக்கு?? சகிக்கலை கதை. தொடரும் போட்டிருக்கையா, பார்க்கலாம், கேட்டியா!

Geetha Sambasivam said...

தொடர

Geetha Sambasivam said...

ரெங்காச்சாரியில் வாங்கினது பட்டு???

ரங்காச்சாரியில் காட்டனே சகிக்காது, சாயம் போய்ப் பல்லை இளிக்கும், பட்டு வேறேயா?? நச், நச், நச்!!!!!!

Harini Nagarajan said...

கொஞ்சம் தூங்கிட்டேன்! நல்லா இருக்கு ஆனா உங்களோட usual காமெடி missing. first time ezhutharel illaya so muzhu kathayum padichuttu yennoda karuththa solren! :)


//ரங்காச்சாரியில் காட்டனே சகிக்காது, சாயம் போய்ப் பல்லை இளிக்கும், பட்டு வேறேயா?? நச், நச், நச்!!!!!! // well said! :)

Harini Nagarajan said...

solla maranthutten thanks en kathaiku marketing panninathukku! :)

Nithu Bala said...

Kathai superb ba irukku..nalla muyarchi..vazhthukal..

vgr said...

tkp,

viji mami viji mami nu padikave oru pazhasum pudusum kalanda kalavai ya iruku :)

'Vatsu, Godhsu' --- Fantastic piece. Very well thought.

Vaishanvi oda athukarar - America nu ezhudinadu pizhayo? Middle east illayo?

Mushnam Narasimhamoorthy - mridanga vidvan - funny!

Story solra grip iruku ungalta. So very good job done!! Keep up the good work dude.

vgr

Kavinaya said...

ராத்திரி ஸ்வப்னத்துல அப்படியேனும் பெருமாள் வரட்டுமேன்னு இருந்தேன். அதுக்கு முன்னாடி சாட்ல வேற ஒரு மிரட்டல் வந்திருச்சு. அதான் பயந்து போய் கமெண்டறேனாக்கும்! :)

//ஒரு சந்தேகம்... அந்த வைஷுவும் இந்த வைஷுவும் ஒண்ணா... இல்ல வேற வேறயா? ஒண்ணும் இல்ல... சும்மா கேட்டேன்//

எனக்கும் இதே சந்தேகம்தான்! :)

Balaji said...

Ellam Nanna Iruku...Aana Viji maamiku Varadachaari Maaama thaan nanna irukkum...ragavachariya vida....;) I hope u will understand....

sriram said...
This comment has been removed by the author.
Geetha Sambasivam said...

யப்பாடி, உண்மையை உரக்கச் சொன்ன பாஸ்டன் ஸ்ரீராமுக்கு ஒரு வாழ்க! எல்லாரும் போடுங்கப்பா வாழ்க!

துளசி கோபால் said...

என்ன கீதா......
யூ...........டூ

கதை, சிறுகதை எல்லாம் எழுத ஃபார்முலா இருக்கா என்ன?

'அவருக்கு எழுதத் தெரிஞ்சது சொன்னார். அவர் பாணியில் எழுதறவங்கதான் கடைப்பிடிக்கணும்.'

இதென்ன சமையலா? கடுகு வெடிச்சதுக்குப்பிறகு மற்ற மசாலாக்களைச் சேர்க்கணும் என்பதுக்கு.....

போங்கப்பா.

அவுங்கவுங்களுக்கு வர்றதுபோல எழுதவேண்டியதுதான். சுவாரசியமாப் போகுதான்னு பார்த்துக்கணும்.

பாஸ்டன் ஸ்ரீராம்,

இது ஜஸ்ட் என்னோட ரெண்டு செண்ட்ஸ் . நாம் 'அவர்' இல்லை.

'ஒரே ஒரு அவர்தான். அவர், அவர்தான்'. நாம் நாம்தான்.

Geetha Sambasivam said...

யூ டூ எல்லாம் இல்லை துளசி, கதைனு எழுதும்போதே அதைப் படிக்கணும்னு ஒரு ஆவல் தன்னாலே வரணும் இல்லையா??மற்றபடி தக்குடுவின் முதல் முயற்சியைக் குறை கூறும் எண்ணமெல்லாம் இல்லை. யாரானும் ஒருத்தராவது சொல்றாங்களானு பார்த்தேன், பாஸ்டன் சொல்லவும், அம்பத்தூரும் அதே தான்னு சொல்லியாச்சு. என்னோட கருத்து படிச்சதுமே அதுதான். எல்லாரும் பாராட்டறச்சே நாம மட்டும் எப்படினு எழுதக் கொஞ்சம் யோசனையா இருந்தது. அவ்வளவே!

தக்குடு said...

@ அனன்யா அக்கா - நீங்க ஒரு கல்யாணம் ஆன very old ஆண்டி என்பதால் உங்க கண்ணுக்கு கரெக்டா அது பட்டுருக்கு போலருக்கு!!...:)))

@ ஆயில்யன் - கேட்கக்கூடாது!னு சொன்னா மட்டும் நீர் கேட்காமையா இருக்கப் போரீர்?...:))

@ திவா அண்ணா - //விதி யாரை விட்டது.//அதை சொல்லுங்கோ!!..:)

@ ராகவ் - வாங்கோ ராகவ், புளியோதரை வாசனை சுண்டி இழுத்துருக்குமே??..:)

@ சத்யா அக்கா - ரொம்ப சந்தோஷம்பா!!

@ வல்லியம்மா - வாங்கோ வல்லியம்மா, நீங்கதான் கதையோட மொழி வழக்கு சரியா போகுதா?னு பாத்து சொல்லனும். //கலயாணமாகாத காளைகள் மாமிகளோட பேசுவாங்கற விஷயம்//லோகஷேமார்த்தமான பேச்சு அது!...;)

@ TRC மாமா - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!!

@ ராகவ் - அவசரப்படாதீங்கோ! தீபாராதனைக்கு முன்னாடி புளியோதரை பிரசாதம் கிடைக்காது...;)

@ கண்ணன் - வாங்கோ சார், நான் முயற்சிதான் பண்ணறேன், இது முழுமையானதா இருக்காதுனு எனக்கும் தெரியும் இருந்தாலும் தங்களின் ஆசிக்கு நன்றி!

@ துளசி ரீச்சர் - :))))

@ ம'பதி அண்ணா - சந்தோஷமா இருக்குமே இப்போ??..:))

@ கீதா அக்கா - ரொம்ப சந்தோஷம்பா!

@ அடப்பாவி தங்க்ஸ் - ஆரம்பத்துலேயே புரளியை கிளப்பாதீங்கோ அக்கா!!..:))

@ VGr - Ha ha ha! LOL

@ வித்யாசமான கடவுள் - நீங்க நம்ப செட்டு, அது ஞாபகத்துல இருக்கட்டும்!!..:)

@ மதுரம் அக்கா- அக்கா, கண்ணை கட்டுது, எப்பிடி இப்பிடி எல்லாம் கமண்ட் போட உங்களால முடியுது?? கவலையே படாதீங்கோ கதை கத்ரிக்கா எல்லாம் நமக்கு கொஞ்சம் கஷ்டம்தான். வெகு விரைவில் அடியேனோட டோமைனுக்கு வந்துடுவேன்..;)thks a lot for your sincere comment.

@ கீதா பாட்டி - //சரியாப் போச்சு கண்ணன் சார், எங்கே பிடிச்சான் தக்குடு உங்களை// வயத்தெரிச்சலா இருந்தா ஒரு டம்ப்ளர் சால் பானை ஜலம் குடிங்கோ!!..:P
//சகிக்கலை கதை.// எங்க நீங்க கதை உங்களுக்கு புடிச்சுருக்கு!னு சொல்லிடுவேளோனு பயந்துன்டு இருந்தேன். உங்களுக்கு பிடிச்சு இருந்தா அது சரியான மொக்கை(உங்க போஸ்ட் மாதிரி)னு அர்த்தம். நல்ல வேளை காப்பாத்திட்டேள்...:)

என்னோட கதைல வர விஜி மாமிக்கு ரெங்காச்சாரில வாங்கின சாரிதான் பிடிக்கும்.

@ஹரிணி - தங்களின் கருத்துக்கு நன்னிஹை!!

@ நிது பாலா - நன்னிஹை!!

தக்குடு said...

@VGr - தங்களின் நேர்மையான கருத்துக்கள் மற்றும் பாராட்டுக்களுக்கு நன்னிஹை!! ஓஹோ!!..:))

@ கவினயா அக்கா - வில்லங்கமான சந்தேகமானா இருக்கு!!..:)

@ பாலாஜி - நீங்க நான் நினைக்கும் பாலாஜிதான்னு நம்பறேன், கதை ஆரம்பிக்கர்துக்குள்ள சொல்லியிருக்ககூடாதா?? 10 தடவை நான் கேட்டேன்...;)

@ பாஸ்டன் நாட்டாமை - ரொம்ப சந்தோஷம் நாட்டாமை!,,:) உயர்மதிப்பிற்குரிய சுஜாதா அவர்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஆனால் அதற்காக நீங்க எழுதர்து வாஷிங்டன்னில் திருமணம் மாதிரியே இருக்கு, இதை/அதை மாதிரியே இருக்கு!னு சொல்வதை நான் விரும்பவில்லை. அதுக்கு நேரடியா அவரோட கதையவே நாம படிக்கலாமே? எத்தனை அல்வா கடை உலகத்துல திறந்தாலும் இருட்டு லாலா கடை ஒன்னுதான். அது மாதிரி அவர் அவர்தான்.
எங்களை மாதிரி கத்துகுட்டிகள் கதை எல்லாம் படிச்சோனே பிடிக்காது, படிக்க படிக்கதான் பிடிக்கும்!..:)நீங்க சொன்ன + & - இரண்டையும் அடியேன் சமமாகவே பாவிக்கிறேன்.

@ கீதா பாட்டி - உங்களை பார்த்தா சிப்பு சிப்பா வருது...;)

@ துளசி டீச்சர் - தங்கள் கருத்துக்கு நன்னி! ..:)

@ கீதா பாட்டி - //எழுதும்போதே அதைப் படிக்கணும்னு ஒரு ஆவல் தன்னாலே வரணும் இல்லையா// நோ கமண்ட்ஸ் & LOL:)
//குறை கூறும் எண்ணமெல்லாம் இல்லை//குறைகளே உங்க கண்ணுக்குதான் தெரியாதே!! இல்லையா பாட்டி?..:)

sriram said...
This comment has been removed by the author.
தக்குடு said...

@ பாஸ்டன் அண்ணா - ரைட்டு நாட்டாமை, இனிமே எழுதும் போது இது எல்லாத்தையும் மனசுல வச்சுண்டு எழுதர்துக்கு முயற்சி பண்ணறேன்.
//ஊதற சங்கை ஊதிட்டேன், எடுத்துக்கறதும் விடறதும் உங்க இஷ்டம்.
இனிமே இது பத்தி கருத்து சொல்வதாக இல்லை// கழகத்து நாட்டாமை அப்படிங்கற பொறுப்பு உங்களுக்கு இருக்கர்துனால கழகத்து ஆட்களுக்கு நீங்கதான் நல்லபுத்தி சொல்லணும், இதுக்கே சலிச்சுண்டா எப்பிடி??..:)

//வாஷிங்டனில் திருமணம் எழுதினது சாவி, சுஜாதா அல்ல//பாத்திங்களா? தக்குடுவுக்கு அது கூட தெரியலை...:(

என்றும் வம்புடன்,
தக்குடு

vgr said...
This comment has been removed by the author.
Anonymous said...

Hello Thakkudu,ippothaan unga storyai read panninen. I won't bother about others comment, but unga touch roomba konjama irukku..:( i knw kadhai sollumpoothu ungalooda kurumbuthanaam niraiyaa incld pannamudiyaathu. Mr.Boston sonnathula irukkum nalla points yellam yeduthukkongo! and plesssss unga stylelayee yeluthungo! for that only we are all coming and enjoying.

one of your fan,
Ranjani Iyer

Geetha Sambasivam said...

@தக்குடு, கூடவே இன்னொண்ணும், வாஷிங்டனின் திருமணம் ஆநந்த விகடனில் வந்தது அறுபதுகளின் ஆரம்பத்திலே, அப்போ சுஜாதா எழுதவே ஆரம்பிக்கலை கேட்டியா??? :P:P:P:P:P பின்னாலே அறுபதுகளின் கடைசியில் கணையாழி பத்திரிகையில் தான் கடைசிப்பக்கங்கள் மூலம் பிரபலம் ஆனார். ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்ற பெயரில் எழுதினார். சுஜாதா என்ற பெயரில் ஆங்காங்கே ஒன்றிரண்டு சிறுகதைகள் விகடன், குமுதம், கல்கி போன்றவற்றில் வந்தன.

ஜீனோ said...

தக்குடு அண்ணே,கதை நன்னாருக்கு..சீக்ரமா புளியோதரையும் தச்சு மம்முவும் நைவேத்யம் பண்ணிட்டு தாங்கோ! :)

Ananya Mahadevan said...

எனக்கு கமெண்ட்ஸ் ஒண்ணுமே புரியலை! ஸ்ரீராம் அண்ணா என்னமோ வில்லங்கமா எழுதி இருக்காரோ? ஏன் எல்லா கமெண்ட்டையும் டிலீட் பண்ணி இருக்கார்?

//ரங்காச்சாரியில் காட்டனே பல்லிளிக்கும்!// ஹ்ஹீஹீ! சூப்பர்..

@தக்குடு,
ஆராக்கும் அந்த வைஷு? இப்போவே தெளிவு படுத்தியூடு.

என்னை வெரி ஓல்டு ஆண்ட்டின்னு சொன்ன உன்னை வன்மையா கண்டிக்கிறேன்.
இதுக்கு முன்னாடி போட்ட கமெண்டுக்கு அப்புறம் நான் கமெண்ட்டே போடுறதில்லைன்னு இதன் மூலமா தெரிவிச்சுக்கறேன். :P

எங்கே உன் மற்ற அபிமானிகள்? ஐ மீன் சுப்புத்தாத்தா & மீனாட்சி பாட்டி, நீங்கள் ரெண்டு பேரும் எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும்!
மத்தவா எல்லாரும் குடுத்த காசுக்கு நன்னாவே பின்னூட்டம் போட்டு இருக்கா.. பேஷ் பேஷ்!
:)))))
கீத்தா மாமி எது சொல்லி இருந்தாலும் அதை நான் அப்படியே (படிச்சாலும் படிக்காட்டியும்) ஆமோதிக்கறேன்.. ஜெய் ஜெய் மாத்தா ! :)))

Geetha Sambasivam said...

//@ அனன்யா அக்கா - நீங்க ஒரு கல்யாணம் ஆன very old ஆண்டி என்பதால் உங்க கண்ணுக்கு கரெக்டா அது பட்டுருக்கு போலருக்கு!!...:)))//

அநன்யா அக்காவை வெரி ஓல்ட் ஆண்டினு சொன்ன தக்குடுவை வன்மையாகக் கண்டிப்பதோடு இன்னிலேருந்து தக்குடு அங்கிள்னு கூப்பிடப் போறேன்னும் தெரிவிச்சுக்கறேன். :P


//கீத்தா மாமி எது சொல்லி இருந்தாலும் அதை நான் அப்படியே (படிச்சாலும் படிக்காட்டியும்) ஆமோதிக்கறேன்.. ஜெய் ஜெய் மாத்தா ! :))) //

நன்னியோ நன்னி, நிஜமாவே சொல்றேன், மறந்து கூட ரங்காச்சாரியிலே எதுவும் வாங்கிடாதீங்க! நல்லாவே இருக்காது! சொந்த, நொந்த அநுபவம்! :(

துளசி கோபால் said...

அச்சச்சோ..... நான் ரங்காச்சாரியில் ரெண்டுமுறை வாங்கி இருக்கேன்.

காட்டன் புடவைகள்தான். நல்லாவே இருக்கு. அங்கே பூனை போட்ட & யானை போட்ட ரெண்டு சல்வார் கமீஸ் செட்டும் வாங்கினேன். நாட் பேட்.

Geetha Sambasivam said...

காட்டன் தான் நானும் வாங்கினேன், பத்து வருஷம் முன்னாடியே 800ரூக்கும், 1,000 ரூக்கும் வாங்கி, இரண்டே மாசத்தில் பல்லை இளி இளினு இளிச்சுடுத்து, அப்புறமா அந்தத் திசையிலே கூடப் படுக்கிறதில்லை.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, துளசி, இது நல்லா இருக்கே?? நானும் எஸ்கேஎம்மும் இப்படித் தான் எல்லாப் புடைவைகளையும் பத்தி அம்பியோட பதிவுகளிலே அலசி இருக்கோம், அது ஒரு காலம், இப்போ இங்கே நீங்க! வாங்க, வாங்க, தக்குடுவுக்கு என்ன?/ வாரம் ஒரு பதிவு தானே? மத்த நாள் சும்மாத்தானே கிடக்குது?? பேசிப்போம்! :))))))))))))))))

எல் கே said...

தக்குடு நல்ல முயற்சி ஆனால் இது உன் நடைக்கு சரி வருமான்னு தெரியலை

Chitra said...

வித்தியாசமான கதை. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

தக்குடு said...

@ Mr.Bஅண்ணா/அக்கா - பாஸ்டன் அண்ணா அப்படியெல்லாம் கிடையாது, எங்களுக்கு எல்லாம் மிகவும் பிடித்தமான ஒரு மனிதர். தக்குடு மேல உள்ள பிரியத்துலதான் அவர் சொல்லியிருக்கார்.உங்களோட ஆசிகளுக்கு நன்னிஹை!

@ ரஞ்ஜனி - தங்கள் கருத்துக்கு நன்னிஹை!

@ VGr - நீங்க உங்க கருத்தை சொல்லியிருக்கேள், இனிமே //Every Tom, Dick// பதிலா தக்குடுனு மாத்தி சொல்லுவா எல்லாரும்..:)

@ கீதா பாட்டி - //அறுபதுகளின் ஆரம்பத்திலே//அதாவது அப்போ உங்களுக்கு 45 வயசு இல்லையா??..:PP

@ ஜீனோ - முதல் வருகைக்கு நன்னிஹை!!

@ அனன்யா, கீதா பாட்டி & டீச்சர் - கருத்துக்கு நன்னிஹை!!

@ LK - vaangka delhi sir!!..:))

@ சித்ரா அக்கா - ரொம்ப சந்தோஷம் அக்கா!!

@ பாஸ்டன் அண்ணா - உங்க கமண்ட் எல்லாம் நீங்க டிலிட் பண்ணியிருக்க வேண்டாமே அண்ணா! ..:(i know about our real Bostan anna.

pudugaithendral said...

present sir, kathai saralama vanthiruku.

virutcham said...

திருநெல்வேலி என்றது ஊர் ஞாபகம் வந்திரிச்சு.
இசை வந்த திசையில் யார் ? மாமியா மாமியாரா ?

ரங்காச்சாரி காட்டன் - கீதா மாமி சொன்னது சரி. காட்டன் விஷயத்தில் ரங்காச்சாரி மட்டும் இல்லை பல கடைகள் பல்லு இளிக்குது.
யாராவது சாயம் போகாத காட்டன் எங்கே கிடைக்கும்னு சொல்லுங்கப்பா. நாயுடு ஹால் தேவலாம்.
.

http://www.virutcham.com

Geetha Sambasivam said...

விருட்சம், நல்ல காட்டன் வேணும்னா ஹாண்ட்லூம் ஹவுஸ், ரத்தன் பஜார் அல்லது தமிழ்நாட்டில் உள்ள எந்த கோ ஆப்டெக்ஸும் போகலாம், தரமான கைத்தறிச் சேலைகள், சாயமும் போகாது, வெளுத்தும் போகாது, நான் கியாஆஆஆஆஆஆஆரண்டி, பல வருஷ ஆராய்ச்சியாக்கும்!

இப்படிக்கு,
காட்டன்லேயே கொஞ்சம் வித்தியாசமாய் மாறினாலும் அதனால் அவஸ்தைப்படும் ஒரு அப்பாவி மனிஷி! :)))))))

Geetha Sambasivam said...

அடுத்து யாருப்பா வரீங்க?? புடைவைகள் பத்திப் பேசலாம்! சீக்கிரமா வாங்க, வெள்ளிக்கிழமை வரை தக்குடுவோட ப்ளாக் ஃப்ரீஈஈஈஈஈஈஈஈ

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கீதா சாம்பசிவம் said...
அடுத்து யாருப்பா வரீங்க?? புடைவைகள் பத்திப் பேசலாம்! சீக்கிரமா வாங்க, வெள்ளிக்கிழமை வரை தக்குடுவோட ப்ளாக் ஃப்ரீஈஈஈஈஈஈஈஈ//

புடவை பத்தி பேச நான் ரெடி மாமி. எங்க ஊரு பக்கம் (கோயம்புத்தூர்) நல்ல கடை பத்தி தெரிஞ்ச சொல்லுங்கோ.... (தக்குடு நம்மளை எல்லாம் ப்ளாக்ல இருந்து block பண்ண போறதா நம்ம தகுந்த வட்டார செய்தி....)

Geetha Sambasivam said...

வாங்க அப்"பாவி" தங்கமணி, கோவையிலே டவுன்ஹால் ரோடிலே ரெண்டு கடை இருக்குங்க. கடை பெயரெல்லாம் நினைப்பிலே இல்லை. அங்கே நெகமம் புடைவைகள் நல்லா இருக்கும், சென்னையிலே 1,500ரூக்கு விக்கிற நெகமம் புடைவையை அங்கே 700க்குள்ளே முடிக்கலாமுங்க! கூட்டிட்டுப் போனீங்கன்னா அடையாளம் தெரியும். சின்னதா வீடு மாதிரி இருக்குமுங்க வெளியே இருந்து பார்த்தாக்க! :))))))))))


தக்குடு, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Matangi Mawley said...

thillaana mohanaambal padaththula sikkil shanmugha sundaram naayanaththa vaasikka neruththinaapla neruththitteley ippadi! serial- thodarkatheyellaam enthaan ippadi pukkiya kattaththula vanthu neruththaraalo!

smaarthaalaa irunthaalum, iyengaar bhasha enakku romba pudikkum.. atha azhaka konduvanthirukkel! paer selection laamum romba klipthamaa irukku! Kudos!

madisaar podava kattindaa sarak sarak saththam varumgara observation romba pramaatham! en paatti gyabakam vanthuduththu!

nalla plot... thodarnthu padikkaraen.. keep writing!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கீதா மாமி... நெகமம் புடைவைகளா ...ரெம்ப நன்றி... ரெண்டாரை வருஷம் கழிச்சு வர்ற தீவாளிக்கி தான் ஊருக்கு போபோறேன்.... கண்டிப்பா போய் வாங்கிடறது தான் போங்க... (ஐயோ... தக்குடு என்னமோ வைரஸ் அனுப்பி blocking மீ.....)

ஷைலஜா said...

//அடுத்த சனிக்கிழமை வரதராஜர் கோவிலுக்கு போன போது மாமிகள் யார்டையும் ரொம்ப நேரம் எல்லாம் பேசலை, திடீர்னு தீபாராதனைக்காக அங்க இருந்த பெரிய மணியை டைண்! டைண்!னு யாரோ அடிச்சா, இசை வந்த திசை பார்த்து திரும்பினேன். அங்க பார்த்தா.............
(தொடரும்)
/////

மகாப்பெரிய நாவலாசிரியராவதற்கான அறிகுறில்லாம் தெரியறது கண்ஸ்! கலக்கு கலக்கு!

எல் கே said...

@thanks

rangsku ippave bill ready panrela

எல் கே said...

nan potta comment kanom

sury siva said...

// )வருஷத்துல இந்த ஒரு நாள்தாண்டி நீ பெரிய 'பதிவ்ரதா சிரோண்மணி' மாதிரி நேக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணரை!னு மாமியோட வாயை கிண்டினார். போறும்//

தக்குடு ஸார் !! ஸம்ஸ்க்ருதத்திலே ஒரு வசனம் சொல்லுவா !! உங்களுக்குத் தெரியுமோ இல்லயோ கீதா மாமி,
அனன்யா ஆன்டி, மற்றும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். எழுதிடுவேன். ஆனா பெரிசா சத்தம் போடுவா.
அது எல்லாருக்கும் தெரிஞ்சது தான். இருந்தாலும் புதுசு மாதிரி பிகு பண்ணிண்டு முறச்சுப்பா.
எங்க ஆத்து கிழவி மாதிரி,
எதுக்கு நம்மக்கு வம்பு எல்லாம் அப்படின்னு பெசாம இருந்தாலும், ஏன் இப்படி உம்முன்னு இருக்கேள் அப்படின்னு
திருப்பி திருப்பி சொல்லுவா.
அது சரி...அத வசனம் என்னன்னு சொல்லுங்கோ அப்பட்டிங்கறேளா...
சத்த இருங்கோ !1 எங்காத்து கிழவி அந்தப்பக்கம் போனப்பறம் எழுதறேன். இல்லேன்னா என்ன ஒண்ணு இல்லை
இரண்டு பண்ணிடுவா..

இப்ப சரி....எழுதட்டுமா...

அதுக்கு முன்னாடி,

//தக்குடு, என்னமோ பேத்திட்டுப் பெருமை வேறேயா உனக்கு?? சகிக்கலை கதை. //

கீதா மாமி சொல்றது எப்பவுமே கரெக்ட். த்ரிகால சத்யத்தை தானே அப்படியே புட்டு புட்டு வச்சுருக்கா.

தக்குடு புளியோதரை பத்தி எழுதட்டும். உப்புமா பத்தி எழுதட்டும். பால் கோவா பண்ணினதை பத்தி பீத்திக்கட்டும்.
பரவாயில்ல அப்படின்னு சொல்லிடலாம்.

இதே தக்குடு வோட பாஸ் தோஹா ஆத்துலே எங்களே கூப்பிட்டு கொழக்கட்டையும் புளியோதரையும் டின்னரா தந்தா.
அத சாப்பிட்டு பாக்கணும். அட டா !!

அது சரி.... அந்த ஸம்ஸ்க்ருத வசனம் என்னங்கறேளா !! அத அப்பறம் சொல்றேனே...

சுப்பு தாத்தா.

sury siva said...

//எங்கே உன் மற்ற அபிமானிகள்? ஐ மீன் சுப்புத்தாத்தா & மீனாட்சி பாட்டி, நீங்கள் ரெண்டு பேரும் எங்கே இருந்தாலும் மேடைக்கு வரவும்!
மத்தவா எல்லாரும் குடுத்த காசுக்கு நன்னாவே பின்னூட்டம் போட்டு இருக்கா.. பேஷ் பேஷ்! //

பின்னூட்டம் போடறதுக்கு காசு கொடுப்பாளா என்ன ? அது கூட தெரியாம நான் ஒரு எட்டு வருசமா
ஒரு ஐமபது பேரு பதிவுகளுக்கு அப்பப்ப பின்னூட்டம் போட்டிண்டு இருக்கேன்.

தக்குடு ஸார் !! நான் போட்ட அத்தன பின்னூட்டத்திற்கும் நூறு ரியால் வீதம் கணக்கு போட்டு அனுப்பிச்சுடுங்கோ !
டி. டி.எஸ் டிடக்ட் பண்ணிடுங்கோ. நான் ஐ.டி. அஸெசீ.

சுப்பு தாத்தா.

தக்குடு said...

@ புதுகை அக்கா - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!!

@ விருட்சம் - நீங்க நம்ப ஊர்காராங்களா?? வாங்கோ வாங்கோ!

@ கீதா பாட்டி & அடப்பாவி தங்க்ஸ் - :)))

@ மாதங்கி - ரொம்ப சந்தோஷம் அக்கா! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்னியோனன்னி!!

@ ஷைலஜா அக்கா - பெரியப் பெரிய ஆளுங்க எல்லாம் இந்த குட்டிகுழந்தையோட குடிசைக்கு வந்துருக்காங்க...;)

@ LK - :))

@ சூரி மாமா - சும்மா தைரியமா சொல்லுங்கோ மாமா! மீனாக்ஷி மாமியை நான் சமாளிச்சுக்கறேன்..:)
மொத்த ரியாலும் இங்க உங்க நாட்டுப்பொண்ணுட்ட குடுத்தாச்சு!...:)))

sury siva said...

//மொத்த ரியாலும் இங்க உங்க நாட்டுப்பொண்ணுட்ட குடுத்தாச்சு!...:))) //

மீனாட்சி பாட்டி.: இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா செஞ்சு, மாட்டுபொண்ணுக்கும் மாமியாருக்கும் இது சண்டை உண்டு பண்ணும்னு அன்னிக்கே நினச்சுண்டேன்.
அது யாரு ? கீதா மாமியா இல்லை அனன்யாவா ? ஞாபகமில்லை. இது
தக்குடி இல்லை. தற்குறி பாண்டின்னு எழுதியிருந்தா இல்லையா ?
உங்களுக்கு எதுவுமே எடுத்தவுடனே புரியாது. எனக்கு ஒரு உண்மை
தெரிஞ்சாகணும். அந்த 1400 ரியால் எனக்குத்தான் வந்து சேரணும்.
எதுக்கும் நம்ம ஃப்ரன்ட் அட்வகேட் அனன்யா கிட்டே சொல்லி ஒரு
வக்கீல் நோட்டீஸ் விடச்சொல்லுங்கோ !! மச மசன்னு உட்காராமா
நோட்டீஸ் விட்டோமா ! பணத்தை வாங்கினோமான்னு பாருங்கோ !!


சுப்பு தாத்தா: அசடு ! அசடு !! அதுக்கேல்லாம் தேவையில்லடி. நான்
தக்குடுவோட வரப்போற மாமனார்ட்ட பேசிட்டேன். "நீங்க கவலையே
படாதேங்கோ !! உங்களுக்கு வ்ரவேண்டிய பணத்தைக் கழிச்சுண்டு,
மிச்சத்தை தான் நிச்சய தார்த்த தட்டிலே வக்கப்போறேன்னு சொல்லிட்டா !! "

மீனாட்சி பாட்டி: ஏன்னா ! அந்த 1400 ரியால்னா, கிட்டத்தட்ட ஒரு 18000 ரூபாய்
வர்றதா !! அந்த ஜரிகை போட்ட பட்டு புடவை ரங்காச்சாரிலே என்னவா
கண்ண கூசறது !! பள் பளன்னு. பளிச்சுன்னு அதக்க்ட்டிண்டு போய் , உங்க‌
தங்கச்சிக்கு முன்னாடி, பாருடின்னு சொல்லாம சொல்லணும்னு மனசுலே
தோணரது.

ஏன்னா ! அந்த சம்ஸ்க்ருத வசனம் ஏதோ விருத்தா நாரின்னு...ஆரம்பிக்குமே
அதே சொல்லிட்டேளா !!

சுப்பு தாத்தா: முதல்லே பணம் வரட்டும். அப்பறம் அதப்பத்தி பேசுவோம்.

தக்குடு said...

@ sury mama - :)))

Sowmya said...

ம்ம்ம்!..

Balaji S Rajan said...

Paandi,

Super. You have a good sense of humour in your writing. First time here and I am happy to have visited your blog. I read both the parts and your description about 'Srirangam Noses' was laughable as other descriptions as well. One small suggestion. Please use proper punctuations which will enable me to read it to everyone in my family easily. Keep it going.

தக்குடு said...

@ sowmya akka - Thks for your 'mmm'..:)

@ Balaji anna - Thks a lot for your wishes. Today night i will alter the post, then you can read it to y(o)ur family..:) (familykkey yennoda kadhaiyai(??!!)read panni kaamichu yellarum kaari thuppapoora thakkuduvai)..:)

vgr said...
This comment has been removed by the author.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)