Friday, May 7, 2010

ஐந்து பாடகர்கள்

உப்புமா, காரட் சாதம்!னு மொக்கையா போட்டுத்தள்ளும் நம்ப LK-வுக்கு ஞானோதயம் வந்து இசைபாடகர்கள் பத்தி எழுதிட்டு மறக்காம தக்குடுவையும் எழுத சொல்லியிருந்தார். சினிமா பாடகர்கள் எல்லாரையும் பத்தி நம்ப பாஸ்டன் நாட்டாமையும், சங்கர் மஹாதேவன் பத்தி ‘பாத்ரூம்’ முன்னனி பாடகியான அனன்யா மஹாதேவனும் ஏற்கனவே சொல்லி விட்டதால் அடியேன் கர்னாடக இசை கலைஞர்கள் பத்தி சொல்லலாம்னு இருக்கேன்.

மகாராஜபுரம் சந்தானம்

சங்கீத உலகில் மறக்க முடியாத ஒரு மஹானுபாவர். நல்ல சாரீரமும் சரீரமும் அமையப்பெற்ற சங்கீத மகாராஜா. 'தக்காளிபழ' கலர்ல ஒரு சால்வை போட்டுண்டு மேடைல ஜைஜாண்டிக்கா இவர் உக்காசுண்டார்னா, கம்பீர நாட்டையை நேர்ல பார்த்த மாதிரி இருக்கும். என்ன ஒரு குரல்!!! நாட்டையில் அமைந்த ஜெகதானந்தகாரகா(அன்னியன்ல ‘ஐயங்காரு வீட்டு அழகு’ பாட்ல கூட வரும்)என்னோட ஆல் டைம் பேவரிட், ஊத்துக்காடு வேங்கடகவி இவருக்காகவே க்ருதிகளை அமைச்சாரோ??னு பிரமிக்க வைக்கும். காம்போதி ராகத்தில் குழல் ஊதினால் எல்லா மனங்களும் கொள்ளைகொண்டு போகும். இவருடைய ‘போ சம்போ!’ பாடலுக்கு பரதம் பயின்ற கால்கள் அனைத்தும் ஆடத்துடிக்கும். என்னோட அப்பா இவரோட 'உச்சிஷ்டகணபதி' ஆல்பம் கேட்டுண்டு இருக்கும் போதுதான் நான் ராங்க்கார்ட்ல கையெழுத்து வாங்குவேன்...:)))



ஹரிதாஸ் கிரி

நாமசங்கீர்தனத்துக்கு புது ரத்தம் பாய்ச்சின அற்புதமான மஹாத்மா, பாடிக் கொண்டே நடுவில் அந்த பாட்டோ/ஸ்லோகமோ இடம் பெற்ற இடத்துக்கே கேட்பவர்களை அழைத்துப் போகும் ஆற்றல் உடையவர். கச்சேரி பண்ணரவா அடுத்து அடுத்து பாடிண்டே ஈசியா போயிடலாம், ஆனால் நடுவில் பாட்டை நிறுத்தி விட்டு ஒரு குட்டி கதை சொல்லிட்டு மீண்டும் அதே சுருதி தாளம் தப்பாமல் பாடலை தொடர்வது என்பது வேகமாக போகும் ஒரு பஸ்லேந்து குதிச்சு ஒருத்தர்ட்ட பேசிட்டு மீண்டும் அடுத்த ஸ்டாப்ல அதே பஸ்ஸை புடிக்கரமாதிரியாக்கும். அந்த விஷயத்துல இவரை யாராலும் மிஞ்சமுடியாது. தேசாசாரம், வட்டார வழக்கு, பேச்சு வழக்கு எல்லாம் இவருடைய நிகழ்ச்சிகளில் ரசிக்கலாம். ஒரு சின்ன காவி துண்டுதான் கட்டிண்டு இருப்பார், ஆனால் பஜனைக்குரிய எந்த பந்தாவும் குறையே வைக்கமாட்டார். ஒரு ராதா கல்யாண சம்பாஷனையில் சப்த நதிகளுக்கும் சீனியரான கங்கா work allocation பண்ணின்டு இருந்தாளாம், அப்போ அங்க ஓரமா தாமிரபரணி நின்னுன்டு பாத்துண்டு இருந்தாளாம். டி, தாமிரபரணி! வெளியூர்லேந்து வரவா எல்லாருக்கும் குடிக்கர்துக்கு தண்ணி கேட்டா நீ குடு! ஏன்னா, எல்லாரோட டேஸ்டுக்கும்/டெஸ்டுக்கும் ஒத்துப்போகக்கூடியவள் நீதாண்டி!னு கங்கா சொன்னதாக அவர் சொன்ன விதம் அருமையோ அருமை.



விசாகா ஹரி

சமீபகாலமாக பிரபல்யம் ஆகி வரும் மற்றுமொரு நல்ல இசைக் கலைஞர். 21வது நூற்றாண்டு வந்தாச்சு, அதனால நம்ப மூத்தவர்கள் சொன்னதை எல்லாம் கேட்காம மனம் போனபடி வாழலாம் எனும் எண்ணம் மேலோங்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அழகான அந்த பழைய பாரம்பர்யத்தை போற்றும்படியாக இவரது உடை, பேச்சு, இசை எல்லாம் அமையப்பெற்ற மாண்பு பாராட்டுதலுக்குரியது. அதுக்காக இவா படிக்காத பட்டிக்காடுனு நினைக்க வேண்டாம் பர்ஸ்ட் அடம்டுலையே CA கிளியர் பண்ணியிருக்கா. ஸ்வாமியோட நாமாவையே எப்போதும் ஸ்மரணம் பண்ணுவதாலோ என்னவோ அந்த அக்கா முகத்துல தான் என்ன ஒரு தெய்வீக கலை/களை!! எனக்கு எங்க ஊர் அறம் வளர்த்த நாயகி அம்பாளை பார்த்த மாதிரி இருக்கும். இவாளோட சுந்தரகாண்டம் & ஆண்டாள் கல்யாணம் கேட்டுண்டே இருக்கலாம். சுந்தரகாண்டத்தில் இவருடைய 'குஞ்சு ஆஞ்சனேயர்' பற்றிய வர்ணனை ஹாஸ்யமா இருக்கும். சமயம் கிட்டினா நீங்களும் கேட்டுதான் பாருங்கோளேன்!!



நித்யஷ்ரீ மஹாதேவன்

'பாலக்காடு' மணிஐயர் குடும்பத்துல மட்டும் வராமல் இசை பாரம்பர்யத்லயும் வந்து கொண்டு இருக்கும் இனிமையான இசை கலைஞர். திருமதி. பட்டம்மாள் இசை உலகுக்கு விட்டுச் சென்ற பாட்டம்மாள். ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல் மூலமாக அனைவரின் கண்களுக்கும் புலப்படத் தொடங்கியவர். பாடும் போதும் சரி மந்திரம் சொல்லும் போதும் சரி அக்ஷர சுத்தம் என்பது அத்தியாவசியமான ஒரு தகுதியாகும். வார்த்தைகளை வஞ்சனை செய்யாமல் நன்னா 'பளிச்'னு பாடனும். அந்த விஷயத்துல நித்யஷ்ரீ அவர்கள் முதலிடம். அதே போல் கீர்த்தனைக்குரிய பாவத்தோட பாடுவதிலும் இவருக்கு நிகர் இவரே. கண்ணை மூடிக்கொண்டு இவர் பாடும் முருகன் பற்றிய விருத்தங்களால் எண்ணில்லா முருகனடிமைகள் இவருடைய சங்கீத அடிமைகள் ஆனார்கள்.



நாகூர் ஹனீபா

என்னடா இது ஒரு இஸ்லாமிய இசை கலைஞரை பத்தி தக்குடுவுக்கு என்ன தெரியப் போகர்துன்னுதானே நினைக்கரேள்?? இசைக்கும் பேதமே கிடையாது. எனக்கு ஸ்கூல்லையும் சரி காலேஜ்லையும் சரி ஏகப்பட்ட முஸ்லீம் & கிறிஸ்டியன் ப்ரெண்ட்ஸ் உண்டு. இந்த ஹனீபா அவர்களோட 'இறைவனிடம் கை ஏந்துங்கள்' என்னும் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப லயிச்சு பாடியிருப்பார். ஸ்கூல் படிக்கும் காலங்களில் நெல்லை வானொலியில் கார்த்தால 6.30 இந்த பாட்டு வரும். எந்த ஸ்வாமியா இருந்தா என்ன? பக்தியும் பாவமும் தான் முக்கியம்.அவரோட அந்த பாட்டை அதீதமா கேட்டதுனாலதான் இப்போ கத்தார்ல வந்து ஒட்டகம் மேய்ச்சுண்டு இருக்கேன்...:) (ராமன் அப்துல்லாவில் வரும் “உன் மதமா என் மதமா?ஆண்டவன் எந்த மதம்” பாடினது இவர்தான் என்பது உபரி தகவல்).



குறிப்பு - தொடர்பதிவுக்கு அடுத்து அஞ்சு பேரை அழைக்கனும்னு ரூல்ஸ் இருக்கு. தக்குடு மேல ரொம்ப இஷ்டம்/பாசம் உள்ளவா & செளகர்யப்படரவா எல்லாரும் இதை தொடரலாம். ஆனால் பதிவு போடுட்டு எனக்கு சொல்லனும் சரியா?? (அப்பாடி தப்பிச்சாச்சு!!)...;)

71 comments:

Geetha Sambasivam said...

நான் போட நினைச்சதெல்லாம் நீ போடக் கூடாதுனு தடை உத்தரவு வாங்கி இருக்கணுமோ?? ஹரிதாஸை நானும் போடணும்னு நினைச்சுட்டு இருக்கேன். நீ முந்திட்டே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Geetha Sambasivam said...

தொடர

எல் கே said...

@தக்குடு

அருமை .. அனைத்தும் மணியான தேர்வுகள். அதுவும் விஷாகா ஹரி மற்றும் ஹரிதாஸ் , நம்மை மெய்மறக்க செய்பவர்கள் . என் அலைபேசியில், ஹரிதாஸ் ராதா பஜன் பாட்டுக்கள் எப்பவும் இருக்கும்

எல் கே said...

@பாட்டி

அதனால என்ன தாரளம போடுங்க நீங்களும் அவர பத்தி

ஆயில்யன் said...

இசைக்கலைஞர்களில் எம்.எஸ் அம்மாவினை குறிப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்!




அது சரி அதான் வார வாரம் வெள்ளிகிழமை ஒட்டகங்களையெல்லாம் சப்ஜாடா படுக்கப்போட்டுட்டு வந்து பதிவு போட்டு தாக்குறீங்களா ராசா?

மெளலி (மதுரையம்பதி) said...

சென்னாகிதே ஸ்வாமி நிம் செலக்ஷனு....:)

திவாண்ணா said...

அப்பா இவரோட 'உச்சிஷ்டகணபதி' ஆல்பம் கேட்டுண்டு இருக்கும் போதுதான் நான் ராங்க்கார்ட்ல கையெழுத்து வாங்குவேன்...:)))

ஓ இப்படிக்கூட ஐடியா எல்லாம் இருக்கோ!
எங்க ஸ்கூல் நாள்லே ஏம்பா இதெல்லாம் சொல்லலை?

//முகத்துல தான் என்ன ஒரு என்ன ஒரு தெய்வீக கலை!! //
களைப்பா களை! முகத்துல கலை எல்லாம் வராது. சமாளிக்கப்பாக்க வேண்டாம்!

Srividhya Ravikumar said...

மிகவும் நல்ல பதிவு.. அதிசயமாக.. நன்றி..

ambi said...

//என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா!! //

தகவல் பிழை. அந்த பாட்டை பாடினது சீர்காழி சிவசிதம்பரம். அந்த பாட்டுல சிம்ரன் போடற ஒரு ஸ்டெப்பு இருக்கே! சரி வேணாம்... :))

Dr.N.Kannan said...

//என்ன ஒரு தெய்வீக கலை!! //

களை என்று இருக்க வேண்டுமோ? கலைஞர்களுக்கு கலையும் வேண்டும், கொஞ்சம் களையும் வேண்டும். அதற்காக அரைகிலோ தங்கம், வைடூரியம்ன்னு போட்டுண்டு வரவாளை என்ன சொல்றது? (நித்யஸ்ரீ அந்த வகையோ?). ஆனாலும், சுதா பாடறப்ப அந்த தோடுடைய காது ஆடற ஆட்டம், பார்க்கப் பிடிக்கும் (டோலக்கு) :-))

ஆயில்யன் said...

//ambi said...
அந்த பாட்டுல சிம்ரன் போடற ஒரு ஸ்டெப்பு இருக்கே! சரி வேணாம்... :)) //

ஆமாம் பாஸ் ஆமாம் [ஆர்வம் + ஜொள்ளுடன்] பட் அந்த பிரசாந்த் பய வந்து குறுக்க குறுக்க ஆடிறத பார்த்தா கடுப்பு கடுப்பா கம்மிங்க் பாஸ் :(

எம்.எம்.அப்துல்லா said...

//அன்னியன்ல ‘ஐயங்காரு வீட்டு அழகு’ பாட்ல கூட வரும் //


அந்த பாட்டுல நாட்டை மட்டுமா இருக்கு?

:))



அப்புறம் அம்பிஅண்ணன் சொன்னபடி அதைப் பாடியது சின்ன சீர்காழி.ஹனிபா அல்ல. செம்பருத்தியில் வரும் “நட்டநடுக் கடல்மீது நான் பாடும் பாட்டு” ராமன் அப்துல்லாவில் வரும் “உன் மதமா என் மதமா?ஆண்டவன் எந்த மதம்” போன்றவை ஹனிபா பாடிய பாடல்கள்.

தக்குடு said...

@ அம்பி - என்னோட கடைல வந்து வியாபாரத்தை கெடுக்கர்தே உனக்கு பொழப்பா போச்சு....:) ஒழுங்கா ஓடிப்போ!!!

வல்லிசிம்ஹன் said...

thakkudu,
suuuupper pathivu. sorry for thanglish.
ungalukkup pidiccha aththanai peraiyum enakkum pidikkum. vishaka hari ulpada.
Rasikkath therinthavarukku
sollavum therinjirukku!!

எல் கே said...

//மிகவும் நல்ல பதிவு.. அதிசயமாக.. நன்றி..//

note this point people....

எல் கே said...

ambi
ithellam sari illa, thambik blogku mattum ododi vanthu comment podrel.. kalaga kanmanigale ithellam kekarathu illaya

mightymaverick said...

//@ அம்பி - என்னோட கடைல வந்து வியாபாரத்தை கெடுக்கர்தே உனக்கு பொழப்பா போச்சு....:) ஒழுங்கா ஓடிப்போ!!!//



அஞ்சு வயசுல அண்ணன் தம்பி; பத்து வயசுல பங்காளி... நீ கவலைப்படாதே தகடு... நாங்கல்லாம் இருக்கோம் உன் சப்போர்ட்டுக்கு... ஆனாலும், தப்பா ஒரு பதிவை போட்டுட்டு இப்படி எகிறக்கூடாது...



//அந்த பாட்டுல சிம்ரன் போடற ஒரு ஸ்டெப்பு இருக்கே! சரி வேணாம்... :)) //


ஒரு டான்ஸ் ஸ்டெப்பை ட்ரை பண்ணி உனக்கு இடுப்பு சுளுக்கி நாலு நாளா உசுர வாங்குனியே... அது இது தானா...


அப்புறம் நமக்கும் சங்கீதத்துக்கும் ரொம்ப தூரம்... ஆனாலும், நமக்கு இசையை ரசிக்க பிடிக்கும்... அதனால நான் இதைப்பற்றி பதிவு போடுறதா இல்ல...

ambi said...

@ஆயிலு, பிரசாந்தை ஏன்யா நீ பாக்கற..? என்கெல்லாம் அவுட் ஆஃப் போகஸ் ஆயிடும். :)

@எல்கே, "வடை கவ்விய பாண்டியா!", ஏதோ கண்ணுல பட்டது, சொன்னா அது குத்தமாய்யா..? :p

Nithu Bala said...

Nalla pathivu..

Madhuram said...

Visaka Hari naan kelvi pattadhu illa. Oru vishayathula naan romba poramai padaren avangala paathu. CA first attempt leye clear pannaangala? Naan kashtapattu kashtapattu kadaisi varaikkum clear pannave illa. Paper thirutharavar paavam nu adhuku thalai muzhugitten.

ஷைலஜா said...

என்ன நியாயம் எங்க என் கமெண்ட்டு தக்குடு?அனுப்பு 2மணிநேரம் ஆச்சே

ஷைலஜா said...

உன் அபிமானப்பாடகியை சொல்லாமல் விட்டுட்டியே கண்ஸ் அப்படீன்னு ஒரு பின்னூட்டம் போட்டேன் அதை நைசா அமுக்கிட்டியா கண்ஸ்?:)

எல் கே said...

//ஏதோ கண்ணுல பட்டது, சொன்னா அது குத்தமாய்யா..? ://

ne kurai sonnatha naan tappu sollala. nalla kurai kandupidiya. matthavan blogkum vaa.

Life is beautiful !!! said...

Have no idea about sasthriya sangeetham but I love Nithyasree's voice. But very interesting to know details of each and every person. Enjoyed reading it!!! Continue your gud work.

Madhuram said...

Madras la irundha varaikkum niraiya kacheri poirukken. Especially Rama Navami ku Ayodhya Mandapathula famous singers ellarum vandhiduva. Supera irukkum.

The only issue I have with Nithyasree is she is not making right choices when it comes to movie songs. High pitch nalla poranutt overa katha vidara avaala. Adhu konjam kooda nallave irukka mattengaradhu. I think this will affect her voice to in the long run.

Chitra said...

வாவ்...... உங்கள் தேர்வுகள் - அட மற்றும் அடேங்கப்பா போட வைக்கின்றன....:-)

Kavinaya said...

வெகு அழகான பதிவு.

//எந்த ஸ்வாமியா இருந்தா என்ன? பக்தியும் பாவமும் தான் முக்கியம்.//

சூப்பர் :)

sriram said...

இவாள்ளாம் யாரு???
எனக்கும் கர்னாடக இசைக்கும் காத தூரம், எனவே ஆஜர் மட்டும் போட்டுட்டு மீ தெ எஸ்கெப்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எல் கே said...

/எனக்கும் கர்னாடக இசைக்கும் காத தூரம், எனவே ஆஜர் மட்டும் போட்டுட்டு மீ தெ எஸ்கெப்//

anne poi sollatheenga

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஸ்ரீராம் சொன்னாப்ல எனக்கும் கர்னாடக இசைக்கும் காத தூரம்.... கேள்வி ஞானம் மட்டும் தான்... கொஞ்சம் கொஞ்சம் ராகம் தாளம் கண்டுபிடிக்க முயற்சி செய்யறது உண்டு... பெருசா சோபிக்கல... கத்துக்க ஆர்வம் இருந்தும் அமையல. இப்படி எழுதறவங்கள பாத்தா பொறாமையா இருக்கும்... இப்பவும் அப்படி தான்... நல்ல பதிவு தக்குடு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//LK said...
ambi - ithellam sari illa, thambik blogku mattum ododi vanthu comment podrel.. kalaga kanmanigale ithellam kekarathu illaya//

அவங்களுக்கு selective visionasia .... தம்பி ப்ளாக் தவிர வேற எதுவும் புலப்பட்ரதில்ல கேட்டேளா...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என்னோட அப்பா இவரோட 'உச்சிஷ்டகணபதி' ஆல்பம் கேட்டுண்டு இருக்கும் போதுதான் நான் ராங்க்கார்ட்ல கையெழுத்து வாங்குவேன்...:)))//

அடப்பாவி... இப்படி எல்லாம் use பண்ணிக்கறது அநியாயம்... (ஹும்... எனக்கு தோணலியே இதெல்லாம்....???????)

Ananya Mahadevan said...

//ஆனாலும், சுதா பாடறப்ப அந்த தோடுடைய காது ஆடற ஆட்டம், பார்க்கப் பிடிக்கும் (டோலக்கு) :-)// நீங்களுமா திரு நா.கண்ணன் அவர்களே?
இவனுக்கும் அந்த குண்டல வீக்னெஸ் உண்டு. அதான் நித்யஸ்ரீயும் விசாகா ஹரியும் இந்த பதிவுல இடம் பிடிச்சு இருக்கா. இதுவே எம்.எல்.வசந்தகுமாரியும், எம்.எஸ்.சுப்பலக்ஷ்மியும், விசாலாட்சி நித்யானந்தமும் ஏன் போடலை? ஏன்னா அவாள்ளாம் மாமிமார். வைரத்தோடு தான் போட்டுப்பா.. இவனுக்கு குண்டலம் இருந்தா தான் அந்த லேடீஸை பிடிக்கும். :))

தக்குடு, எது எப்படியானாலும் அருமையான செலக்‌ஷன் போ. விசாகா ஹரி, நித்யஸ்ரீ, ஹரிதாஸ்கிரி, ஹனீஃபா இவாள்ளாம் எனக்கும் இஷ்டமாக்கும் கேட்டியா?

Ananya Mahadevan said...

எங்கே போனது அந்த சிம்ரன் ஸ்பெஷல் கமெண்ட்? தப்பான இன்ஃபோ பத்தி அண்ணா வந்து ’ஜொள்ளிய’ உடனே ’பேஸ்மெண்ட் வீக்காகி’ தூக்கிட்டியா?
ஜீவா பாட்டு ஸ்வர்ணலதா கூட பாடினது சிவான்னு ஒரு பாடகர்.
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000011

Anonymous said...

மகாராஜபுரம் சந்தானம் பாடலகள் கேட்டிருக்கேன். பரத நாட்டியம் படித்த போது இவரது ஒரு பாடலுக்கு ஆடிய ஞாபகம் இருக்கு. திருவாரூர்

ஹிரிதாஸ் கிரியுடைய பாடல்கள் ஞாபக்த்தில் இல்லை. ஆனால் இந்த உருவம் போட்ட காசட் கேட்டிருக்கேன்.

தக்குடு, உங்க மேல இருந்த மதிப்பு ரொம்பவே உயரத்தில போய்ட்டே இருக்குப்பா. நாகூர் ஹனீஃபா பத்தி எழுதி இருக்கீங்க. “உன் மதமா என் மதமா?ஆண்டவன் எந்த மதம்” சக்தி என்ற வானொலியில் அதிகாலைகளில் (நான் சின்ன பிள்ளையாக இருக்கேக்க) போடுவார்கள். அப்போது தான் ஒரு நாள் அப்பா சொன்னார், இவர் ஒரு அற்புதமான கலைஞர் என்று. அவரோட பாடல்களை டேப்பில் பதிந்து கொடுத்தார்.

Ananya Mahadevan said...

//அப்பா இவரோட 'உச்சிஷ்டகணபதி' ஆல்பம் கேட்டுண்டு இருக்கும் போதுதான் நான் ராங்க்கார்ட்ல கையெழுத்து வாங்குவேன்...:)))//
அப்போ ஒரு வேளை கரண்டு போயிடுத்துன்னா விநாயக்ராம் கடம் கச்சேரி தானா உன் முதுகுல? :))

Anonymous said...

/அது சரி அதான் வார வாரம் வெள்ளிகிழமை ஒட்டகங்களையெல்லாம் சப்ஜாடா படுக்கப்போட்டுட்டு வந்து பதிவு போட்டு தாக்குறீங்களா ராசா? /

கிளாஸ்

//அப்பா இவரோட 'உச்சிஷ்டகணபதி' ஆல்பம் கேட்டுண்டு இருக்கும் போதுதான் நான் ராங்க்கார்ட்ல கையெழுத்து வாங்குவேன்...:))//

இப்டி எல்லாம் வழி இருக்குனு தெரிஞ்சிருந்தா நான் ஏன் விழுந்து விழுந்து படிச்சேன். சை. ஃபீலிங்கஸ்.

//அப்போ ஒரு வேளை கரண்டு போயிடுத்துன்னா விநாயக்ராம் கடம் கச்சேரி தானா உன் முதுகுல? :))//

இவங்க ரொம்ப டெரரா இருக்காங்க தக்குடு. பாவம் ரங்க்ஸ். அநன்யா அக்கா, கொஞ்சம் எங்க பக்க எட்டி பாக்கறது.

கோமதி அரசு said...

//’உச்சிஷ்ட கண்பதி’ ஆல்பம் கேட்டுண்டு இருக்கும் போதுதான் நான் ராங்க் கார்ட்ல கையெழுத்து வாங்குவேன்.//

நல்ல தந்திரம்.

உங்கள் இசைக்கலைஞ்சர்கள் தேர்வு அற்புதம்.

எனக்கும் மிக,மிக பிடித்தவர்கள்.

எல் கே said...

@ananya

intha aniyayatha nee kekala

vgr said...

tkp,

Post was good, though it felt like reading a book. I found the usual 'thakkudu' stamp missing except for one place on "rank card signature". That was witty :)

Quite an informative one i guess. But i sure missed the signature articles.

And well written in Tamil. Like the usage of words... seems to be in ease.

My days(Gops) said...

enakku சங்கீத nyagnam remba kammi, but sangeetha'nu oru... no no not here....

Jayashree said...

http://www.youtube.com/watch?v=7X5or4j_3-E&feature=related
இவாள விட்டுட்டேளே!!

தக்குடு said...

@ கீதா பாட்டி - நான் எந்த லிஸ்ட் போட்டாலும் நீங்க இதைத்தான் சொல்லுவேள்னு எனக்கு தெரியும். அதுவும் போக இது சங்கீதம் சம்பந்தமான போஸ்ட் நீங்க எங்க இந்த பக்கம்??...:)))

@LK - நன்னிஹை!!!

சும்மா கதை விடுவாங்க இந்த பாட்டி, நீங்க நம்பாதீங்கோ!!

@ ஆயில்யன் - ஆயிலு, MS அம்மாவை LK alrdy கவர் பண்ணியதால் அடியேன் எழுதவில்லை, இல்லைனா எழுதாம இருப்பேனா??..:)

@ ம'பதி அண்ணா - தும்பா சந்தோஷா மெளலிவரே!!

@ திவா அண்ணா - நல்ல மார்க் வாங்கலைனா இப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கும்..:) நான் என்ன கீதா பாட்டியா சமாளிக்கர்துக்கு...;)

@ ஷ்ரீ வித்யா - ஹலோ, என்னோட கடைசி இரண்டு பதிவையும் நீங்க எத்தனை தடவை படிச்சேள்னு எனக்குத் தெரியும்...;) கவனிச்சுக்கரேன்!!

@ கண்ணன் - அது சங்கீத கலையால் வந்த களை சார். வெகுஜன ஊடகத்துல உள்ளவா கொஞ்சம் அந்த மாதிரி இருக்க வேண்டி இருக்கு. அவாளோட சொந்த சம்பாத்யத்லதானே போட்டுக்கரா, அதனால தப்பு இல்லை. நமக்கும் குண்டலம் மீது ஒரு ஈடுபாடு உண்டு...;)குண்டலம் பத்தி தனியா ஒரு போஸ்ட் கூட கைவசம் உண்டு...;)

@ ஆயிலு - //அந்த பிரசாந்த் பய வந்து குறுக்க குறுக்க ஆடிறத பார்த்தா //அப்போ, அந்த பாட்டுல இரண்டு ஹீரோயின்னு சொல்லுங்க...;)

@ அப்துல்லா - தங்கள் முதல் வருகைக்கு தக்குடுவின் சலாம்!..:)

@ வல்லியம்மா - எல்லாம் உங்ககிட்ட படிச்ச பாடம் தான்..;)

@ LK - அதான் என்னோட போஸ்டை நீங்க நோட் பண்ணின்டு இருக்கேளே!!...:)

@ LK - அவனை இந்த பக்கமே வரக்கூடாதுனு 144 போடுருக்கேன். இருந்தாலும் நொள்ளை சொல்லர்துக்கு மட்டும் வரான்...;) மூத்த பதிவர்கள் அவ்ளோ ஈஸியா எல்லாம் வரமாட்டாங்க LK...:)

@ வித்யாசமான கடவுள் - உங்க சப்போர்ட்லதான் வண்டி ஓடிண்டு இருக்கு...;) நன்னிஹை!

தக்குடு said...

@ நித்து பாலா - நன்னிஹை!!!..:)

@ மதுரம் அக்கா - //vishaka hari//நல்ல ஆர்டிஸ்ட் ஒரு தடவை கேட்டேள்னா தெரியும். நீங்க கஜினி முகமதா??..:)

@ ஷைலஜா - என்னோட ப்ளாக் ஒரு திறந்த புத்தகம் அக்கா, என்னோட கையில் எந்த கண்ட்ரோலும் கிடையாது...:))

அப்பரம் அந்த பெங்களூர் குயிலை பத்தி இங்க சொன்னா த்ருஷ்டி வந்துரும் அதான் சொல்லலை...;)

@ LK- ஏன் இந்த விளம்பரம் உமக்கு?? அதான் உங்க ப்ளாக்ல ஒரே ஆ....டிகள் கூட்டம் அலைமோதுதே போதாதா உமக்கு??...:)

@Life is beautiful - ரொம்ப சந்தோஷம்பா! எதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லியிருக்கேன் அவ்ளோதான்...;)

@ மதுரம் அக்கா - நித்யஷ்ரீ கொஞ்சம் குடுத்த காசுக்கு மேலயே கூவுவாங்க...;)

@ சித்ரா - ரொம்ப சந்தோஷம் அக்கா!!

@ கவினயா அக்கா - நன்னிஹை!

@ பாஸ்டன் - நாட்டாமை, உங்களுக்கு தன்னடக்கம் ஆனாலும் இவ்ளோ ஆகாது...:)

@ LK - :))

@ அடப்பாவி தங்ஸ் - ரொம்ப சந்தோஷம்பா!!

அவன் வராத வரைக்கும் சேஷமம்னு நினைச்சுக்கோங்கோ அக்கா!!

உங்க தம்பியாச்சே!!

@ அனன்யா அக்கா - குண்டலம் மேட்டர் பப்ளிக்ல வேண்டாம், நாம தனியா பேசி தீத்துக்கலாம்...;)

@ அனாமிகா - ஓ மின்னலுக்கு நாட்டியமும் தெரியுமா??...:))

@ அனன்யா அக்கா - கரண்ட் போனா இன்னும் வசதியா போச்சு, இருட்டுல சைன் வாங்கிடலாம். ராத்ரிதான் எப்போதுமே நான் கையெழுத்து வாங்குவேன்...;)

@ அனாமிகா - ஒரு வார்த்தை எங்கிட்ட கேட்டு இருக்கலாம்...;)

@ கோமதி - நன்னிஹை அக்கா!!

@ VGr - ஏற்கனவே தக்குடுவுக்கு நல்ல பெயர் கிடையாது, இந்த போஸ்ட்ல எல்லாம் காமெடி பண்ணக்கூடாது...;)

@ கோப்ஸ் - நம்ப சங்கீதா செளக்கியமா?? நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ...;)

@ ஜெய்ஷ்ரீமா - வாங்கோ அம்மா! என்னோட லிஸ்ட் ரொம்ப பெரிசு, உங்களுக்கும் தக்குடுனா ரொம்ப இஷ்டம்தானே பேசாம நீங்க ஒரு போஸ்ட் போடுங்கோ, அடியேன் அங்க வந்து ரசிக்கரேன்...;)

எம்.எம்.அப்துல்லா said...

//தங்கள் முதல் வருகைக்கு தக்குடுவின் சலாம்!..:)

//

என்னது முதல் வருகையா??? ஹல்ல்லோ நாங்க இங்க தொடர்ந்து வந்துகிட்டுதான் இருக்கோம். வேணும்னா முதல் பின்னூட்டம்னு சொல்லுங்க :))


அப்புறம் “அய்யங்கார் வீட்டு அழகே” பாடல்ல நாட்டை மட்டும் அல்ல.இன்னோன்னும் இருக்கு. கண்டுபிடிங்க பார்ப்போம் :))

Anonymous said...

Dear Thakkudu, Music pathi yevloo alaga yeluthareel, haashyam mattumthaan yeluthuveelnu nenasundu iruntheen..:)ungalukkum 'Maharajapuram'thaan listla first poolarukku. old post yellam padichu mudichchachu. 23 ragams use panni yeluthina that birthday wish suuperoo suuper. keep up the same classic style.

Ranjani Iyer

Harini Nagarajan said...

மிக அருமையான தேர்வு. இதில் சிலரின் பாடல்களை நான் அவ்வளவாக கேட்டது இல்லை! :) ஆனால் ஒரு பானை சொட்ட்ருக்கு ஒரு சோறு பதம் அது போல ஒன்றிரண்டு பாடல்களை வைத்தே அவர்களின் ஞானத்தையும் இசையின் ஈடுபாட்டையும் சொல்லி விடலாம்.

தக்குடு said...

@ அப்துல்லா - அண்ணா, என்னோட சின்ன அறிவுக்கு எட்டின வரைக்கும் அதுல நாட்டைதான் புலப்படர்து. ஆரம்பத்துல வரும் 'ஜகதானந்த கரகா'வில் வரும் நாட்டையை அப்படியே பாடல் முழுதும் பயன்படுத்தியிருப்பா, ஆனால் ஹரிணியோட பாகத்துல வர சஞ்சாரம் முழுவதும் கொஞ்சம் கசல்(Ghazaal) ஓட தாக்கத்தோட பதிவு பண்ணியிருப்பா, அதனால நமக்கு கசலும் கொஞ்சம் கலந்து இருக்கோனு ஒரு சம்சியம் வர வாய்ப்பு உண்டு. சினிமா பாடல்களில் ராகத்தை ப்ரயோகம் பண்ணும் போது அப்படியே பண்ண முடியாது. கொஞ்சம் நோட்ஸ் வித்யாசம் இருக்கும். உதாரணமா சிந்து பைரவியில் வரும் ஜேசு அண்ணா பாடிய 'மஹாகணபதிம்' , பாட்ஷால வரும் 'தங்கமகன் இங்கு சிங்க நடை போட்டு' பாடலும் நாட்டைதான். M.குமரன் s/o மஹாலெக்ஷ்மியில் வரும் 'சென்னை செந்தமிழ்' கலப்பு இல்லாத நாட்டை. மேல்கொண்டு உங்களுடைய கருத்தையும் கேட்டுக்க தக்குடு ஆர்வம் கலந்த பவ்யத்தோடு காத்துண்டு இருக்கான்.

@ ரஞ்ஜனி - உங்க பேர்லையே ராகம் இருக்கர்துனால உங்களுக்கு நல்ல சங்கீத ஆர்வமும் ஸ்வாமி பிரஸாதமா வந்துருக்கு போலருக்கு. உங்க அன்புக்கும் பாராட்டுக்கும் சந்தோஷம்பா!..:)

@ ஹரிணி - //மிக அருமையான தேர்வு//சந்தோஷம்பா! கேட்கனும்னு ஆசையும் ஆர்வமும் இருந்ததுன்னா தாராளமா நீங்க கேட்க ஆரம்பிக்கலாம்.

Jayashree said...

போஸ்ட் எல்லாம் வராது!:(( வேணுன்னா ஒண்ணு செய்யறேன் உங்களுக்கு, அம்பி தம்பிக்கு எல்லாம் !! முதுகுல நன்னா ரோஸ்ட்.. போடட்டா??:)))) ம்.. கலையாமா கலை முகத்துல ?? தெரியும்!! தெரியும் !! - குண்டலம் ஆடறது கேக்கறதாமா ??!! சிம்ரனா அம்பிக்கு ?!! ஏன் தமன்னா கத்தரீனா கைஃப் ?????? தங்கமணிக்கூட்டமே !! பொங்கி எழு !! vacuum cleaner சகிதம்:)) நாலு சாத்து சாத்தத்தான் :)))))))) .

sury siva said...

தக்குடி பாண்டியோட சங்கீத ஞானமிருக்கே !!
எல்லாரும் கேட்டுக்கோங்கோ !!
அட டா.. அடடா !! அடடா !!!
அபாரம் ! அபரிமிதம் !! அத்விதீயம் !!

ஸ‌ங்கீதத்திலே ஸ்வர ஞான‌ம் ப்ரதானம். அப்பறம்
ஸ்ருதி மாதா லயம் பிதா அப்படின்னு சொல்லுவா.
ஸ்ருதியிலே பேதம் ஆயிடுத்துன்னா,
பெரிய வித்வான் ( பால முரளி மாதிரி ) எல்லாம் ஸ்ருதி பேதம் அப்படின்னு சமாளிப்பா.
செம்மங்குடி மாதிரி இருக்கறவா, சுப்புடு க்ரிடிசைஸ் செய்யும்போது கூட , என்ன செய்யறது, எனக்குத் தெரிஞ்ச சங்கீதம் எங்காத்து இட்லி மாதிரிதான் ( analogy not intended )
அப்படின்னு எஸ் சொல்லிடுவா.. அதே சமயம் அவாளுக்கு ஒரு ரசிகாளும் கண்டிப்பா இருப்பா.
ஆன் த அதர் ஹான்டு, ஸாஹித்யமும் நன்னா இருந்து அதை சரியாவும் உச்சரிக்கவும் தெரிஞ்சுடுத்துன்னா,
அப்பதான் ஒரு ஸங்கீதம் ஸம்பன்னம்.
அந்த ஸம்பன்னம் என்ன அப்படின்னு தெரியறது வித்வத்வம். அந்த காலத்து எம்.டி.ராமனாதன், மதுரை மணி அய்யர், அவாள்லேந்து இன்னிக்கு ரஞ்சனி, காயத்ரி வரைக்கும் பார்க்கறோம், கேட்கறோம். . வித்வத்வம் என்பது ஒரு ரிலேடிவ் அப்படிங்கறதும் புரியறது. பாடறவாளுக்கு இருக்கற வித்வத்வம், கேட்கறவாளுக்கும் இருக்கணும். அப்பதான் அது பூர்ணமாய் பரிணமிக்கும்.

இந்த வித்வத்வம் எங்காத்து புள்ள தக்குடி பாண்டிகிட்ட இருக்கு அப்படின்னு இன்னிக்கு
நிதர்சனமாயிடுத்து. பொறாமைப் படறவா என்னிக்குமே இருப்பா. அவாளுக்கு பால் கோவாவும்
பண்ண வராது. ஸ ப ஸ வும் சொல்லவராது. தக்குடு ! நீங்க அதப்பத்தி கவலைப்படக்கூடாது.

இத்தனை ஞானம், வித்வத்வம், சரஸ்வதி கடாக்ஷம்,
நாத பிருஹ்ம ஸான்னித்யம் எல்லாம் இருக்கற இந்த தக்குடி பாண்டிக்குத் தகுந்த, இதெல்லாம்
ரசிக்கத் தெரிஞ்ச அகமுடையாள் வரணுமேன்னுதான் எங்க ரண்டு பேருக்கும் கவலையா இருக்கு.

அதுக்கு ஒரே வழி. கும்பகோணத்துக்கு பக்கத்துலே திருமணஞ்சேரி கோவிலுக்கு போய், அங்க இருக்கற அம்மனுக்கு
மஞ்சள் குங்கும அர்ச்சனை 1008 பண்ணனும். செய்யணும். முடிஞ்சா ஆயிரத்தெட்டு குடம் பால், பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யணும்./ கீதா மேடம் இனிஷியேடிவ் எடுத்துண்டா கண்டிப்பா முடியும்.

தக்குடு பாண்டி ஸார் !! உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கற அத்தனை பேரும்
கண்டிப்பா உங்க கல்யாணத்துக்கு வந்துடுவா !! நலங்கும்போது என்ன பாடப்போறேள்ன்னு
இன்னிக்கே யோஜனை பண்ணி வச்சுக்கோங்கோ !!

கண்ணோடு காண்பதெல்லாம்...அப்படின்னு நித்யஸ்ரீ (ஷ்ரி இல்லை) பாடறாளே அதுவா ?

சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.
http://movieraghas.blogspot.com

Geetha Sambasivam said...

//அதுக்கு ஒரே வழி. கும்பகோணத்துக்கு பக்கத்துலே திருமணஞ்சேரி கோவிலுக்கு போய், அங்க இருக்கற அம்மனுக்கு
மஞ்சள் குங்கும அர்ச்சனை 1008 பண்ணனும். செய்யணும். முடிஞ்சா ஆயிரத்தெட்டு குடம் பால், பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யணும்./ கீதா மேடம் இனிஷியேடிவ் எடுத்துண்டா கண்டிப்பா முடியும்.//

அக்கிரமமா இருக்கே?? உங்களைத் தொடர்பதிவுக்கு அழைச்சா, இங்கே தக்குடுவுக்குத் தாளம் போடறீங்க?? :)))))))))))))))))

தக்குடு, இதோ பார்த்துக்கோ, சூரி சார் உனக்குப் பொண்ணு பார்த்து வைச்சுட்டாராம், நீ ஓகே சொல்லவேண்டியது பாக்கி!:P

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு:)!

Menaga Sathia said...

வாவ்வ்வ் அனைவரும் முத்தான தேர்வுகள்!!

Ananya Mahadevan said...

//இந்த வித்வத்வம் எங்காத்து புள்ள தக்குடி பாண்டிகிட்ட இருக்கு அப்படின்னு இன்னிக்கு
நிதர்சனமாயிடுத்து. பொறாமைப் படறவா என்னிக்குமே இருப்பா. அவாளுக்கு பால் கோவாவும்
பண்ண வராது. ஸ ப ஸ வும் சொல்லவராது. தக்குடு ! நீங்க அதப்பத்தி கவலைப்படக்கூடாது.//சுப்புத்தாத்தா, உங்காத்து புள்ளையா? ஏதோ உள்குத்து இருக்கறாப்புல இருக்கே?
இந்த தற்குறி பாண்டி.. சாரி தக்குடு பாண்டி மேல உங்களுக்கு இருக்கற அன்பு முத்தியூடுத்துன்னாக்கும் நான் நினைக்கறேண்ட்டேளா? எப்படி சாத்யம் இந்த மாதிரி ஃபேன்ஸ் உருவாக்கி இருக்கியே தற்குறி? கலக்கறே போ!

Ananya Mahadevan said...

//தக்குடு பாண்டி ஸார் !! உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கற அத்தனை பேரும்
கண்டிப்பா உங்க கல்யாணத்துக்கு வந்துடுவா !! நலங்கும்போது என்ன பாடப்போறேள்ன்னு
இன்னிக்கே யோஜனை பண்ணி வச்சுக்கோங்கோ !!// நான் பாடப்போறதில்லை கேட்டேளா? ஒன்லி டான்ஸு! :))

Ananya Mahadevan said...

//@ அப்துல்லா - அண்ணா, என்னோட சின்ன அறிவுக்கு எட்டின வரைக்கும் அதுல நாட்டைதான் புலப்படர்து. ஆரம்பத்துல வரும் 'ஜகதானந்த கரகா'வில் வரும் நாட்டையை அப்படியே பாடல் முழுதும் பயன்படுத்தியிருப்பா, ஆனால் ஹரிணியோட பாகத்துல வர சஞ்சாரம் முழுவதும் கொஞ்சம் கசல்(Ghazaal) ஓட தாக்கத்தோட பதிவு பண்ணியிருப்பா, அதனால நமக்கு கசலும் கொஞ்சம் கலந்து இருக்கோனு ஒரு சம்சியம் வர வாய்ப்பு உண்டு. சினிமா பாடல்களில் ராகத்தை ப்ரயோகம் பண்ணும் போது அப்படியே பண்ண முடியாது. கொஞ்சம் நோட்ஸ் வித்யாசம் இருக்கும். உதாரணமா சிந்து பைரவியில் வரும் ஜேசு அண்ணா பாடிய 'மஹாகணபதிம்' , பாட்ஷால வரும் 'தங்கமகன் இங்கு சிங்க நடை போட்டு' பாடலும் நாட்டைதான். M.குமரன் s/o மஹாலெக்ஷ்மியில் வரும் 'சென்னை செந்தமிழ்' கலப்பு இல்லாத நாட்டை. மேல்கொண்டு உங்களுடைய கருத்தையும் கேட்டுக்க தக்குடு ஆர்வம் கலந்த பவ்யத்தோடு காத்துண்டு இருக்கான்// ஆஹா ஆஹா.. என்னா பவ்யம்!!! புல்லரிக்கிது போ! வித்வத்துன்னா இப்படின்னா இருக்கணும்.. ஓவராக்‌ஷன் ஜாஸ்தியாறது.. கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ!

Prasanna said...

இந்த ஜெகதானந்தகாரகா, கரகரப்ரியா, ஸ்ரீப்ரியா இப்படிப்பட்ட 'சங்கதி'களை விளக்கி ஒரு பதிவு போடவும் :)

Jeyashris Kitchen said...

u have a amazing space here. Athuenna"ottagam maikerra vellai" .
Iam now in a break,just shifted my house,went for a india trip. Will post recipes very shortly.Thanks for visiting

Sushma Mallya said...

Nice pics...and thanks for your lovely comment..

mightymaverick said...

//நான் பாடப்போறதில்லை கேட்டேளா? ஒன்லி டான்ஸு! :))//



ஐயையோ... கொல்லுறாங்களே... யாராவது காப்பாத்த ஓடி வாங்களேன்... அம்பி... எங்கே இருந்தாலும் இங்கே ஒருமுறை "உள்ளேன் அய்யா" என்று வந்து போகவும்...

தி. ரா. ச.(T.R.C.) said...

எனக்கும் சங்கீதத்துக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பதூரம். உள்ளேன் ஐய்யா மட்டும் போட்டுக்கிறேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

ஓ அநனன்யா அக்காவுக்கு பாட்டு பாட, உடான்ஸ் உடத்தெறியும்னு சொன்னேயே தக்குடு ஆனா டான்ஸ் ஆடத்தெறியும்னு சொல்லவே இல்லையே? நல்ல வேளை இப்பவாது தெறிஞ்சுதே அபுதுபாய் டிரிப் கேன்சல்ட்.

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீமா - சின்னக்குழந்தைட்ட(me only) போய் வன்முறைல இறங்கலாமா?? ...;))

@ சூரி சார் - நீங்க பாராட்ர அளவுக்கு எல்லாம் எனக்கு வித்வத் கிடையாது சார்! எதோ உங்களை மாதிரி நாலு நல்லவா கூட சேரர்துனால வரக்கூடிய ஒரு சகவாச விஷேஷம் அவ்ளோதான். நலுங்குக்கு எல்லாம் கவலை இல்லை, நம்ப சைடு பாடர்துக்கு 3 பட்டாலியன் ஆட்கள் இருக்கா...;)

@ கீதா பாட்டி - :)))

@ ராமலெக்ஷ்மி அக்கா - முதல் வருகைக்கு நன்னிஹை!!!

@ மேனகா - ரொம்ப சந்தோஷம்பா!!

@ அனன்யா அக்கா - //எப்படி சாத்யம் இந்த மாதிரி ஃபேன்ஸ் உருவாக்கி இருக்கியே //இது அன்பால உருவான கூட்டம்..;)

//ஓவராக்‌ஷன் ஜாஸ்தியாறது.. கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ// Hahaha

@ பிரசன்னா - //கரகரப்ரியா, ஸ்ரீப்ரியா //இதுல எதுவும் உள்குத்து இல்லையே??...;)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - ஊருக்கு வந்துருக்கேளா?? அதான் பருப்பு தொகையல் பதிவு டிளே ஆகர்தா??..;) //Athuenna"ottagam maikerra vellai" .
//தினமும் 100 ஒட்டகத்தை நாள் முழுவதும் மேய்க்கனும் அதுதான் என்னோட வேலை..:)

@ sushma - Thanks for your nice comment..;)

@ வித்யாசமான கடவுள் - எதுனாலும் நமக்குள்ள பேசி தீத்துக்கலாம், அந்தப் பயலை மட்டும் இங்க கூப்டவேண்டாம்...;)

@ TRC sir - சுவிட்ஸர்லாந்து போனாலும் என்னோட பதிவுக்கு வந்து பெருமை சேர்த்த உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் மாமா!!..:)

Ananya Mahadevan said...

//@ அனன்யா அக்கா - //எப்படி சாத்யம் இந்த மாதிரி ஃபேன்ஸ் உருவாக்கி இருக்கியே //இது அன்பால உருவான கூட்டம்..;)// ஆமா கொஞ்சம் கூட்டம் சேர்ந்தா ரஜினி டயலாக்ஸ் பேச ஆரம்பிச்சுடுவாங்க!!! முடியல!


@வித்தியாசமான கடவுள்,////நான் பாடப்போறதில்லை கேட்டேளா? ஒன்லி டான்ஸு! :))//ஐயையோ... கொல்லுறாங்களே...//

நமக்குள்ள எந்த சண்டையும் இல்லை. அப்புறம் என்னத்துக்கு கூவறீங்க? மருவாதியா மத்தவங்க மாதிரி ஜால்ரா அடிச்சுட்டு போயிடுங்க. ஆஹா அநன்யா அக்கா ஆடுறாங்களாமே.. ஆனந்தம் ஆனந்தம்ன்னு பாடுவீங்களா? சொம்மா பேசிகிட்டு!

@தி.ரா.ச மாமா,
நான் தான் இப்போ மாமிக்கு ஆக்டிங் பி.ஏ.. //இப்பவாது தெறிஞ்சுதே அபுதுபாய் டிரிப் கேன்சல்ட்// தெரிஞ்சுதே தான் சரி. உக்காண்டு 1000 வாட்டி இம்போசிஷன் எழுதுங்கோ கேட்டேளா?

Prasanna said...

//இதுல எதுவும் உள்குத்து இல்லையே//

செ செ 'தில்லு முள்ளு' எல்லாம் இல்லை.. உண்மையிலேயே தெரிஞ்சிக்கலாம்னு தான் ;)

எம்.எம்.அப்துல்லா said...

சஞ்சாரத்தில் கஜலின் தாக்கமெல்லாம் இல்லை கஜலேதான் :))

நான் குறிப்பிட்டதும் அதுதான். உங்களுக்கு சங்கீதத்தில் சிற்றறிவு அல்ல பேரறிவு :)

Matangi Mawley said...

rank card sign vaangara kattam- pramaatham! nekkum vishaka harinnaa romba ishtam! thiruvaiyyaaraa neenga?
intha kaalaththula sthala kshetraththla irukkaravaaley madisaar pudavaya maranthupoindrukkarachche- antha paaramparyaththa vidaatha pinpatrivaruvathu apporvam thaam.. azhakum kooda!

haridas giri mention arumai.. oru seasonla naan chinna kozhanthayaa irukkumpothellaam aaththla eppothum avar paattu odindey irukkum.. arputhamaana kural avarukku! apdiye ghaneernu- enga 12th physics lab-ls resonance experiment pothu kambiya thattindu- ting nu vara sound aattam! "metallic luster" koralla...

santhanam! nekku avaroda "naarayana ninne" ngara purandaradasar kriti thaan romba pidikkum! antha kuralkum antha paattukkum- onnanglaas!

azhagu pathivu!

தக்குடு said...

@ Prasanna - ok dude! try pannalaam..:)

@ அப்துல்லா - thks backround singer sir!!..:) sikkaram neenga periyaa aala varanumnu yellam valla iraivanai thakkudu parathanai pannikkaren.

@ matangi - Roomba santhoshampa! //thiruvaiyyaaraa neenga?// halwa desam....:)))purinjuthaa madam?

Nathanjagk said...

Nicely represented!

தக்குடு said...

@ Jagan - Thks for your frst visit and comment..:) i saw ur yaanai drawing it was wonderful...;)

Ashok NaArayanan. said...

As on date I like Visaka Hari's discourse very much. He's Lalgudi Sri Jayaraman's discipline. I like her presentation very much.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)